மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்தியா, அமெரிக்கா மற்றும் வாஷிங்டனின் இரண்டு பிரதான ஆசிய பசுபிக் கூட்டணி நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் 2020 இரண்டாம் கட்ட இராணுவ பயிற்சியினை தொடங்க இருக்கின்றன.
அதே சமயம் இந்தியாவும் பெண்டகனும் குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒரு தடவையாவது மலபார் கப்பல் படை பயிற்சிகளை நடத்தியுள்ளன.
1992 இலிருந்து ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஒரு தடவையாவது ஒரு மலபார் இராணுவ பயிற்சியினை இந்தியாவும் பெண்டகனும் நடத்தி வந்திருக்கின்ற நிலைமையில், தற்போதைய மறுசெய்கையானது முக்கிய மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாக பரவலாக அறியப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் அது அமெரிக்கா தலைமையில் பளிங்கு போன்ற இறுக்கமான ஒரு சீன விரோத இராணுவ பாதுகாப்பு கூட்டணி அமைப்பதை நோக்கிய ஒரு முக்கியமான படியாக உள்ளது, அதில் புதுடெல்லி மற்றும் வாஷிங்டனின் மிக முக்கிய பிராந்திய உடன்படிக்கைகளை உள்ளடக்கிய கூட்டாளிகளும் உள்ளனர். கடந்த இரண்டு தசாப்தங்களாக அமெரிக்க பூகோள மூலோபாய நோக்கத்தின் ஒரு மையமாக, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களின் கீழ், இந்திய பெருங்கடலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு சீனாவின் எல்லையிலிருக்கும் ஒரு அணு ஆயுத நாடான இந்தியாவை தன்வயப்படுத்த சிறந்த சாதகமான புள்ளியை வழங்கிவருகிறது மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நிகழ்ச்சித் திட்டத்திற்காக ஒரு வளர்ந்துவரும் ஆழ்கடல் கடற்படையை வைத்திருக்கிறது.
2018 இல் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையில் நடந்த ஒரு மூலோபாய பேச்சுவார்த்தையின்படி தற்போதைய பயிற்சி நாற்கர அணியின் அணுசரனையின் கீழ் முறையாக நடத்தப்படவில்லை மேலும் இது ஒரு நேட்டோ பாணியிலான கூட்டணியாக மாறுவதைப் பார்க்க விரும்புவதாக வாஷிங்டன் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
இருந்தபோதிலும், சீனாவுக்கு எதிரான கூட்டாக இணைந்து இராணுவ திட்டமிடல், நடவடிக்கை மற்றும் போரிட தகுதி மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அவர்கள் தற்போது முயன்றுகொண்டிருப்பது நான்கு சக்திகளின் ஒரு தெளிவான சமிக்ஞையாக உள்ளது. அது அவர்கள் ஒரு மூன்றாவது சாத்தியமான உலகப்போருக்கான தயாரிப்பை மேற்கொண்டிருப்பது தான்.
அக்டோபர் தொடக்கத்தில் நாற்கர நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் டோக்கியோவில் கூடியபோது குறுகிய காலத்திலேயே மலபார் இராணுவப் பயிற்சியில் இணைவதற்கு 2007 க்கு பின்னர் முதல் தடவையாக ஆஸ்திரேலியாவை இந்தியா அழைத்திருக்கிறது. ஜப்பான் ஏற்கனவே 2015 இன் மலபார் நிகழ்ச்சியில் ஒரு நிரந்தர மூன்றாவது உறுப்பினராகப்பட்டது.
“நாற்கர இராணுவ கூட்டணி அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது” என்று இந்த ஆண்டின் மலபார் இராணுவப் பயிற்சியில் அனைத்து நாற்கர அரசின் நான்கு உறுப்பினர்கள் கலந்துகொண்டது பற்றி குறிப்பிடுகையில் சீன அரசாங்கத்தின் ஒரு ஊதுகுழலாக இருக்கும் குளோபல்டைம்ஸ் அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டு கட்சி ஆதரவுடன், சீனா மீதான அதன் இராஜதந்திர, பொருளாதார மற்றும் இராணுவ மூலோபாய அழுத்தம் ஆகியவற்றை வாஷிங்டன் வியத்தகுமுறையில் தீவிரப்படுத்தியிருக்கிறது. யூலையில், வாஷிங்டன் ஐந்து சகாப்த காலமாக பராமரித்து வந்த சீனாவுடன் “ஈடுபாடு” என்ற கொள்கையை அரசு செயலர் பொம்பியோ வெளிப்படையாக நிராகரித்துள்ளதுடன் மேலும் பெய்ஜிங்கின் “கொடுங்கோன்மையை” தோற்கடிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். மேலும் அது அங்கு ஒரு ஆட்சி மாற்றத்திற்கு உயிர்கொடுப்பதாகவும் மற்றும் அமெரிக்காவின் சீன கொள்கையின் மைய இலக்காகவும் இருக்கிறது.
