மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மிகக் கொடூரமான ஆட்சிகளில் ஒன்றை நிறுவிய ஜெனரல் அகஸ்டோ பினோச்சே தலைமையிலான சிலியில் சிஐஏ ஆதரவுடன் நடந்த இழிபுகழ் பெற்ற இராணுவ சதியின் 50வது ஆண்டு நிறைவை இன்று குறிக்கிறது.
செப்டம்பர் 11, 1973 அதிகாலையில், சிலி ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளும் இராணுவ காவல்துறையும் ஒரு வானொலி அறிவிப்பை வெளியிட்டது, அவர்கள் நாட்டின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டதாகவும் மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி சால்வடார் அலெண்டே பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இராணுவமும் விமானப்படையும் லா மொனெடா ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு, போர் விமானங்கள் மற்றும் டாங்கிகள் மூலம் குண்டுகளை வீசித் தாக்கியது. லா மொனெடாவில், ஒரு மூலையில் முடக்கப்பட்டு ராஜினாமா செய்ய மறுத்த நிலையில், சதித் தலைவர்களின் கோரிக்கையை எற்க மறுத்த அலெண்டே, விசாரணைகளின்படி அவரே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு இறந்தார்.
அதே நாளில், இராணுவம் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை சுற்றி வளைத்து, அவர்களை வதை முகாம்களில் அடைத்து விசாரணை செய்து சித்திரவதை செய்ததில், பெரும்பாலனவர்கள் கொலை செய்யப்பட்டனர். பிரபல இசைக்கலைஞர் விக்டர் ஜாரா, செப்டம்பர் 16 அன்று கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட எஸ்டாடியோ சிலி சிறையில் தனது கடைசி நாட்களில் ஆயிரக்கணக்கான மற்றவர்களுடன் அனுபவித்த பயங்கரத்தை விவரித்தார்:
பசி, குளிர், பீதி, வலி, தார்மீக அழுத்தம், பயங்கரவாதம், பைத்தியம் போன்றவற்றுக்கு மனிதகுலம் எந்தளவுக்கு ஆளாகி உள்ளது?
விண்மீன்கள் நிறைந்த விண்வெளியில் நாங்கள் ஆறு பேர் தொலைந்து போனோம்.
ஒருவர் இறந்துவிட்டார், இன்னொருவர் அடிக்கப்பட்டார், ஒரு மனிதனை அந்தளவுக்கு அடிக்க முடியுமா என்று என்னால் நம்ப முடியவில்லை.
மற்ற நால்வரும் தங்கள் மீதான பயங்கரத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்பினர்: ஒருவர் ஒன்றுமில்லாமல் குதித்து விட்டார்.
மற்றொருவர் தனது தலையை சுவரில் அடிக்கிறார், ஆனால் அனைத்தும் மரணம் குறித்த நிலையான தோற்றத்துடன்.
பாசிசத்தின் முகம் எப்படியான பயங்கரத்தை உருவாக்குகிறது!
சிஐஏ மற்றும் அமெரிக்க இராணுவ உளவுத்துறையால் திட்டமிடப்பட்ட ஒரு பரந்த நடவடிக்கை அனைத்து தொழிலாளர்கள் மற்றும் விவசாய அமைப்புகளை அடித்து நொறுக்குவதற்கும், அலெண்டே அரசாங்கத்தால் கைவிடப்பட்ட அவர்களின் தலைவர்கள் மற்றும் போர்க்குணமிக்க தொழிலாளர்களை வேட்டையாடவும், காவலில் வைக்கவும், சித்திரவதை செய்யவும் மற்றும் கொல்லவும் தொடங்கப்பட்டது. இதை எதிர்ப்பதற்கு அவர்களிடம் ஆயுதங்களோ, பயிற்சியோ அல்லது அரசியல் தலைமையோ இருக்கவில்லை.
