கொழும்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக ஊழியர்கள் மீது பொலிஸ் தாக்குதல் நடத்தியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட இலங்கைப் பல்கலைக் கழக கல்வி-சாரா ஊழியர்கள் மீது கடந்த 12 ஆம் திகதி பொலிஸ் மேற்கொண்ட கடுமையான தாக்குதலலைக் கண்டிக்கின்றது. நாடாளுமன்றத்திற்கு அருகில் நடந்த இந்தப் போராட்டம், ஏனைய பல்கலைக்கழகங்களில் அருகில் இருக்கும் நகரங்களில் அதே நாளில் நடைபெற்ற பல போராட்டங்களில் ஒன்றாகும்.

மே 12 அன்று பல்கலைக் கழக கல்வி-சாரா ஊழியர்களின் போராட்டத்தை கலைக்க கொழும்பில் பொலிசார் நீர்த் தாரை தாக்குதல் நடத்திய போது

நாட்டின் 17 அரச பல்கலைக் கழகங்களில் இருந்து கிட்டதட்ட 13,000 கல்விசாரா ஊழியர்கள் மாதாந்த சலுகைக் கொடுப்பனவை (MCA) 25 சதவீதமாக அதிகரிக்கவும் ”சம்பள முரண்பாடுகளை” அகற்ற 15 சதவீதமாக சம்பளத்தை அதிகரிக்கவும் கோரி மே மாதம் 12 அன்று இருந்து காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல தொழிற் சங்கங்களின் கூட்டான கல்வி-சாரா தொழிற் சங்கங்களின் கூட்டணி (NATUC) அழைப்புவிடுத்த மே 12 போராட்டமானது பாராளுமன்றத்திற்குச் செல்லும் அதிவேக நெடுஞ்சாலையின் சந்திக்கு அருகில் நடைபெற்றது. கொழும்பு, ஜெயவர்தனபுர மற்றும் திறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து வந்த 200க்கும் மேற்பட்ட கல்வி-சாரா ஊழியர்கள் அதன் கோரிக்கைகளை நிவரத்தி செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் NATUC முயற்சியின் பாகமாக ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு அமைய செயற்படும் விக்கிரமசிங்க அரசாங்கம், அதன் நடவடிக்கைகளை எதிர்த்தும் போதுமான சம்பளம் மற்றும் சிறந்த சமூக நிலைமைகளைக் கோரியும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட பிரிவுகள் மேற்கொள்ளும் எந்தவொரு போராட்டத்தின் மீதும் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட பொலிக்கு கட்டளைவிடுத்துள்ளது.

பொலிஸ், 100க்கும் மேற்பட்ட கலகம் அடக்கும் பொலிசாரை நிலைநிறுத்தி கல்வி-சாரா ஊழியர்களை உடனடியாக கலைந்துபோகுமாறு அழைப்புவிடுத்து NATUC ஆர்ப்பாட்டத்தை நிறுத்த நீதிமன்ற கட்டளையைப் பெற்றுக்கொண்டது. தொழிலாளர்கள் இந்த கட்டளையை நிராகரித்த போது பொலிலசார் நீர் தாரயை கொண்டு கடும் வேகத்தில் தாக்கினர். அசுத்தமான நீரைப் பயன்படுத்தி நடத்திய தாக்குதலால் சில தொழிலார்கள் கண்கள் காயத்திற்கு உள்ளாகின.

12 மே 2024 அன்று இலங்கை கலகம் அடக்கும் பொலிஸ் குழு கொழும்பில் நடைபெற்ற கல்வி-சாரா ஊழுியர்களின் போராட்டத்தை நிறுத்த வீதியை அடைத்து நின்றது போது.

இந்த துாண்டப்படாத தாக்குதலானது இந்த ஆண்டில் பல்கலைக்கழ ஊழியர்கள் மீதான இரண்டாவது பொலிஸ் தாக்குதல் ஆகும். ஜனவரி 18 அன்று ஸ்ரீ ஜெயவர்தன பல்கலைக்கழக ஊழிர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பல்கலைக்கழக வாளாகத்தில் உள்ள வீதிச் சந்தியை நோக்கி ஊர்வலகமாக செல்ல முற்பட்ட போது அவர்களை கலைக்க பொலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளையும் நீர்தாரையையும் பயன்படுத்தினர்.

சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட வேலைத் திட்டத்திற்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்பையும் கூட அரசாங்கம் சகித்துக்கொள்ளாது என்பதை மீண்டும் இந்தத் தாக்குதல்கள் தெளிவுபடுத்துகின்றன. அதேபோல தனித்தனியான வேலை நிறுத்தங்களும் போராட்டங்களும் சலுகைகளைக் கொடுக்க அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் என தொழிற்சங்க தலைமைத்துவம் பரப்பும் பொய் கூற்றுக்களையும் வெளிப்படுத்துகின்றது.

