மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அரச அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்கமும் அதனுடன் அணிசேர்ந்துள்ள தொழிலாளர் கூட்டமைப்பும்,ஒப்புதல் அளிப்பதற்கான அப்பட்டமான ஜனநாயக விரோத செயற்பாடுகள் மூலம், ஒருவிட்டுக்கொடுக்கும் ஒப்பந்தத்தை திணிக்க மேற்கொள்ளும் முயற்சியை எதிர்த்து, சமீபத்தில் அமைக்கப்பட்ட சென்னை ரெனால்ட்-நிசான் தொழிலாளர்நடவடிக்கை குழுவினால் பின்வரும் அறிக்கை வெளியிடப்படுகிது.
ரெனால்ட்-நிசான் கார் பொருத்தும் ஆலையில் உள்ள 3,000நிரந்தரத் தொழிலாளர்களை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம் 2018ல் காலாவதியானது. பல ஆண்டுகளாக, அரசாங்கத்தின் ஆதரவுடன் போலியான நடுவர்மன்ற செயல்முறைக்கு விவகாரத்தை சமர்ப்பித்து வந்த தொழிற்சங்கங்கள், நிறுவனத்தின் பழிவாங்கல்களுக்கு பயந்து தொழிலாளர்களை வேலைநிறுத்தம் செய்யவோ வேறு எந்த தொழில்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளவோவேண்டாம் என்று வலியுறுத்தி வந்தது. உறுப்பினர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை முங்கொடுத்த நிலையில், இந்திய ரெனால்ட்-நிசான் தொழிலாளர் சங்கமும் (Renault Nissan India Thozhilalar Sangam-RNITS) ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பும்,சில வாரங்களுக்கு முன்பு,திடீரென போக்கை மாற்றிக்கொண்டு,இனி நடுவர் மன்றத்தில் பங்கேற்க விரும்பவில்லை என்று அறிவித்ததுடன்நிறுவனத்திடம் பேச்சுவார்த்தைக்கு வேண்டுகோள் விடுத்தன. இருப்பினும், தொழிற்சங்கங்கள் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து தொழிலாளர்களை முழுவதுமாக இருட்டில் வைத்திருந்தன.
பின்னர் டிசம்பர்22அன்று, தொழிற்சங்கங்கள் வாட்ஸ்அப் கணக்கு மூலம்,பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனத்துடன் தற்காலிக உடன்பாட்டை எட்டியதாக அறிவித்ததுடன், அதன் பிரதான நிபந்தனைகள் சிலவற்றை பற்றிஅடிப்படை விளக்கத்தை அளித்தன. அடுத்த நாள் ஆலைக்குள் நுழைந்த போது, தொழிற்சங்கத்தால் வழங்கப்பட்ட ஒரு தாள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் ஊதிய உயர்வு அட்டவணை உட்பட முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் சில விவரங்கள் அடங்கியிருந்தன. தாளின் அடிப்பகுதியில் உள்ள ஒரு பெட்டியில் குறியிடுவதன் மூலம் அவர்கள் குறித்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்பதை உடனடியாகக் குறிப்பிடுமாறு தொழிற்சங்க அதிகாரிகளால் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அப்போது, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தவாறு ஒரு வாரத்துக்கு மேலான ஆலை மூடல் டிசம்பர் 24அன்று தொடங்கியிருந்த நிலையில், 75சதவீத தொழிலாளர்கள் 'வாக்களித்துள்ளனர்' என்று தொழிற்சங்க அதிகாரிகள் கூறிக்கொண்டனர். புத்தாண்டில் ஆலை மீண்டும் செயல்படத் தொடங்கும் போது மீதமுள்ள 25சதவீதத்தினர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
* * *
சட்டவிரோத, ஜனநாயக விரோத செயல்முறையின் மூலம் ஒரு காட்டிக்கொடுப்பு ஒப்பந்தத்தை திணிக்க ரெனால்ட்-நிசான் நிர்வாகம், RNITS மற்றும் ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பும் சேர்ந்து செய்யும் சதியை முறியடி!
சென்னை ரெனால்ட்-நிசான் வாகன தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுவானது ரெனால்ட்-நிசான் இந்திய தொழிலாளர் சங்கம் (RNITS) மற்றும் ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பும் (ULF)நிர்வாகத்துடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள புதிய ஒப்பந்த உடன்படிக்கை சம்பந்தமாக ஏற்பாடு செய்துள்ள மோசடி வாக்கெடுப்பை எதிர்ப்பதில் எங்களுடன் இணைந்துகொள்ளுமாறு சக ரெனால்ட்-நிசான் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.