பினோச்சோ ஆட்சி, அடுத்த மாதங்கள் மற்றும் ஆண்டுகளில், அலெண்டே மற்றும் அவரது முன்னோடியின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட சிலியின் முக்கிய செப்புத் தொழிலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை விற்றுத்தள்ளினர். அலெண்டேவினால் அரசுக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்ட வங்கி, தொலைபேசி நிறுவனம், உலோக வேலைகள் மற்றும் பிற நிறுவனங்களின் சில பகுதிகள் தனியார்மயமாக்கப்பட்டது. தொழிலாளர்களால் கைப்பற்றப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நிலம் மறுபடியும் தனியார் உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. தண்ணீர், ஓய்வூதியம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, பயன்பாடுகள் மற்றும் பிற துறைகள் தனியார்மயமாக்கப்பட்டது. தோன்றிவரும் நாடுகடந்த பெருநிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிதிதன்னலக் குழுக்களுக்கு நாட்டை ஒரு விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்காக வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஒட்ட நறுக்கப்பட்டன. “சுதந்திர சந்தை” பொருளாதார நிபுணர் மில்டன் பிரைட்மேன் மற்றும் “சிகாகோ இளைஞர்கள்” என்று அழைக்கப்படும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் இருந்து பிரைட்மேனிடம் பயிற்சி பெற்ற கூட்டாளிகளின் அறிவுரைகளை ஆட்சி பின்பற்றியது. அவர்கள் தனியார்மயமாக்கல் அலை மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமைகள் மீதான கொடூரமான தாக்குதல்களை மேற்பார்வை செய்வதற்காக சிலிக்கு அனுப்பப்பட்டனர்.
சிலியில் பாசிச பயங்கரவாதம் இரண்டு நீண்ட தசாப்தங்களாக நீடித்தது. உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, பினோச்சே ஆட்சியால் ஆயிரக்கணக்கான அரசியல் எதிரிகள் கொல்லப்பட்டனர் அல்லது “காணாமல் போயினர்” மற்றும் சுமார் 30,000 பேர் சித்திரவதை செய்யப்பட்டனர். சிலியில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு முழு லத்தீன் அமெரிக்காவிலும் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது.
1964 இல் பிரேசில், 1971 இல் பொலிவியா மற்றும் 1973 இல் உருகுவே உள்ளிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்பட்ட தொடர்ச்சியான ஆட்சிக்கவிழ்ப்புகளைத் தொடர்ந்து சிலி இராணுவம் அதிகாரத்திற்கு வந்தது. அலெண்டேவை வீழ்த்த சிலி இராணுவத்தை முறைப்படியாக தயார்படுத்துவதற்காக நிக்ஸன் நிர்வாகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பிரேசிலின் ராணுவ ஆட்சி அமெரிக்க நடவடிக்கைகளுக்கான ஒரு கருவியாக செயல்பட்டது .
சிலியில் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு, தென் அமெரிக்காவில் CIA இனால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த எதிர்ப்புரட்சி வலையமைப்பு, ஆபரேஷன் காண்டோர் என்று பெயரின் கீழ் ஒருசேர பலப்படுத்தப்பட்டது. இது பிராந்தியம் முழுவதும் அடக்குமுறை, சித்திரவதை மற்றும் அரசியல் படுகொலைகளை முறையாகப் பரப்பியது மற்றும் புதிய சதிகளை எளிதாக்கியது. குறிப்பாக 1976 இல் அர்ஜென்டினாவில் பாசிச இராணுவ ஆட்சியின் எழுந்தது.
சிலியின் கொடூரமான செப்டம்பர் 11 இன் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அது சம்பந்தமான அரசியல் மிகவும் அவசரமாகி வருகிறது. லத்தீன் அமெரிக்காவின் அரசியலில் சர்வாதிகாரம் மற்றும் இராணுவத் தலையீடு என்ற அச்சம், கடந்த 30 ஆண்டுகளாக சிவிலியன் ஆட்சிகளின் சுருக்கமான சுழற்சிக்குப் பிறகு, முழு பிராந்தியத்தையும் மீண்டும் ஒருமுறை மிரட்டுகிறது.
