மக்ரோனின் அரசாங்க ஆலோசகர் நவபாசிச மரியோன் மரேஷால் லு பென் ஐ சந்திக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஆலோசகரான புரூனோ ரோஜே-பெத்தி (Bruno Roger-Petit), மரின் லு பென்னின் மருமகள் அதிவலதுசாரி மரியோன் மரேஷாலுடன் (Marion Maréchal) அக்டோபர் 14 திகதியன்று மதிய உணவுக்காக சந்தித்தார் என்று பிரெஞ்சு நாளேடான லு மொண்ட் செய்தி வெளியிட்டது. இதுவரை இந்த சந்திப்பு இரகசியமாக வைக்கப்பட்டிருந்தபோதும் இப்போது அனைத்து கட்சிகளாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2017 ஆண்டில் மரியோன் மரேஷால் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அவரது பதவிக்காலம் முடிந்த பின்னர், மரின் லு பென் தலைமையிலான தேசிய பேரணியிலிருந்து (Rassemblement National — RN) வெளியேறினார். சில RN ஆர்வலர்கள் அவரை ஜோன்-மரி லு பென்னின் உண்மையான வாரிசு என்று கருதுகின்றனர். மேலும் அவர் "பெரும் மாற்றீடு" ("great replacement - வெள்ளையின பிரெஞ்சு மக்கள், குடியேறும் மக்களால் இடம்பெயர்க்கப்படுகின்றார்கள் என்ற பிரெஞ்சு வலது தீவிரவாத கொள்கை”) என்ற பாசிசவாத தத்துவத்தை பின்பற்றுவது உட்பட அவரது அதிதீவிரவாத சிந்தனைகளுக்காக நன்கு அறியப்பட்டவராவர். இந்த தத்துவம் வலதுசாரி பிரெஞ்சு புத்திஜீவியான ரெனோ கமுவால் (Renaud Camus) உருவாக்கப்பட்டது, மேலும் 2019 இல் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள மசூதியில் 50 முஸ்லீம் வழிபாட்டாளர்களை படுகொலை செய்த ப்ரென்டன் டாரன்ட் (Brenton Tarrant) இன் அறிக்கையின் தலைப்புக்காக பயன்படுத்தப்பட்டது. மரியோன் மரேஷால், தீவிர வலதுசாரிக் கோரிக்கைகளை சுற்றி வலதுசாரிகளின் அரசியல் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுக்கிறார்.

மக்ரோனின் ஜனாதிபதி பெரும்பான்மை உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்தச் சந்திப்புக் குறித்து தங்கள் கோபத்தை பாசாங்குத்தனமாக அறிவித்தன. உண்மையில், இந்தச் சந்திப்பு மக்ரோனின் அரசாங்கம், குறிப்பாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் தோன்றியதிலிருந்து அதி வலது நோக்கிய பரந்த திருப்பத்தின் ஒரு பகுதியாகவுள்ளது.

மரியோன் மரேஷால் லு பென் இன் புகைப்படம் (Image Credit: Jack Rabbit Slims/Wikipedia)

ரொஜே-பெத்தி சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளரும், தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்ரோனுக்கு ஆதரவு கொடுத்திருந்தார். மக்ரோனின் மெய்க்காப்பாளர்களில் ஒருவர் (பெனாலா) ஆர்ப்பாட்ட எதிர்ப்பாளர்களை தாக்கியதை வீடியோவில் படமாக்கப்பட்ட பெனாலா விவகாரம் தொடர்பான ஊழலை அடுத்து, எலீசே அரண்மனையின் தகவல் தொடர்பு சேவைகள் மறுசீரமைக்கப்பட்ட போது, செப்டம்பர் 2018 ஆண்டு வரை அவர் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பராக பணியாற்றினார். அப்போது மக்ரோனை ரொஜே-பெத்தி பாதுகாத்தமை குறிப்பாக அருவருப்பானதாகக் கருதப்பட்டது. செய்தித் தொடர்பாளர் பதவி இல்லாதொழிக்கப்பட்டு, ரொஜே-பெத்தி மீண்டும் "நினைவக ஆலோசகராக" நியமிக்கப்பட்டார்.

