வரலாற்றின் முடிவு”க்கு அனைத்துலகக் குழுவின் பதிலிறுப்பு: ICFI இன் 1992 மார்ச் மாத நிறைபேரவை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்த விரிவுரை உலக சோசலிச வலைத் தளத்தின் கலைப்பிரிவு ஆசிரியரான டேவிட் வோல்ஷ் 2019 ஜூலை 26 அன்று அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் வழங்கியதாகும்.

1991 இல் சோவியத் ஒன்றியம் மறைந்தமைக்கும், அந்த நிகழ்வு மார்க்சிசத்தின் மறுப்பையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின், சோசலிசத்தின் மற்றும் இன்னும் வரலாற்றினதும் இறப்பினையும் எடுத்துக்காட்டுவதாக உடன்வந்த கூற்றுகளுக்கும் அனைத்துலகக் குழு எவ்வாறு பதிலிறுப்பு செய்தது என்பதே இந்த விரிவுரையின் பேசுபொருளாகும்.

1992 மார்ச் 11 அன்று, அதாவது சோவியத் ஒன்றியம் சட்டபூர்வமாக கலைக்கப்பட்ட நாளில் இருந்து பதினொரு வாரங்களுக்குப் பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒரு நிறைபேரவையை —முன்னணி உறுப்பினர்களின் கூட்டம்— தொடங்கியது, இது 1985-86 உடைவுக்குப் பின்னர் வந்த பன்னிரண்டாவது நிறைபேரவையாகும். டேவிட் நோர்த் தனது ஆரம்ப அறிக்கையில், சோவியத் ஒன்றியத்தின் முடிவு என்பது “தொழிலாள வர்க்கத்தின் புறநிலை வரலாற்று அனுபவத்தின் உள்ளடக்கத்தில்” எதைப் பிரதிநிதித்துவம் செய்தது என்பதைப் பற்றி பேசினார். அந்த அறிக்கை, சோசலிச நனவின் வரலாற்று, புத்திஜீவித மற்றும் அரசியல் அபிவிருத்தி பற்றியும், அந்த நிகழ்ச்சிப்போக்கின்போது முந்தைய ஒன்றரை நூற்றாண்டில் எழுந்திருந்த பிரச்சினைகளைப் பற்றியும் ஒரு விரிந்த பார்வையை வழங்கியது.

தன்னெழுச்சியான தொழிலாள வர்க்க இயக்கமும் மற்றும் வர்க்கப் போராட்டத்தின் தீவிரப்படலும், அவை தவிர்க்கமுடியாதவை என்ற அதேநேரத்தில், அவை மட்டுமே தானாக உண்மையான புரட்சிகர நிலைமைகளின் அபிவிருத்திக்கான நிலைமைகளை உருவாக்கி விடுவதில்லை என்று 12வது நிறைபேரவை விவாதித்தது. முன்னோக்கு மற்றும் புரட்சிகர தலைமையின் நெருக்கடியை எவ்வாறு தீர்ப்பது என்பதிலும் ICFI என்ன தீவிர பொறுப்புகளைக் கொண்டிருந்தது என்பதிலும் அந்த அறிக்கை முக்கியமான முடிவுகளுக்கு வந்தது. அது மிக முக்கியமான, நீடித்த விளைவுகளுடனான ஒரு அறிக்கையாகவும் கூட்டமாகவும் இருந்தது.

ரொனால்ட் ரேகன் மற்றும் மிக்கையில் கோர்பச்சேவ்

1992 மார்ச் நிறைபேரவையானது, அக்டோபர் புரட்சியைப் பாதுகாப்பது; சோவியத் ஒன்றியத்தில் நடந்த மார்க்சிஸ்டுகள் மீதான படுகொலையை அம்பலப்படுத்துவது; ஸ்ராலினிசம் தான் சோசலிசம் என்ற பொய்க்கு பதிலளிப்பது மற்றும் எதிர்ப்புரட்சிகர அதிகாரத்துவத்திற்கு அங்கே ஒரு மாற்றீடு இருந்தது என்பதை நிரூபிப்பது ஆகிய அடிப்படையான வரலாற்றுப் பிரச்சினைகளின் மீது முழுக்கவனம் குவிக்கும் முயற்சிகளுக்கு அடிப்படை அமைத்துத் தருவதில் இன்றியமையாததாக இருந்தது.

பின்வரும் முன்மொழிவு தான் ஆரம்ப அறிக்கையின் மையமாக இருந்தது:

ஸ்ராலினிசம் தான் மார்க்சிசம் என்பதான பொய்க்கு பதிலளிக்க நாம் ஸ்ராலினிசத்தின் செயல்களை அம்பலப்படுத்த வேண்டியது அவசியமாயுள்ளது. ஸ்ராலினிசம் என்னவாய் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஸ்ராலினிசம் யாரைக் கொலை செய்தது என்பது காட்டப்பட வேண்டியிருக்கிறது. எந்த எதிரிக்கு எதிராக ஸ்ராலினிசம் அதன் மிகப் படுபயங்கரமான தாக்குதல்களை நடத்தியது? என்ற கேள்விக்கு நாம் பதிலளிக்க வேண்டும். ஸ்ராலினிசம் நடத்திய குற்றங்களின் நீண்டகால அரசியல் முக்கியத்துவத்தை அம்பலப்படுத்துவதன் மூலமாக வரலாற்று உண்மையை மீட்சி செய்வதே நமது இயக்கத்தின் மாபெரும் அரசியல் கடமையாக இருந்தாக வேண்டும்.

12வது நிறைபேரவை நேரடியாக பல்வேறு முன்முயற்சிகளுக்கு இட்டுச் சென்றது. “சோவியத்திற்குப் பிந்தைய வரலாற்று பொய்மைப்படுத்தல் பள்ளி”க்கு —மார்ட்டின் மாலியா, ரிச்சார்ட் பைப்ஸ், டிமிட்ரி வோல்கோகோனோவ், ஜெஃப்ரி ஸ்வயின், இயான் தாட்சர் மற்றும் ராபர்ட் சேர்விஸ் ஆகியோரும் இதில் அடங்குவர்— எதிராக இப்போதும் தொடர்கின்ற தாக்குதலும் இதில் அடங்கும். இதில் பிற்போக்கு ஜேர்மன் வரலாற்றாசிரியரான ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி மற்றும் நவ-பாசிச அபாயத்திற்கு எதிராக இப்போது நடைபெற்று வரும் போராட்டமும் உள்ளடங்கும். 1994 இல் ICFI நடேஷ்டா ஜோஃபே (Nadezhda Joffe) இன் காலத்தில் பின்னால் (Back in Time) என்ற நூலை வெளியிட்டது. ரஷ்ய மார்க்சிச வரலாற்றாசிரியரும் சமூகவியலாளரும், சோவியத் ஒன்றியத்தில் ஸ்ராலினிசத்தின் வளர்ச்சிக்கு எதிராக எழுந்த ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு குறித்த ஒரு பல-தொகுதி ஆய்வு புத்தகத்தின் ஆசிரியருமான வாடிம் ரோகோவின் இன் எழுத்துக்களை மொழிபெயர்த்ததும் வெளியிட்டதும் குறிப்பாக மிக முக்கியமானதாக அமைந்திருந்தது. 1995க்கும் 1998க்கும் இடையில் வெற்றிகரமான ஒரு தொடர் சர்வதேச விரிவுரைகளளையும் ரோகோவின் வழங்கினார்.

அந்த மார்க்சிச வரலாற்றாசிரியர் 1998 இல் காலமான போது, டேவிட் நோர்த் கூறிய கருத்தில், ரோகோவினின் வேலைகள் “அடுத்து வரும் பல தசாப்தங்களுக்கு, வரலாற்று இலக்கியத்தில் ஸ்ராலினிச பயங்கரம் குறித்த விடயத்தில் மேலாதிக்கம் செலுத்தவிருக்கிறது. இத்தகைய மாபெரும் பரிணாமங்களுடனான ஒரு வேலை மேலெழுந்தவாரியான ஒட்டுவேலைக்குரிய எந்த முயற்சியையும் மறுதலிக்கிறது. ஆயினும் பின்வருவதை வலியுறுத்திக் கூறியாக வேண்டும்: ஸ்ராலினிச ஆட்சிக்கு எதிரான ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பை, ஒழித்துக் கட்டுவதுதான் ஸ்ராலினிச பயங்கரத்தின் பிரதான நோக்கமாகவும் செயல்பாடாகவும் இருந்தது என்பதன் மீதான அவரது வலியுறுத்தலே மற்ற அனைவரின் வேலைகளில் இருந்தும் வாடிமின் வேலையை வேறுபடுத்திக் காட்டுவதாகும்.”

