இலங்கை ஜனாதிபதி இராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி கொழும்பில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கடந்த வாரம், ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் பதிவி விலகக் கோரி கொழும்புத் துறைமுகைத்துக்கு அருகாமையில் உள்ள காலி முகத்திடலில் பிரமாண்ட போராட்டத்தில் இலங்கை முழுவதிலும் இருந்து பத்தாயிரக்கணக்கானவர்கள் இணைந்துள்ளனர். வானளாவ உயர்ந்துசெல்லும் விலைவாசி, எரிபொருள் மற்றும் பிற அத்தியவசிய பொருட்களின் பற்றாக்குறைகள் மற்றும் மணித்தியாலக்கணக்கான நாளாந்த மின்வெட்டுகள் போன்றவற்றுக்காக அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல் வீதியில் பேரணி செல்கின்றனர் [WSWS Media]

காலி முகத்திடல் போராட்டமானது கோடா வீட்டுக்குப் போ (#GoHomeGota2022) என்ற தலைப்பில் சமூக ஊடகங்கள் ஊடாக பாரியளவில் ஒழுங்கமைக்கப்பட்டது.

“எமக்கு ஒரு பொறுப்பான அரசாங்கம் வேண்டும்”, “திருடிய எங்கள் பணத்தை திரும்பக் கொடு,” “ஊழல்மிக்க அரசியல்வாதிகளை கைது செய்,” “எமது பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலம் தேவை” மற்றும் “போதுமென்றால் போதும்” போன்ற வாசகங்களை கோசமிட்டுக்கொண்டு தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழில்சார் வல்லுனர்கள் மற்றும் இல்லத்தரசிகளும் சிங்கள, தமிழ், முஸ்லிம் பேதமின்றி ஐக்கியப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை மாலை நேரத்துக்குள் காலி முகத்திடத்தின் பாதையின் இரு பக்கத்திலும் சுமார் 2 கிலோ மீற்றருக்கு கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் ஒன்று திரண்டிருந்தினர். போராட்டத்தை தடுப்பதற்கு அவநம்பிக்கையான தோல்விகரமான முயற்சியில் ஈடுபட்ட அரசாங்கம், வெள்ளியன்று காலி முகத்திடலை பொதுப் பாவனைக்கு தடை செய்வதாக அறிவித்தது.

ஜனாதிபதி மாளிகை உட்பட உயர் பாதுகாப்பு பிரதேசங்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதை தடுக்க கோட்டைப் பிரதேசம் முழும் பொலிஸ் அணிதிரட்டப்பட்டிருந்தது. [WSWS Media]

சில போராட்டக்காரர்கள் வீதியில் பேரணி மேற்கொண்ட அதே வேளை, ஏனையவர்கள் வீதி நாடகம் நடத்தி, எதிர்ப்பு பாடல்களை பாடினர். நீர்த்தாரை இயந்திரம் மற்றும் கண்ணீர்ப் புகை குண்டுடன் பொலிஸ் மற்றும் இராணவமும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க நிலைநிறுத்தப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது ஞாயிறு காலையில் மேலதிக குழுக்களுடன் இணைந்து இரவு முழுவதிலும் தொடந்து மேற்கொள்ளப்பட்டது. பல அமைப்புக்களும் தனிநபர்களும் உணவு மற்றும் குடிபானங்களை சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிறு அதிகாலையிலும் வழங்கியதோடு மோட்டார் வாகனங்களில் பயணித்தவர்கள் ஒலிகளை எழுப்பி ஆதரவைத் தெரிவித்தனர்.

இராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்து! “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்திடு!, “அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கையை தோற்கடி!” நடவடிக்கை குழுக்களைக் கட்டியெழுப்பு!” “இடைக்கால அரசாங்கத்தை நிராகரி!” “வெளிநாட்டுக் கடன்களை நிராகரி” உள்டங்களான தமது சொந்த பதாதைகளுடன் ஒரே ஒரு அரசியல் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (iYSSE) அமைப்பின் உறுப்பினர்கள் மட்டுமே தலையீடு செய்தனர்.

ஏப்பிரல் 9, கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் பிரச்சாரம் செய்யும் சோ.ச.க. மற்றும ஐ.வை.எஸ்.எஸ்.இ. உறுப்பினர்கள் [WSWS Media]

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரகர்கள் கட்சியின் வேலைத்திட்டத்தை கோடிட்டுக் காட்டும் நூற்றுக்கணக்கான அறிக்கைகளை விநியோகித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து உற்சாகமான பதில்களை அவர்கள் வென்றனர். பலர் அதன் முன்னோக்கு பற்றி நீண்ட கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழி என அழைப்புவிடுக்கின்ற பாதாதையை தாங்கயிவாறு ஒரு இளம் பெண் சோ.ச.க பிரச்சாரகாரர்களை அணுகினார். அவர் சோ.ச.க.யின் கோரிக்கைகளை பார்த்த பின் அதன் குழுவுடன் நிற்க முடிவுசெய்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தற்போதய போராட்டத்தில் மிக முக்கியமாக உள்ளது என அவர் கூறினார்.