பெருகிவரும் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்தால் வெளிப்படுத்தப்படும் சமூக பகைமைகளின் திரட்சியின் வெடிப்பினால் தூண்டப்பட்ட நிலையில் இந்த நாடுகளில் எதிலும் அதிகாரத்திலிருந்து இடம்பெயர்க்கப்படாத பினோச்சேயின் நண்பர்கள் மீண்டும் தங்கள் முகங்களைக் காட்டுகின்றனர். பிரேசிலில், முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, நாட்டின் தேர்தல் முறைக்கு விடுத்த சவாலை ஆயுதப்படைகள் அங்கீகரித்தன. அது பிரேசிலியாவில் கடந்த ஜனவரி 8ம் தேதி நடந்த பாசிச சதி முயற்சியில் அதன் உச்சக்கட்டத்தை எட்டியது, அது ராணுவ சர்வாதிகாரத்திற்கு அழைப்பு விடுத்தது.
2019 மற்றும் 2020ல் மீண்டும் மீண்டும் தேசிய வேலைநிறுத்தங்களில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக அணிதிரண்ட சிலியில், ஆளும் வர்க்கம் இப்போது பினோச்சே சர்வாதிகாரத்தின் மிக வெறித்தனமான பாதுகாவலர்களை முறையாக ஊக்குவித்து வருகிறது. இந்தக் கூறுகள் தற்போது ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் தலைமையில் உள்ளன, அவரது பாசிச குடியரசுக் கட்சி கடந்த மே மாதம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான கவுன்சில் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் லத்தீன் அமெரிக்க சர்வாதிகாரங்களின் பிரதான ஆதரவாளராக பணியாற்றியது. இது பிராந்தியத்தில் ஒரு மைய ஆட்டக்காரனாக உள்ளது. அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒரு புதிய உலகப் போரை நோக்கித் தள்ளாடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை சாராமல், பிராந்தியத்தின் இராணுவக் தலைமைகளுடன் உறவுகளை வளர்த்து வருகிறது, அதன் புவிசார்-மூலோபாய மேலாதிக்கத்தை ‘தனது சொந்தக் கொல்லைப் புறத்தில்’ பாதுகாக்க வெளிப்படையாகப் போராடுகிறது.
சிலியில் 1973 ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் போன்ற “இளஞ்சிவப்பு அலை” முதலாளித்துவ தேசியவாத பிரதிநிதிகளும், குட்டி முதலாளித்துவ போலி இடதுகளும் புதிய “தேசிய உடன்படிக்கைகளுக்கு” அறைகூவல் விடுக்கின்றனர் மற்றும் பிராந்தியத்தின் திவாலான முதலாளித்துவ ஆட்சிகளுக்கு ஒரு பிரபலமான முகப்பை மீட்டெடுக்கின்றனர். இந்த அரசியல் பாதை, பினோச்சே பாணியிலான ஆட்சிக்கவிழ்ப்புகளை விட இன்னும் பயங்கரமான அளவில் மீண்டும் நிகழ வழிவகுக்கும்.
முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகரப் போராட்டப் பாதையில் நுழையும் புதிய தலைமுறை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், போலி-இடதுகள் மறைக்க பாடுபடும் சிலி சதியின் படிப்பினைகளை அவசரமாக உள்வாங்க வேண்டும்.
சிலி பாசிச ஆட்சிக்குழுவால் பயன்படுத்தப்பட்ட வன்முறை, ஆளும் வர்க்கம் தனது அதிகாரத்தைப் பாதுகாக்க எந்த இரக்கமற்ற தன்மையையும் பயன்படுத்தத் தயாராக உள்ளது என்பதை நிரூபித்தது.
