கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 2,200க்கும் மேற்பட்ட இனப்படுகொலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அமெரிக்க வளாகங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தி அப்பீல் (The Appeal) அறிக்கையின்படி, காஸாவில் நடந்து வரும் இனப்படுகொலையை எதிர்த்து கடந்த இரண்டு வாரங்களில் 2,200 க்கும் மேற்பட்டவர்கள், பெரும்பாலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அமெரிக்க வளாகங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். காஸா இனப்படுகொலை அதன் ஏழாவது மாதத்தை எட்டுகிறது. அமெரிக்க ஆதரவிலான இஸ்ரேலிய இனச்சுத்திகரிப்பு தாக்குதல் 44,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை கொன்றுள்ளது, மேலும் 80,000 பேர் காயமடைந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் மற்றும் 1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இனப்படுகொலை எதிர்ப்பு போராட்டங்காரர்கள் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள UCLA வளாகத்தில் வியாழக்கிழமை, மே 2, 2024 அன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். [AP Photo/Jae C. Hong]

பல மாதங்களாக அமைதியான போராட்டங்கள் மற்றும் அணிவகுப்புகள் இருந்தபோதிலும், அமெரிக்க அரசாங்கம் காஸாவில் படுகொலைகளை இராணுவ, அரசியல் மற்றும் நிதி ரீதியாக தொடர்ந்து ஆதரித்து வருகிறது. சியோனிச ஆட்சி அதன் இராணுவ நடவடிக்கையைத் தொடர்வதற்கான 16 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை உட்பட, கடந்த மாதம், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி இரண்டிலும் பெரும்பான்மையினர் கூடுதலாக 95 பில்லியன் டாலர் இராணுவ தொகுப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

படுகொலைக்கான இந்த அசைக்க முடியாத ஆதரவால் சீற்றமடைந்த நாடெங்கிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் – ஆசிரியர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களின் ஆதரவுடன் – 1960 களின் சிவில் உரிமைகள் இயக்கத்தின் எதிர்ப்பு தந்திரோபாயங்களை பின்பற்றிக்கொண்டு தங்கள் கல்லூரிகளில் முகாம்களை அமைத்துள்ளனர். இஸ்ரேலிய அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து பல்கலைக்கழகங்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்பதே மாணவர்களின் மையக் கோரிக்கையாகும். ஏப்ரல் 17 அன்று நியூயோர்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் “காஸா ஒற்றுமை முகாம்” ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து, அமெரிக்காவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மாணவர்கள் 120 க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் முகாம்களை அமைத்துள்ளனர்.

அமெரிக்காவில், 34 மாநிலங்களில் குறைந்தது 70 கல்லூரிகளில் முகாம்கள் நிறுவப்பட்டன, ஆனால் அவை மட்டும் அல்ல: அரிசோனா மாநில பல்கலைக்கழகம் (டெம்பே), நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகம் (அல்புகெர்கி), டெக்சாஸ் பல்கலைக்கழகம் (டல்லாஸ் மற்றும் ஆஸ்டின்), மினசோட்டா பல்கலைக்கழகம் (மினியாபோலிஸ்-செயிண்ட் பால்), வர்ஜீனியா டெக் (பிளாக்ஸ்பர்க்), வட கரோலினா பல்கலைக்கழகம் (சேப்பல் ஹில்), ஓஹியோ மாநிலம் (கொலம்பஸ்), புளோரிடா மாநிலம் (தல்லாஹஸ்ஸி), வர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழகம் (ரிச்மண்ட்), யேல் (நியூ ஹேவன், கனெக்டிகட்), மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழகம் (டார்ட்மவுத்).

ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அல்-ஹரைன் பல்கலைக்கழகம் உட்பட பல கல்லூரிகளிலும் இந்த முகாம்களுக்கு ஆதரவாக டசின் கணக்கான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

எதிர்ப்பு போராட்டங்களின் பரந்த மற்றும் பெரும் அமைதியான தன்மை, பல சந்தர்ப்பங்களில் இது யூத மாணவர்களின் ஒரு பெரிய குழுவால் வழிநடத்தப்படுகிறது, இருந்தபோதிலும் ஜனாதிபதி ஜோ பைடன் தொடங்கி ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி அரசியல்வாதிகளால் போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் “வன்முறையாளர்கள்”, “யூத-எதிர்ப்புவாதிகள்” மற்றும் “வெளியில் இருந்து வந்த கிளர்ச்சியாளர்கள்” என்று அவதூறு செய்யப்பட்டுள்ளனர்.