ஊழியர்களின் கோரிக்கைகளை தீர்க்கும் யோசனைகளை உள்ளடக்கிய அமைச்சரவைப் பத்திரத்தை மே 12 அன்று முன்வைப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் உறுதியளித்துள்ளதாக NATUC தலைமைத்துவம் அதன் உறுப்பினர்களுக்கு முன்னர் தெரிவித்தது.

ஆயினும், அமைச்சரின் முன்மொழிவுகளை அமைச்சரவை ஏற்க மறுத்ததோடு நாட்டின் நிதியமைச்சருக்கு பரிந்துரை பெறுவதற்காக அவற்றை அனுப்பியது. இலங்கையின் நிதியமைச்சராகவும் உள்ள ஜனாதிபதி விக்கிரமசிங்கவாலேயே நிதி அமைச்சு கட்டுப்படுத்தப்படுகின்றது.

கல்வி-சாரா ஊழியர்கள் உட்பட இலங்கையின் அரச ஊழியர்களின் சம்பளத்தில் எந்த அதிகரிப்பும் செய்யப்படாது என மே 12 போராட்டத்திற்கு மூன்று நாளுக்கு முன்பு விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்தார்.

“2024 ல் பொருளாதார வளர்ச்சியிலும் அதன் அடிப்படையிலான நாட்டின் வருமானத்தி்ன் மூலம் சுட்டிக்காட்டப்படுவது போல, அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வுகள் அடுத்த ஆண்டே கருத்தில் கொள்ளப்படும்” என அவர் கூறினார். சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள கொள்கைகளில் இருந்து தனது அரசாங்கம் கொஞ்சமேனும் விலகினால், இலங்கை ”மிகப்பெரிய பேரழிவை” சந்திக்கும். வேறு வார்த்தையில் கூறினால், இலங்கையின் தொழிலாள வர்க்கம் பொருளாதார நெருக்கயைின் சுமையை சுமக்க வேண்டும் என்பதாகும்.

ஸ்திரமடைதல் பற்றி அரசாங்கமும் ஊடகங்களும் கூறுவது போல 2025 க்குள் இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவிடுவேன் என்ற விக்கிரமசிங்கவின் முன்னைய அறிவிப்புகள் மோசடியானவை ஆகும். தற்போதுள்ள பணவீக்கம் மற்றும் சர்வதேச நாணய நிதிய கடன்களுடன் சேர்த்து மலைபோன்று குவிந்துள்ள கடன்களின் மீது அரசாங்கம் அமர்ந்து இருப்பதால் இலங்கைப் பொருளாதாரம் உயர்ந்தளவில் ஸ்திரமற்றே உள்ளது.

கொழும்பில் உள்ள இலங்கை உயர்கல்வி அமைச்சுக்கு அருகில் கல்வி-சாரா ஊழிர்கள் மே 7 நடத்திய போராட்டம்.

சமீபத்திய மாதங்களில், தொழிலாளர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளிற்கான வானளவு உயர்ந்த செலவுகள், சம்பள உயர்வின்மை, பொதுச் சுகாதாரம் மற்றும் கல்வி மீதான பாரிய வெட்டுக்கள் அத்தோடு நுாற்றுக்கணக்கான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் திட்டமிட்ட தனியார் மயமாக்கலுக்கும் எதிராக போராட முனவந்துள்ளனர்.

அரசாங்கம், மின்சாரம், பெற்றோலியம், சுகாதாரம் மற்றும் தபால் உட்பட பிரதான துறைகளில் சகல தொழற்சங்கப் போராட்டங்களையும் தடை செய்யவும் வேலை நிறுத்தங்களையும் போராட்டங்களையும் ஒடுக்குவதற்கும் நீதிமன்ற கட்டளைகளைப் பெற்றும் பொலிசை அனுப்பியும் அத்தியவசிய பொதுச் சேவைகள் சட்டத்தையும் பயன்படுத்தியும் பதிலறுத்தது. இந்த அத்தியவசிய சேவைகள் சட்டத்தை மீறும் எவரும், வேலை நீக்கம், தண்டப்பணம் அறவிடுதல் மற்றும் நீண்ட கால சிறைத் தண்டனைக்கு உட்படுத்துதல் உட்பட கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வார்.

இந்த ஆண்டு ஜனவரியில், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார் மயமாக்குதவதற்கு எதிராக, ஜனவரி 3 முதல் 5 ஆம் திகதி வரை மூன்று நாள் தேசிய சுகயீன-விடுமுறை நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக, அரசாங்கத்தின் கட்டளையின் கீழ், இலங்கை மின்சார சபை நிர்வாகம், 62 தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கியது. தொழிற்சங்கங்களால் கைவிடப்பட்ட இந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமைக்கான சட்ட நடவடிக்கையை தற்போது முகங்கொடுக்கிறார்கள்.

