மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கத்தின் வணிகச் சார்பு சட்டங்களை எதிர்த்து அதிகளவில் கூடி இருக்கும் இந்திய விவசாயிகளின் கிளர்ச்சிப் போராட்டம் தற்போது 45 நாட்களைத் தாண்டி நடக்கும் நிலையில் அதற்கு ஆதரவாக கடந்த ஏழு வாரங்களுக்கு மேல், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உட்பட, சர்வதேச அளவில் ஆர்ப்பாட்டங்கள் பரவியிருக்கின்றன.
செப்டம்பரில், மூன்று பெருவணிகச் சார்பு வேளாண் சட்டங்கள் அத்துடன் கூடவே பெரும்பாலான தொழிலாளர் வேலை நடவடிக்கைகளை சட்டவிரோதமாக்கவும், மோசமான ஒப்பந்த தொழிலாளர் வேலையை ஊக்கப்படுத்தவும் மேலும் தொழிலாளர்களை விருப்பப்படி பணிநீக்கம் செய்ய பெரிய நிறுவனங்களுக்கு அதிகாரம் அளித்தும் ஒரு தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கையையும் பாரளுமன்றத்தினூடாக இந்து மேலாதிக்கவாத பாஜக வலுக்கட்டயமாக கொண்டுவந்துள்ளது.
விவசாயிகளின் போராட்டம் இந்தியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருமளவில் அனுதாபத்தை பெற்றிருக்கின்றது. இது நவம்பர் 26 அன்று தொடங்கப்பட்டது, அதே நாளில் அதனுடன் ஒன்று சேர்ந்ததாக மோடி அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளுக்கு எதிராக பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் பங்குபற்றிய ஒரு நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மோடி அரசாங்கத்தின் அழிவுகராமான பதிலிறுப்பால் அதற்கு எதிராக மக்களின் விரோதப்போக்கு அதிகரித்துள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றுக்களின் மொத்த எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவதாகவும் மேலும் 150,000 ஐ கடந்து இறப்புகளில் மூன்றாம் நிலையிலும் தற்போது இந்தியா இருக்கிறது. அரசாங்கத்தின் மோசமான திட்டமிடப்படாத தொற்று நோய் பொதுமுடக்கம் ஒரே இரவில் எந்த வருமானமுமற்ற நிலையில் நூறு மில்லியன்கணக்கான இந்தியர்களை அப்படியே விட்டிருந்தது. அது முன்னோருபோதுமில்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடிகளுக்கு வழிவகுத்திருந்தது.
மூன்று வேளாண் வணிக சார்பு சட்டங்களை இரத்து செய்யவேண்டும் என்றும் மேலும் அடிப்படை பயிர்களை உத்தரவாத விலையில் வாங்க அரசாங்கம் உறுதியளித்த ஏற்கனவேயிருந்த குறைந்தபட்ச ஆதரவு விலை அமைப்பு (Minimum Support Price system – MSP) பராமரிக்கப்படும் என்று ஒரு சட்டபூர்வமாக உத்தரவாதப்படுத்தவேண்டும் என்றும் விவசாயிகள் கோருகிறார்கள். ஏனெனில், இந்திய விவசாயத்தின் புதிய தாராளாவாத மறுசீரமைப்புக்கான உள்நாட்டு மற்றும் பூகோள மூலதனத்தின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்யும்வகையில் இது உறுதியாக இருக்கிறது. மேலும் விவசாயிகளுக்கு கணிசமான சலுகைகளை வழங்குவது குறிப்பாக தொழிலாள வர்க்கத்திடமிருந்து சமூக எதிர்ப்பை ஊக்குவிக்கும் என அது அச்சப்படுகிறது. வேளாண் மசோதாவுக்கு ஒப்பனை மாற்றங்களையும் மேலும் குறைந்தபட்ச ஆதவு விலை அமைப்பை பராமரிக்க வெறும் மதிப்பற்ற காகித உறுதிகளை மட்டுமே பாஜக அரசாங்கம் வழங்கியிருக்கிறது.