நரேந்திர மோடியின் ஆறு ஆண்டு பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கத்தின் கீழ், 2018 இலிருந்து அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இருதரப்பு மற்றும் முத்தரப்பு நாற்கர இராணுவ மூலோபாய ஒத்துழைப்புகளை இந்தியா வியத்தகுமுறையில் விரிவடைய செய்திருக்கிறது. இருந்தபோதிலும், வாஷிங்டன் தொடர்பாகவும் இருப்பது போல, பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட்-19 தொற்று நோயின் மூலம் பூகோள ரீதியாக புவிசார்அரசியல் பதட்டங்கள் அதிகரித்திருக்கும் நிலையின் மத்தியில் இது ஒரு பண்பியல் ரீதியான புதிய மட்டத்தை எட்டியுள்ளது. .
மே மாதத்தில் சீனாவுடன் வெடித்த எல்லைத் தகராறை இந்தியாவின் முதலாளித்துவ ஆளும் உயரடுக்கு பற்றிக்கொண்டதுடன் சீனாவுக்கு எதிராக வாஷிங்டனின் இராணுவ முலோபாயத் தாக்குதலில் இந்தியாவை இன்னும் முழுமையாக ஒருங்கிணைப்பது குறித்த மக்கள் எதிர்ப்பை சமாளிப்பதற்கு யூன் மாதத்தில் பெய்ஜிங்கிற்கு எதிரான விரோதத்தை தூண்டும் வகையில் ஒரு அபாயகரமான தாக்குதலுக்கு வழிவகுத்தது. இந்திய மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளின் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் கடந்த மாதம் நடந்த 2+2 கூட்டத்தின் கடைசியில் உளவுத்துறை பகிர்வு மற்றும் வெளிநாட்டு இராணுவ நட்பு நாடுகளுடன் கூட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக பெண்டகன் அடிப்படையானதென்று கருதிய நான்கு ஒப்பந்தங்களில் புதுடெல்லி கையெழுத்திட்டுள்ளது
இந்தியா மற்றும் சீனா இரண்டும் அவர்களின் சர்ச்சைக்குரிய இமயமலை எல்லையில் 50,000 க்கும் அதிமான துருப்புகள், போர் விமானங்கள் மற்றும் டாங்கிகள் ஆகியவற்றை அணிவகுத்துள்ள நிலைமையில் நாற்கர அணிகள் ஒரு கூட்டு இராணுவ பயிற்சி நடத்துவதன் முக்கியத்துவம் பற்றி குறிப்பிடும் வர்ணனைகளில் இந்திய ஊடகங்கள் நிரப்பப்பட்டன. கிட்டத்தட்ட வாஷிங்டன் ஆரம்பத்திலிருந்தே வெளிப்படையாக எடுத்துக்காட்டும் வகையில் தற்போதிருக்கும் இந்திய-சீன எல்லைத் தகராறு விடயத்தில் நுழைந்திருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. இது சீனாவின் “ஆக்கிரமிப்பு” என்று குற்றம் சுமத்தியிருப்பதுடன் தென் சீன கடல் உட்பட சீனாவின் தீங்குவிளைவிக்கும் நடவடிக்கையில் ஒன்று என்றும் கூறியுள்ளது.
