இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி "அனைத்து கட்சி" பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கான வேண்டுகோளை நிராகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தக் கட்டுரை முதலில் ட்விட்டரில் வெளியிடப்பட்டது.

இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி, முதலாளித்துவ ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான 'அனைத்து கட்சி உடன்பாட்டை' எட்டுவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் இணையுமாறு உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (சமர ஜன பலவேகய - SJB) தலைவர் விடுத்த நேரடி வேண்டுகோளை உறுதியாக நிராகரித்துள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பிரிவான, சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் விஜே டயஸ் எந்தச் சூழ்நிலையிலும் ஆளும் வர்க்கத்தின் அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடமாட்டாது என்று அப்பட்டமாக ஐக்கிய மக்கள் சக்தி க்கு தெரிவித்துள்ளார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

அழைப்பை நிராகரித்த சோசலிச சமத்துவக் கட்சியின் செயலாளர் தீபால் ஜயசேகர, 'இந்த முதலாளித்துவ அரசு எந்திரத்திற்கு ஒரு புதிய முகத்தை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ள 'சர்வ கட்சி அரசாங்கம்' அல்லது மக்கள் விடுதலை முன்னணி (JVP) முன்மொழிந்துள்ள 'ஐக்கிய அரசாங்கம்' மூலம் நெருக்கடி தீர்க்கப்படாது என எழுதுகிறார்.”

'அனைத்துக் கட்சி பேச்சுக்களின்' உண்மையான நோக்கங்களை அம்பலப்படுத்தி தோழர் ஜெயசேகர பின்வருமாறு எழுதுகிறார்:

ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் பிரதம மந்திரி விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தைப் போலவே, அதை மாற்றும் எந்தவொரு முதலாளித்துவ அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சிக்கன நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்தும்.

மேலும், அந்தத் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் இதர உழைக்கும் மக்களை ஒடுக்க அரசு எந்திரத்தின் அனைத்து அடக்குமுறைக் கருவிகளையும் அந்த அரசாங்கம் பயன்படுத்தும்.

நவ சம சமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி போன்ற மத்தியதர வர்க்க போலி இடது கட்சிகள் முதலாளித்துவ அரசாங்கங்களுடனான சந்தர்ப்பவாத ஒத்துழைப்பின் நீண்டகால வரலாற்றால் மதிப்பிழந்துள்ளன என்ற உண்மையை ஐக்கிய மக்கள் சக்தி நன்கு அறிந்திருப்பதாக தோழர் ஜெயசேகரவின் கடிதம் குறிப்பிடுகிறது.

'அதனால்தான், அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் சர்வதேச சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் கொள்கை ரீதியான போராட்டத்தை நடத்தி வரும் சோசலிச சமத்துவக் கட்சியை நோக்கி நீங்கள் திரும்பியுள்ளீர்கள்.' ஆனால் சோசலிச சமத்துவக் கட்சி முதலாளித்துவக் கட்சிகளுக்கு ஒரு இடது மூடுதிரையை வழங்காது.

'உங்கள் அழைப்பை நிராகரித்து, தொழிலாள வர்க்கம் அதன் சமூக சக்தியை அணிதிரட்டவும், பாரிய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு அதன் சொந்த தீர்வை செயல்படுத்தவும் ஒரு வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். இது முதலீட்டாளர்களின் இலாபத்தை விட மனித தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்றது.”

ட்ரொட்ஸ்கிச கொள்கைகளின் உறுதியான பிரகடனத்துடன் தோழர் ஜெயசேகர ஐக்கிய மக்கள் சக்திக்கான தனது கடிதத்தை பின்வருமாறு முடிக்கிறார்:

சோசலிச சமத்துவக் கட்சி, உங்களின் அழைப்பை மீண்டும் அவமதிப்புடன் நிராகரித்து, இலங்கையின் மக்கள் எழுச்சிக்கு தலைமையையும் சர்வதேச சோசலிச முன்னோக்கையும் வழங்கக்கூடிய வெகுஜனப் புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்ப போராடுகிறது.

இந்த போராட்டத்தில், சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தையே ஏகாதிபத்தியப் போர், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் சமூக அவலத்தை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒரே சமூக சக்தியாக கருதுகின்றது.

ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தோழர் ஜெயசேகரவின் கடிதம் ஆயிரக்கணக்காகனளவில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

Loading