போர்டு நடவடிக்கைக் குழு (ஜேர்மனி): நமது வேலைகளையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேசரீதியான போராட்டத்திற்காக

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

போர்டு இன் சார்லூயிஸ் ஆலை மூடப்படும் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னர், IG Metall தொழிற்சங்கமும் மார்க்கூஸ் தால் தலைமையிலான தொழிற்சாலைத் தொழிற்சங்கக்குழுவும் ஆலையை மூடுவதற்கு முனைகின்றனர். அதை அவர்களிடம் விட்டுவிட்டால், அவர்களின் 'சார்லூயிஸிற்கான போராட்டம்' முடிந்துவிடும்.

சார்லூயிஸ் போர்ட்டில் பணிமாற்ற வேளை (WSWS)

உண்மையில், அப்போராட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. சார்லூயிஸில் உள்ள போர்டு தொழிலாளர்கள், வலென்சியா, கொலோன் மற்றும் அனைத்து உலகளாவிய இடங்களிலும் உள்ள போர்டு தொழிலாளர்களுடன் இணைந்து, வேலைகள், ஊதியங்கள் மற்றும் வெற்றிகளை, அதாவது சுருக்கமாக நமது வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒரு உண்மையான போராட்டத்திற்கு ஐக்கியப்பட்டு ஒன்றுகூடி கூட்டாகத் தயாரிக்குமாறு அழைக்கிறோம்.

ஆரம்பத்திலிருந்தே, சார்லூயிஸ் மற்றும் அல்முஸ்ஸபேஸ் (வலென்சியா) இல் உள்ள எங்கள் ஆலைகளுக்கு இடையிலான வேலை குறைப்பு போரில் பங்கேற்பதற்கு எதிராக போர்டு சாமானிய தொழிலாளர் நடவடிக்கைக் குழு எச்சரித்துள்ளது. ஜனவரி 29 அன்று, எங்கள் முதல் அழைப்பில் நாங்கள் பின்வருமாறு எழுதினோம்: “கோட்பாட்டின் அடிப்படையில், எங்களுக்கும் மற்ற ஆலைகளில் தொழிலாளர்களுக்கும் இடையே தூண்டிவிடப்படும் மிரட்டல் மற்றும் மிருகத்தனமான போட்டியை நாங்கள் நிராகரிக்கிறோம்.

ஒருவருக்கு எதிராக மற்றொருவரை நிறுத்துவது பேரழிவிற்கு வழிவகுக்கிறது. ஏனென்றால் வெற்றியாளர் என்று அழைக்கப்படுபவர் ருமேனியா அல்லது துருக்கியில் குறைந்த ஊதியத்துடன் போட்டியிடுவதற்கு நீண்ட காலம் எடுக்காது. இந்த கீழ்நோக்கிய சுழலுக்கு முடிவே இல்லை”.

சமீபத்திய வாரங்களில், அதிகமான போர்டு தொழிலாளர்கள் இந்த எச்சரிக்கை உண்மையாகிவிட்டதையும், தால் மற்றும் அவரது தொழிற்சாலை தொழிற்சங்கக்குழு சகாக்களிடம் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்க வேண்டியது அவசியமாக இருப்பதையும் பார்க்கிறார்கள்.

தால் மிகவும் எரிச்சலுடன் நடந்துகொள்வதற்கும், 'வெளியில் இருந்து வரும் சக்திகள்' (போர்டு நடவடிக்கைக் குழுவையே இவ்வாறு குறிப்பிடுகின்றார்) பணியாளர்களைப் பிளவுபடுத்துவதாகவும் கூறுவதற்கு இதுவே காரணமாகும்.