“ட்ரொட்ஸ்கி மற்றும் அவரது சிந்தனைகளுக்கு எதிரான போராட்டத்தின் மையத்தன்மையை வரலாற்றாசிரியர்கள், ஒருவேளை மறுக்கவில்லை என்றாலும், குறைத்துக் காட்டி வந்திருந்தார்கள்... இந்த கண்ணோட்டங்களை நிராகரித்த வாடிம், அவை சோவியத் ஒன்றியத்திற்குள் இருந்த மார்க்சிச பாரம்பரியத்தின் சாத்தியத்திறனையும் மற்றும் மக்களின் பரந்த பிரிவுகள் மத்தியில் இருந்த புரட்சிகர மனோநிலைகளது ஆழத்தையும் குறைமதிப்பீடு செய்ததாக வாதிட்டார்... அப்படியானால் அந்த (ஸ்ராலினிச) பயங்கரத்தின் இறுதி நோக்கம் என்னவாய் இருந்தது? ‘1937-1938 மாபெரும் களையெடுப்பு’ என்ற நூலில் வாடிம் எழுதினார், ‘ஸ்ராலினுக்கு அவசியப்பட்ட துல்லியமான காரணம், இந்த வழியில் மட்டுமே நான்காம் அகிலத்தின் புரட்சிகர இயக்கம் வலுப்பெறுவதன் வீரியத்தை இல்லாது செய்வதும்; சகாப்தத்தின் முன்னணி புரட்சிகர சக்தியாக அது உருமாறிவிடாமல் தடுப்பதும்; ‘ட்ரொட்ஸ்கிச’ சிந்தனைகளை தழுவிக் கொள்வது சாத்தியமான நிலையில் இருந்த உலக வெகுஜனக் கருத்தை நோக்குநிலை பிறழச் செய்வதும் விரக்தியடையச் செய்வதுமாகும்”. (“வாடிம் Z. ரோகோவின் நினைவுக்கு”, டேவிட் நோர்த், டிசம்பர் 15, 1998)

ஸ்ராலினிசத்தால் விளைந்த அரசியல் நாசத்தைப் பற்றிய உண்மையை நிறுவுவதற்கும், ஸ்ராலினிசத்திற்கு வக்காலத்து வாங்கியவர்கள் அல்லது அதனை மூடி மறைத்தவர்கள் அனைவரையும் அம்பலப்படுத்துவதற்கும் மற்றும் தோற்கடிப்பதற்குமான தாக்குதலை கட்சியானது ஆழப்படுத்திய நிலையில், 1985 நவம்பரில் கிளீஃவ் சுலோட்டர் அனைத்துலகக் குழுவின் மீது தொடுத்த முதல் பகிரங்க தாக்குதல்களின் விடயங்களில் ஒன்றாக இருந்த பாதுகாப்பும் நான்காம் அகிலமும் பற்றிய விசாரணை மற்றும் அம்பலப்படுத்தல் இன்னும் கூடிய முக்கியத்துவத்தை பெற்றது.

புரட்சிகர சோசலிச நனவை அபிவிருத்தி செய்வதன் மீதான வலியுறுத்தமானது, கலை மற்றும் கலாச்சார வட்டத்தில் கட்சியின் வேலையை அபிவிருத்தி செய்வதை நோக்கிய ஒன்றுபட்ட முயற்சிகளுக்கும் இட்டுச்சென்றது. சோவியத் விமர்சகரும் 1937 இல் ஸ்ராலினால் கொல்லப்பட்ட இடது எதிர்ப்பாளர்கள் அணியின் அங்கத்தவருமான அலெக்ஸாண்டர் வோரோன்ஸ்கி எழுதிய வாழ்வின் அறிகையாக கலை (Art as the Cognition of Life) என்ற கட்டுரை தொகுதி மொழிபெயர்க்கப்பட்டு 1998 இல் வெளியிடப்பட்டமையானது ஒரு மிகப்பெரும் முக்கிய நிகழ்வாக இருந்தது. கலை மற்றும் சோசலிச வாழ்வின் பிரச்சினைகள் குறித்த விடயத்தில் இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மிக இன்றியமையாத எழுத்துக்களில் அதுவும் ஒன்றாகும்.

ஸ்ராலினிசத்தால் நாசம் செய்யப்பட்டு விட்டிருந்த சர்வதேச சோசலிச அரசியல் கலாச்சாரத்தை மீள்கட்டமைப்பதற்கு அனைத்துலகக் குழு தன்னை நனவுடன் அர்ப்பணித்துக் கொண்டது. 1992 மார்ச் கூட்டத்திலான ஆரம்ப அறிக்கையானது, வரலாற்று உண்மைக்கான இந்த “தாக்குதலை முன்வைக்காமல் சர்வதேச மார்க்சிச இயக்கத்தை மீளக்கட்டியெழுப்புவது” சாத்தியமில்லாதது என்றும் ஸ்ராலினிசத்தின் குற்றங்களை அம்பலப்படுத்துவது என்பது “சமூக மற்றும் அரசியல் சிந்தனையின் அபிவிருத்திக்கு ஸ்ராலினிசம் இழைத்த பாதிப்பை சீர்செய்வதில் ஒரு அத்தியாவசியமான பகுதியாக இருந்தது” என்றும் வாதிட்டது.

12வது நிறைபேரவையின் அறிக்கையானது, ICFI இன் அபிவிருத்தியில் ஒரு மைல்கல்லாகும் என்றபோதும், அது திடீரென எங்கிருந்தோ வந்ததல்ல. 1920களில் அதன் ஆரம்ப நாட்கள் தொடங்கி, நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டமை, பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டம், அதன்பின் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளால், குறிப்பாக சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) சீரழிவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரம், அதற்கும் பின்னர், தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) தலைமைக்கு எதிராக வேர்க்கர்ஸ் லீக்கினால் நடத்தப்பட்ட போராட்டம், மற்றும் 1985 இல் அனைத்துலகக் குழுவின் பெரும்பான்மையால் வரலாற்றுமுக்கியத்துவம் கொண்டதாகவும், விடுதலையளிப்பதாகவும் அமைந்த தேசிய-சந்தர்ப்பவாத கூறுகளின் களையெடுப்பால் உருவாக்கப்பட்ட உண்மையான மார்க்சிச மறுமலர்ச்சி என ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முழு வரலாற்றையும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பால் உருவாக்கப்பட்ட புதிய நிலைமைகளுக்கு பொருத்தமாக அந்த அறிக்கை கொண்டுவரப்பட்டிருந்தது.

சோவியத் ஒன்றியமானது உத்தியோகபூர்வமாக 1991 டிசம்பர் 26 வியாழக்கிழமை அன்று மாஸ்கோவில் கிரெம்ளினில் இருந்தபடி கலைக்கப்பட்டது.

December 26, 1991 இல் சோவியத் கொடி இறக்கப்படுதல்

முந்தைய நாளான டிசம்பர் 25 அன்று, சோவியத் ஜனாதிபதி மிக்கையில் கோர்பச்சேவ் இராஜினாமா செய்து, தனது அலுவலகம் இனி இருக்காது என்று அறிவித்தார். அன்று இரவு 7:32 மணியளவில் அரிவாள் சுத்தியலுடனான சோவியத் கொடி கிரெம்ளினில் இருந்து கடைசி முறையாக இறக்கப்பட்டு, அதனிடத்தில், 1696 தொடங்கி அக்டோபர் புரட்சி வரையிலும் இருந்த எதேச்சாதிகார, பாதி-காட்டுமிராண்டித்தன ரஷ்ய ஜார் ஆட்சியின் உத்தியோகபூர்வ அரசுமுத்திரையை கொண்டிருந்த புரட்சிக்கு முந்தைய ரஷ்யக் கொடி ஏற்றப்பட்டது.

அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக கசப்பான முடிவுக்காலம் வரையிலும் (அதனைத் தாண்டியும் கூட) ஈவிரக்கமின்றியும் மூர்க்கமாகவும் போராடக் கூடிய ஒரு ஆளும் வர்க்கமாக இல்லாமல் ஏகாதிபத்தியத்தின் கீழ்ப்பணிவான கையாளாக இந்த அதிகாரத்துவ சாதியானது, அதன் இறுதியான வரலாற்றுக் காட்டிக்கொடுப்பு நடவடிக்கையில், நாட்டையும் அதன் 293,000,000 குடிமக்களது தலைவிதியையும் முதலாளித்துவ நலன்களுக்கு சர்வசாதாரணமாக கையெழுத்திட்டுக் கொடுத்து விட்டது.

விடயங்களின் உத்தியோகபூர்வ, மனவிருப்பரீதியான, அதாவது, பொய்யான விவரிப்பின் படி, வரலாற்று நிகழ்ச்சிப்போக்கு ஒரு முக்கால் நூற்றாண்டு அல்லது அதற்குக் கூடுதலான காலத்தில் தானாகவே திரும்பிவிட்டது. “இயல்பான” முதலாளித்துவ அபிவிருத்திப் பாதையில் இருந்தான விலகலான அக்டோபர் புரட்சியின் உடலியல்ரீதியான எச்சங்கள் எல்லாம் இனியும் இருக்கவில்லை. புரட்சியின் நினைவுகள் அவதூறு செய்யப்பட முடியும், சாத்தியமானால், துடைத்து அழிக்கப்படவும் முடியும். ஆளும் வர்க்கங்கள் மீண்டும் வழக்கம் போல தமது வேலைகளுக்கு திரும்பலாம். பூமியில் அமைதி நிலவும் ஜனநாயகம் பூத்துக் குலுங்கும் என்றாகிவிட்டது.

ஆனால், கடந்த கால் நூற்றாண்டு கால சம்பவங்கள் அந்த நம்பிக்கையான, ஒளிமயமான கணிப்பை ஊர்ஜிதப்படுத்தவில்லை.