JagranJosh.com எனும் இந்திய செய்திகளின் ஆதார கூற்றுப்படி, 2020-2021 கால குறைந்தபட்ச ஆதரவு விலை தீர்மானிக்கப்பட்டதன்படி ஒரு நூறு கிலோ (100 பவுண்டு) சோளம், மஞ்சள் சோயாபீன் மற்றும் நடுத்தர முக்கிய பஞ்சு முறையே ரூபாய் 1850 (சுமார் 25.29 அமெரிக்க டாலர்), ரூபாய் 3,880 (சுமார் 53.04 அமெரிக்க டாலர் மற்றும் ரூபாய் 5,515 (சுமார் 75.38 அமெரிக்க டாலர்) ஆக இருந்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலையை இல்லாமல் செய்வதன்மூலம் பெரும்பாலான விவசாயிகள் இரண்டு ஹெக்டர்கள் (சுமார் 5 ஏக்கர்) அல்லது அதுவும் இல்லாமல் இருக்கும் பத்து மில்லியன் கணக்கான விவசாயிகளின் வருவாய் மேலும் பாதிப்புக்குள்ளாகும்.
நவம்பர் 26 – 27 விவசாயிகளின் கிளர்ச்சி தொடங்கப்பட்டபோது அதற்கு எதிராக துணை இராணுவ படையினர் உட்பட ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினரை அணிதிரட்டியதுடன் தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகைகளைப் பயன்படுத்தியும் பெருமளவிலான கைது நடவடிக்கைகளையும் மோடி அரசாங்கம் மேற்கொண்டது. இந்தியாவின் தலைநகர் டெல்லியை அடைவதற்கான அவர்களின் நோக்கத்தை புரிந்துகொண்டு விவசாயிகளைத் தடுப்பதில் அது வெற்றியடைந்திருக்கிறது. ஆனால் திகைப்பூட்டும் வகையில், பத்தாயிரக்கணக்கான விவசாயிகள் பலர் அவர்களின் குடும்பத்தினருடன் அப்போதிருந்து அரை டசின்கணக்கான பிரதான நெடுஞ்சாலைகளின் பயணங்களை தடுக்கும் வகையில் இந்தியாவின் தேசிய தலைநகர பிராந்தியத்தின் எல்லைகளில் முகாமிட்டிருக்கின்றனர்.
விவசாயிகளை தனிமைப்படுத்துவதற்கும், சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உட்பட தேச விரோத படைகள் பின்னால் இருந்து செயல்படுகின்றன என்ற கூற்றுக்களுடன் கிளர்ச்சியை எதிர்ப்பதற்கும் மேலும் நசுக்குவதற்காக அரசியல் அடித்தளத்தை உருவாக்குவதற்கும் பாஜக முயற்சி செய்துகொண்டிருக்கிறது. விவசாயிகள் பஞ்சாப்-சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்தால் கையாளப்படுகிறார்கள் என்று அது பொய்யாகவும் மற்றும் ஆத்திரமூட்டும் வகையிலும் கூறிவருகின்றது.
கோவிட்-19 நோய் தொற்று காரணமாக பலர் கூட்டுவண்டிகளில் வந்து போராடும் விவசாயிகளின் டெல்லி சலோ (டெல்லிக்கு செல்வோம்) கிளர்ச்சிப் போராட்டத்திற்கு உலகம் முழுவதிலுமுள்ள நகர மையங்களில் ஆதரவுப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இங்கிலாந்தில் லண்டன் உட்பட, ஆஸ்திரேலியாவில் சிட்னி, பிரிஸ்பன் மற்றும் மெர்போர்ன், நியூசிலாந்தில் ஆக்லாந்து, அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ, சேக்ரமெண்டோ மற்றும் டெட்ராய்ட் பகுதிகளிலும் மற்றும் கனடாவில் வான்கூவர், டொராண்டோ, ஒட்டாவா மற்றும் வின்னிபெக் போன்ற இடங்களிலும் இது நடந்துள்ளது.
