குரோன்ஸ்டாட் மாலுமிகள், படைவீரர்கள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து பெட்ரோகிராட் மற்றும் அனைத்து ரஷ்ய புரட்சிகர மக்களுக்கு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

From the archives of the Revolution

குரோன்ஸ்டாட் (Kronstadt) சோவியத்தால் ஆன இப்பிரகடனம் கடற்படைத் தளத்திற்கு தற்காலிக அரசாங்கத்தாலும் முதலாளித்துவ பத்திரிகைகளாலும் செய்யப்பட்ட பல தாக்குதல்களுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று ஜூனில் கலந்துரையாடுவதற்கு ட்ரொட்ஸ்கி குரோன்ஸ்டாட் மாலுமிகளை சந்தித்த பின்னர் அவரால் எழுதப்பட்டது. இது முதலில் பிராவ்தாவில் எண் 69, ஜூன் 13 (மே 31) 1917. [1] ல் வெளியிடப்பட்டது.

குடிமக்களே, தோழர்களே, சகோதரர்களே!

ரஷ்ய புரட்சியின் வரலாற்றில் புகழ்பெற்ற பக்கங்களில் பதியப்பெற்ற குரோன்ஸ்டாட், இப்பொழுது அனைத்து முதலாளித்துவ பத்திரிகைகளிலும் மாசுகற்பித்தும் இழிவானதாகவும் சித்தரிக்கப்படுகிறது. எதிர்ப்புரட்சிகர அவதூறாளர்களின் வன்மம் கொண்ட பேனாக்கள், நாம், குரோன்ஸ்டாட் நகரத்தவர்கள், மக்களை கொடுங்கோன்மை, சட்டவிரோதம் மற்றும் அராஜகத்திற்கு அழைத்ததுபோல, எங்களால் சிறைவைக்கப்பட்ட ஜாரிசத்தின் அடக்குமுறையாளர்கள் மற்றும் சேவகர்களை சித்திரவதை செய்ததுபோல, இறுதியாக இடைக்கால அரசாங்கத்தை அங்கீகரிக்க மறுத்திருப்பதுபோல, ரஷ்யாவிலிருந்து பிரிந்தது போல, மற்றும் சுதந்திரமான குரோன்ஸ்டாட் குடியரசை நிறுவியதுபோல எழுதுகின்றன.

என்ன அர்த்தமற்ற பொய், பரிதாபகரமான, இழிவான அவதூறு!

குரோன்ஸ்டாட்டில் நாம் அராஜகத்தை கொண்டிருக்கவில்லை, ஆனால் நேர்மையான, மற்றும் உறுதியான புரட்சிகர ஒழுங்கைக் கொண்டிருக்கிறோம். எமது தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்களின் பிரதிநிதிகளின் சோவியத்தானது, அனைத்து உள்ளூர் குரோன்ஸ்டாட் விவகாரங்கள் தொடர்பாகவும் பொறுப்பைக் கையில் எடுத்திருக்கின்றது.

நாம் சட்டவிரோத நீதிமன்ற வழிமுறையை, ஜாரிசத்தின் சிறைக்கைதி சேவகர்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் ஆதாரமற்ற பழிவாங்கும் அனைத்து வடிவங்களையும் எதிர்க்கிறோம். ஆனால் நாங்கள் மக்களின் குற்றகர பகைவர்கள் மீதான புரட்சிகரத் தீர்ப்பினை நடுநிலை தவறாமல் ஒழுங்கமைப்பதில் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் உள்ளோம். புரட்சியின் நாட்களில் எம்மால் கைது செய்யப்பட்ட அலுவலர்கள், ஆயுதம் ஏந்தியவர்கள் மற்றும் பொலீசார் தாங்களே தம்மை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் என்று அறிவித்துக் கொண்டு, சிறை அமைப்புமுறையின் கரங்களில் நடத்தப்படும்விதத்திற்கு தம்மை உட்படுத்த முடியாது என்று கூறினர். அது உண்மை, குரோன்ஸ்டாட் சிறைக் கட்டிடங்கள் கொடூரமானவை. இதே சிறைகள்தான் ஜாரிசத்தால் எங்களுக்காக கட்டப்பட்டவை. எங்களிடம் வேறொன்றும் இல்லை. நாம் மக்களின் பகைவர்களை இந்தச் சிறைகளில் தடுப்புக் காவலில் வைத்திருப்போமானால், அது பழிக்குப்பழி வாங்குதற்காக அல்ல, மாறாக புரட்சிகர சுய-பாதுகாப்பின் கருதுதலினாலாகும். நாம் குரோன்ஸ்டாட் சிறைக்கைதிகள் பற்றி ஒப்பீட்டளவில் விரைவாக மற்றும் நடுநிலை தவறாத வழக்குவிசாரணை தொடர்பாக இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்கள் செரெட்டெலி மற்றும் ஸ்கோபெலேவ் உடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம். மற்றும் இந்த ஒப்பந்தம் தொடர்ந்து முழு நடைமுறையில் இருக்கும்.