சந்திப்பின் உள்ளடக்கம் தெரியவில்லை. மக்ரோனின் ஆலோசகர் ஏன் அவரை சந்திக்க விரும்புகிறார் என்பது அவருக்கு முழுமையாக புரியவில்லை என்று மரேஷால் லு பென், Le Monde பத்திரிகைக்கு சுட்டிக்காட்டினார். ரொஜே-பெத்தி கருத்துத்தெரிவிக்கையில்: “அவர் என்ன சொல்ல விரும்புகின்றார் என்பதையும், பொதுமக்கள் கருத்துக் கணிப்பின் நிலைக்கு அவரின் ஒத்திசைவு உள்ளதா என்பதையும் நான் அறிய விரும்பினேன். அது அப்படி இல்லை. நாங்கள் உடன்படவில்லை என்பதை நான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. சேவியர் பெர்ட்ராண்ட் (Xavier Bertrand), எரிக் செமூர் (Eric Zemmour) ஐ சந்தித்தபோது செய்ததைப் போன்றதுதான் இது” என்றார்.

சேவியர் பெர்ட்ராண்டின் நிகழ்வைத் தூண்டுவதன் மூலம் ரொஜே-பெத்தி தனது சந்திப்பை முக்கியத்துவமற்றதாக்குகிறார். சேவியர் பெர்ட்ராண்டின் தற்போது அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒரு வலதுசாரி வேட்பாளராக தன்னைத் முன்வைக்க முயல்வதுடன், மேலும் அவர் தீவிர வலதுசாரி ஊடகவியலாளரும் கட்டுரையாளருமான எரிக் செமூரை சந்தித்தார். எரிக் செமூர் முஸ்லீம்-விரோத தொடர்ச்சியான பழியுரைகளுக்காகவும், பெத்தானை மறுபுனருத்தானம் செய்வதற்கான அவரது முயற்சிகளுக்காகவும் அறியப்பட்டவர். இந்த சந்திப்பு குடியரசுக் கட்சி (Republican party) தீவிர வலதிற்கு திரும்புவதோடு தொடர்புபட்டுள்ளதுடன், இந்த பெர்ட்ராண்ட் உறவாடலும், அவருடைய வேலைத்திட்டமும் RN இலிருந்து மேலும் குறைந்த வேறுபாட்டையே கொண்டுள்ளது.

இது, மக்ரோனின் ஜனாதிபதி பதவியின் அரசியல் வழியின் தன்மையை மாற்றவில்லை. மரேஷாலுடன் மதிய உணவு என்பது பல ஆண்டுகளாக தீவிர வலதுகளுடன் மக்ரோன் பின்னிப்பிணைந்துள்ள பல உறவுகளின் ஒரு கூறுபாடாகும்.

மக்ரோனும் அவரது அரசாங்கமும் ஒரு வன்முறையான ஆளும் வர்க்கக் கொள்கையை பின்பற்றி வருவதோடு தொழிலாள வர்க்கத்தின் சமூக வெற்றிகளை அழித்து வருகின்றன. இந்த மோதலில், வேலையின்மை, சிக்கன நடவடிக்கை மற்றும் பெருந்தொற்று நோயால் அதிகரித்து வரும் பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிரான வெடிக்கும் சமூக கோபத்தின் பின்னணியில், முதலாளித்துவ உயரடுக்கின் அரசியல் பிரதிநிதிகள் தாங்கள் பாதுகாப்பதாக கூறும் அனைத்து ஜனநாயக பாசாங்குகளையும் தூக்கி எறிந்து வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டில், மக்ரோன் ஒரு சிறந்த சிப்பாய் என்று பெத்தானுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், யூத-விரோத, ட்ரேஃபுசார்ட் (Dreyfusard) மற்றும் ஜனநாயக விரோத Action française (பிரெஞ்சு நடவடிக்கை) கட்சியின் நிறுவனருமான சார்ல்ஸ் முராஸின் 150 வது பிறந்த ஆண்டு விழாவைக் கொண்டாட முயன்றார். ஏப்ரல் 2018 ஆண்டில், Les Bernardins என்ற இடத்தில் ஒட்டுமொத்த கத்தோலிக்க அதிகாரபடிமுறையிலுள்ள பாராட்டுப் பெற்ற ஒரு கூட்டத்திற்கு முன்பாக மக்ரோன் பின்வருமாறு அறிவித்தார், "கத்தோலிக்க சாராம்சம் இப்போதும் எப்போதும் நம் தேசத்தின் வாழ்க்கைக்கு பங்களிக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்."