மாஸ்கோவில் சோவியத் ஒன்றியம் உத்தியோகபூர்வமாகக் கலைக்கப்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பின்னர், 1992 ஜனவரி 4, சனிக்கிழமை, டெட்ராயிட்டில் நடந்த வேர்க்கர்ஸ் லீக்கின் கட்சி அங்கத்தினர் கூட்டத்தில் டேவிட் நோர்த், சோவியத் ஒன்றியத்தை மறையும் நிலைக்குக் கொண்டுவந்தது எது என்பது குறித்த ஒரு திறம்பட்ட பகுப்பாய்வை வழங்கினார். சோவியத் ஒன்றியத்தின் முடிவு என்ற அந்தப் பகுப்பாய்வின் பகுதியாக அவர் பின்வரும் புள்ளிகளை முன்வைத்தார்:

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது, அக்டோபர் புரட்சியின் கோட்பாடுகளையும் சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தையும் ஸ்ராலினிசம் காட்டிக்கொடுத்ததன் உச்சத்தைக் குறிக்கிறது... ஸ்ராலினிசம் சோவியத் தொழிலாளர்களை ஒரு பெருந்துயருக்கு இட்டுச் செல்லும் என்று 1920கள் தொடங்கி ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் அடிக்கடி கூறப்பட்டு வந்திருந்த எச்சரிக்கைகள் ஆழமான விதத்திலும் துன்பியலான விதத்திலும் நிரூபணம் பெற்றிருக்கின்றன.

ஒரு புரட்சிகரக் கட்சியானது உண்மைநிலைக்கு முகம்கொடுத்தாக வேண்டும், அது என்னவென்பதைக் கூறியாக வேண்டும். சோவியத் தொழிலாள வர்க்கம் ஒரு தீவிரமான தோல்வியை சந்தித்திருக்கிறது. தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தை துடைத்தெறியும் முன்பாக தொழிலாளர்’ அரசினை அதிகாரத்துவம் விழுங்கி விட்டிருக்கிறது...

இது மாபெரும் அபாயங்களை முன்கொண்டுவருகின்ற போதிலும், சோவியத் அதிகாரத்துவத்தின் தகர்ப்பானது தடைகளை நீக்கவும் செய்திருக்கிறது. ஊழல் மற்றும் சந்தர்ப்பவாதத்தின் மாபெரும் மூலவளமாகவும் பொருளியல் அடித்தளமாகவும் இருந்த ஒன்று ஓரங்கட்டப்பட்டு விட்டிருக்கிறது... இப்போது ஸ்ராலினிசத்தை தமது அடிப்படையாகக் கொண்ட அனைவரும் தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக தமது நம்பகத்தன்மையை தொலைத்திருக்கிறார்கள். (சோவியத் ஒன்றியத்தின் முடிவு, ஜனவரி 1992)

1992 மார்ச் நிறைபேரவையானது இந்த வேலையை எங்ஙனம் முன்னெடுத்தது மற்றும் ஆழப்படுத்தியது, என்பதை நான் விளக்க முயற்சிப்பேன்.

மற்ற அத்தனை பேரும் தலைகுனிந்து நின்ற நேரத்தில், ICFI மட்டும் தலைநிமிர்ந்து நிற்க முடிந்தது எவ்வாறு சாத்தியமானது? ஒருபுறத்தில் முதலாளித்துவ வெற்றிக்களியாட்டவாதமும் தற்பெருமை முட்டாள்தனமும், மறுபுறத்தில் குட்டி-முதலாளித்துவ இடதுகள் தரையில் உட்கார்ந்து கொண்டு “இராஜாக்களின் மரணங்கள் குறித்த சோகக் கதைகள்” ஐ ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது.

அனைத்துலகக் குழுவானது, குறிப்பாக, 1982 முதல் 1985 வரை WRP உடனான வரலாற்று மோதலின் மூலமாக, இந்த நிகழ்வுகளுக்கு தன்னை தயாரித்து விட்டிருந்தது. அந்த மோதலில், ஸ்ராலினிச ஆட்சிகளின் தன்மை மற்றும் வரலாறு உள்ளிட்ட ஒவ்வொரு அடிப்படையான கேள்வியும் மேலெழுந்து, போராடித் தீர்க்கப்பட்டது.

ICFI சோவியத் ஒன்றியத்தையும், சீனாவையும், கிழக்கு ஐரோப்பிய அரசுகளையும் ஏகாதிபத்தியத்தின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து வந்திருந்தது என்ற அதேவேளையில், அதிகாரத்துவத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் இருந்து விளைகின்ற முதலாளித்துவ மீட்சி அபாயங்கள் குறித்தும் அதே அளவு வீரியத்துடன் எச்சரித்து வந்திருந்தது. அந்த நிகழ்ச்சிப்போக்கு முடிந்து ஓய்ந்த போது, ICFI அதனை உணர்ந்து கொண்டு, ஒரு தீவிரமான உள்முக விவாதத்தை நடத்தி, தத்துவார்த்தரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் அவசியமான நடவடிக்கைகளை எடுத்தது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை அனைத்துலகக் குழுவால் எவ்வாறு முகம்கொடுக்க முடிந்தது என்பதை விளக்க வேண்டுமானால், ஒருவர் முதலில், ட்ரொட்ஸ்கியால் நிலைநிறுத்தப்பட்டிருந்த வலிமையான அடித்தளங்களை நோக்கியும், சோவியத் ஒன்றியத்தின் தலைவிதி குறித்து சர்வதேச இடது எதிர்ப்பாளர்கள் அணி மற்றும் நான்காம் அகிலத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்ட முன்னோக்கை நோக்கியும் திரும்பியாக வேண்டும்.

எந்த முதலாளித்துவ நிபுணரோ அல்லது கல்வியறிஞரோ, 1985 இல் கோர்பச்சேவ் அதிகாரத்துக்கு வந்த பின்னரும் கூட, ஸ்ராலினிச அரசாங்கம் மத்திய திட்டமிடல் கோட்பாட்டை நிராகரிக்கும் என்றோ, உற்பத்தி சாதனங்களின் தனியார் உடைமைத்துவம் மீதான அத்தனை கட்டுப்பாடுகளையும் அகற்றும் என்றோ, சந்தை தான் “நாகரிகத்தின் மிக உயர்ந்த சாதனை” என்று பிரகடனம் செய்யும் என்றோ, சோவியத் ஒன்றியத்தை உலக முதலாளித்துவத்தின் கட்டமைப்புகளுக்குள்ளாக முழுமையாக ஒருங்கிணைக்க விழையும் என்றோ கணித்திருக்கவில்லை என்பதை அனைத்துலகக் குழு, 1990களின் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியத்தில் நிகழ்வுகள் கட்டவிழ்ந்த நிலையில் சுட்டிக்காட்டியது.

உண்மையில் 2011 இல், வெளியுறவுக் கொள்கை (Foreign Policy) இதழானது ஒருவிதமான அவமானப்பட்ட முகத்துடன், “1991க்கு முன்வந்த வருடங்களில், சோவியத் ஒன்றியம் உருக்குலையவிருந்ததை கிட்டத்தட்ட எந்த மேற்கத்திய நிபுணரோ, அறிஞரோ, அதிகாரியோ அல்லது அரசியல்வாதியோ முன்னெதிர்பார்த்திருக்கவில்லை” என ஒப்புக்கொண்டது.

ஆனால், 1936 இல், அரசியல்ரீதியாக நாடுகடத்தப்பட்ட நிலையில் தனிமைப்பட்டும் ஆபத்து சூழவும் நோர்வேயில் இருந்தபடி எழுதிய லியோன் ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிச ஆட்சியின் கொள்கைகள், சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தின் இறுதி வெற்றியை உறுதி செய்வதற்கு வெகுதூரத்திற்கு அப்பால், உண்மையில் முதலாளித்துவத்தின் மீட்சிக்கே களம் தயாரித்துக் கொண்டிருந்தன என்று எச்சரித்திருந்தார்.

சோவியத் ஒன்றியம் பற்றிய கருத்தாக்கத்தை உயிரோட்டமான முறையில் எடுத்துக்காட்டுவதற்கும் மற்றும் தனது அபிவிருத்தியின் சாத்தியமான திசையை வெளிப்படுத்திக் காட்டவும் எமது கட்சி பாடுபடும் என்று ட்ரொட்ஸ்கி விளக்கினார். சோவியத் ஒன்றியம் ஒரு “இடைமருவல்” சமூகமாக இருந்தது, அதன் இறுதியான கதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு அவர் வந்தார். ஒரு அரசியல் புரட்சியின் மூலமாக தொழிலாளர்கள் ஸ்ராலினிச ஆட்சியாளர்களை தூக்கிவீசி விட்டு, சோவியத் ஜனநாயகத்தை மீட்சி செய்து அரசின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவார்களேயானால், அப்போது சோவியத் ஒன்றியம் சோசலிசத்தின் திசையில் பரிணமிக்க முடியும் என்றார். மாறாக, அதிகாரத்துவ சாதி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக நசுக்குவதையும் அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்புகளின் சாத்தியங்களுக்கு குழிபறிப்பதையும் தொடர முடியுமானால், தலைகீழாய் முதலாளித்துவத்தை நோக்கிய பேரழிவுகரமான திரும்புதலும் சாத்தியமாக இருந்தது என்றார்.

இந்த புரிதலானது நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணமான, இடைமருவு வேலைத்திட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டிருந்தது:

சோவியத் ஒன்றியம் ... படுபயங்கர முரண்பாடுகளின் உருவடிவாயுள்ளது. ஆயினும் அது இப்போதும் ஒரு உருக்குலைந்த தொழிலாளர் அரசாகவே இருக்கிறது. சமூக கண்டறிவு அவ்வாறானதாகவே காட்டுகிறது. அரசியல்ரீதியான முன்கணிப்பு ஒரு மாறுபட்ட குணாதிசயத்தை கொண்டுள்ளது: ஒன்று அதிகாரத்துவமானது, தொழிலாளர் அரசில் உலக முதலாளித்துவத்தின் அங்கமாக முன்னெப்போதினும் பெரிதாக ஆகி, புதிய சொத்துடைமை வடிவங்களை தூக்கியெறிந்து நாட்டை மீண்டும் முதலாளித்துவத்திற்குள் மூழ்கடிக்கும்; இல்லையேல், தொழிலாள வர்க்கமானது அதிகாரத்துவத்தை காலில்லிட்டு நசுக்கி விட்டு சோசலிசத்திற்கான பாதையை திறக்கும். (இடைமருவு வேலைத்திட்டம், 1938)

இந்த கருத்தாக்கமானது ICFI ஆல் விரித்துரைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டது என்பதை முந்தைய விரிவுரைகள் விளக்கக் கேட்டீர்கள்.