காட்டிக் கொடுக்கப்பட்ட சிலி புரட்சி
1973ல் சிலியில் நடந்தது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்த ஒரு இரத்தக்களரியான அமெரிக்க ஆதரவு இராணுவ சதி மட்டும் அல்ல.
ஒரு சக்திவாய்ந்த பாட்டாளி வர்க்க புரட்சிகர எழுச்சி நடந்து கொண்டிருந்த சிலியில், இராணுவத்தின் பலமான காலணியின் கீழ் அதனது தோல்வி எந்த வகையிலும் தவிர்க்க முடியாதது என்பது அல்ல. ஒரு பாசிச-இராணுவ ஆட்சிக்குழு அதிகாரத்திற்கு வருவது, தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற கூடிய நிலையில் அதை தவறவிடுவதன் விளைவாகும். அது ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து விட்டோடிய ஓடுகாலிகளின் இன்றியமையாத பங்களிப்புடன் ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக தலைமைகளின் கிரிமினல் காட்டிக்கொடுப்புகளின் விளைவாகும்.
சோசலிஸ்டுகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுகளால் “இடது” கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுடன் சேர்ந்து உருவாக்கப்பட்ட அலண்டேவின் ஐக்கிய மக்கள் கூட்டணி, தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகள் போராட்டங்களின் மகத்தான எழுச்சிக்கு மத்தியில் 1970 இல் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏகாதிபத்தியத்தினால் உருவாக்கப்பட்ட வரலாற்று நிலைமைகள் மற்றும் ஒடுக்குமுறை மற்றும் நீடித்த பணவீக்க நெருக்கடிக்கு விடையளிக்கும் வகையில், அந்த போராட்டங்கள் தொழிற்சாலை ஆக்கிரமிப்புகள் மற்றும் நில அபகரிப்பு போன்ற தீவிர வடிவங்களை எடுத்தன.
ஐக்கிய மக்கள் கூட்டணி பதவிக்கு வந்ததும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கிளர்ச்சி இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும், முதலாளித்துவ அரசுக்கு அடிபணிய செய்யவும் எந்த விலை கொடுத்தாவது ஐக்கிய மக்கள் கூட்டணி முயன்றது. “சோசலிசத்திற்கான சிலியின் பாதை” என்று அழைக்கும் அலெண்டே, அதன் நூற்றாண்டு “பாராளுமன்ற ஜனநாயகத்தின்” அடிப்படையில், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸால் நிறுவப்பட்ட மற்றும் 1917 ரஷ்ய புரட்சியின் போக்கில் சதையும் இரத்தமும் வழங்கப்பட்ட வரலாற்று விதிகளுக்கு சிலி விதிவிலக்கு என்று வலியுறுத்தினார். புரட்சிகர செயல்முறை ஒரு தனித்துவமான போக்கைப் பின்பற்றும், பழைய அரசின் கட்டமைப்புகளுக்குள் வளரும் மற்றும் சிலியின் ஆயுதப் படைகளும் இராணுவப் பொலிஸாரும் “சீருடை அணிந்த மக்கள் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது தொழிற்சங்கங்களைப் போலவே புரட்சிகர முன்னெடுப்புகளின் உறுதியான அடித்தளமாக” இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மட்டுப்படுத்தப்பட்ட தேசியமயமாக்கல் மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் தொழிலாள வர்க்கத்தை திருப்திப்படுத்த ஐக்கிய மக்கள் கூட்டணி பாடுபட்ட போது, சிலி முதலாளித்துவமும் ஏகாதிபத்தியங்களும் அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கும் தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கும் நேரத்தை எடுத்துக்கொண்டது. செப்டம்பர் 11, 1973க்கான பாதை தொழிலாள வர்க்கத்தின் மீதான இடைவிடாத தாக்குதல்கள் மற்றும் பல இராணுவ ஊடுருவல்கள் மற்றும் நேரடி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளால் அமைக்கப்பட்டது.
