இலங்கை அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு எதிராக அடக்குமுறை சட்டங்களை திணிக்கின்றது

சுயாதீன தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப வேண்டியது அவசரத் தேவையாகும்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, மே 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம். சுமார் பத்து இலட்சம் அரசாங்க ஊழியர்கள் மீது அத்தியாவசிய சேவை உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அனைத்து சுகாதார ஊழியர்கள் போலவே துறைமுகம், ரயில், பேருந்து போக்குவரத்து, பெட்ரோலியம், எரிவாயு, அரச வங்கி மற்றும் காப்புறுதி தொழிலாளர்களுக்கும்; அரசுக்கு சொந்தமான உணவு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ஒன்பது மாகாண சபைகளில் உள்ள அரசாங்க நிர்வாக சேவை ஊழியர்களும் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

1979 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெஞயவர்தனவினால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டங்கள், அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்படுள்ள பேச்சு சதந்திரம் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் உரிமை உட்பட அடிப்படை ஜனநாயக உரிமைகள் இரத்துச் செய்யப்படுகின்றன. அந்த உத்தரவுகளை மீறும் தொழிலாளர்களுக்கு எதிராக இராணுவத்தையும் பொலிஸையும் பயன்படுத்துவதற்கு இதன் மூலம் அரசாங்கத்திற்கு 'சட்டப்பூர்வமான' அதிகாரம் வழங்கப்படுகின்றது.

அத்தியாவசிய சேவை உத்தரவுகளை மீறும் தொழிலாளர்கள், வேலை நீக்கம், இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையான “கடின உழைப்புடன் கூடிய சிறைத்தண்டனை” வழங்குதல் மற்றும் அரசாங்கத்தால் 'அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை' பறிமுதல் செய்யப்படுதல் போன்ற தண்டனைகளை எதிர்கொள்ள கூடும். இந்த உத்தரவு, தொழில்முறை உரிமங்களை ரத்து செய்தல் மற்றும் 2,000 முதல் 5,000 ரூபாய் வரையான அபராதம் விதிப்பதற்கும் சட்ட விதிகளை வழங்குகிறது.

இந்த உத்தரவுகளை மீறுவதற்காக 'சரீர ரீதியான நடவடிக்கை அல்லது எந்தவொரு பேச்சு அல்லது ஆவணம்' மூலம் 'தூண்டுதல், பிரேரித்தல் அல்லது ஊக்குவித்தல்' நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் அபராதம், சொத்து பறிமுதல் மற்றும் ஐந்து ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

கோவிட் தொற்றுநோய் ஆபத்தான முறையில் பரவுவதற்கு அனுமதிக்கும் வகையில், பெயரளவிலான பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தைத் திறந்து வைத்திருக்கும் அரசாங்கம், பெரிய வணிகர்களின் இலாபத் தேவைகளை இட்டு நிரப்பி வருகின்றது. பரிசோதனைகள் குறைந்த பட்சமாக முன்னெடுக்கப்படும் நிலைமைகளின் கீழும் கூட, வெளியிடப்படும் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின் படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 3 ஆயிரத்தை நெருங்குவதோடு நாட்டில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாளொன்றுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகின்றன.

இந்தப் பின்னணியில், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் முன்நிலையில் உள்ள, குறிப்பாக சுகாதாரத் துறை உட்பட, அரசாங்கத் துறை ஊழியர்கள் மீதான அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக கோபம் அதிகரித்து வருகிறது.

தொற்றுநோய் பேரழிவுகரமாக வேகமாக பரவுவதால் மருத்துவமனை அமைப்பு கோவிட் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றது. சுகாதார ஊழியர்களுக்கு தேவையான தடுப்பூசிகள், சரியான பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படாததால், அவர்கள் நோய் தொற்றுக்குள்ளாகும் மற்றும் இறக்கும் அபாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆக்ஸிஜன், மருத்துவ உபகரணங்கள், மருந்து மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகள் பற்றாக்குறை, அத்துடன் பாரிய ஊழியர்களின் பற்றாக்குறையும் நோயாளிகளுக்கும் போலவே சுகாதார ஊழியர்களுக்கும் இடுப்பை உடைக்கும் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போதே நூற்றுக்கணக்கான சுகாதார ஊழியர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளனர்.

மிகப் பெரும்பான்மையான தொழிலாளர்-ஏழை கொரோனா நோயாளிகளுக்கு, மருத்துவமனை படுக்கைகள் இல்லாததால் எந்த சிகிச்சையும் இல்லாமல் வீட்டிலோ அல்லது சாலை வாகனங்களிலோ மரணிக்க வேண்டியுள்ளது. சரியான சுகாதார ஆலோசனையைப் பின்பற்ற முடியாத நிலையில் கூட, 'அத்தியாவசியம்' என்ற லேபலின் கீழ், லாபத்தை கறப்பதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிற தொழிற்சாலைகளில் இருந்து நூற்றுக்கணக்கான கோவிட் நோயாளிகள் தொடர்ந்து உருவாகுகின்றனர். அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்களால் வரவழைக்கப்படும் அனைத்து ஊழியர்களும், தொற்றுநோயின் வாய்க்குள்ளேயே கொண்டு செல்லப்படுகிறார்கள்.