தாலைப் பொறுத்தவரை, அனைத்து போர்டு தொழிலாளர்களின் ஐக்கியம் என்பது படுகொலைக்கு ஆடுகளை ஒன்றாக அவரால் வழிநடத்தப்படுவதைக் குறிக்கிறது. அரை வருடத்திற்கும் மேலாக, சார்லூயிஸ் மற்றும் வலென்சியாவில் உள்ள ஆலைகளுக்கு இடையேயான நிறுவனங்களுக்கு இடையேயான ஏலப் போரில் போர்டுடனான பேச்சுவார்த்தைகளை நம்பியிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சார்லூயிஸ் வெளியேற்றப்பட்ட பின்னர், போர்டு மீதான தனது நம்பிக்கை காட்டிக் கொடுக்கப்பட்டதாக அவர் கூறினார். அதே மூச்சில், எமது தொழிற்சாலையை படிப்படியாக மூடுவதற்கான 'சமூக கூட்டு ஒப்பந்தம்' என்று அழைக்கப்படுவதற்கான 'போராட்டம்' இப்போது தொடங்கும் என்று அவர் அறிவித்தார்.

தால் ஒரு 'போராட்டம்' பற்றி பேசும் போது, அவர் எப்பொழுதும் தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகத்துடன் தனது சதித்திட்டத்தை கருதுவதுடன், அமைதியாக இருக்கும்படி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். போர்டிடம் இருந்து 'நிலைமைக்கேற்ற புள்ளிவிவரங்கள், தரவு அல்லது உண்மைகளை' அவர் கோருகிறார். 'போர்டுக்கான நிலைமைக்கேற்ற முன்னோக்கை எடுத்துக்காட்டுவது நிர்வாகத்திற்கு முழுமையான கடமை' என்று கூறினார்.

ஆனால் 'புள்ளிவிவரங்கள், தரவுகள் மற்றும் உண்மைகள்' தெளிவாக உள்ளன: அதாவது ஆலை மே 31, 2025 அன்று, சமீபத்திய (மேலும் முன்னதாகவே) மூடப்படும். பின்னர் 4,500 போர்டு தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள விநியோகதுறையில் உள்ள கிட்டத்தட்ட 2,000 பேரில் பலர் வேலையில்லாமல் போய்விடுவார்கள், மேலும் வேறு எங்காவது வேலை தேட வேண்டும் அல்லது ஓய்வு பெற அனுப்பப்படுவார்கள்.

உலகெங்கிலும் உள்ள சுமார் 190,000 தொழிலாளர்களின் இழப்பில் பங்குதாரர்களை செல்வந்தராக்க மின்சார வாகனங்களுக்கான மாற்றம், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் இப்போது உக்ரேனில் நடக்கும் போரைப் பயன்படுத்துவதே போர்டின் சொந்த முன்னோக்கு ஆகும். இதைச் செய்ய, இது வேலைகளை அழித்து, மீதமுள்ள ஊழியர்களை குறைந்த ஊதியத்தில் கடினமாக உழைக்க வைக்க முனைகின்றது.

ஜிம் பார்லி 2020 அக்டோபரில் உலகளாவிய நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து அவரின் நிகழ்ச்சி நிரல் இதுதான்.

போர்டு புதிய தாக்குதல்கள் மற்றும் வெட்டுக்களை அறிவிக்காமல் ஒரு வாரம்கூடக் கடந்து செல்வதில்லை. ஜூலை இறுதியில், போர்டு மேலும் 8,000 வேலைகளை குறைப்பதாக அறிவித்தது. அதில் பெரும்பாலும் அமெரிக்காவிலாகும். இதில் பாதிக்கப்பட்டவர்கள் முக்கியமாக Ford Blue இன் நிர்வாகத்தில் உள்ள பணியாளர்களாகும். இது எரிபொருளை பயன்படுத்தும் இயந்திரங்கள் கொண்ட வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக நிறுவனத்தை பிரித்து, மின்சார வாகனங்களின் உற்பத்திக்கான போர்டு மாதிர் E இனை உருவாக்கியது. இப்போது, Ford Blue 'நம்பகத்தன்மை இழந்த வங்கி' போல விற்கப்படுகின்றது.