கல்வி-சாரா ஊழியர்கள் மற்றும் ஏனைய துறையில் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட தட்டுக்கள் என தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினரும் விக்கிரமசிங்க ஆட்சிக்கும் அதன் கொடூரமான சர்வதேச நாணய நிதிய சிக்கன தாக்குதலுக்கும் எதிராக அரசியல் மற்றும் தொழிற்துறை போராட்டங்களை மேற்கொள்கின்றார்கள்.

கல்வி-சாரா ஊழியர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் எந்தப் பிரிவினரும் வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகளை பாதுகாக்க இருக்கும் ஒரே வழி, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு முதலாளித்துவ முறைமையை பாதுகாக்கும் தொழிற் சங்கங்க தலைமைத்துவங்களில் இருந்து பிரிந்து சுயாதீனமாகப் ஒழுங்கமைவதே ஆகும்.

எவ்வாறாயினும், நிதி அமைச்சில் இருந்து வரும் பரிந்துரைகளைத் தொடர்ந்து கல்வி அமைச்சர் பிரேம்ஜயந்தின் அமைச்சரவை பத்திரமானது மே 27 ஆம் திகதிக்குள் அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்படும் என இன்னமும் NATUC தலைமைத்துவம் பொய்யாக வலியுறுத்துகின்றது.

இது தனது உறுப்பினர்களை ஏமாற்றும் ஒரு அவநம்பிக்கையான முயற்சி ஆகும். ”சம்பள முரண்பாடுகளுக்கு” எதிரான அதன் போராட்டத்தை NATUC ஆரம்பித்ததில் இருந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ளன. இந்தக் காலம் முழுவதும்,”தொழில்சார் போராட்டங்களுக்கு” அரசியல் தேவையில்லை எனக் கூறி, உறுப்பினர்கள் மத்தியில் ஜனநாயக கலந்துறையாடலை தடுத்து நிறுத்திய அதேளை, கல்வி-சாரா ஊழியர்களை பாதிப்பில்லாத போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களுக்குள் இது திசை திருப்பியது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உட்பட முதலாளித்துவ எதிர்க் கட்சிகள் மற்றும் சகல தொழிற் சங்கங்களும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அர்பணித்துக்கொண்டுள்ளன. அடுத்து வர இருக்கும் தேர்தலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள அவர்களது அரசாங்க எதிர்ப்பு தோரணையானது பொருளாதார நெருக்கடியை 2025க்குள் தீர்த்து வைப்பேன் என்ற விக்கிரமசிங்கவின் கூற்றைப் போலவே மோசடியானது ஆகும்.

“தொழிற்சங்கங்களினால் கல்வி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதமானது அவற்றின் துரோகத்தனமான பாத்திரத்தை வெளிப்படுத்துகின்றது” என்ற தலைப்பில் மே 1 அன்று உலக சோசலிச வலைத் தளத்தின் சிங்கள பக்கத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை சுட்டிக்காட்டியது போல்:

“சாதாரண கல்வி-சார ஊழியர்கள், தங்களது மாநாடு ஒன்றை கூட்டுவதற்கு அழப்பு விடுப்பதோடு அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்கங்களின் வங்குரோத்து கொள்கைக்கு பதிலாக, தமது கோரிக்கைளை வென்றெடுக்கும் ஒரு முறையான வேலைத்திட்டத்தை முன்வைக்கும் நோக்கில் ஜனநாயக கலந்துறையாடலுக்கு தொழிற் சங்கத் தலைமைத்துவம் இடம் தரவேண்டும் என கோர வேண்டும்.”

அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பது சாத்தியமானது என்ற NATUC யின் கூற்றை கல்வி-சாரா ஊழியர்கள் நிராகரிக்க வேண்டும். அவர்கள், ”சம்பள முரண்பாடுக”ளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் காலாவதியான கோரிக்கைக்காக தங்களை மட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாத. மாறாக வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணுக்உ ஏற்றவாறு ஒழுக்கமான சம்பளத்துக்காகப் போராட வேண்டும்.

விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் அதன் சர்வதேச நணய நிதியத்தின் தாக்குதல்களுக்கும் முதலாளித்துவ முறைமைக்கு எதிரான சோசலிச வேலைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒன்றிணைந்த போராட்டத்தின் ஊடாகவே இந்தப் போராட்டம் அபிவிருத்தி செய்யப்பட முடியும். இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்க அதிகாரத்துவஙகளிடம் இருந்து விடுதலை ஆகி தமது சொந்த நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும் என் கல்வி-சாரா ஊழியர்களை நாம் வலியுறுத்துகின்றோம்.

Loading