கொழும்பில் இருந்து சுமார் 140 கிலோ மீற்றர் உள்ள இரத்தினபுரியில் இருந்து ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தரான சிசர சந்திர கூறியதாவது: “எனது வலிகளை இனியும் தாங்க முடியாததன் காரணமாக இங்கு வர முடிவுசெய்தேன். இராஜபகஷவும் அவரது அரசாங்கமும் வீழ்த்தப்பட வேண்டும், ஆனால் எவ்வாறான அரசாங்கம் அதன் பின்னர் ஆட்சிக்கு வரும் என்பதைப் பற்றி நான் யோசிக்கிறேன். ஒரு தனியான குழு பாராளுமன்றத்தில் ஆட்சிக்கு வந்தாலும் கூட, இதேதான் நடக்கும். இடைக்கால அராசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் கூட அமைச்சர்களை நியமிக்கவும் பதவி விலக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.

சிசிர சந்திர, நடுவில் இருக்கிறார் [WSWS Media]

ஜனாதிபதிக்கு, ஊரடங்கு மற்றும் அத்தியவிய சேவைகள் சட்டத்தை அமுல்படுத்தவும் கொடூரமான பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தவும் முடியும் என சோ.ச.ச. சுட்டிக்காட்டியது. இராஜபக்ஷ தனது நேரத்தை கடத்திக்கொண்டிருப்பதோடு இந்த அதிகாரங்கப் பயன்படுத்தி வெகுஜன நடவடிக்கையை ஒடுக்குவதற்கு பின்னர் முயற்சி செய்வார் எனவும் அது எச்சரித்தது.

“நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான சோ.ச.க.யின் கோரிக்கை இப்போது மிக மிகப் பொருத்தமானது என சந்திர பதிலளித்தார். “நாடு அதிக சுமையை முகங்கொடுப்பது, அது மக்களுக்காகக் கடன் பெற்றதன் காரணத்தால் அல்ல. பாரிய கடன்கள் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக செலவு செய்யப்பட்டதோடு, மற்றைய பாரிய தொகை சர்வதேச மூலதனத்தின் முதலீட்டாளர்களுக்கான உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக செலவாகியுள்ளன என நான் நினைக்கிறேன். மற்றவர்களின் பழியை நாம் சுமக்க முடியாது. வெளிநாட்டுக் கடன்களை இரத்து செய் என்ற சோ.ச.க.யின் வின் கோரிக்கை, முற்றிலும் சரியானது.”

கொழும்பில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் பிசான் எசித் “விலைகள் மிக சடுதியாக அதகரிக்கின்ற நிலைமையில் வாழ்வதற்கு எமது சம்பளம் போதாது” எனக் கூறினார். அத்தியவசியப் பொருட்களின் பற்றாக்குறையே அடிப்படைப் பிரச்சினை ஆகும். ஆனால் இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்பது என்பது பற்றி ஒரு பதாதை கூட கோடா வீட்டுக்குப் போ இயக்கத்தில் காணவில்லை.

பிசான் எசித், வலதில் இருந்து இரண்டாவதாக [WSWS Media]

“இராஜபக்ஷ வீட்டுக்கு அனுப்பட்டாலும் கூட, அதன் பின்னர் என்ன நடக்கும் என்பதே எனது கேள்வியாகும். 2015 தேர்தலின் போது, முன்னாள் மகிந்த இராஜபக்ஷ அரசாங்கம் மக்களால் துக்கியெறியப்பட்டு மற்றொரு முதலாளித்துவக் கட்சிக்கு வழியமைத்தது. பாராளுமன்றத்துக்கு நல்ல தலைவர்களை அனுப்புவதால் எமது பிரச்சினைகள் தீரக்க முடியும் என முதலில் நினைத்தேன் ஆனால் இப்போது அந்த நம்பிக்கை இல்லை.

நீங்கள் சொல்வது போல, இந்த அரசாங்கங்கள் முதலாளித்துவ அரசாங்கள். எந்த முதலாளித்துவ அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தாலும் முதலாளிகளின் இலாபங்களைப் பாதுகாக்கின்ற கொள்கைகளையே அமுல்படுத்தும் என்ற உங்கள் பார்வையுடன் நான் உடன்படுகின்றேன்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கூறுவது போல, இந்த நெருக்கடி ஏமாற்று மற்றும் ஊழல்களின் பெறுபேறு அல்ல. மாறாக, இலாப முறைமையே ஆகும் என்பதை சோ.ச.க. பிரச்சாரகர்கள் கலந்துறையாடலின் போது விளக்கினர்.