இந்த வாக்கெடுப்பு ஒரு ஜனநாயக விரோத மோசடியாகும்.
தொழிலாளர்களாகிய எங்களுக்கு முழு ஒப்பந்தமும் வழங்கப்படவில்லை, ஒப்பந்தத்தை சிறப்பானதாக காட்டுவதற்கு தொழிற்சங்கங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறப்பம்சங்கள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன.
முன்மொழியப்பட்டுள்ள புதிய ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் மூன்று வருடமாகும். ஆனால், RNITS மற்றும் ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பும் இதற்கான பேச்சுவார்த்தைக்கு நான்கு ஆண்டுகளை இழுத்தடிக்க கம்பனியை அனுமதித்துள்ளன. ஆயினும், தொழிற்சங்க அதிகாரிகள், எங்களுக்கு வழங்கப்பட்ட சில ஒப்பந்த விவரங்களை நாங்கள் புரிந்துகொண்டு அவற்றை மதிப்பீடு செய்ய கொடுத்த வெறும் 24 மணிநேரத்துக்குள், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதற்கும் குறைவான காலத்துக்குள், எங்களை வாக்களிக்குமாறு அழுத்தம் கொடுக்க முயன்றனர்.
உத்தேச ஒப்பந்தம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து தொழிலாளர்களாகிய நாங்கள் எமது தொழிற்சங்க 'பிரதிநிதிகளாக' இருக்கக் கூடியவர்களிடம் கேள்விகள் கேட்கும் வகையில் கூட்டங்கள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
அல்லது முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தைப் பற்றி எங்களுக்குள் கலந்துரையாட எங்களுக்கு நேரம் கொடுக்கப்படவில்லை.
போதாகுறைக்கு, RNITS மற்றும் ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பும், ஆலை மூடலின் போது ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பும் வேளையில் வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்து, நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும் என்பதை நம்மிடையே கலந்துரையாடுவதை இன்னும் கடினமாக்குவதற்கு ரெனால்ட்-நிசானுடன் கைகோர்த்துச் செயல்படும் என்பதில் சந்தேகமில்லை.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தொழிற்சங்கங்கள் ரெனால்ட்-நிசான் உடன் நடுவர் மன்றத்தில்/பேச்சுவார்த்தையில் என்ன நடக்கிறது என்பது குறித்து எங்களை முழுவதுமாக இருட்டில் வைத்திருந்தன. இப்போது, தமது செயலின்மையை கண்டு ஆங்காங்கே பெருகிவரும் கோபத்திற்கு அஞ்சி, படித்து கலந்துரையாடுவது ஒருபுறம் இருக்க நாங்கள் கண்ணில் கூட பார்த்திராத ஒரு உடன்படிக்கைக்கு அந்த இடத்திலேயே வாக்களிக்கும்படி எங்களை நிர்ப்பந்தித்து, எங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்த தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளன.
இது ஏன் என்பதை தொழிற்சங்கங்கள் எமக்கு கிடைக்கச் செய்துள்ள அந்த விவரங்கள் வெளிப்படுத்துகின்றன. முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தம் நமது அடிப்படை நலன்களை விற்றுத்தள்ளுகிறது.
உத்தியோகபூர்வ பணவீக்க விகிதமான 6.7 சதவீதத்தை விட உத்தேச சம்பள உயர்வுகள் குறைவாக உள்ளன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நிலையான ஊதிய வெட்டை ஏற்க தொழிற்சங்கம் எமக்கு அழுத்தம் கொடுக்கிறது. அதே சமயம், அவர்கள் எங்கள் செலவில் தங்களுக்கு ஒரு பெரிய ஊதியத்தை வெகுமதியாகப் பெறுகிறார்கள். தொழிற்சங்கங்களின் 'சட்ட நடவடிக்கைகளுக்கான' கட்டணங்களை பெறுவதற்காக, வழக்கமான தொழிற்சங்க சந்தா கட்டணத்தை விட, 15,000 ரூபாயை, அடுத்த மாதம் ஒவ்வொரு நிரந்தரத் தொழிலாளியின் ஊதியத்திலிருந்தும் எடுக்க வேண்டும் என்று, மொத்தம் சுமார் 52.8 மில்லியன் ரூபாயை எடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் கோருகிறது.