முதலாளித்துவ வல்லுநர்களைத் தவிர, கிட்டத்தட்ட உலகளவில் குட்டி-முதலாளித்துவ இடதுகளும் சோவியத் ஒன்றியத்தின் மறையமுடியாத தன்மை குறித்து உறுதியுடன் இருந்தார்கள். அந்த நேரத்தில் அரசியல் நனவுடன் இருந்திராதவர்களை தவிர மற்றவர்களுக்கு இன்று அதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும் என்பது உண்மைதான், ஆனாலும், சோவியத் ஒன்றியத்தின் அழியமுடியாத தன்மையை பப்லோவாத, அராஜகவாத மற்றும் அரசு முதலாளித்துவ குழுவாக்கங்களும் (state capitalist) மற்றும் ஸ்ராலினிச கொடுங்கோன்மை குறித்து இரத்தத்தை உறையவைக்கக் கூடிய வகையில் விமர்சனங்கள் செய்தவர்களும் அதேபோல ஒரு இயல்பானதாக கருதினர்.

இங்கிலாந்தின் முன்னணி அரசு முதலாளித்துவவாத போக்கின் பிரதிநிதியான கிறிஸ் ஹார்மன், ஸ்ராலின் முதல் கோர்பச்சேவ் வரை என்ற அவரது 1988 ஆம் ஆண்டு படைப்பில், முதலாளித்துவ மீட்சியின் சாத்தியம் குறித்து எதுவுமே குறிப்பிடவில்லை. ஹார்மன் மெத்தனத்துடன் பின்வருமாறு எழுதினார், “ரஷ்ய தலைமையானது” ஒரு கொள்கையில் இருந்து இன்னொன்றுக்கு தாவுவதும் அதன்பின் மீண்டும் பழைய கொள்கைக்கு தாவுவதுமாய் இருக்கிறது, அதனுடன் அதிகாரத்துவத்திற்குள்ளேயேயான கடுமையான சச்சரவுகளும் கைகோர்த்திருக்கின்றன. அதிகாரத்துவம் தனது விருப்பத்தை எஞ்சிய மக்களின் மீது திணிப்பதை இவையெல்லாம் அதிக சிரமமானதாக ஆக்கக் கூடும்.”

இன்னும் சொல்லப் போனால், 1980களுக்குள்ளாக, ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு குறித்த ஐயுறவுவாதம் WRP இன் தலைமைக்குள்ளேயே கூட மிகவும் பரவலாய் ஆகி விட்டிருந்தது.

1983 இல் நடந்த ஒரு விவாதம் எனக்கு ஞாபகம் வருகிறது, அதில், நான் திடுக்கிடும் வண்ணமாக, WRP இன் பொதுச் செயலரான மைக் பண்டா, ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கை தவறு என்பதாக என்னிடம் கூறினார். சோவியத் ஒன்றியம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது ஒரு “முடிவடைந்த பிரச்சினை” என்றார். அப்படியானால், ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை ஸ்தாபிக்கும் முடிவுக்கு அடித்தளமாய் கொண்ட ஸ்ராலினிசத்தின் மீதான அவரது பகுப்பாய்வு தவறு என்று அர்த்தமாகி விடாதா? என்று நான் பண்டாவைக் கேட்டேன். அதற்கு பண்டா மழுப்பலான ஒரு பதில் கூறினார். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், பண்டா ட்ரொட்ஸ்கியை மறுதலிக்கவிருந்தார், நான்காம் அகிலத்தைக் கண்டனம் செய்யவிருந்தார், ஸ்ராலினுக்கான தனது புகழாரத்தை பிரகடனம் செய்யவிருந்தார். (“சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பிந்தைய இருபது ஆண்டுகள்: முதலாளித்துவ நெருக்கடியும் தொழிலாள வர்க்கத்தின் தீவிரப்படலும் 2012” டேவிட் நோர்த், ஜனவரி 30, 2012)

1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையானது, தொழிலாளர் இயக்க வரலாற்றில் ஒரு அடிப்படையான திருப்புமுனையைக் குறித்து நின்றது. 1917 நவம்பரில், ரஷ்ய தொழிலாள வர்க்கம், போல்ஷிவிக் கட்சியின் தலைமையில், வரலாற்றின் முதல் தொழிலாளர் அரசை ஸ்தாபித்திருந்ததன் பின்னர், சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் சமூக, அரசியல், புத்திஜீவித மற்றும் கலாச்சார அபிவிருத்தியானது நவீன உலக வரலாற்றின் இந்த மையமான நிகழ்வுடன் பிரிக்கவியலாமல் பிணைந்திருந்தது.

சோவியத் ஒன்றியத்தின் சமூக தன்மை மற்றும் அரசியல் தலைவிதி பற்றி நான்காம் அகிலம் அதனது வரலாறு முழுக்க தன் சிந்தனையை அர்ப்பணித்திருக்கின்றது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளான எண்ணிலடங்கா போராட்டங்களில், ‘ரஷ்ய பிரச்சினை’யானது தீவிர போராட்டம் மற்றும் சர்ச்சைகளது கவனமையமாக இருந்து வந்திருந்தது. சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜேம்ஸ் பி.கனன், 1939 அக்டோபரில் சாக்ட்மன்-பேர்ன்ஹாம் கன்னையுடனான மோதலின் தோற்றத்தின்போதே இதனைக் கண்டுணர்ந்திருந்தார்.

மறுபடியும் ரஷ்யா பற்றிய கேள்வி நம்மிடையே எழுந்திருக்கிறது, 1917 நவம்பர் 7 க்குப் பின்னர் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் ஒவ்வொரு வெகுமுக்கியமான திருப்புமுனைப் புள்ளியிலும் அது இவ்வாறே எழுந்து வந்திருக்கிறது. ரஷ்ய பிரச்சினை என்பது அந்தந்த நேரத்தின் மனோநிலையைப் பொறுத்து எடுத்துக் கொள்வதற்கும் அல்லது ஒதுக்கி வைப்பதற்கும் அது ஒரு இலக்கியப் பயிற்சி அல்ல. ரஷ்யா குறித்த கேள்வி என்பது புரட்சி குறித்த கேள்வியாக இருந்து வந்திருக்கிறது, இப்போதும் இருக்கிறது... ஒரு புத்தகத்தைப் பற்றிச் சொல்லும்போது —வைட்மன் எழுதிய Leaves of Grass என்று நினைக்கிறேன்— “இந்த புத்தகத்தைத் தொடுபவர், ஒரு மனிதனைத் தொடுகிறார்” என்று சொல்லப்படுவதுண்டு. அதேவிதத்தில் சொல்வதானால், “ரஷ்ய பிரச்சினையை தொடுபவர், புரட்சியின் பிரச்சினையை தொடுகிறார்” என்று சொல்லலாம். ஆகவே, அது குறித்து விழிப்புடன் பேசுதல் வேண்டும். அதில் விளையாட்டு கூடாது. (”ரஷ்ய பிரச்சினையிலான உரை”, ஜேம்ஸ் பி.கனன், அக்டோபர் 15, 1939)

ஜேம்ஸ் பி.கனன், மார்ட்டின் அபெர்ன், மாக்ஸ் சாக்ட்மன்

1980க்குப் பின்னர் பிறந்த எவரொருவரும், போருக்குப் பிந்தைய அரசியலும் கலாச்சாரமும் எந்த மட்டத்திற்கு சோவியத் ஒன்றியத்தின் இருப்பினால் மேலாதிக்கம் செலுத்தப்பட்டதாக இருந்தது என்பதை உணர்ந்துகொள்ள முடியாதுதான். எனது தலைமுறையைப் பொறுத்தவரை, சோவியத் ஒன்றியத்தின் இருப்பும் சோவியத் கொள்கையாக இருந்த ஒன்றும் அன்றாட வாழ்க்கையின் மையமான உண்மைகளாக (வெளிப்படையாகச் சொல்வதானால், கவலைகளாக) இருந்தன: பனிப்போர், ஆயுதபலப் போட்டி, விண்வெளி ஆதிக்கப் போட்டி, அணு சோதனை, பேர்லின் சுவர், U2 வேவு விமான நெருக்கடி, விட்டோடிகள், கியூப ஏவுகணை நெருக்கடி, நிக்கிட்டா குருஷேவ் ஐக்கிய நாடுகளில் அவரது மேஜையில் சப்பாத்து காலைக் கொண்டு எத்தியதாகக் கூறப்பட்டமை, குருஷேவுக்கும் ரிச்சார்ட் நிக்சனுக்கும் இடையிலான சமையலறை விவாதம், ஏவுகணை இடைவெளி, மாஸ்கோவில் பியானோ கலைஞர் வான் கிளிபேர்ன், உச்சிமாநாட்டுக் கூட்டங்கள், பதட்டத்தணிப்பு (détente), ”சிவப்பு ஆபத்து” எதிர் "சுதந்திர உலகம்”, ஜேம்ஸ் பாண்ட், John Le Carré, மஞ்சூரியன் வேட்பாளர், அசிங்கமான அமெரிக்கர், அமைதியான அமெரிக்கர், டாக்டர்.ஸ்ட்ரேஞ்ச்லவ், On the Beach, Fail-Safe, ரஷ்யர்கள் வருகிறார்கள், ரஷ்யர்கள் வருகிறார்கள், “அழிவுத் தருணம்”, “போர் மாஸ்டர்கள்”, “தீய சாம்ராஜ்யம்”, கலாச்சாரப் பரிமாற்றம், விளையாட்டுப் பகைமைகள், ஒலிம்பிக் புறக்கணிப்புகள், வேவு விசாரணைகள் மற்றும் வர்த்தகங்கள்....