“முதலாளிகள் தொழிற்சாலைகளில் வேலைசெய்வதில்லை மாறாக தொழிலாளர்களின் உழைப்பில் இருந்து இலாபத்தை பெறுகின்றனர். உண்மையான உற்பத்தியாளர்களான தொழிலாளர் வர்க்கத்தின் கைகளில் உற்பத்திச் சாதனங்கைளை எடுப்பது மிகவும் பொருத்தமானதாகும்,” என கூறி எசித் உடன்பட்டார்.

“முறைமை மாற்றம் அவசியம் என பலர் வாதிட்டாலும் உண்மையான முறைமை மாற்றம் என்பது முதலாளித்துவ இலாப முறைமையினை இல்லாதொழிப்பதே என்பதை இந்தக் கலந்துரையாடலில் இருந்து நான் கற்றுக்கொண்டேன். அதற்கான போராட்டத்தில் இணைவதற்கு நான் விரும்புகின்றேன்.”

முதலாளித்துவ ஆட்சியை தாக்கியெறிவதற்காக தொழிலாள வர்க்கத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பும் சோ.ச.க.யின் போராட்டத்தில் ஆர்வமாக உள்ளதாக எசித் கூறினார்.

“சோ.ச.க.யின் பிரச்சாரத்துக்கும் “கோட்டா வீட்டுக்குப் போ” போராட்டத்துக்கும் இடையேயான வேறுபாடு, உங்களது பதாதைகளின் மூலம் மிகத் தெளிவாக காட்டபட்டுள்ளது” எனத் தெரிவித்த அவர், போராட்டத்தில் சோ.ச.க. குழுவினருடன் தன்னை இணைத்துக்கொள்ள முடிவெடுத்தார்.

தனியார் ஆங்கில ஆசிரியரான சுரேஸ் சில்வா, கோடாபய இராஜபக்ஷவை வெளியேற்ற உதவுவதற்காகவே இந்தப் போராட்டத்திற்கு வந்ததாகக் கூறினார். “இதுவே முதல் காரியம் என நான் நினைத்தேன். உங்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இராஜபக்ஷவை வெளியேற்றுவதும் எமது பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய புதிய அரசாங்கத்தை உருவாக்குவதுமே இந்த செயன்முறையில் முக்கியமாக உள்ளடக்கப்பட வேண்டும் என நான் புரிந்துகொண்டேன்.

சுரேஸ் சில்வா [WSWS Media]

“இராஜபக்ஷ மற்றும் அவரது சகாக்களாலும் பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியமையாலேயே இந்த நெருக்கடி உருவாகியாதாக நான் நினைத்தேன். ஆனால் நாம் முகங்கொடுக்கின்ற பிரச்சினை உலக முதலாளித்துவ முறைமையின் நெருக்கடியின் விளைவுகள் ஆகும் என்ற உங்களது விளக்கத்துடன் உடன்படுகின்றேன்.

உற்பத்தியின் புகோளமயமாக்கல் தொடர்பாக சிலவற்றை அறிந்திருந்த தோடு தற்போதைய பிரச்னைகள் தேசிய எல்லைகளுக்குள் தீர்க்க முடியும் என நம்பவில்லை என சில்வா தெரிவித்தார். “நாம் உலக மூலதனத்துடன் பேராட வேண்டும், ஆகவே எமது போராட்டம் ஒரு சர்வதேச இயக்கமாக உருவாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்” என அவர் கூறினார்.

களனி பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவரான மாலிங்க, அரசியல் கட்சிகள் அழைக்கப்பட்டிருக்காத நிலையில் ஆர்ப்பாட்டத்தில் சோ.ச.க. ஏன் தலையிடுகின்றது என கேட்டார்.

காலிமுகத்திடல் போராட்டத்தின் ஒரு பகுதி [WSWS Media]

சோ.ச.க. ஆனது தமது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக இந்தப் போராட்டத்தை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்ற முதலாளித்துவ பாராளுமன்ற கட்சிகள் போல அல்ல, என்பதை சோ.ச.க. பிரச்சாரகர்கள் விளக்கினர். சோ.ச.க. தொழிலாள வர்க்கம் அதனது சொந்த வர்க்க நலன்களுக்காகப் போராடுவதற்கான முன்னோக்கைக் கொண்டுள்ளது.

சோ.ச.க.யின் அறிக்கையை வாசித்த மாலிங்க, “முன்னர் தமது சொந்த நலனுக்காக வெகு ஜனங்களை தவறாக வழிநடத்த முயற்சித்த அரசியல் கட்சிகளை அடையாளங் கண்டேன். இப்போது சோ.ச.க.யின் வேலைத்திட்டத்தை வாசிக்கும் போது பாரிய வேறுபாட்டை உணர்கிறேன். நான் நினைக்கிறேன் இந்த அறிக்கையில் உள்ள கோரிக்கைகள் எமது போராட்டத்துக்கு பொருத்தமானதாகும்.”

மக்களுடைய நலன்களை உண்மையாகப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு அரசியல் கட்சி தற்போது அவசியம் என அவர் முடித்தார்.

Loading