நாம் தற்காலிக அரசாங்கத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுவது பரிதாபகரமான சோடிப்பு! இதுவரைக்கும், ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சிகர மக்களின் விருப்பத்தினால் இந்த அரசாங்கம் அங்கீகரிக்கப்படும்வரை நாம், குரோன்ஸ்டாட்காரர்கள் எல்லா பொதுவிவகாரங்களிலும் இடைக்கால அரசாங்கத்தின் பொறுப்பை அங்கீகரிக்க முடியவில்லை. இதனை நாம் எமது தீர்மானங்களில், எமது முன்னணி வெளியீடுகளில் கட்டுரைகளில், இறுதியாக அமைச்சகப் பிரதிநிதிகளுடனான உடன்பாட்டில் உறுதியாகவும் தெளிவாகவும் விளக்கி இருக்கிறோம். ஜனநாயக கோட்பாடுகளின் முக்கிய சலுகைகளை மற்றும் மக்களின் சுய ஆட்சி ஆகியவற்றை சாதித்திருக்கும் (குடிமக்கள் பொறுப்பின் மற்றும் இராணுவத் தலைமைகளை கட்டுப்படுத்தும் உள்ளூர் பிரதிநிதிகளுடைய தேர்தல் ஆகியன) இந்த உடன்படிக்கை இந்நாளில் முழுப் பலத்துடன் இருக்கும்.

நாம் ரஷ்யாவிலிருந்து பிரிந்துவிட்டோமா? இங்குதான் மிக மோசமான அவதூறு இருக்கிறது.

நாம் குரோன்ஸ்டாட் நகரத்தவர் பழைய அதிகிரத்திற்கு எதிராகக் கிளர்ந்தது ரஷ்யாவின் பெயரில் இல்லையா?

முழு ரஷ்ய மக்களின் சுதந்திரத்தின் மற்றும் மகிழ்ச்சியின் பேரில் பெட்ரோகிராட் மற்றும் முழு ரஷ்ய போராளிகளுடனும் சேர்ந்து குரோன்ஸ்டாட் போராளிகள் இரத்தத்ததை பாய்ச்சவில்லையா? இப்பொழுது, நாம் ஜாரின் அதிகாரத்தைத் தூக்கி எறிந்திருந்தபொழுது மற்றும் வன்முறையின் அனைத்து வடிவங்களையும், அனைத்து ஒடுக்குமுறைகளையும் தூக்கி எறியும் பாதையில் பயணித்தபொழுது, முன்னர் என்றும் இருந்ததை விட ரஷ்யாவின் அனைத்து உழைக்கும் மக்களின், அனைத்து மக்களின் சகோதர உறவு குரோன்ஸ்டாட் நகரத்தவர்களின் நெருக்கமாகவும் பக்கமாகவும் ஆகி இருக்கிறது.

நாம் புரட்சிகர ரஷ்யாவின் ஐக்கியத்திற்கு சார்பானோர், அதன் ஒடுக்குமுறையாளருடனான போராட்டத்தில் உழைக்கும் மக்களின் ஐக்கியத்திற்காக இருக்கிறோம். ஆயினும், இது எமது புரட்சிகர மனச்சாட்சியின் உறுதியான நம்பிக்கை ஆகும். தற்போதைய இடைக்கால அரசாங்கம், அதன் பெரும்பான்மை நிலப்பிரபுக்கள், ஆலை முதலாளிகள் மற்றும் வங்கியாளர்களின் பிரதிநிதிகளால் பெரும்பான்மையை கொண்ட, இடைக்கால அரசாங்கம், மக்கள் புரட்சியின் அதிகாரபூர்வ விருப்பாக, ஜனநாயகத்தின் உண்மையான பிரதிநிதியாக இருக்க விரும்பாது மற்றும் இருக்க முடியாது. மற்றும் இந்த நாட்டில் அராஜகத்தின் வெளிப்பாடு உண்மையில் அவதானிக்கப்பட்டால், பின்னர் இந்த பொய்களுக்கான குற்றம் இடைக்கால அரசாங்கத்தின் கொள்கையில்தான் இருக்கும். அவ்வரசாங்கத்தின் உற்பத்தி, நிலம், தொழிலாளர், ராஜீயக்கொள்கை மற்றும் யுத்தம் பற்றிய பிரச்சினைகள் மக்களின் உண்மையான நலனுக்கு சேவைசெய்யா, மாறாக அவை உடமைகொண்டிருக்கும் மற்றும் சுரண்டும் வர்க்கங்களுக்கு சாதகமாகவே சேவை செய்யும். பெட்ரோகிராட் மற்றும் இதர தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்களது பிரதிநிதிகளின் பல்வேறு சோவியத்துக்கள், இந்த தற்காலிக அரசாங்கத்துக்கு ஆதரவு தருவதில் தவறிழைக்கின்றன என்று நாங்கள் உணர்கின்றோம்.