1991 டிசம்பருக்குள்ளாக, நான்காம் அகிலம் முன்கணித்திருந்தவாறும் முன்கூட்டி எச்சரித்திருந்தவாறும், மார்க்சிச-விரோத மற்றும் தேசியவாத ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கொள்கைகள் சோவியத் ஒன்றியத்தை அழித்து விட்டிருந்தன. சர்வதேசத் தொழிலாள வர்க்கம் ஒரு பெரும் தோல்வியைக் கண்டிருந்தது. ICFI சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஜேர்மனியிலும் தலையீடு செய்தது, விஜயங்களை மேற்கொண்டது, அங்கே பார்வையாளர்களிடம் உரைநிகழ்த்தியது, அவர்களுடன் பேசியது, தனது ஆவணங்களை வெளியிட்டது மற்றும் விநியோகித்தது. நோர்த் அவரது விரிவுரை நாள் விவாதத்தில் கூறியது போல, ICFI, சோவியத் மக்களிடம் ட்ரொட்ஸ்கிச முன்னோக்கை கொண்டுசேர்த்தது, ரஷ்யாவில் ஒரு தத்துவார்த்த சிற்றிதழை வெளியிட்டது அத்துடன் 1989க்கும் 1991க்கும் இடையில் சோவியத் ஒன்றியத்திற்கு ஏராளமான சுற்றுப்பயணங்களை ஒழுங்கமைத்தது.

இவ்வாறாய், 1991 ஆகஸ்டில் வேர்க்கர்ஸ் லீக்கின் 15வது தேசிய காங்கிரசுக்கு டேவிட் நோர்த் அளித்த அறிக்கை வாதிட்டவாறாக, சோவியத் ஒன்றியத்திலான நிகழ்வுகளை ICFI மதிப்பீடு செய்தபோது, அது சோவியத் ஒன்றியத்தில் ஏற்கனவே செயலூக்கத்துடன் இயங்கிய ஒரு சக்தியாகவே அந்த மதிப்பீட்டைச் செய்தது. பல மாதங்களுக்கு முன்பாக, கிரோவ் —ஒரு நடுத்தர-பெரிய தொழில் நகரம்— இல் இருந்த ஒரு செய்தியாளருக்கு IC ஒரு கடிதம் எழுதியிருந்தது. போரிஸ் யெல்ட்சின் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில், IC இவ்வாறு எழுதியிருந்தது: “கோர்பச்சேவ், அதிகாரத்துவத்திற்குள்ளாக முதலாளித்துவ மீட்சிக் கன்னையின் தலைவராக இருக்கிறார் என்றால், யெல்ட்சின் ரஷ்யாவில் இப்போது வளர்ந்து வரும் வெளிநாட்டு தரகு முதலாளித்துவத்தின் தலைவராக இருக்கிறார்.”

எமது செய்தியாளர் இந்தக் கடிதத்தை உள்ளூர் சோவியத்தின் செய்தித்தாளில் பிரசுரித்தார். விளைவு, அந்த செய்தித்தாளின் குறைந்தது அடுத்தடுத்த மூன்று பதிப்புகள் இந்த கடிதம் மீதான ஒரு கண்டனத்திற்காய் அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. அந்த செய்தித்தாள் கல்வியாளராக இருந்து தொழிலதிபராக மாறியிருந்த ஒருவருடன் நேர்காணல் செய்தது. அவர் “ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான வழக்கமான ஸ்ராலினிச அவதூறுகளை ஒப்பிக்கச் சென்றார்... இவ்வாறாக, அவர் ட்ரொட்ஸ்கிசத்தை ஒரு “கூடிப்பழகுவதில் வெறுப்புகாட்டுகின்ற, மனிதனை மனிதன் உண்ணும் சித்தாந்தம்” என்று குறிப்பிடுகிறார், அத்துடன் வழக்கமான ஸ்ராலினிச பாணியில் அவர் ட்ரொட்ஸ்கி, மாவோ, மற்றும் பொல் போட் இடையில் ஒரு கலவையையும் வரைகிறார். இவ்வாறாய் இந்த ஸ்ராலினிச அறிவுவியாபாரி —அவர் இப்போது கிரோவ் இல் பங்குச் சந்தையில் வேலைசெய்து கொண்டிருக்கிறார்— ஸ்ராலினிஸ்டுகள் மத்தியில் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தி ட்ரொட்ஸ்கிஸ்டுகளைக் கண்டனம் செய்கிறார்.” (ஆகஸ்ட் களையெடுப்புக்குப் பின்னர்: சோவியத் ஒன்றியம் எங்கே செல்கிறது?, “ட்ரொட்ஸ்கிசம் ஊர்ஜிதப்பட்டது: ஸ்ராலினிசத்தின் உருக்குலைவும் நான்காம் அகிலத்தின் கடமைகளும்”, வேர்க்கர்ஸ் லீக்கின் பதினைந்தாவது தேசிய காங்கிரசுக்கு டேவிட் நோர்த் வழங்கிய அறிக்கை, ஆகஸ்ட் 29,1991).

சோவியத் ஒன்றியத்தின் மறைவைத் தொடர்ந்து வந்த மாதங்களில், பப்லோவாத, அரசு முதலாளித்துவ அல்லது கல்விச்சாலை இடது அமைப்புகள் மற்றும் போக்குகளது எவரொருவரும் இந்த உலக-வரலாற்று பெருமுக்கியத்துவம் கொண்ட நிகழ்வின் அர்த்தம் குறித்த ஒரு நம்பகமான அல்லது ஏற்கத்தக்கதான மதிப்பீட்டை முன்வைக்க முடியாதிருந்தது. ஒன்று சோவியத் ஒன்றியம் இனியும் இல்லை என்பதை தாமே ஏற்றுக்கொள்ள அவர்களால் முடியாதிருந்தது அல்லது அவர்களது கால்களின் கீழ் அதலபாதாளம் திறந்து விட்டிருந்ததைப் போன்று அவர்கள் நடந்து கொண்டிருந்தனர்.

SWP இன் ஒரு மூத்த அங்கத்தினரான சாம் மார்சி (Sam Marcy), 1959 இல் அந்த இயக்கத்துடன் உடைத்துக் கொண்டு ஸ்ராலினிச-சார்பு, மாவோயிச-சார்பு தொழிலாளர் உலகக் கட்சியை (Workers World Party) ஸ்தாபித்தார். 1990 ஜூலையில், அவர் தனது வாசகர்களுக்கு “சோவியத் ஒன்றியத்தில் எதிர்ப்புரட்சி ஏன் வெற்றி பெறாது” என்ற தலைப்பில் மிக உறுதியான நம்பிக்கையுடன் செய்தியளித்தார். ஜேம்ஸ் ரோபர்ட்சனின் ஸ்பார்ட்டசிஸ்ட் குழு வெறித்தனமான கற்பனாவாத சிந்தனைக்கும் வெறித்தனமான நப்பாசைக்கும் இடையில் மாறி மாறி தத்தளித்தது.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (Workers Revolutionary Party) ஷீலா டோரன்ஸின் ‘பிரிவு’ இன்று வரையிலும் கூட ரஷ்யாவும் சீனாவும், உருக்குலைந்தோ அல்லது ஏதோவிதத்திலோ, தொழிலாளர்’ அரசுகள் தான் என்றே வாதிடுகிறது. அதன் 2019 மே தின அறிக்கையில், டோரன்ஸ் இன் News Line, “உலக சோசலிசப் புரட்சியின்” எதிர்வரக்கூடிய வெற்றியானது “முக்கிய முதலாளித்துவ அரசுகள் அத்தனையிலும் தொழிலாள வர்க்கம் சோசலிசப் புரட்சிகள் மூலமாக அதிகாரத்தைக் கையிலெடுப்பது, மற்றும் ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட ஊனமுற்ற தொழிலாளர்’ அரசுகளில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் புரட்சிகளின் மூலமாக அதிகாரத்துவங்கள் இடம்பெயர்க்கப்பட்டு அதிகாரம் தொழிலாளர்களது’ சோவியத்துகளுக்கே மீளளிக்கப்படுவது என்றே” அர்த்தப்படுகின்றது என்று உறுதியளித்தது.

1992-1993 இல், முதலாளித்துவ வெற்றிக்களியாட்டவாதம் தான் அன்றாடம் ஆட்சிசெய்ததாக இருந்தது.

1992 ஜனவரியில், பிரான்சிஸ் ஃபுக்குயாமா —இவர் அச்சமயத்தில் ஒரு நவ-பழமைவாத கல்வியறிஞராகவும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஒரு முன்னாள் அதிகாரியாகவும் இருந்தார்— வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

முதலாளித்துவ தாராளவாதத்திற்கு இருந்த உருப்படியான கடைசி மாற்றும் மறைந்து விட்டிருந்ததாக அவர் வாதிட்டார். ’பாசிசத்தை மேற்கு தோற்கடித்து விட்டிருந்தது, இப்போது கம்யூனிசமும் மறைந்து கொண்டிருந்தது. தங்களை இப்போதும் கம்யூனிச ஆட்சிகளாக சொல்லிக் கொண்டவை அவற்றை தாராளவாத ஒழுங்கமைப்பின் திசையில் நடத்திச் செல்லக் கூடிய அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்கின்றன’ என்றார்.