டெல்லி சலோ ஆர்ப்பாட்டக்காரர்களுக்காக ஒரு கணக்கிடப்பட்ட “நடுநிலைமை” இலிருந்து பசாங்குத்தனமான போலி ஆதரவு வரையில் மேற்கத்திய முதலாளித்துவ அரசாங்களின் பதில் இருக்கிறது
கனடாவில் பெருமளவிலிருக்கும் கிழக்கு இந்திய புலம்பெயர்ந்த மக்களிடம் தேர்தல் ஆதரவை பெறுவதற்கான முயற்சியாக லிபரல் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விவசாயிகளுக்கு ஆதரவு அளித்துள்ளார் மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்குமாறு கூறியதன் மூலம் மோடியை கோபமடைய செய்துள்ளார். இது வழக்கமாக நடைபெறும் முதலாளித்துவ அரசியல் கூச்சலில் ஒன்றாக இருக்கிறது. மோடி அரசாங்கத்தின் அரசியலமைப்பு சதி மற்றும் இந்தியக் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரில் பாதுகாப்பு படைகளின் மிகப்பெருமளவிலான ஒடுக்குமுறை குறித்து ட்ரூடோவும் அவரது அரசாங்கமும் காது கேளாதவர்களாக மெளனமாய் இருந்து வருகின்றனர். மேலும், அமெரிக்காவைப் போல கனடாவும் குறைந்தபட்ச ஆதரவு விலை அமைப்பை (MSP) மற்றும் பிற இந்திய வேளாண் விதிமுறைகளை உலக வர்த்தக அமைப்புக்கு (World Trade Organization) முன்னால் “தடையற்ற சந்தைகள்” தடைகளாக இருக்கின்றன என்று பலமுறை கண்டித்துள்ளது.
டிசம்பர் 24, ஜெஃப்ரி கெட்டில்மேன் மற்றும் பிரன்ஷுவா வர்மா ஆகியோரால் எழுதப்பட்ட நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரையில் ட்ரம்பைப் போன்று இந்திய -அமெரிக்க இராணுவ மூலோபாய கூட்டணியை விரிவுபடுத்துவது பைடெனின் பிரதான அக்கறையாக இருக்கும் என்று ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில், வரப்போகும் பைடென் நிர்வாகம் அதன் முன்னோடிகளை விட “இந்திய மனித உரிமை பதிவை மிகவும் விமர்சிக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு முஸ்லீம் விரோத படுகொலைகளுக்கு தலைமை தாங்கிய மோடி 2014 மே மாதம் இந்தியாவின் பிரதமர் ஆனபோது சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ மூலோபாய தாக்குதலுக்கு புதுடெல்லியை மேலும் ஒருங்கிணைப்பதற்கான அனைத்து நலன்களில் நெருக்கமாக ஒத்துழைப்பதில் ஒபாமா - பைடென் நிர்வாகத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை என்பது நினைவுகூறத்தக்கதாக இருக்கிறது.
டிசம்பர் 20 அன்று, டெட்ராய்ட்டின் ஒரு வடக்கு புறநகர் பகுதியான மிச்சிகனில் உள்ள டிராய் நகரில் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு பேரணி நடந்தது. இது நகரின் சமூக மையத்தில் நிகழ்ந்துள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி இதே போன்று டெட்ராய்ட்டின் மேற்கு புறநகரில் உள்ள கேன்டன் நகரில் உள்ள ஹெரிட்டேஜ் பூங்காவில் போராட்டமொன்று நடந்ததைத் தொடர்ந்து இது இடம்பெற்றுள்ளது.
மிச்சிகனில் உள்ள பிளைமவுத்தில் வசிக்கும் வழக்கறிஞர் அரவிந்த் சிங், டிராய் பேரணியில் இவ்வாறு கூறினார், “இப்போது இந்திய தலைநகரில், 15 கிலோமீட்டர் தொலைவில், நீங்கள் அனைத்து மாநிலங்களின் அமைதியான விவசாயிகளையும், அனைத்து பின்னணியையும் ஒன்றாக ஒன்றிணைத்துள்ளீர்கள். விவசாயிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் உள்ளனர். இந்திய அரசாங்கத்தால் நசுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான உரிமை, சுதந்திரமான பேச்சுரிமை மற்றும் கூடுவதற்கான உரிமைக்காக அங்கே மற்றும் எல்லா இடங்களிலும் இருக்கின்ற விவசாயிகளுடன் ஒன்றுபடுவதற்காக இன்று நாங்கள் இங்கே இருக்கிறோம்.”
டிசம்பர் 20 பேரணிக்கு வெளியே உலக சோசலிச வலைத் தளத்துடன் சிங் பேசினார்.
“எனது குடும்பம் இந்தியாவை சேர்ந்தது மற்றும் நான் தற்போது விவசாயிகளுடன் நிற்கிறேன், எனது குடும்ப தொடர்புகளை தொடர நான் இந்தியாவுக்கு சென்றிருக்கிறேன்.”