RNITS மற்றும் ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பும், அத்தகைய நிபந்தனைகளுக்கு உடன்படத் தயாராக இருந்தால், வரிசை-வேகம் மற்றும் பாதுகாப்பு உட்பட வேலை நிலைமைகள் சம்பந்தமான ஏனைய முக்கியமான விட்டுக்கொடுப்புகளுக்கும் எமக்குத் தெரியாமல் அவை ஒப்புக்கொண்டுள்ளதற்கான சாத்தியம் -உண்மையில் அதற்கும் மேலாக- உள்ளது.
தொழிற்சங்கங்களின் தொழிலாளர்-விரோத, ஜனநாயக விரோத ஒப்புதலளிக்கும் செயல்முறையையும் இந்த காட்டிக்கொடுப்பு ஒப்பந்தத்தையும் நாம் அனுமதிக்க முடியாது. சென்னை ரெனால்ட்-நிசான் வாகன தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழு பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட எங்களின் சக ஊழியர்கள் அனைவரையும் அழைக்கிறது:
1. தற்போதைய வாக்கெடுப்பு உடனடியாக நிறுத்தப்பட்டு வாக்குச்சீட்டுகள் அழிக்கப்பட வேண்டும். அப்போது முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மீது ஒரு புதிய சட்டபூர்வமான, அதாவது அடிப்படை ஜனநாயக அடிப்படைகளை மதிக்கும் ஒரு வாக்கெடுப்புக்கு ஒழுங்கு செய்யப்பட முடியும்.
2. எந்தவொரு வாக்களிக்கும் திகதி அல்லது திகதிகள் தீர்மானிக்கப்படுவதற்கு முன்பு, முழு முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் கிடைக்க வேண்டும்.
3. ஒப்பந்தம் வெளியிடப்பட்ட பிறகு, எந்தவொரு ஒப்புதல் வாக்கெடுப்புக்கும் முன்னதாக அதை தீவிரமாக ஆய்வு செய்து கலந்துரையாடக் கூடியவாறு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
4. தொழிலாளர்கள் ஒப்பந்தத்தைப் பற்றி கலந்துரையாட மற்றும் அதன் உள்ளடக்கங்கள் குறித்து தொழிற்சங்கத் தலைவர்களைக் கேள்வி கேட்கக் கூடியவாறு, அனைத்து ரெனால்ட்-நிசான் தொழிலாளர்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
5. நியாயமான வாக்களிப்பு செயல்முறையை ஒழுங்கமைக்க தொழிற்சங்கங்கள் மீது தொழிலாளர்கள் நம்பிக்கை வைக்க முடியாது. எனவே, வாக்கு எண்ணுவது உட்பட முழு வாக்குப்பதிவு செயல்முறையும் வெளிப்படையாக இருக்க வேண்டும் மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர் பிரதிநிதிகளின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
6. ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின் தற்போதைய நிலையை பற்றி நிரந்தரமற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும், ரெனால்ட்-நிசான் எங்களைப் பிரித்து அதன் லாபத்தை அதிகரித்துக்கொள்ளப் பயன்படுத்தும் எதேச்சதிகார பிளவுபடுத்தல்களை அகற்றுவதற்கு அவர்களுடன் ஒரு பொதுவான போராட்டத்தைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சென்னை ரெனால்ட்-நிசான் தொழிலாளர் நடவடிக்கை குழு
மேலும் தகவலுக்கு, தயவுசெய்து எங்களை rnrfc_chennai@yahoo.com அல்லது Facebook இல் Rnrfc-chennai இல் தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க
- அதிகாரத்துவம் தேர்தல் வாக்குப்பதிவை ஒடுக்கிய போதிலும், UAW தலைவருக்கான சோசலிச வேட்பாளர் வில் லெஹ்மன் சுமார் 5,000 வாக்குகள் பெற்றுள்ளார்
- சென்னையில் ரெனால்ட்-நிசான் தொழிலாளர்கள் இந்தியாவின் முதல் சாமானிய தொழிலாளர்களின் வாகன தொழிலாளர் குழுவை உருவாக்குகிறார்கள்
- இந்தியா: நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களை மீறி திட்டமிட்ட ஆலை மூடலுக்கு எதிராக சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர்
- திட்டமிடப்பட்ட ஆலை மூடலுக்கு எதிராக இந்திய ஃபோர்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர்