மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய "நாற்கரம்" என்று அழைக்கப்படும் உயர்மட்ட தலைவர்களின் முதல் உச்சி மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் நேற்று நடத்தினார். இந்த இணையவழி கூட்டம் COVID-19 மற்றும் காலநிலை மாற்றம் குறித்து பொதுப்படையாக முன்வைக்கப்பட்டாலும், அதன் உண்மையான நோக்கம் சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது: அதாவது இந்தோ-பசிபிக் முழுவதும் சீனாவை எதிர்கொள்ள இராணுவ மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் போருக்கு தயாரிப்பு செய்வதுமாகும்.
பதவிக்கு வந்ததிலிருந்து, பைடென் பெய்ஜிங்கை நோக்கிய வாஷிங்டனின் ஆக்கிரோஷ நிலைப்பாட்டைத் தொடர்வதோடு மட்டுமல்லாமல், ஒபாமா நிர்வாகத்தின் "ஆசிய முன்னிலை" ஆரம்பிக்கப்பட்டதில் அவர் ஒரு பகுதியாகவும் இருந்தார், ட்ரம்பின் கீழ் மிகவும் அது பாதிக்கப்பட்டிருந்தது என்ற நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தினார். சீனா மீது பைடென் கவனம் செலுத்துவதன் மூலம், அவர் நடத்திய முதல் பல்தரப்பு கூட்டம் நாற்கர உரையாடல்தான் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நான்கு தலைவர்களாலும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் —பைடென், ஜப்பானிய பிரதம மந்திரி யோஷிஹைட் சுகா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் சீனாவுக்கு எதிராக இயக்கிய ஒரு தொகை சொற்றொடர்களை உள்ளடக்கியிருந்தார்கள்: "ஒரு சுதந்திரமான, திறந்த விதிகள் அடிப்படையிலான ஒழுங்கு," "சுதந்திர கடற்பயணம் மற்றும் விமானப் பறப்பு," மற்றும் "கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களிலுள்ள விதிகளை அடிப்படையாகக் கொண்ட கடல்சார் ஒழுங்கிற்கான சவால்களை எதிர்கொள்வதற்காக" ஒத்துழைப்பு ஆகியவைகள் அடங்கிருந்தன.
"சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கிற்கு" பெய்ஜிங் கீழ்ப்படிந்து ஒத்துப்போக வேண்டும் என்ற கோரிக்கை, இரண்டாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மேலாதிக்க சக்தியாக இருந்த பின்னர், வாஷிங்டனில் அமைக்கப்பட்ட விதிகளின் உலக ஒழுங்கிற்கு சீனா தன்னை அடிபணியச் செய்ய வேண்டும். ஒபாமா நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவானது தென் சீனா மற்றும் கிழக்கு சீனக் கடல்களில் பிராந்திய பூசல்களை ஆபத்தான வெடிப்புப் புள்ளிகளாக மாற்றியது. "கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தை" பாதுகாக்கும் சாக்குப் போக்கைக்காட்டி, அமெரிக்க கடற்படை, தென் சீனக் கடலில் ஆக்கிரமிக்கப்பட்ட அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீனாவால் உரிமை கோரப்பட்ட பிராந்திய கடல்களுக்கு போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது. இந்த மிகவும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் ட்ரம்பின் கீழ் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த "கப்பல் போக்குவரத்து சுதந்திர நடவடிக்கைகளில்" முதல் நடவடிக்கையை பைடென் நிர்வாகம் ஏற்கனவே செய்துவிட்டிருந்தது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் இந்த விவாதங்கள் பற்றி மிகவும் வெளிப்படையாக பேசினார். இந்த சந்திப்பானது அடிப்படையில் சீனா பற்றியது தான் என்று அவர் மறுத்தாலும், "தலைவர்கள் சீனாவால் முன்வைத்த சவாலைக் குறித்து விவாதித்தனர், மேலும் அவர்கள் சீனா பற்றி எந்த பிரமைகளும் இல்லை என்பதை தெளிவுபடுத்தினார்கள்" என்று அவர் ஒப்புக்கொண்டார். வர்த்தகப் பிரச்சினைகள் தொடர்பாக ஆஸ்திரேலியா மீது சீனாவின் "பலாத்காரத்தையும்", சென்காகு தீவுகளுக்கு [ஜப்பானின் கட்டுப்பாட்டிலுள்ளதும் ஆனால் சீனாவால் உரிமை கோரப்பட்டது] அருகே ஜப்பானிய மீன்பிடிப் படகுகளை அது துன்புறுத்தியதாக கூறப்படுவதையும் மற்றும் இந்தியாவுடனான எல்லை மோதல்கள் ஆகியவைகளையிட்டு தலைவர்கள் பேசியதாக அவர் குறிப்பிட்டார் - அனைத்தும் அமெரிக்காவால் எரியூட்டப்பட்ட அழுத்தங்களின் விளைபொருளாகும்.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒரு பில்லியன் மக்களுக்கு COVID-19 தடுப்பூசியை வழங்குவதாக கூட்டத்தின் கவர்ச்சியான தலைப்பு வாக்குறுதியும் கூட சீனாவை எதிர்க்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பானால் நிதியுதவி அளிக்கப்பட்டு இந்தியாவில் தடுப்பூசி டோசுகளை உற்பத்தி செய்வதும் ஆஸ்திரேலியா விநியோகத்தில் உதவி செய்வதற்கான முன்மொழிவானது சீனாவின் "தடுப்பூசி இராஜதந்திரம்" என்று அமெரிக்கா குறிப்பிடுவதை— அதாவது, வேறு எங்கும் அவற்றிற்கான வளங்களை பெறமுடியாத நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதை அமெரிக்கா சிறுமைப்படுத்தி குறிப்பிட்டு எதிர்ப்பதாக உள்ளது.
வாஷிங்டனிலும் மற்றய மூன்று தலைநகரங்களிலுமுள்ள மூலோபாய வட்டாரங்களில், நாற்கர உறுதிப்படுத்தல் என்பது சீனாவுடனான போருக்கான தயாரிப்பு என்று ஒரு தெளிவான புரிதல் உள்ளது. வாஷிங்டனில்நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள அமெரிக்க-சார்புடைய பருந்துகளான Australian பத்திரிகையின் வெளிநாட்டு ஆசிரியர் கிரெக் ஷெரிடன்,"நாற்கரம் மீண்டும் போராடுகையில், போருக்கான சீனாவின் ஆயுதங்கள்" என்ற தலைப்பில் ஒரு கருத்துரையில் இன்று வெளியிட்டார்: "பசிபிக்கில் இராணுவ மோதல், நிச்சயமாக ஆஸ்திரேலியாவை உள்ளடக்கிய, அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. அவை வெறிகொண்ட வார்த்தைகள் அல்ல."
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்க இராணுவக் கட்டமைப்பு, இராணுவ ஆத்திரமூட்டல்கள் மற்றும் ஆசியா முழுவதும் சீனாவை பொருளாதார மற்றும் இராஜதந்திரரீதியில் கீழறுப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும் அமெரிக்க பிரச்சாரங்களுக்கு ஏற்ப, ஷெரிடன் சீனாவை ஆக்கிரமிப்பாளர் என்று சித்தரிக்கிறார். எவ்வாறெனினும், எதிர்காலத்தில் ஒரு தனித்துவமான ஆபத்து என்ற வகையில் போர் "அமெரிக்க இந்தோ-பசிபிக் தளபதியின் வெளிப்படையான செய்தி, அத்தகைய மோதலுக்கு எதிராக போராட வேண்டிய ஒரு மனிதனின்" வெளிப்படையான செய்தி என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வாரம் அட்மிரல் பிலிப் டேவிட்சனால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட சாட்சியமான அப்பிராந்தியத்திற்கான பென்டகனின் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை இரட்டிப்பாக்குமாறு அழைப்பு விடுத்ததை ஷெரிடன் குறிப்பிட்டு, மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் சீனா தைவானை ஆக்கிரமிக்கக்கூடும் என்றும்—இது ஒரு அமெரிக்க-சீன போரைத் தூண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
பெய்ஜிங் அல்ல, வாஷிங்டன் தான் வேண்டுமென்றே தாய்வான் மீது பதட்டங்களை கொழுந்துவிட்டெரிக்கிறது. 1978ல் சீனாவுடனான அமெரிக்க உறவுகளை சீராக்குவதற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, தைவானிய அதிகாரிகளுடன் அமெரிக்க தொடர்பை மட்டுப்படுத்திய நீண்டகால இராஜதந்திர விதிமுறைகளை ட்ரம்ப் நிர்வாகம் தலைகீழாக மாற்றி விட்டது. பெய்ஜிங் தைவானை ஒரு விட்டோடிய மாகாணமாக கருதுகிறது, மற்றும் சீனாவிற்கு எதிரான ஒரு மூலோபாய தளமாக அதை மாற்ற அமெரிக்கா எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடும் என்று அஞ்சுகிறது. அமெரிக்காவிற்கான நடைமுறைத் தூதரை பதவியேற்பு விழாவிற்கு அவரை அழைப்புச் செய்ததன் மூலம் தைவானுடன் உறவுகளைத் தொடர ட்ரம்ப்பை பின்தொடர்ந்து வரும் தனது விருப்பத்தை பைடென் அடையாளம் காட்டினார். நாற்கர கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட மற்றொரு பிரச்சினை தைவான் ஆகும்.
COVID-19 தடுப்பூசியை கொடுத்து, காலநிலை நடவடிக்கை குறித்து பேசுவது பகட்டொப்பணை என்பதை ஷெரிடன் நன்கு அறிந்திருந்தார். அவர் குறிப்பிட்டது போல், "நாற்கரக் கூட்டம் அதன் தோற்றத்தை கவனமாகவும், "வரவேற்கத்தக்க ஆக்கபூர்வமானது" என்றும் இருந்தது, ஆனால் "சீனாவை எதிர்த்து, போரைத் தவிர்ப்பது, என்ற எந்த தவறையும் செய்யாதீர்கள், அது நாற்கரத்தின் இருத்தலியல் நோக்கம்." உண்மையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று வீழ்ச்சியை தடுத்து நிறுத்தவும், எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவிலிருந்து அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கு எந்த சவாலையும் தடுக்கும் நோக்கத்துடனான அமெரிக்க தலைமையிலான போர் உந்துதலை தீவிரப்படுத்துவது குறித்ததாக நாற்கரம் உள்ளது.
ஷெரிடன், சீனப் பொருளாதாரமானது 2035 க்குள் அமெரிக்கப் பொருளாதாரத்தைவிட முழுமையான அளவில் பெரியதாக இருக்கும் என்று குறிப்பிட்டார். மற்றய பகுப்பாய்வாளர்கள் சீனாவானது விரைவில் அமெரிக்காவை பொருளாதார ரீதியாக கடந்து விடக்கூடும் என்று கூறுகின்றனர். வாஷிங்டனிலும் பென்டகனின் அச்சமும், நீண்ட காலத்தில் அமெரிக்கா சீனாவுடன் ஒரு மோதலை வெல்ல முடியாமல் போகலாம், இது எதிர்காலத்தில் போர் என்பது விரும்பத்தக்கதாக, தவிர்க்க முடியாததாக கூட இருக்கலாம்.
குறிப்பிடத்தக்க வகையில், நாற்கரக் கூட்டம் உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் ஒத்துழைப்பை எளிதாக்கும் ஒரு சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப பணிக் குழுவை உருவாக்குவது பற்றியும் விவாதித்தது, தொலைத்தொடர்புகளில் ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்துவதோடு, "முக்கியமான தொழில்நுட்ப விநியோக சங்கிலிகளை" பாதுகாப்பது - போர் தயாரிப்புகளில் ஒரு முக்கிய அம்சமாகும். ஹவாய் போன்ற உயர்-தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் "அறிவுசார் சொத்து திருட்டு" தொடர்பான குற்றச்சாட்டுகள் உட்பட சீனாவிற்கு எதிரான ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக போர் நடவடிக்கைகள், போருக்கு முக்கியமானவை உட்பட, சீனா அமெரிக்காவைத் தாண்டிவிடக்கூடும் என்ற கவலைகளால் உந்தப்பட்டன.
முதல் நாற்கர உச்சி மாநாடு சீனாவின் வருடாந்திர தேசிய மக்கள் காங்கிரஸுடன் இணைந்து நடந்திருந்தது— வரவிருக்கும் ஆண்டுக்கான ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் மூலோபாய நோக்குநிலை மற்றும் கொள்கைகளை அமைக்கும் கலந்துரையாடல்களின் ஒரு வார நிகழ்வாகும். பெய்ஜிங்கில் பைடென் ட்ரம்பை விட குறைவான மோதல் போக்குடன் இருப்பார் என்ற நம்பிக்கைகள் விரைவாக மங்கிவிட்டன —இந்த உணர்வு அந்த மாநாட்டில் ஆற்றிய உரைகளில் பிரதிபலித்தது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஒரு NPC குழு விவாதத்தில் கூறினார்: "நமது நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை பெரும்பாலும் நிலையற்றதாகவும் நிச்சயமற்றதாகவும் உள்ளது... முழு இராணுவமும் ... எந்த நேரத்திலும் சிக்கலான மற்றும் கடினமான சூழ்நிலைகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
சீனா அமெரிக்காவிற்கு "மிக கடுமையான போட்டியாளராக" உள்ளது என்றும் அதற்கேற்ப அதன் நடவடிக்கைகளை அது எடுக்கும் என்றும் பைடென் அறிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற நாற்கரக் கூட்டம் பெய்ஜிங்கிற்கு எதிரான இராஜதந்திர, பொருளாதார மற்றும் மூலோபாய தாக்குதல்களில் ஒரு படி தான். வரும் வாரத்தில், அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் அந்தோனி பிளிங்கனும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் அடுத்த வார தொடக்கத்தில் முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்— சீனா நிகழ்ச்சி நிரலில் முதலிடத்தில் இருக்கும் ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்குத் தான். இந்த வாரத்தின் பிற்பகுதியில், பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் அலாஸ்காவில் தங்கள் சீன சகாக்களுடன் ஒரு முறிவு முதல் சந்திப்பிற்காக சந்திக்கவுள்ளனர்.
அதே நேரத்தில், நாற்கரம் வெறுமனே ஒரு இராஜதந்திர காட்சியாக இருக்காது என்று பைடென் காட்டியுள்ளார். இந்தச் சந்திப்பு நான்கு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுக்கும் மற்றய உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையே அடிக்கடி பேச்சுவார்த்தைகளை முன்னறிவிக்கிறது, மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான்கு தலைவர்களின் மேலும் ஒரு சந்திப்பும் நடைபெற்றது.
நாற்கரமானது சீனாவிற்கும் எதிராக ஒரு இராணுவ கூட்டணியாக இருக்கும் அல்லது அது ஒரு இராணுவ கூட்டணியாக மாறும் என்று வாடிக்கையாக மறுக்கப்படும் அதேவேளை, ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் ஏற்கனவே முறையான அமெரிக்க நட்பு நாடுகளாகும். இந்தியாவானது வாஷிங்டனுடன் ஒரு மூலோபாய பங்காளியாக உள்ளது. இதில் இதற்கான ஏற்பாடுகள், ஆயுத விற்பனைகள் ஆகியவை அடங்கும். கடந்த ஆண்டு இந்தியப் பெருங்கடலில் நடைபெற்ற வருடாந்திர மலபார் கடற்படை பயிற்சியில் இந்த நான்கு நாடுகளும் முதல் முறையாக பங்கேற்றன.