முதலாளித்துவ அரசியல்வாதிகளால் வழிநடத்தப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு, அவர்களின் பொய்கள் பிரதான பத்திரிகைகளால் வலுப்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவில் பொலிஸ் இந்த போராட்டங்களுக்கு வன்முறையாக எதிர்வினையாற்றி உள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் கட்டி வைக்கப்பட்டுள்ளனர், மிளகு தூவப்பட்டு, “குறைந்த அபாயகரமான” தோட்டாக்களால் சுடப்பட்டுள்ளனர், மேலும் அவர்களின் பல்கலைக்கழகங்கள் மற்றும் பைடென் நிர்வாகத்தை பாரிய படுகொலைக்கு ஆதரவளிக்க வேண்டாம், ஈடுபட வேண்டாம் அல்லது அதில் இருந்து ஆதாயம் அடைய வேண்டாம் என்று அமைதியாக அழைப்பு விடுத்ததற்காக பொலிஸ் மற்றும் அவர்களின் சியோனிச மற்றும் பாசிசவாத கூட்டாளிகளால் தாக்கப்பட்டுள்ளனர்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இந்த அமைதியான கோரிக்கைகள் ஜனநாயகக் கட்சியினராலும் குடியரசுக் கட்சியினராலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதுவரை கணக்கிடப்பட்ட கைதுகளில் பெரும்பாலானவை நியூயோர்க் நகரத்தில் நடந்துள்ளன. அங்கு ஜனநாயகக் கட்சி மேயரும், முன்னாள் NYPD போலீஸ்காரருமான எரிக் ஆடம்ஸ், எதிர்ப்பாளர்களை இழிவுபடுத்துவதில் முன்னணியில் உள்ளார். மன்ஹாட்டனில் மட்டும் 520 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The Appeal ன் அறிக்கை மே 1 அன்று வெளியிடப்பட்டது, ஆகவே அது லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (UCLA) சமீபத்தில் நடந்த பாரிய கைதுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. புதன்கிழமை இரவு பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறை நடத்த சியோனிஸ்டுகளையும் பாசிசவாதிகளையும் அனுமதித்த பின்னர், வியாழக்கிழமை அதிகாலையில் குறைந்தபட்சம் 132 பேரை கைது செய்ததாக பொலிசார் உறுதிப்படுத்தினர். கடந்த 24 மணி நேரத்தில், விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகம் (34), மன்ஹாட்டனில் உள்ள ஃபோர்தாம் பல்கலைக்கழகம் (15), நியூ ஓர்லியன்ஸில் உள்ள துலேன் பல்கலைக்கழகம் (14) மற்றும் பல கல்லூரிகளிலும் கைதுகள் நடந்துள்ளன.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

கலிபோர்னியா, அரிசோனா, உட்டா, கொலராடோ, நியூ மெக்சிகோ, டெக்சாஸ், லூசியானா, நெப்ராஸ்கா, மிசௌரி, இல்லினாய்ஸ், விஸ்கான்சின், மின்னசோட்டா, இண்டியானா, ஓஹியோ, புளோரிடா, ஜார்ஜியா, தெற்கு மற்றும் வடக்கு கரோலினா, வர்ஜீனியா, பென்சில்வேனியா, நியூயார்க், நியூ ஜெர்சி, வெர்மான்ட், மாசசூசெட்ஸ் மற்றும் ரோட் தீவு ஆகிய இடங்களில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களில் காணப்பட்ட இதேபோன்ற பாரிய கைதுகள் மற்றும் பொலிஸ் துஷ்பிரயோகங்கள், ரஷ்யா, சீனா அல்லது ஈரான் போன்ற ஏனைய நாடுகளிலும் நடந்தால், அமெரிக்க அரசாங்கம் அவற்றை “கடுமையான” மனித உரிமை மீறல்கள் என்று கண்டிக்கும் என்பதில் எந்த கேள்விக்கும் இடமில்லை.

வியாழனன்று காலை வெள்ளை மாளிகையில் இருந்து, பொலிஸ் மற்றும் மாணவர்கள் மீதான சியோனிச தாக்குதல்களைக் கண்டனம் செய்வதற்கு பதிலாக, பைடென் இனப்படுகொலை எதிர்ப்பு போராட்டக்காரர்களை “வன்முறையாளர்கள்” என்று அவதூறு செய்தார். வளாகங்களில் நடந்துவரும் போராட்டங்கள் அப்பிராந்தியத்தில் அமெரிக்க கொள்கையை மறுபரிசீலனை செய்ய அவரை இட்டுச் சென்றதா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, ஜனாதிபதி உடனடியாக “இல்லை” என்று பதிலளித்தார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter
Loading