ஃபுக்குயாமா எழுதினார்:

பொருளாதார நவீனமயமாக்கத்திற்கு ஆட்பட்டுவரும் அனைத்து நாடுகளும் அதிகரித்தளவில் ஒன்றையொன்று ஒத்திருந்தாக வேண்டும்: தேசியளவில் ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் அடிப்படையில் அவை ஐக்கியப்பட்டாக வேண்டும், நகரமயப்பட்டாக வேண்டும், பழங்குடி, இனப்பிரிவு மற்றும் குடும்ப அடிப்படையிலான சமூக அமைப்பின் பாரம்பரிய வடிவங்கள், செயல்பாடு மற்றும் செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரப் பகுத்தறிவான வடிவங்களால் பிரதியிடப்பட்டாக வேண்டும், அத்துடன் அவற்றின் குடிமக்களது சகலவிதமான கல்விக்கும் வசதி செய்தாக வேண்டும். உலக சந்தைகள் மற்றும் ஒரு உலகளாவிய நுகர்வுக் கலாச்சாரத்தின் மூலமாக அத்தகைய சமூகங்கள் அதிகமான அளவில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாக ஆகியிருக்கின்றன. மேலும், நவீன இயற்கை விஞ்ஞானத்தின் தர்க்கமானது முதலாளித்துவத்தின் திசையில் ஒரு சகலவிதமான பரிணாம வளர்ச்சிக்கு கட்டளையிடும் என்பதாகத் தெரிகிறது. (ஃபிரான்சிஸ் ஃபுக்குயாமா, வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும், 1992 ஜனவரி)

இது பல வடிவங்களில் எதிரொலிக்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் மறைவையொட்டி மேற்கத்திய கல்வியறிஞர்களால் உற்பத்தி செய்யப்பட்ட குரூர திருப்தியுடனான முட்டாள்தனங்களை வாசிப்பது வேதனை தரக்கூடியதாகும். அரசியல், நடப்பு நிகழ்வுகள் அல்லது கலாச்சாரத்திற்கென அர்ப்பணித்துக் கொண்ட ஒவ்வொரு இதழுமே சோசலிசத்தின் படுதோல்வியாக சொல்லப்பட்டமைக்கு ஒரு சிறப்புப் பதிப்பை அர்ப்பணிக்க கடமைப்பட்டதாக உணர்ந்தன என்பதாய் தென்பட்டது. ”முடிவு” அல்லது “மரணம்” அல்லது “வீழ்ச்சி” அல்லது இணையானதொரு சொல் தலைப்பில் ஏதேனுமொரு இடத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இலக்கியத்துறை புத்திஜீவிகள் வட்டமும், அதேயளவுக்கு அறியாமையுடன், தலையை நுழைத்தது.

உதாரணமாக, 1992 ஏப்ரலில் Partisan Review இதழால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கில், நாவலாசிரியர்களான ரால்ஃப் எலிசன், சால் பெல்லோ மற்றும் டோரிஸ் லெஸ்ஸிங் மற்றும் பிரபல விமர்சகர் சுசான் சொன்டாக் ஆகியோரும் அவர்களது நெருக்கமான சகாக்களான முன்னாள் கிழக்கு ஐரோப்பிய “கலகக்காரர்களும்” ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த அதி-பிற்போக்குவாத வரலாற்றாசிரியரான ரிச்சார்ட் பைப்ஸ், மற்றும் நமது காலத்தின் முக்கிய போர்க் குற்றவாளிகளில் ஒருவரான டிக் செனியின் மனைவியும் அப்போது National Endowment for the Humanities இன் தலைவரான அவர்களுக்கு விருந்தளித்த லேய்ன் செனி ஆகியோருடன் கூடிக் குலாவினர்.

அதில் பங்கேற்ற அனைவருமே போல்ஷிவிசத்தின் தீமையை கூற மறக்கவில்லை, மேலதிகமாக பிரெஞ்சு புரட்சி மற்றும் ஜாக்கோபினிசத்தின் மீது சாபமிடுவதையும் அவர்கள் சேர்த்துக் கொண்டனர்.

அந்த அடுக்கிற்குள்ளாக, ஒரு திரும்பவியலாத அரசியல், புத்திஜீவித மற்றும் அறநெறி நிலைகுலைவு நிகழ்ந்தது.

1993 ஜூலையில், 1970களின் மத்தியில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இருந்து முறித்துக் கொண்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக்கின் முன்னாள் தலைவரான ரிம் வொல்ஃபோர்த் போருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று தலைப்பிட்டதொரு கட்டுரையில் பொஸ்னியாவிலான அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கான தனது ஆதரவை அறிவித்தார். முன்னாளில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களாக இருந்து இப்போது ஏகாதிபத்திய இராணுவத் தலையீட்டை ஊக்குவித்துக் கொண்டிருந்த ஒரு பரவலான தட்டினர் மத்தியில் பேசிய வோல்ஃபோர்த்: ”தார்மீகரீதியாக தேவைப்படுகின்றபோது இராணுவ நடவடிக்கையை கோரி, நாம் அணிவகுப்பு சப்பாத்துக்களை அணிந்து கொண்டும், நமது பதாகைகளை கட்டவித்து, நமது முஷ்டிகளை மேல்நோக்கியும் உயர்த்த வேண்டும்.” என வலியுறுத்தினார்.

1989 மற்றும் 1990 இல் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகள் கலையத் தொடங்கியதுமே இடதின் பக்கத்திலிருந்தான வெளியேறல்கள் தொடங்கி விட்டன. ICFI, இறுதி வரையிலும், ஸ்ராலினிச ஆட்சிக்கான அதன் சமரசமற்ற எதிர்ப்பையும், தொழிலாள வர்க்கம் எட்டியிருந்த தேட்டங்களைப் பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டையும், முதலாளித்துவ மீட்சிக்கு அதன் குரோதத்தையும் தெளிவாக்கி விட்டிருந்தது. மார்க்சிஸ்டுகள் தான் எப்போதும் யுத்தக்களத்தை விட்டு கடைசியாக வெளியேறுபவர்களாக இருப்பார்கள். குட்டி-முதலாளித்துவ இடதுகள், மேய்ச்சல் களங்களில் இருந்து போட்டது போட்டபடி விட்டுவிட்டு, பசும் புல்வெளிப் பகுதிகளைப் பார்த்து சென்று விட்டனர்.

பிரிட்டிஷ் கல்வியாளரும் நீண்டகால ஸ்ராலினிஸ்டுமான எரிக் ஹோப்ஸ்வாம், 1990 அக்டோபரில் “அந்த அனைத்துக்கும் விடைகொடு” (“Goodbye to All That”) என்ற ஒரு கட்டுரை எழுதினார். அவர் பலருக்காகப் பேசினார்:

1989 ஐ ஒரு தொடக்கமாகப் பார்ப்பதைக் காட்டிலும் ஒரு முடிவாகப் பார்ப்பது மிக சுலபமாகும். உலக வரலாறு என்பது அக்டோபர் புரட்சியைக் குறித்ததாக இருந்த ஒரு சகாப்தத்தின் முடிவாக அது இருந்தது...

உலகளவில் முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கு எந்தவொரு முக்கிய இயக்கமும் அங்கே இருக்கவில்லை என்றவேளையில், அதன் சர்வதேச அமைப்புமுறையின் முரண்பாடுகள் அதனை மிக பலவீனமாக ஆக்கியிருந்தன, சிலவேளை மரணகரமாக பலவீனமாக்கும் என்றும், மற்றும் மார்க்சிஸ்டுகள் அல்லது சோசலிஸ்டுகள் அதற்கொரு மாற்றீட்டினை வழங்குவார்கள் என்றும் புரட்சியாளர்கள் அப்போதும் நம்பிக் கொண்டிருந்தனர்.

அது அனைத்தும் இப்போது முடிந்து போனது. …. அக்டோபர் புரட்சியானது உலக வரலாற்றின் எதிர்காலத்திற்கான நுழைவாசல் என்று நம்பி கொண்டிருந்த எங்கள் அனைவருக்கும் அது தவறு என்று காட்டப்பட்டது.

மிகவும் நோய்பீடித்த வசனங்களில் ஒன்று, டோனி கிளிஃவ் இன் சர்வதேச சோசலிஸ்ட் குழுவின் (International Socialist group) ஒரு கன்னையாக தனது இறுதி மூலத்தைக் கொண்டிருந்த பிரிட்டனில் அப்போதிருந்த புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியைச் (Revolutionary Communist Party - RCP) சேர்ந்த, ஃபிராங்க் ஃபியூரிட்டி (Frank Furedi) இடம் இருந்து வந்திருந்தது.

அத்தகையதொரு தரிசான அரசியல் களத்தில் பகுத்தறிவின்மையும், உணர்ச்சியின்மையும் அச்சமும் மட்டும் தான் செழித்தெழ முடியும். தோல்வி அனுபவத்தில் எழுந்திருக்கக் கூடிய புதிய அகநிலை கண்ணோட்டமானது, உலகை மாற்றும் தகமையை கொண்டவர்களை அணிசிதறடிக்கிறது...