சமாதானத்தை விரும்புவதாக அவர்கள் கூறும் அதேசமயம் இந்திய அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள் எல்லை நெருக்கடியைத் தணிப்பதற்கான பொறுப்பு பெய்ஜிங்கிடம்தான் உள்ளது என்று வலியுறுத்துகின்றனர். அண்மையில் “எல்லை மோதல்கள், எல்லை மீறல்கள், எதிர்பாராத தந்திரோபயமான இராணுவ நடவடிக்கைகள்” ஒரு பெரும் மோதலுக்கு இட்டுச் செல்லும் அதனால் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இந்திய ஆயுதப் படைகளின் தலைவர் மற்றும் பாதுகாப்பு படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் எச்சரித்திருக்கிறார்.
இரண்டாவது கட்ட மலபார் கூட்டுப் பயிற்சி அராபிய கடலில் நான்கு நாட்களாக நடக்கவிருக்கிறது. அது நவம்பர் 20 இல் முடிவடைகிறது. இது அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ் யுத்தக் குழு தாங்கி கப்பல் (Nimitz Carrier Strike Group) மற்றும் இந்திய கடற்படையின் விக்ரமாதித்யா யுத்தக் குழு தாங்கி கப்பல் (Vikramadiya Carrier Battle Group) ஆகிய இரண்டு விமானந் தாங்கி குழுக்களால் தலைமை தாங்கப்படுகிறது. இந்திய கடற்படை செய்தி வெளியீட்டின்படி, விமானப் பாதுகாப்பு மற்றும் குறுகுதளத்தில் பறக்கும் நடவடிக்கைகள் உட்பட “இரண்டு தாங்கிகள் மற்ற கப்பல்களுடனும், நீர்மூழ்கி கப்பல் மற்றும் கடற்படையினர் பயன்படுத்தும் விமானம் அதி தீவிர கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக்கொள்ளப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த பயிற்சியின் முதல் கட்டம் நவம்பர் 3 தொடக்கும் நவம்பர் 6 வரை அராபிய கடலைப் போல இந்தியப் பெருங்கடலின் ஒருங்கிணைந்த பகுதியான வங்காள விரிகுடாவில் இருக்கும் தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் விசாகப்பட்டிணத்திற்கு தூரமாக நடைபெற்றது. இது வான் பாதுகாப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிர்ப்பு பயிற்சிகளை இலக்காக கொண்டிருந்தது. அத்துடன் கடலில் நிரப்புதல் மற்றும் தகவல் தொடர்பு பயிற்சிகளும் செய்யப்பட்டது.
சீனாவை மூலோபாய ரீதியாக சுற்றி வளைப்பதற்கும் இராணுவ ரீதியாக எதிர்கொள்வதற்குமான பெண்டகனின் மூலோபாயத்தின் மையமாக இந்தியப் பெருங்கடலின் மீதான ஆதிக்கம் இருக்கிறது. சீனாவின் ஏற்றுமதிகள் மற்றும் எண்ணெய் மற்றும் அதன் பொருளாதாரத்திற்கு தேவையான பிற வளங்களைக் கொண்டு சேர்க்க பிரதான வழியாக அந்த கடல் பாதைகள் உள்ளன. போர் நடக்கும் போது அல்லது போர் நெருக்கடி நிலைமையில் சீனா இந்திய பெருங்கடலை பயன்படுத்துவதை தடுப்பது மற்றும் இந்திய பெருங் கடலையும் மற்றும் தென் சீன கடல்வழியின் முக்கியபகுதிகளை கைப்பற்றுவதன் மூலம் சீனாவின் பொருளாதாரத்தை நசுக்குவதே அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிகளின் நோக்கமாக உள்ளது.