சார்லூயிஸில் உள்ள எங்கள் ஆலையும், வலென்சியாவில் உள்ள எங்கள் சக ஊழியர்களும் இதில் பலியாகின்றனர். போர்டு நிறுவனம் கைவிட்ட இந்தியாவில் உள்ள இரண்டு ஆலைகளில் ஒன்று இந்திய கார் உற்பத்தியாளர் டாட்டாவுக்கு விற்கப்பட்டது. சென்னையில் உள்ள ஆலை கிட்டத்தட்ட எட்டு வார வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் திட்டமிட்டதை விட ஒரு மாதம் தாமதமாக மூடப்பட்டது.

ஆனால் பங்குதாரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்! இரண்டாவது காலாண்டில், போர்டு 667 மில்லியன் டாலர்களை சம்பாதித்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 19 சதவீதம் அதிகமாகும். மின்சார கார் அபிவிருத்தியாளர் Rivian இல் அதன் பங்கும் மற்றும் கோவிட் வெடிப்பு காரணமாக சீனாவில் தொழிற்சாலை மூடப்பட்டதால் அதன் வருவாயை பாதித்தபோதும் இலாபமடைந்துள்ளது. செலவீனங்கள் கழிக்கப்பட்ட நிகர இலாபம் $1.1 பில்லியனில் இருந்து $3.7 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஜூலை தொடக்கத்தில் இந்த வருமானத்தை பற்றி அறிவிக்கப்பட்டபோது போர்டின் பங்கு 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

போர்டு முழு ஆண்டுக்கான இலாப இலக்குகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. நிர்வாகம் தொடர்ந்து 'சுறுசுறுப்பாக' பில்லியன் கணக்கில் சேமிப்பை செயல்படுத்துவதற்கான வழிகளைத் தேடுகிறது. பின்னர் மின்சார வாகனங்களில் முதலீடு செய்யலாம் என்று வருடாந்த அறிக்கை கூறியது.

முதலாளித்துவத்தின் இரும்புக் கோட்பாட்டின்படி, நமது வேலைகள் மற்றும் ஊதியங்களை விட பங்குதாரர்களின் நலன்கள் முன்னுரிமை பெறுகின்றன. ஆனால் நமது வேலைகள்தான் எங்கள் வாழ்வாதாரம். இனி நாம் அவற்றை இலாபக் கொள்கைக்கு அடிபணியச் செய்ய முடியாது. பங்குதாரர்கள் மற்றும் மேலாளர்கள் வாகனங்களை உருவாக்குவதில்லை. நாங்கள் இலாபத்தை உருவாக்குகிறோம். அதன்படி, நிறுவனத்திற்கு நாம் சம்பாதிக்கும் பணத்திற்கு என்ன நடக்கின்றது என்பதையும் நாம் கட்டுப்படுத்த வேண்டும்.

IG Metall உம், உலகெங்கிலும் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இதை நிராகரிக்கின்றன. அவர்களைப் பொறுத்தவரை, நாங்கள் எந்த உரிமையும் இல்லாத தாழ்மையான மனுதாரர்களாக இருக்கிறோம். நிர்வாகம், தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் குழு பிரதிநிதிகள் என்ன சொன்னாலும் செய்ய வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். தாலின் கீழும், ஜோஸ் லூயிஸ் பர்ராவின் கீழும் வலென்சியாவில் உள்ள தொழிற்சாலைத் தொழிற்சங்கக்குழுக்கள் நமது வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூகத் தரங்களை விற்றுக்கொண்டிருக்கையில், இந்த தொழிற்சாலைத் தொழிலாளர் குழு உறுப்பினர்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கின்றது. வேலையிலிருந்து விலக்கப்படுவதற்கான கொடுப்பனவுகள், நிறுவனத்திற்கு சொந்தமான அல்லது அரசுக்கு சொந்தமான பரிமாற்ற நிறுவனங்களில் இலாபகரமான மாற்று வேலைகள், எஞ்சிய செயல்பாடுகள் போன்றவை அவர்களின் பிரியாவிடைகளை இனிமையாக்கும்.