1972 அக்டோபரில், நிக்சன் நிர்வாகம் மற்றும் CIA உடனான நேரடி ஒத்துழைப்புடன் பணிபுரியும் ஆளும் வர்க்கம், பெரும் முதலாளிகளின் கதவடைப்பை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார ரீதியாக நாட்டின் கழுத்தை நெரிக்க முயற்சித்தது. அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தைப் பேணுவதற்கும், பாசிச ஆத்திரமூட்டல்களை எதிர்ப்பதற்கும் ஏராளமான ஒருங்கிணைப்பாளர்கள், கார்டோன் தொழில்துறைகள் மற்றும் சாமானிய தொழில்துறை, சுற்றுப்புறம் மற்றும் தற்காப்பு அமைப்புகளின் பிற உள்ளூர் வலைப்பின்னல்களை உருவாக்குவதன் மூலம் தொழிலாளர்கள் பதிலளித்தனர். பொருளாதாரம் மற்றும் அரசியல் அதிகாரம் முழுவதையும் நேரடியாக தொழிலாளர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாகின.
தொழிலாளர் இயக்கத்தின் சுதந்திரமான வளர்ச்சியை எதிர்கொண்டு, ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்கி சிலியில் முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாக்க செயல்பட்டது. அலெண்டே தனது அமைச்சரவையில் இராணுவத்தை கொண்டு வந்தார், இதில் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சோசலிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தும் CUT இன் தொழிற்சங்க தலைவர்களும் இணைந்தனர். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிக்க ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை அரசாங்கம் அமல்படுத்தியது, பாசிச கிளர்ச்சியாளர்களை விடுவித்தது, மேலும் பல ஆக்கிரமிக்கப்பட்ட தொழிற்சாலைகளை அவற்றின் முந்தைய உரிமையாளர்களுக்குத் திருப்பிக் கொடுத்தது.
ஜூன் 1973 இல், இராணுவத்தின் ஒரு கிளர்ச்சிப் பிரிவு ஜனாதிபதி மாளிகைக்கு எதிராக டாங்கிகளை அனுப்புவதன் மூலம் ஒரு தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை மேற்கொண்டது, இது டான்குடாசோ என்று அறியப்பட்டது. இதற்கு, ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதிபலிப்பாக, அதன் சலுகைகளை ஆழமாக்கியதோடு, இராணுவத்தின் தலைமை தளபதியாக பினோச்சேயை நியமித்ததுடன், அவரை அலண்டேவின் அமைச்சரவைக்கு கொண்டு வந்தது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) மட்டுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ சதியின் தெளிவான ஆபத்தை எதிர்கொண்டு தொழிலாள வர்க்கத்தை நிராயுதபாணியாக்குவதில் அலெண்டேவின் அரசாங்கமும் அவருக்கு வக்காலத்து வாங்குபவர்களும் ஆற்றிய பங்கை அம்பலப்படுத்த தொடர்ந்து போராடியது.
ஆட்சிக் கவிழ்ப்புக்கு அடுத்து வந்த நாட்களில் படிப்பினைகளை வரைந்து, செப்டம்பர் 18, 1973 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துவலகக் குழு ஒரு அறிக்கையில் அறிவித்தது:
உங்கள் ஜனநாயக உரிமைகளை மக்கள் முன்னணி மற்றும் பாராளுமன்றத்தின் மூலம் அல்லாமல் முதலாளித்துவ அரசை தூக்கி எறிந்து தொழிலாளர்களின் அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், மையவாதம், திருத்தல்வாதம் அல்லது தாராளவாத முதலாளித்துவம் ஆகியவற்றில் நம்பிக்கை வைக்க கூடாது. ஆனால், நான்காம் அகிலத்தின் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்பவும், அதன் வேலைத்திட்டம் நிரந்தரப் புரட்சியாக இருக்கும்.
ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் சமூக ஜனநாயகவாதிகள் சிலி தொழிலாளர்களை நேரடியாக தோற்கடிக்க வழிவகுத்தனர், பப்லோவாத திருத்தல்வாதிகள் இந்த நெருக்கடியில் மூழ்கிய அதிகாரத்துவ தலைமைகள் உழைக்கும் மக்கள் மீது தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்தனர்.
சிலியின் தொழிலாளர் புரட்சிக் கட்சி (POR) ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக் கொடுத்த அமைப்புகளில் ஒன்றாகும், அது அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியுடன் சேர்ந்து அனைத்துவலகக் குழுவுடன் முறித்துக் கொண்டு பப்லோவாதிகளுடன் மீண்டும் இணைந்தது. லத்தீன் அமெரிக்காவின் “ஒவ்வொரு நாட்டிலும் புரட்சியை கட்டவிழ்த்து விடுபவர்கள்” என்று “கியூபா புரட்சியால் விடுவிக்கப்பட்ட” நடுத்தர வர்க்க சக்திகளை பாராட்டி, POR உடனடியாக தன்னைக் கலைத்துக்கொண்டு காஸ்ட்ரோயிஸ்டுகள் மற்றும் மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து புரட்சிகர இடது என்ற அமைப்பை 1965 இல் உருவாக்கினர்.
சிலியின் புரட்சியை சீர்குலைப்பதில் ஒரு அடிப்படை பாத்திரத்தை வகித்த புரட்சிகர இடது அமைப்பு, தொழிலாள வர்க்கத்தில் ஒரு உண்மையான புரட்சிகர கட்சியை கட்டியெழுப்புவதற்கு தடையாக இருந்தது. சிலி தொழிலாள வர்க்கத்திற்கும் ஐக்கிய மக்கள் முன்னணிக்கும் இடையே மோதல் உருவாகியதால், சமூக ஜனநாயகம் மற்றும் ஸ்ராலினிசத்தில் இருந்து உடைந்து பல தொழிலாளர்கள் புரட்சிகர இடது அமைப்புக்கு வந்தனர், அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தின் மீது “அழுத்தம் கொடுப்பதற்கு” மறுநோக்கு நிலைப்படுத்தினர்.
சிலியின் தோல்வியின் அடிப்படைப் பாடம் என்னவென்றால், தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை எடுக்கத் தயாராக இருந்தது, ஆனால் அதற்கு ஒரு புரட்சிகர தலைமையின் தீர்க்கமான கூறுகளைக் கொண்டிருக்கவில்லை. மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் கசப்பான படிப்பினைகளை உள்ளீர்த்துக்கொண்ட, ட்ரொட்ஸ்கிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சி அதற்கு இருக்கவில்லை.
21ம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தின் ஆரம்ப ஆண்டுகளில், உலக முதலாளித்துவ வரலாற்றில் மிகப்பெரும் நெருக்கடியின் வெடிப்பைக் கண்டுள்ள நிலையில், தொழிலாள வர்க்கம் மீண்டும் புரட்சிகரப் போராட்டப் பாதையில் நுழைகிறது என்பதில் சந்தேகமில்லை. உற்பத்தியின் பூகோளமயமாக்கல், உலகளவில் தொழிலாள வர்க்கத்தின் மகத்தான வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புகளில் சக்திவாய்ந்த முன்னேற்றங்கள் ஆகியவை சர்வதேச சோசலிசத்தின் கட்டுமானத்திற்கு மிகவும் சாதகமான நிலைமைகளை உருவாக்கியுள்ளன.
ஆனால், ஆட்சிக்கான வெற்றிகரமான போராட்டங்களை நடத்துவதற்கு, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வீரம் செறிந்த சிலி பாட்டாளி வர்க்கத்தின் இரத்தத்தால் எழுதப்பட்ட பாடங்களை உள்வாங்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை ஒவ்வொரு நாட்டிலும் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே இதன் பொருள் ஆகும்.