இந்த மூலோபாயத்திற்குள் இந்தியா அதன் இட அமைவு, பெரிய இராணுவம் மற்றும் பெய்ஜிங்குடனான மூலோபாய போட்டி ஆகியவற்றின் காரணமாக ஒரு சிறப்பான முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்திய பெருங்கடலில் வடக்கின் அரைவாசிப் பகுதி தூரம் வரை நீண்டிருப்பது மட்டுமல்ல, இது இந்திய பிரதான நிலப்பரப்பிலிருந்து 1700 கிலோ மீட்டருக்கும் (1050 மைல்கள்) அதிகமான தூரத்தில் தீவுத் தொடர்களை கொண்டிருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளை இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அது மலாக்கா நீரிணைக்கு செல்லும் கிழக்கு நுழைவாயிலை திறம்பட பாதுகாப்பாக வைத்திருக்கிறது. ஒரு 885 கிலோ மீட்டர் (550 மைல்) கடல்பாதையைக் கொண்டிருக்கும் மலாக்கா நீரிணை உலகளவிலான வணிகத்திற்கு “மைய நாடி” என பெயர் பெற்றிருக்கிறது. இந்த நீரிணை வழியாக 80 சதவீதத்திற்கும் அதிகமான சீனாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் 40 சதவீதத்திற்கும் அதிகமான உலகளவிலான வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்தியா மேலும் “இராணுவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான” அதன் திட்டத்துடன் அந்தமான் தீவை வேகமாக இராணுவமயமாக்கி வருகிறது. இது தற்போது இந்திய இராணுவத்தின் ஒருங்கிணைந்த முத்தரப்பு சேவை (கடற்படை, இராணுவம், விமானப்படை) கட்டளைப் பகுதியாக இருக்கிறது. அண்மையில் வரலாற்றில் முதல் தடவையாக அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அமெரிக்க இராணுவ வாகனமான நீர்மூழ்கி எதிர்ப்பு உளவு விமானம் பி -8 போஸிடான் (P-8 Poseidon) வந்திருக்கிறது. இதன் வருகை இந்தோ-அமெரிக்க லெமோ (LEMOA) ஒப்பந்தத்தினூடாக சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது. பெண்டகனின் நான்கு “அடித்தள” (“foundational”) ஒப்பந்தங்களில் ஒன்றான இது அமெரிக்க போர் விமானங்களையும் மற்றும் போர்க் கப்பல்களையும் இந்திய தளங்களில் வழக்கமான மறுபயன்பாட்டிற்கும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்த அனுமதிக்கிறது.
இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையே முதல் மலபார் கூட்டுப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு 18 ஆண்டுகளில் இந்தியா அதனுடைய மூலோபாய அணு ஆயுத திட்டம் உட்பட அதன் இராணுவ வலிமையை பெரிதும் விரிவடையச் செய்திருக்கிறது. பொருளாதாரச் சரிவில் சீனாவுக்கு பின்னால் மேலும் மேலும் வீழ்ச்சி அடைவதுடன் அதிகரித்துவரும் பெருமளவிலான மற்றும் சக்திவாய்ந்த தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள இந்திய முதலாளித்துவம் அதன் வல்லரசாக மாற விரும்பும் சொந்த இலட்சியங்களை அடைவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் உருவாக்கும் ஒரு நெருக்கமான கூட்டணி முக்கியமானதாக கருதுகிறது. மேலும் அதன் வளர்ந்து வரும் இராணுவ சக்தி வாஷிங்டனுடனான உறவில் ஒரு முக்கிய நெம்புகோலை அளிப்பதாகவும் அது கருதுகிறது. அமெரிக்கா அதன் பங்குக்கு அவர்களுடைய இராணுவ பாதுகாப்பு கூட்டணியை பணமாக்குவதற்கு மேம்பட்ட ஆயுதங்களை வழங்க ஆவலாக இருக்கிறது. அதேவேளை இந்தியாவை மேலும் மேலும் அமெரிக்க இராணுவ தளவாடங்களில் தங்கியிருக்கவும் செய்கிறது.
1992 இலிருந்து இந்தியா அதன் இராணுவ வரவு-செலவுத் திட்டத்தை 8.88 பில்லியன் டாலரில் இருந்து 70 பில்லியன் டாலராக அதிகமாக்கி ஒதுக்கி, இது இந்தியாவை உலகளவில் இராணுவத்திற்கு பெருமளவில் செலவிடும் நாடுகளில் மூன்றாவது நாடாக மாற்றியுள்ளது. இது அதன் முதலாவது விமானம் தாங்கி கப்பலை (ஐஎன்எஸ் விக்ரமாதித்யா) 2013 இல் உருவாக்கியது. கிட்டத்தட்ட 30 பிற பெரிய மேற்பரப்பு போர்க்கப்பல்கள் மற்றும் மூலோபாய மற்றும் தந்திரோபாய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கியிருக்கின்றது.