இது நிறுத்தப்பட வேண்டும். நாம் முன்முயற்சி எடுப்பதுடன், தொழிற்சாலைத் தொழிலாளர் குழுவிற்கு எதிராக நிற்க வேண்டும். எங்களது வேலைகளும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

நாம் இப்போது சுறுசுறுப்பாக செயற்பட்டு விநியோகதுறையிலுள்ள அண்டையிலுள்ள ஆலைகளிலும், சார்லாந்து முழுவதிலும் மற்றும் முழு வாகனத் துறையிலும் உள்ள சக ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். ஒரு நடவடிக்கைக் குழுவாக, நாங்கள் ஏற்கனவே இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த போர்டு தொழிலாளர்களுடன் கூட்டுக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் இந்த வேலையை விரிவுபடுத்துவோம்.

உலகம் முழுவதும் வளர்ந்து வரும் எதிர்ப்பின் ஒரு பகுதியாக ஆலையைப் பாதுகாப்பதற்கான நமது போராட்டத்தை நாம் கருதினால் மட்டுமே சார்லூயிஸில் நாம் வெற்றிபெற முடியும். போர்டு மட்டுமல்ல, ஒட்டுமொத்த வாகனத்தொழிலும் தொழிலாளர்களின் இழப்பில் மறுகட்டமைக்கப்படுகிறது. பல தலைமுறைகளாக நாம் போராடி வந்த வெற்றிகளான தொழிலாளர்களின் சமூக உரிமைகளை நசுக்க அரசாங்கங்களும் பெருநிறுவனங்களும் தொழிற்சங்கங்களுடன் ஒத்துழைக்கின்றன.

உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான கொடூரமான இராணுவ மறுஆயுதமமாக்கலுக்கும் பினாமி யுத்தத்திற்கான செலவுகள் தொழிலாளர்களாகிய எங்களின் மீது சுமத்தப்படுகின்றன. அதே நேரத்தில், கொரோனா வைரஸை காட்டுமிராண்டித்தனமாக பரவ அனுமதிக்கும் அரசாங்கத்தின் கொள்கையால், பெருநிறுவன இலாபத்திற்காக நமது உடல்நலன் தியாகம் செய்யப்படுகிறது. எரிபொருளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பணவீக்கம் மூலம் உண்மையான ஊதியங்களும் பெருமளவில் குறைக்கப்படுகின்றன.

நாம் சார்லூயிஸில் நமது போராட்டத்தை வாகனத் தொழிற்துறையின் மற்ற போராட்டங்கள், இயற்கை எரிவாயு கூடுதல் கட்டணத்திற்கு எதிரான போராட்டங்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களின் வெகுஜனப் போராட்டங்களுடன் இணைக்க வேண்டும். சர்வதேச அளவில், 50க்கும் மேற்பட்ட நடவடிக்கைக் குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல வாகனத் துறையில் உள்ளன. சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்களின் கூட்டணியில் அவர்களுடன் இணைத்து கூட்டு எதிர்ப்பை ஒழுங்கமைக்க வேண்டும். போர்டு நிறுவனத்தின் சர்வதேச மூலோபாயத்திற்கு எங்களிடமிருந்து ஒரு சர்வதேச எதிர் மூலோபாயம் தேவைப்படுகிறது.

முதல் படியாக எங்களைத் தொடர்புகொண்டு போர்டு நடவடிக்கைக் குழுவை வலுப்படுத்த வேண்டும். அதை நாங்கள் அனைத்து விநியோகத்துறை தொழிற்சாலைகளுக்கும் விரிவுபடுத்துவோம். பின்வரும் எண்ணிற்கு Whatsapp செய்தியை அனுப்புவதன் மூலம் எங்களைத் தொடர்புகொள்ளவும்: 491633378340 அல்லது நடவடிக்கைக் குழுவிற்கு இங்கே பதிவுசெய்யவும்.

Loading