புரட்சிகர வார்த்தையின் நேர்மையான ஆயுதத்துடன், எமது இந்த நம்பிக்கைக்காக, நாம் போராடுகிறோம். மற்றும் முதலாளித்துவக் கும்பல்கள், தங்களின் கால்களுக்கடியிலிருந்து அடிநிலம் வழுக்கிச்செல்வதாக உணர்கின்றனர், அதிகாரமானது, நிலப்பிரபு மற்றும் முதலாளித்துவவாதிகளின் கைகளிலிலிருந்து மக்களின் கைகளுக்கு கடந்து செல்வதை முன்கூட்டிப் பார்க்கின்றனர், நாட்டில் நேர்மையற்ற மற்றும் எதிர்ப்புரட்சிகர கிளர்ச்சியை, தூற்றல், கொடூரமாக நடத்தலை மற்றும் புரட்சியின் அனைத்து முன்னணி சக்திகளையும் இழிவுபடுத்துகின்றன, குறிப்பாக, எமது சிவப்பு குரோன்ஸ்டாட்டை. இந்தக் கும்பல்களைப் பொறுத்தவரை எமது புரட்சி ஒரு அவமானம். அவர்களது நச்சு வார்த்தைகளை நாம் உண்மையால் எதிர்க்கிறோம். ஆனால் நாம், அதேவேளை, அமைச்சர்-சோசலிஸ்டுகள், மற்றும் அவர்களோடு சேர்ந்து தொழிலாளர் படைவீரர்களது பிரதிநிதிகளின் பெட்ரோகிராட் சோவியத்தின் பெரும்பான்மையும் அவர்களது செல்வாக்கின் கீழ் விழுந்து எம்மை அவதூறு செய்யும் மற்றும் ரஷ்யப் புரட்சியுடன் துண்டித்துக்கொள்வதாக எமக்கு அறிவிக்கும் தங்களின் நியாயமற்ற மற்றும் அவமதிக்கும் தீர்மானத்தை பற்றிய எமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இல்லை தோழர்களே, குரோன்ஸ்டாட்காரர்கள் காட்டிக்கொடுக்கவில்லை, தங்களது கோட்டைகளிலும் நீதிமன்றங்களிலும் அசையும் பதாகையை காட்டிக்கொடுக்கவில்லை. இடைக்கால அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் நாம் போட்டிருக்கும் ஒப்பந்தத்தை மீறிவிட்டோம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்தகைய ஒரு பூதாகரமான தவறானபுரிதல் தடித்த அவதூறுகள் மற்றும் மூர்க்கமான அவநம்பிக்கையினால் செயற்கையாக உருவாக்கப்பட சூழல்களின் விளைபொருளாகவே மட்டுமே இருக்கும் என நாம் விளக்க முடியும்.

மே 24 அன்று நாம் அடைந்த ஒப்பந்தம் எம்மைப் பொறுத்தவரை புரட்சிகர சுயாட்சிக் கோட்பாடுகளை நிராகரித்தலுக்காக அல்ல, மாறாக அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் பாதையை நோக்கிய ஒரு தீர்க்கமான அடி எடுப்பு ஆகும் என்று நாம் பத்திரிகைகளில் தெளிவுபடுத்தினோம். ஆனால் இந்த தெளிவூட்டல், எமது நிலைப்பாட்டிலிருந்து, நாம் நமக்காக எடுத்துக்கொண்ட கடமைப்பாடுகளைக் கைவிடுதலுடன் ஒன்றும் செய்வதற்கில்லை. குரோன்ஸ்டாட் ஒரு புரட்சிகர இருப்பிடமாக இருப்பதை அழித்து, ஒரு எதிர்ப்புரட்சிகர வேலைக்கு வசதிசெய்து கொடுக்கும்பொருட்டு, மத்திய அதிகாரத்திலுள்ள பிரதிநிதிகளுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் கிழிபடுவதால் ஆதாயம் பெறப்போகும் நபர்களான, பிரச்சினைகளை உருவாக்குபவர்களே, நாம் துரோகம் செய்ததாய் நம் மீது குற்றம் சாட்டமுடியும். தோழர்களே சகோதரர்களே, குரோன்ஸ்டாட்கள் மேல் கௌரவக் குறைவான நடவடிக்கைகள் பற்றி அவமதிக்கும் குற்றச்சாட்டுகளை அள்ளிவீச ஒருவருக்கும் துணிவில்லை. எம் வார்த்தைகளை நாம் மீறவில்லை. நாம், புரட்சியாளர்கள், கௌரவமானவர்கள், எமது தற்போதைய வேண்டுதல் பொய்களை, அவதூறை, சந்தேகத்தை முற்றிலும் விலக்கிவிடும் மற்றும் நமக்கிடையில் பரஸ்பர நம்பிக்கையின் அழிக்க முடியாத கூட்டை மீளவும் நிலைநாட்டும் என்று நாம் உறுதியாய் நம்புகிறோம்.

நாம் குரோன்ஸ்டாட் நகரத்தவர், ரஷ்ய புரட்சியின் மாபெரும் சேனையின் இடது பிரிவாக எமது பொறுப்பில் தொடர்ந்து இருப்போம். ஒவ்வொரு புது நாளும், ரஷ்ய மக்களின் மிகவும் பின்தங்கிய தட்டுக்களின், இருட்டால் மிகவும் மறைக்கப்பட்டிருக்கும் தட்டுக்களின் கண்களை என்றுமிராதவாறு மிக அதிகமாய்த் திறக்கும் என்று நாம் நம்புகிறோம், நம்பிக்கை கொள்கிறோம், நாம் நம்பி ஏற்றுக்கொள்கிறோம், மற்றும் அந்த நேரம் அருகில், உழைக்கும் மக்கள் ஐக்கியம்கொள்ளும்போது, நாட்டில் உள்ள அனைத்து அதிகாரமும், தொழிலாளர்கள் படைவீரர்களது பிரதிநிதிகளின் சோவியத்துக்களின் கரங்களுக்கு மாறும். உங்களுக்கு, பெட்ரோகிராட் மற்றும் அனைத்து ரஷ்யாவிலும் உள்ள புரட்சியின் ,சகோதரர்களுக்கு, நாம், குரோன்ஸ்டாட் இன் மாலுமிகள், படைவீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் எமது கரங்களை நீட்டுகிறோம். எமது பிணைப்பு கரையாதது. எமது ஐக்கியம் அழிக்கப்பட முடியாதது. எமது விசுவாசம் ஆட்டங்கொடுக்காதது. புரட்சிகர மக்களை பிரிப்பவர்கள் அவதூறாளர்கள் ஒழிக! ரஷ்ய புரட்சி நீடூழி வாழ்க!

Chairman of the Executive Committee of the Soviet of Workers’ and Soldiers’ Deputies D. Lomanov.
Secretary Priselkov.
June 9 (May 27) 1917.
Kronstadt Fortress

குறிப்பு:

[1]

1920களில் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் தொகுப்பாசிரியர்களிடமிருந்து:

இந்த பிரகடனத்திற்கு தோழர் ட்ரொட்ஸ்கி காரணமாக இருந்திருக்கலாம் என்று நாம் நம்புவது பின்வரும் இரண்டு குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது: “குரோன்ஸ்டாட்டின் நிகழ்வுகள் பற்றி குரோன்ஸ்டாட் சோவியத் அறிவிப்பானது”, என்பதில் நம்பிக்கை வெளிப்படுத்தப்படுவது, “நேரம் நெருங்குகின்றது, உழைக்கும் மக்கள் ஐக்கியப்பட்ட பொழுது, நாட்டில் உள்ள அனைத்து அதிகாரங்களும் தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்களின் சோவியத்துக்களின் கரங்களுக்கு மாறும்பொழுது” என செய்தித்தாள்களின்படி எழுதப்பட்டுள்ளது. (துரதிருஷ்டவசமாக, செய்தித்தாள்களில் அது தொடர்பான இடத்தைக் காண முடியவில்லைEd.), L.D. ட்ரொட்ஸ்கியால் குறிப்பிடப்பட்டது (Maksakov மற்றும் Nelidov, “Chronicle of the Revolution.”(“புரட்சியின் காலவரிசைப்பட்டி” I, 1917., பக்கம். 50.).

சுக்கானோவின் “புரட்சி பற்றிய குறிப்புக்கள்” இல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: இது அசாதாரணமாக எழுதப்பட்டது, சினங்கொள்கின்ற, முற்றிலும் மதிப்புவாய்ந்த அதிகாரபூர்வமான அறிவிப்பு. நான் நம்புகிறேன் அது ட்ரொட்ஸ்கியால்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும், அவர்தான் குரோன்ஸ்டாட் விவகாரங்களில் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருந்தார். போல்ஷிவிக் குழுக்கள் லெனினிச எல்லைக்குள் சூழ இருந்த நேரத்தில் “கருத்துருவை” நன்கு வெளிப்படுத்திய மற்றும் மிக மிதமான பாணியைக் கொண்டிருந்தது. (“புரட்சி பற்றிய குறிப்புக்கள்”, புத்தகம் 4, பக்கம் 164.)

மேலதிக வாசிப்புக்கு:

லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து

Loading