"மோடி நிர்வாகத்தால் இயற்றப்பட்ட சட்டங்களின் பயனாளிகள் மிகவும் தெளிவானவர்கள்" என்று சிங் கூறினார். “யார் வெற்றி பெறுகிறார்கள், யார் தோற்கிறார்கள் என்பதை நீங்கள் மிகத் தெளிவாகக் காணலாம். பெரும்பாலும், சட்டங்கள் மற்ற அனைவரின் இழப்பில் ஒரு சில பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வளமடைகின்றன. உண்மையில், இது அம்பானி குடும்பம் உட்பட [இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தலைமையில்] ஐந்து பணக்கார இந்திய குடும்பங்கள் மட்டுமே. பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே பெருமளவு தானியங்களை பதுக்கி வைக்க குளிர் சேமிப்பு வசதிகளை உருவாக்கி வருகின்றன, அவை முன்பு செய்ய அனுமதிக்கப்படவில்லை. இது வெளிப்படையாக சந்தையை பெரிதும் சீர்குலைக்கும்.”
“பங்கேற்பவர்களில் பெரும் சதவீதமானவர்கள் சீக்கியர்களாக இருந்தாலும், போராட்டங்கள் மதத்தால் ஏற்பாடு செய்யப்படவில்லை. மக்கள் பெரும்பாலும் வகுப்புவாத வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒற்றுமையுடன் நிற்கிறார்கள்… இந்த முழக்கம் ‘கிசான் மஜ்தூர் ஏகா ஜிந்தாபாத்’, இது ‘விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமைக்கு வெற்றி’ என்று மொழிபெயர்க்கப்படுகிறது.” என்று இந்தியாவில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை சிங் விவரித்தார்.
அவர் தொடர்ந்தார்: "இது ஒரு அமைதியான சூழ்நிலையாக இருந்து வருகிறது மேலும் எல்லோரும் இப்பொழுது பிராந்தியத்தை தாக்கும் ஆபத்தான குளிர் நிலைமைகளுக்கு முன்னால் இருந்தபோதிலும், எல்லோரும் ஒரு ஆக்கபூர்வமான மனநிலையில் உள்ளனர். மக்கள் டெல்லிக்கு அணிவகுத்து செல்லும்போது அவர்களுடைய பொருட்களை கட்டிக்கொண்டும் மேலும் ஒருவருக்கு ஒருவர் உணவளித்தும், நெடுஞ்சாலையில் நடவு செய்தும் வருகின்றனர். அவர்கள் விளையாடுவதும், உரையாடுவதும் மேலும் மன உறுதியை நிலைநிறுத்துவதற்காக நடனம் ஆடுவதும் மேலும் உள்ளூர்வாசிகள் அவர்களுக்கு ஆதரவளித்து வளங்களைக் கொடுப்பதும் நடக்கிறது.”
கடுமையான காலநிலைக்கு மேலதிகமாக, அரசாங்கம் வேண்டுமென்றே எதிர்ப்பு போராட்டம் நடக்கும் இடங்களில் நீர் விநியோகத்தை துண்டித்தபோது கூடுதல் சுகாதார அபாயங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்கொண்டிருக்கின்றனர் என்று இந்த மாத தொடக்கத்தில் WSWS செய்தி வெளியிட்டிருந்தது.
டிசம்பர் 5 ஆம் தேதி கேன்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தைப் பற்றி சிங் குறிப்பிட்டார், கூட்டுவண்டி ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட கார்கள் இருப்பதாகவும், ஹெரிடேஜ் பூங்காவில் வாகன நிறுத்துமிடத்தின் மையத்தில் 800 க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். "கோவிட் குறித்த கவலையில் இன்னும் பலர் தங்கள் கார்களில் இருந்து வெளியே வரவில்லை, ஆனால் அவர்கள் ஆதரவாக இருந்தனர்." என்று அவர் கூறினார்.
“இந்த பகுதியில், குறைந்தது பத்திலிருந்திலிருந்து பதினைந்தாயிரம் சீக்கிய அமெரிக்கர்கள் இருக்கிறார்கள். நகரம் முழுவதும் குருத்வாராக்கள் (சீக்கியர்கள் வழிபடும் நிலையங்கள்) உள்ளன. மேலும் இந்த நிகழ்வில் அவைகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டிருக்கின்றனர். பல பஞ்சாபி ஆதரவுக் குழுக்களும் கூடவே சீக்கியர்களுக்கு சொந்தமான பெருநிறுவனங்களின் பிரதிநிதிகளும் இருந்தனர்.