மே 10 அன்று அரசாங்கத்தால் சுகாதாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்.எச். முனசிங்க ஊடாக, சுகாதார ஊழியர்களுக்கு 'ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிடுவதை' தடைசெய்யும் உத்தரவு ஒன்று பிறப்பிக்கபட்டது. சுகாதார ஊழியர்களுக்கு நோய் தொற்றினால், அது சுகாதார ஊழியர்களின் சொந்த தவறின் காரணமாகவே என்பதை உறுதிப்படுத்தும் மற்றொரு சுற்றறிக்கையை அரசாங்கம் கொண்டு வந்தது.

இந்த அத்தியாவசிய சேவை உத்தரவுகள், முழு தொழிலாள வர்க்கத்தின் மீதும் இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுக்கும் தாக்குதலில் ஒரு தீர்க்கமான படியாகும்.

இந்த கடுமையான சட்டங்கள் குறித்து முற்றிலும் மௌனமாக இருக்கும் தொழிற்சங்கங்கள், போலி-இடது கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி என்று அழைக்கப்படுபவை, அந்தச் சட்டங்களின் கடுமையான உள்ளர்த்தங்களை மூடி மறைத்து தொழிலாளர்களை இருளில் மூழ்கடித்து அரசாங்கத்தின் தண்டனை பொறிக்குள் அவர்களை சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அரசாங்கத்தால் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு எதிராக இராணுவத்தை நிறுத்தி, அவற்றை நாசப்படுத்தும் முன்திட்டங்கள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளது. பெப்ரவரி 24-25 சுகாதார கனிஷ்ட ஊழியர்களின் தீவு முழுவதுமான வேலைநிறுத்தத்தை நாசப்படுத்த அரசாங்கம் செயற்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு முன்னால் சுகாதார ஊழியர்கள் நடத்திய எதிர்ப்பு சத்தியாகிரகத்தை நாசப்படுத்துவதற்காக, ஜூன் 3 மற்றும் ஜூன் 4 இரவு, அரசாங்கம் ஒரு பொலிஸ் படையை நிறுத்தியது.

ஆழப்படுத்தப்பட்டு வரும் இந்த அடக்குமுறையை மூடிமறைக்கும் போலி-இடதுகள் மற்றும் தொழிற்சங்கங்கள், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற மாயையை தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் வளர்த்து வருகின்றன. இந்த துரோகத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒழுங்கமைய வேண்டிய தீர்க்கமான தேவையை சுகாதார தொழிலாளர்களின் நடவடிக்கை குழுவினராகிய நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.

தொழிலாள வர்க்கத்தின் பலத்தை சர்வதேச அளவில் கட்டவிழ்த்து விடுவதை இந்த நடவடிக்கை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். இதற்கு தேவையான ஒழுங்கமைப்பு வியூகமாக, படிநிலையாகவும் பகுதியாகவும் தொழிலாளர்களை பிரிக்கும் குறுங்குழுவாத தொழிற்சங்கங்களுக்கு மாறாக, அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராடக்கூடிய தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவது இன்றியமையாததாகும்.

இந்தியா, அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் சுகாதார ஊழியர்களின் போராட்டங்கள் வெடித்திருப்பது சம்பந்தமாக செய்திகள் வெளிவருகின்றன. இலங்கை அரசாங்கத்தைப் போலவே உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களும், தொழிலாளர்கள் மீlது கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு எதிராக, தொழிலாளர்கள் அணிதிரண்டு வருகின்றனர். இலங்கையில் சுகாதார தொழிலாளர்கள் “தனியாக” இல்லை.

இந்த நடவடிக்கைக் குழுக்களை, விசேடமக மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும், ஏனைய துறைகளைச் சேர்ந்த வேலைத் தளங்களிலும் மற்றும் தொழிற்சாலைகளிலும் கட்டியெழுப்ப வேண்டியது அவசர அவசியமாக உள்ளது. இந்த நடவடிக்கை குழுக்கள் மற்ற நாடுகளில் தொழிலாள வர்க்கத்தினர் கட்டியெழுப்பும் தொழிலாளர் நடவடிக்கை குழுக்களுடன் ஒரு சர்வதேச வலையமைப்பாக அணிதிரண்டு, தொழிலாள வர்க்கத்தின் ஒட்டுமொத்த வலிமையையும் கட்டவிழ்த்து விட வேண்டும்.

அந்த அடிப்படையில், சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் உலக அமைப்பான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் தொடங்கப்பட்டு தலைமைத்துவம் வழங்கப்படும் “தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியை” கட்டியெழுப்புவதற்காக முன்வருமாறு சுகாதார ஊழியர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

Loading