இப்பொழுது அவர் முழு தொழிலாள வர்க்கத்திற்கும் எதிராக ஜனநாயக உரிமைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகிறார், அதேநேரத்தில் மக்கள்தொகையில் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருகிறார். அவர் அமைப்பு சுதந்திரம் பற்றிய 1901 ஆம் ஆண்டு சட்டம் மற்றும் திருச்சபையையும் அரசினையும் பிரிப்பது பற்றிய 1905 ஆண்டு சட்டம் மீதான ஒரு தாக்குதலை நியாயப்படுத்த முயன்றார். இந்த இரண்டுமே அவரது பிரிவினைவாத எதிர்ப்புச் சட்டங்களின் இலக்காக இருக்கின்றன. அத்தோடு முன்னர் அதிவலதுகளுக்கு மட்டுமே உரித்தான இந்த கொள்கைகளை ஏற்றுக்கொள்கின்றார். இந்த வாதங்களின்படி, தீவிர இஸ்லாமியவாதத்தை நோக்கி முஸ்லீம் மக்கள் வகுப்புவாதத்தினால் இழுக்கப்படுவதால் பிரான்ஸ் அச்சுறுத்தப்படுவதோடு, இது குடியரசின் அமைப்புகளை தூக்கி வீசுவதை விட குறைவான எதையும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை.

"இஸ்லாமிய பிரிவினைவாதம்" என்ற இந்த தத்துவம், ஜனநாயக உரிமைகளில் பெரும் தாக்குதலை செய்வதை நியாயப்படுத்துவதற்காக பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தால் கிட்டத்தட்ட ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Le Canard Enchaîné, பத்திரிகைக்கருத்துப்படி, மரேஷாலுடனான சந்திப்பு, தீவிர வலதுசாரி இதழான Valeurs actuells இன் நிர்வாக இயக்குனரான Geoffroy Lejeune என்பவரின் மத்தியஸ்தத்தின் காரணமாக நடைபெற்றது. Lejeune உடனான ரோஜே-பெத்தியின் நெருக்கமான மற்றும் நீடித்த தொடர்புகள் நன்கு அறியப்பட்டவை. வால்மொண்ட் (Valmonde) குழுவின் நிர்வாக இயக்குனராகவும், Valeurs actuellesஇன்ஆசிரியர் குழு இயக்குனராகவும் Yves de Kerdrel இருந்தபோது மக்ரோன் அவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். அப்போது மக்ரோன் எலீசே அரண்மனையின் துணைப் பொதுச் செயலாளராகவும், முன்னாள் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் கீழ் பொருளாதார அமைச்சராகவும் இருந்தார்.

முன்னர் புலம்பெயர்ந்தோர் மற்றும் முஸ்லீம் எதிர்ப்பு வாதங்களை ஆதரித்ததை விட மக்ரோன் வெளிப்படையாக பேசும்போது இந்த நீண்டகால தொடர்புகள், அக்டோபர் 2019 ஆண்டின் இறுதியில் Valeurs actuellesஉடன் மக்ரோனின் ஒரு நீண்ட நேர்காணலில் உச்சக்கட்டத்தை அடைந்தன. விச்சி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஒரு தீவிர வலதுசாரி ஊடகமான Valeurs Actuelles க்கு நடப்பு பிரெஞ்சு ஜனாதிபதி ஒரு நேர்காணலை வழங்கியது இதுவே முதல் முறையாகும். முஸ்லிம்களைப் பற்றி அவர் குறிப்பிட்டார்: அதாவது "வகுப்புவாதத்திற்கு எதிராக நான் எனது முழுப் பலத்துடனும் போராடுகிறேன்", இது "பிரிவினை" என்று அவர் கண்டனம் செய்தார்.

மக்ரோனின் சில தொடர்புகள், மரின் லு பென்னின் வேட்புமனுவுக்கு சாத்தியமான போட்டியாளர்களை மதிப்பிடுவதையும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அதை பலவீனப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆயுதப்படைகளின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் பியர் டு வில்லியே இன் வேட்புமனு ஊடகங்களால் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்" மற்றும் சிக்கன நடவடிக்கைக்கு எதிரான அதன் போராட்டங்களில், தொழிலாள வர்க்கமானது முதலாளித்துவ வர்க்கத்தின் முற்போக்கான அல்லது ஜனநாயக பிரிவைக் கண்டுபிடிக்க முடியாது என்ற உண்மையைத்தான் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மக்ரோனுடனும் அவரது கூட்டாளிகளுடனும் அல்லது தீவிர வலதுசாரிகளின் பல்வேறு பிரிவுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த எதுவும் இல்லை. பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டம் மற்றும் சமத்துவமின்மையின் விரைவான வளர்ச்சி ஆகியவைகள் அரசியல் அதிகாரத்திற்காக போராடும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச இயக்கத்தை கட்டமைப்பதில் தான் தங்கியிருக்கிறது.

Loading