ஜூலை 21-27, 2019 முதல், சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) 1982-1986 முதல் முன்னாள் பிரிட்டிஷ் பிரிவான தொழிலாளர் புரட்சிகரக் கட்சியுடன் ICFI பிரிந்ததன் வரலாற்று தோற்றம் மற்றும் அரசியல் விளைவுகள் குறித்த சர்வதேச கோடைகால பள்ளியை நடத்தியது.
இந்த விரிவுரைகள் 1982-1995 வரையிலான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாற்றைக் குறிக்கின்றன: தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ட்ரொட்ஸ்கிசத்தின் கோட்பாடு மற்றும் வேலைத்திட்டத்தின் திருத்தங்கள் பற்றிய விரிவான விமர்சனத்தின் ஆரம்ப வடிவமைப்பிலிருந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கழகங்களை கட்சிகளாக மாற்றுவதற்கான முடிவு வரை காணலாம்.
பழைய மற்றும் இளைய உறுப்பினர்கள் அனைவருடனும் இணைந்த ஒட்டுமொத்தமான கட்சியின் அரசியல் அபிவிருத்தி, மற்றும் தீவிரமடைந்து செல்லும் அரசியல் சவால்களுக்கு ஏற்ற விதத்தில் அதன் தத்துவார்த்த மட்டத்தை உயர்த்துவது என்பவை சமகால அபிவிருத்திகளுடனான ஒரு தீவிரமான ஈடுபாடு மற்றும் “நிகழ்கால”த்தின் அத்தியாவசிய உள்ளடக்கமாக இருக்கின்ற வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளை அடையாளம் காண்பது மற்றும் விமர்சனப் பகுப்பாய்வு ஆகியவற்றின் ஒரு பரஸ்பர செயல்பாட்டை அவசியமாக்குகிறது.
1985-86 உடைவுக்குப் பின்னரே, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் ICFIம் தேசியப் பிரச்சினை குறித்தும் அது தொடர்பான இலங்கை பிரிவின் அரசியல் முன்னோக்குகள் குறித்தும் ஒரு தீவிர பகுப்பாய்வை தொடங்குவதற்கு முடிந்தது.
வர்க்கப் போராட்டமானது வடிவத்தில் மட்டுமே தேசியமயமானது, ஆனால் உள்ளடக்கத்தில், அது ஒரு சர்வதேசியப் போராட்டம் என்பது மார்க்சிசத்தின் ஒரு அடிப்படை முன்மொழிவாக வெகுகாலமாக இருந்து வருவதாகும். ஆயினும், முதலாளித்துவ அபிவிருத்தியின் புதிய அம்சங்களைக் கருத்தில் கொள்கையில், வர்க்கப் போராட்டத்தின் வடிவமும் கூட ஒரு சர்வதேச தன்மையைப் பெற்றாக வேண்டும்.
‘வரலாற்றுத் தொடர்ச்சி’ என்று கூறும்போது நாம் கருதுவது, ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம், திருத்தல்வாதம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அத்தனை பிற எதிரிகளுக்கும் எதிராய் நமது சர்வதேச இயக்கத்தால் நடத்தப்பட்டு வரும் அரசியல் மற்றும் சித்தாந்தப் போராட்டத்தின் உடைவற்ற சங்கிலி தொடர்ச்சியை ஆகும்...
மாவோயிசம் என்பது சோவியத் ஸ்ராலினிசத்திற்கான ஒரு புரட்சிகர மாற்றாக இல்லை, மாறாக ”தனியொரு நாட்டில் சோசலிசம்” எனும் அதே பிற்போக்குத்தனமான தேசியவாத வேலைத்திட்டத்தில் வேரூன்றிய அதன் சீன வகையாகவே இருந்தது
மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினால் சோவியத் ஒன்றியம் திட்டமிட்டுக் கலைக்கப்பட்டும், 1991 ஜனவரியில் முதலாம் பாரசீக வளைகுடாப் போர் தொடக்கப்பட்டும் இப்போது கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஸ்ராலினிசம் தான் மார்க்சிசம் என்பதான பொய்க்கு பதிலளிக்க நாம் ஸ்ராலினிசத்தின் செயல்களை அம்பலப்படுத்த வேண்டியது அவசியமாயுள்ளது. ஸ்ராலினிசம் நடத்திய குற்றங்களின் நீண்டகால அரசியல் முக்கியத்துவத்தை அம்பலப்படுத்துவதன் மூலமாக வரலாற்று உண்மையை மீட்சி செய்வதே நமது இயக்கத்தின் மாபெரும் அரசியல் கடமையாக இருந்தாக வேண்டும்.