விடயங்களை அப்பட்டமாக முன்வைப்பதானால், மனித முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் இந்த நூற்றாண்டின் வேறெந்த சமயத்தை விடவும் மிக மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. பாசிச வெற்றிகளது இருண்ட நாட்களிலும் கூட சமூக உருமாற்றத்திற்கும் ஒரு புதிய சமூகத்தை உருவாக்குவதற்குமான சாத்தியங்கள் இந்தளவுக்கு தொலைதூரத்தில் இருந்ததாகத் தெரிந்ததில்லை. மார்க்சிசமும் தொழிலாள வர்க்க அரசியலும் வரலாற்றின் பாய்ச்சலில் தற்காலிமாக எந்த பின்விளைவுகளையும் கொண்டதாய் இருக்கவில்லை.

உண்மையாகவே திகிலூட்டக் கூடிய ஒரு மனிதரான ஃபியூரிட்டியும் Living Marxism (லிவிங் மார்க்சிசம் என்பது 1988 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் (RCP) பத்திரிகையாக தொடங்கப்பட்டது.) பத்திரிகையில் இருந்த அவரது சக-சிந்தனையாளர்களும் பகுதியாக கோச் (Koch) சகோதரர்களால் நிதியாதாரமளிக்கப்படுகின்ற அதி-வலது இணைய பத்திரிகையான Spiked இல் சென்று முடிந்திருக்கின்றனர்.

தாங்கிக் கொள்ளும் பக்குவம் இருந்தால், அதிர்ஷ்டவசமாக உங்களுக்கெல்லாம் அந்தளவுக்கு இல்லை, டஜன்கணக்கான நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உதாரணங்களை மேற்கொளிட முடியும். இதுதான் அந்த வட்டாரங்களில் நிலவிய சூழலாக இருந்தது, பல்கலைக்கழக வளாகங்களில் இப்போது நிலவும் மனோநிலையை விளக்க அது உதவுகிறது.

1989க்குப் பின்னர் புத்திஜீவித தீவிரவாதம்: பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க இடதுகளின் நெருக்கடி மற்றும் மறு-நோக்குநிலை (Intellectual Radicalism after 1989: Crisis and Re-orientation in the British and the American Left) என்ற செபஸ்டியான் பேர்க் இன் (2017) ஒரு பயனுள்ள படைப்பு ஸ்ராலினிசத்தின் பொறிவைத் தொடர்ந்து இடது கல்வியறிஞர்களது பரிணாம வளர்ச்சியை ஆராய்கின்றது.

சோவியத் ஒன்றியத்தின் பொறிவுக்கான பதிலிறுப்புகளில் இது பொதுவானதாகும். கனேடிய-பிரிட்டிஷ் மெய்யியலாளரும் “பகுப்பாய்வு மார்க்சிஸ்டு”மான G.A.கோஹன் 1991 இல் புதிய இடது திறனாய்வு (New Left Review) சஞ்சிகையில் எழுதுகையில் தனது எண்ணங்களில் எந்த இரகசியத்தையும் வைக்கவில்லை: ”சோவியத் ஒன்றியம் குறித்து நான் கடுமையான விமர்சனப் பார்வை கொண்டிருந்தது உண்மைதான், ஆனால் அப்பாவின் நெஞ்சில் குத்தும் கோபமான குட்டிப் பையனுக்கு அந்த வயதான மனிதர் நிலைகுலைந்து போவதைக் கண்டு சந்தோசம் வராது. சோவியத் ஒன்றியம் பாதுகாப்பாக இருந்ததாகத் தென்பட்ட வரையில், சோவியத்-விரோதமாக இருப்பது எனக்கு பாதுகாப்பானதாக இருந்தது. ஆனால் இப்போது, கையறுநிலையில் அது நொருங்கத் தொடங்குகையில், அதனைக் காப்பாற்ற கையாலாகாதவனாக நான் உணர்கிறேன்.” இந்த பரிதாபத்திற்குரிய கருத்துக்கும் மார்க்சிசத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதைத் தவிர இதனைக் குறித்து வேறு என்ன சொல்ல முடியும்?

கார்ல் காவுட்ஸ்கி

சுருக்கமாகச் சொல்வதானால், பேர்க், நேரடியாகச் சொல்லாவிட்டாலும், இந்த “சோசலிச புத்திஜீவிகள்” குறித்த ஒரு உலுக்கும் சித்திரத்தை வரைந்து காட்டுகிறார். 1989-91 இன் நிகழ்வுகள் “அவர்களை சமூக ஜனநாயகத்தின் மைய அம்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்தது... புரட்சி ஒரு வன்மையான வெடிப்பு அல்லது பொது வாழ்க்கையின் அத்தனை பரிமாணங்களையும் பாதிக்கின்ற ஒரு திடீர் திட்டவட்ட மாற்றம் என்பதான சிந்தனையை அவர்கள் விட்டுவிட்டனர் ... [காரல்] காவுட்ஸ்கி மற்றும் [எட்வார்ட்] பேர்ன்ஸ்டைன் போன்ற சிந்தனையாளர்களை திரும்பக் கொண்டுவந்து மறுநிவாரணமளிப்பதும் கூட இந்த மறுநோக்குநிலைக்கு சாட்சியாக உள்ளன. அதைப் போல, அரசியல் போராட்டத்திற்கான ஒரு தளமாக தேசிய அரசின் மையத்துவத்தின் மீதான தொடர்ச்சியான வலியுறுத்தலும் தற்போதுள்ள அமைப்புகளை ஏற்றுக்கொள்வதை வெளிப்படுத்துகின்றது...

“மார்க்சிசம் ‘அளவுக்கு பொருத்தமாக்கப்பட்டிருந்தது’ — அவர்கள் இந்தக் குறைப்பை பாராட்டினர் என்பதுடன் புதிய இலட்சியங்களுக்கும் ஆதர்சத்திற்கான மூலவளங்களுக்குமான தேடலுக்கு உரமூட்டிய வெளிப்படைத்தன்மையின் புதிய காலநிலையை வரவேற்றனர்... தார்மீக சிந்தனைகள் இன்னும் அதிக அவசியமாகின; வரலாற்று சடவாதத்தின் ஒரு பலவீனமான வடிவத்தை ஏற்றுக்கொண்டமை தற்செயலாக நிகழும் கோட்பாட்டுக்கு வலுவூட்டியதுடன் மட்டுமல்ல மாறாக இயங்கியல் கோட்பாட்டையும் கைவிட்டது அல்லது குறைந்தபட்சம் மட்டுப்படுத்திக்கொண்டது.”

சுருக்கமாய் சொல்வதானால், மார்க்சிசத்தின் ஒவ்வொரு மைய நெறிமுறையும் தூக்கியெறியப்பட்டு ”அந்நியப்பட்ட”, அதிருப்திமிக்க தொழில்முறை நடுத்தர வர்க்கத்தின் கவலைகளைக் கொண்டு பிரதியிடப்பட்டது.

இந்த பொதுவான பெருநிகழ்வின் ஒரு திகைப்பூட்டும் அம்சம் என்னவென்றால், பகுப்பாய்வு மார்க்சிஸ்டுகள், கட்டமைப்பியல் மார்க்சிஸ்டுகள், நவ-மார்க்சிஸ்டுகள், பின்-மார்க்சிஸ்டுகள், சூழலியல்-மார்க்சிஸ்டுகள் மற்றும் இன்னும் மற்றவர்கள் கொண்ட இந்த ஆயிரக்கணக்கானோரில் ஒரேயொருவரும் கூட, 1989-91 காலகட்டத்தின்போதோ அல்லது அதற்குப் பின்னரோ, ஸ்ராலினிசம் மற்றும் சோவியத் ஒன்றியம் குறித்த ட்ரொட்ஸ்கிசப் பகுப்பாய்வின் சரியான தன்மையை அங்கீகரிக்க முன்வரவில்லை. ஒரேயொருவரும் கூட, எனக்குத் தெரிந்து, எங்களைத் தொடர்பு கொண்டு “ஆம், நீங்கள் சொன்னதே சரியாகத்தான் புலப்படுகிறது” என்று சொல்லவில்லை.

அச்சமயத்தில் அனைத்துலகக் குழு விளக்கியவாறாக, நோக்குநிலை பிறழ்ந்தும் விரக்தியிலும் சோசலிசத்தை மறுதலித்தமையானது, பல சந்தர்ப்பங்களில், முந்தைய நிலைப்பாடுகள் மற்றும் முன்னோக்குகளைப் பகுப்பாய்வு செய்வதற்கான விருப்பமின்மை அல்லது திறமின்மையில் இருந்து உண்டாகியிருந்தது. “மார்க்சிசத்தை கைவிடுவதற்கும் சாபமிடுவதற்கும்” ஆர்வத்துடன் முன்வந்த பலருக்கு சோவியத் ஒன்றியத்தின் மறைவின் பின்னால் இருந்த பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க எந்த விருப்பமும் இருக்கவில்லை.