கிராம்புற உழைக்கும் மக்களின் இழப்பில் விவசாயத்தை “நாகரிக மாக்குவதற்கு” பெருவணிகங்களின் உந்துதலுக்கு எதிராக இந்திய விவசாயிகளின் ஆதரவாளர்கள் மற்றும் சர்வதேச சோசலிச திட்டத்துடன் ஆயுதபாணியாக்கப்பட்டு முதலாளித்துவ எதிர்வினையை தோற்கடிப்பதற்கு இருக்கின்ற சக்தியாக தொழிலாள வர்க்கம் மட்டுமே ஒரே சமூக சக்தியாக இருக்கிறது என்று ஜனநாயக உரிமைகளின் மீது மோடி அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்ப்பவர்கள் கண்டுணரவேண்டும்.
நாட்டின் மொத்த செல்வத்தில் பாதிக்கும் அதிகமான செல்வத்தை சொந்தமாக வைத்துக்கொண்டிருக்கிற இந்தியாவின் முதல் 1 சதவீதத்தினரின் செல்வ வளங்களை அபகரித்து மேலும் ஒரு ஏற்புடைய வாழ்க்கைத் தரம் மற்றும் சிறந்த மருத்துவம், கல்வி மற்றும் பொதுச் சேவைகளை விவசாயிகளுக்கும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் (கிராமப்புற மக்களில் மிகப்பெரிய அளவில் மற்றும் மிகவும் சுரண்டப்பட்ட பிரிவாக இருப்பவர்கள்) வழங்குவதற்கு தேவையான சமூக மூலவளங்களை ஒருங்கிணைத்து அடிப்படையான உற்பத்தியை முன்னிறுத்தவும் மற்றும் வங்கிகளை பொது உடமையின் கீழ் கொண்டுவரவும், உழைக்கும் மக்களின் ஜனநாயக கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான வாய்ப்பு ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்தை நிறுவுவதினூடாக மட்டுமே சாத்தியமாகும்.
இந்த போராட்டத்தில் இந்திய பெருவணிகத்தின் கட்சிகளுக்கு எதிராக மட்டுமல்ல, அவர்களுடைய உதவியாளர்கள் மற்றும் உடந்தையாளர்களான ஸ்ராலினிச கட்சிகளும் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களையும் எதிர்த்து இந்தப் போராட்டத்தை விடாமல் நடத்துவதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தின் வளர்ச்சி தேவையாக இருக்கிறது. விவசாயிகளின் கிளர்ச்சிக்காக வாயளவில் ஆதரவளிக்கும் அதேவேளை, ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) இரண்டும் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீன சக்தியாக அரசியல் நெருக்கடியில் தலையிடுவதிலிருந்து தடுப்பதற்காக தொழிலாள வர்க்கத்தை ஓரம் கட்டுவதற்கும் மேலும் போக்கை மாற்றுவதற்கு பாஜக அரசாங்கத்திற்கு பயனற்ற கோரிக்கைகளை விடுத்து விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கும் அவர்களால் முடிந்தவரை செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் கடந்த மூன்று தசாப்தங்களாக அனைத்து இந்திய அரசாங்கங்கள் கடைபிடித்த “முதலீட்டாளர் சார்பு” பெரு வணிக காங்கிரஸ் கட்சிக்குள்ளும் மற்றும் பிற பிராந்திய வலதுசாரி எதிர்கட்சிகளுக்குள்ளும் மோடிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருக்கிறார்கள்.
இந்திய விவசாயிகளின் கிளர்ச்சியும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச மூலோபாயம்” என்ற எங்களது அறிக்கையை வாசிப்பதற்கும் மேலும் உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்பு கொள்ளவும் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்ளின் ஆதரவாளர்களை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
மேலும் படிக்க
- இந்திய விவசாயிகளின் கிளர்ச்சி இரண்டாவது மாதத்திற்குள் நுழைகிறது
- இந்திய விவசாயிகளின் கிளர்ச்சியும் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச மூலோபாயமும்
- இந்திய விவசாயிகள் வேளாண் வணிக சார்பு “சீர்திருத்தத்திற்கு” எதிராக போராட்டத்தை முடுக்கிவிடும் நிலையில், பரந்தளவிலான அடக்குமுறைக்கு மோடி தயாராகிறார்
- இந்தியா முழுமையான பொது வேலைநிறுத்தத்தில் பல கோடி தொழிலாளர்கள் இணைகின்றனர்