இது இந்திய பெருங்கடல் பகுதியிலிருக்கும் மற்ற நாடுகளுடனும் ஒரு நெருங்கிய இராணுவ கூட்டணியை ஏற்படுத்திக்கொள்வதற்கு முயன்றுகொண்டிருக்கிறது. மாலைதீவுகள், சீஷெல்ஸ், மொரீஷியஸ் போன்ற தீவு நாடுகளுடன் கூட்டு உளவு பயிற்சிகளையும் மற்றும் பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்த ரோந்துகளையும் (Coordinated Patrols - CORPATs) இது தொடங்கியிருக்கிறது. அதனுடைய இராணுவ இருப்பை பலப்படுத்தவும் மற்றும் விரிவுபடுத்தவும், ஓமான், மடகாஸ்கர், மொரீஷியஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்தியா ஆதரவு வசதிகளை உருவாக்கியுள்ளது.
இந்தியா மூலோபாய ரீதியாக தன்னாட்சியாக இருக்கிறது மற்றும் ஒரு போதும் அமெரிக்காவின் ஒப்பந்த நாடாக இருக்காது என்று பாஜக அரசாங்கம் பகிரங்கமாக கூறுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன: முதலாவது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு விரோதமாக இருக்கும் இந்திய தொழிலாள வர்க்கத்திற்குள் இருக்கும் எதிர்ப்புகளைப் பார்த்து அச்சப்படுகிறது; இரண்டாவது, பெய்ஜிங்கின் எதிர்வினை குறித்து அது எச்சரிக்கையாக உள்ளது, மேலும் இறுதியாக, அது மிகப் பெரிய சூழ்ச்சிக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது, புதுடெல்லியுடன் நீண்டகாலமாக நெருக்கமாக இருக்கும் இராணுவ மூலோபாய நட்பு நாடான மாஸ்கோவும் அதில் அடங்கியிருக்கிறது.
ஆனால் சீனாவுக்கு எதிரான ஒரு அமெரிக்க “முன்னிலை நாடாக” ஆவதற்கு இந்தியா திறம்பட மாற்றப்பட்டிருக்கிறது என்று இந்திய இராணுவ மூலோபாய ஆய்வாளர்கள் மத்தியில் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தியா தானாகவே வாஷிங்டனுடன் இறுக்கமாக இணைத்துள்ளது என்று நம்பும் சிறுபான்மையினரில் ஒருவரான முன்னால் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் அண்மையில் இந்து பத்திரிகையின் கருத்து தலையங்க (op-ed) பக்கத்தில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார். “சீனாவின் அச்சுறுத்தல் தான் அடிப்படை ஒப்பந்தங்களில் இந்தியாவை கையெழுத்திட அழுத்துவதற்கான காரணம் என்பதை அமெரிக்கா ரகசியமாக பேணவில்லை. மேலும் அவற்றில் அதன் கையொப்பத்தை இடுவதன் மூலம் இந்தியா பரந்த சீன-விரோத ‘விருப்பமுள்ள கூட்டணியின்’ ஒரு பகுதியாக மாற கையெழுத்திட்டுள்ளது.”
இதற்கிடையில், இந்தியா பெருகிய முறையில் வாஷிங்டனுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது, மேலும் ஒரு ஒப்பந்தக் கூட்டணி நாடாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்காக செயல்களைச் செய்து வருகிறது என்று நாராயணனுக்குப் பிறகு வந்தவரும் முன்னால் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சிவசங்கர் மேனன் அண்மையில் நடந்த ஒரு கருத்தரங்கில் உற்சாகமாக பேசியுள்ளார். “ஒரு கூட்டணியில்லாமல் உண்மையில் அமெரிக்க கூட்டாளிகள் செய்யக்கூடிய வேலைகளை அமெரிக்காவுக்காக, அமெரிக்காவுடன் சேர்ந்து நாங்கள் செயல்களைந் செய்யத் தொடங்குவோம் என்ற இந்த கருத்தை அதிகமான மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்று பேசியுள்ளார். மேலும் அவர் தொடர்ந்தார் “நான் நினைக்கிறேன், பரஸ்பர தகவல் பரிமாற்ற நடைமுறை, குறிப்பிட்ட பங்கை எடுத்துகொள்ளல் மற்றும் ஒரு பெரும் பொதுவான மூலோபாயத்தில் இணைத்துக்கொள்ளல் என்பது இன்றைக்கு பிரச்சனைக்குரியதாக இருக்கும் என்று நான் பார்க்கவில்லை”