ஸ்ராலினிசத்திடமும் மற்றும் பிற அதிகாரத்துவங்களிடமும் இந்த சக்திகள் முன்னர் செய்திருந்த விண்ணப்பமானது தவறானதொரு புரிதலில் இருந்து விளைந்ததல்ல. சில குறிப்பிட்ட பிரிவினரை பொறுத்தவரை, ட்ரொட்ஸ்கியின் வார்த்தைகளில் கூறுவதானால், எப்போதும் “அதிகாரத்துவத்தின் மீது சாய்ந்திருப்பது உண்மையை சார்ந்திருப்பதை விடவும் மிக வசதியானதாக இருக்கிறது.” ஸ்ராலினிச எந்திரம், குறிப்பாக, அது பெரும் செல்வாக்கு செலுத்திய மற்றும் நிதிகளை தாராளமாக செலவிட்ட காலகட்டத்தின் போதான இடது-தீவிரவாத அரசியலின் அழுக்கடைந்த இரகசியங்களில் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இடது சூழலுமே, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, ஸ்ராலினிச, சமூக ஜனநாயக அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவத்தை சார்ந்திருந்தது. ஒரு பேராசிரியரோ அல்லது தீவிரப்பட்ட பத்திரிகையாளரோ அல்லது தொழிற்சங்க நிர்வாகியோ அவர்களுக்கு சரியான கருத்தரங்குகளில் கலந்து கொள்வதின் மூலமாக, திறனாய்வுகள் எழுதுவதன் மூலமாக, கருத்துக்களை உதிர்ப்பதன் மூலமாக, ஆய்வுகள் செய்வதன் மூலமாக மற்றும் இது போன்ற மற்றவற்றின் மூலமாக நன்கு உணவருந்திக்கொள்ள முடிந்தது.

ஸ்ராலினிச ஊழலுக்குள் ஒரு சிறு மேலோட்டப் பார்வை: ”கம்யூனிசம் மற்றும் புத்திஜீவிகள்” (2017) இல் மைக்கல் டேவிட்-ஃபாக்ஸ் வாதிடுகிறார், மாஸ்கோ ஸ்ராலினிச ஆட்சியின் “புத்திஜீவிகளுக்கு அப்பட்டமான பொருளாதார ஊக்கத்தொகைகள்” உள்ளிட்ட “விரிந்த அரவணைப்பு செயல்வகைகள்” நாட்டு எல்லைகளைக் கடந்து “ஏற்றுமதி செய்யப்பட்டன. வெளிநாட்டு புத்திஜீவிகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு சுமத்தப்பட்ட கட்சி-அரசு ஸ்தாபனங்கள் சாதகமான அல்லது சோவியத்-ஆதரவு ஆளுமைகளுக்கு போக்குவரத்து, மொழிபெயர்ப்புகள் போன்ற.. முக்கியமான நேரடி நுகர்வு விடயங்களையோ, அல்லது அரசியல் கவுரவம் அல்லது உயர்-நிலை சோவியத் உறவுகளின் மூலமாக மட்டுமே பெறக்கூடியதாக இருந்த தகவல்களுக்கு அணுகலளிப்பது போன்ற சற்று கண்ணுக்குப் புலப்படா விடயங்களையோ அளிக்கின்ற வகையான நாடுகடந்த அரவணைப்பின் ஒரு புதிய வடிவம் எழுந்தது ... குறிப்பாக முதலில் பேர்லின், பிராக், பாரிஸ் மற்றும் இலண்டன் போன்ற கணிசமான சோவியத் காலனிக்களைக் கொண்ட ஐரோப்பிய தலைநகரங்களிலான சோவியத் தூதரகங்கள் இன்னுமொரு வாகனமாய் ஆகின.”

இந்த பெருநிகழ்வைப் பற்றி டேவிட் நோர்த் 1990 மேயில் அனைத்துலகக் குழுவின் 10வது நிறைபேரவையின் போது பேசினார். குட்டி-முதலாளித்துவ இடதுகள் அழுதுபுலம்பிக் கொண்டிருந்தார்கள், ஆனால் —அதன் இருதயத்தானத்தில்— அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் மீது அதிகாரத்துவம் கட்டுப்பாட்டைத் தொலைத்ததையிட்டு சோகம் கொண்டிருந்தார்கள் என்றார் அவர். இந்த சக்திகள் ட்ரொட்ஸ்கிஸ்டுகளிடம் “நீங்கள் எங்கு எதைக் கட்டியெழுப்பியிருக்கிறீர்கள்? எங்கே அதிகாரத்திற்கு வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனிடையே, ஸ்ராலினிஸ்டுகளும் அவர்களது நண்பர்களும் உலக அமைதி மாநாடுகள், உலக திருச்சபை மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் விழாக்களை ஏற்பாடு செய்தபோதெல்லாம், அங்கெல்லாம் இந்த சக்திகள் மாஸ்கோவின் பிரதிநிதிகளைப் போல பேசினர், அங்கு தான் அவர்களுக்கு பெரும்பணம் கிடைத்தது. “அது அரசியல் விபச்சாரத்தின் ஒரு சர்வதேச மையமாக இருந்தது” என்று நோர்த் சுட்டிக் காட்டினார். “இந்த மனிதர்கள் எல்லாம் [ஸ்ராலினிஸ்டுகளின்’] அரசியல் விபச்சாரத் தரகர்களாக இருப்பதற்கு மேலாக வேறொருவருமாய் இருக்கவில்லை, அவர்களுக்கு வேலை போய் விட்டது. அது குறித்துத் தான் அவர்கள் உண்மையாக புலம்புகிறார்கள்.”

ஆனால் இந்த பல்லைக் கடிக்கும் கோபம் எல்லாம், ஏதேனும் ஒரு விதத்தில், சோசலிசத்தை ஸ்ராலினிசத்துடன் அடையாளம் காண்பதில் வேரூன்றியதாய் இருந்தது. ஆனால், ICFI வாதிட்டதைப் போல, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் நலன்களுக்கும் உலக சோசலிசத்தின் நலனுக்கும் இடையிலான இட்டுநிரப்ப முடியாத முரண்பாட்டை மார்க்சிசம் பல தசாப்தங்களுக்கு முன்பாகவே அம்பலப்படுத்தி விட்டிருந்தது.

உண்மையில், சோவியத் அரசாங்கத்தின் 74 ஆண்டு கால வரலாற்றில் 68 ஆண்டுகள் அதன் கொள்கைகளை மார்க்சிஸ்டுகள் பகிரங்கமாகவே எதிர்த்திருந்தார்கள். சோவியத் ஒன்றியத்தில் அவர்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாய் படுதீவிரமாய் துன்புறுத்தப்பட்டிருந்தார்கள், இறுதியில் அந்த ஆட்சியானது அதனது மார்க்சிச எதிரிகளை கடைசி நபர் வரை அழித்தொழிப்பதற்கான ஒவ்வொரு முயற்சியையும் கூட மேற்கொண்டது. “நாங்கள் ஒரு அரசாங்கக் கட்சி அல்ல; நாங்கள் சமரசமற்ற எதிர்க் கட்சியாகும், முதலாளித்துவ நாடுகளில் மட்டுமல்ல சோவியத் ஒன்றியத்திலும் கூடத் தான்” என்று போரில் சோவியத் ஒன்றியம் (The USSR in War - 1939) இல் ட்ரொட்ஸ்கி திட்டவட்டமாக கூறியிருந்தார்.

எமது கட்சி, முதலாளித்துவத்தின் மீட்சியைத் தடுப்பதற்கு முனைந்தது, ஆனால் நிகழ்வுகளின் இத்தகையதொரு பாதைக்கு சாத்தியமிருந்ததை ட்ரொட்ஸ்கிசம் உணர்ந்திருந்தது என்ற உண்மையானது, மார்க்சிச முன்னோக்கின் தொடர்ச்சியான செல்தகைமையும் வலுவும் சோவியத் ஒன்றியத்தின் உடலியல்ரீதியான இருப்பு மற்றும் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டதல்ல என்பதை எடுத்துக்காட்டியது.

ஆயினும், எந்த மனச்சலனமுமின்றி அசைந்துகொடுப்புமின்றி, கருமமே கண்ணாக, வரைபடத்திலான இந்த அல்லது அந்த பெயர்-மாற்றத்தை குறிப்பெடுப்பதுடன் முடிந்து போகின்றதாகவும் அது இருக்கவில்லை. வாத்தின் முதுகில் இருந்து நீரை வடிய விடுவதைப்போல 1989-91 நிகழ்வுகளை வடிய விட்டு, அல்லது அவ்வாறு நடித்து, இந்த விதத்தில் நடந்து கொண்ட அமைப்புகளும் தனிமனிதர்களும், உண்மையில், தவிர்க்கவியலாமல் இந்நிகழ்வுகளின் முதலாளித்துவ கண்ணோட்டங்களை ஏதேனும் ஒரு கோணத்தில் உள் இழுத்துக்கொண்டிருக்கின்றனர். “முக்கியமான எதுவும் நடந்திருக்கவில்லை — வாழ்க்கை தொடர்ந்து செல்லும்” என்று சொன்னவர்கள், வெறுமனே தங்களது சொந்த தீவிர சோகத்தை மற்றும் விரக்தியை வெளிப்படுத்த அல்லது வார்த்தையில் வடிக்க அஞ்சியவர்களாக மட்டுமே இருந்தனர்.

1992 மார்ச்சில் நடைபெற்ற ICFI இன் 12வது நிறைபேரவையானது, மார்க்சிச இயக்கத்தின் ஒட்டுமொத்த வரலாற்றின் அடிப்படையில் கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்திலான நிகழ்வுகள் குறித்த ஒரு பகுத்தறிவான, விஞ்ஞானபூர்வமான மற்றும் ஒத்திசைவான பகுப்பாய்வை வழங்கியது, அத்துடன் இயக்கத்தின் வருங்கால அபிவிருத்திக்கான ஒரு முன்னோக்கையும் வழங்கியது.

டேவிட் நோர்த்தின் ஆரம்ப அறிக்கை சுதந்திர நாடுகளின் பொதுநலவாய அமைப்பில் ஒழுங்கமைக்கப்பட்ட அரசுகளை (Commonwealth of Independent States - CIS) இனியும் தொழிலாளர் அரசுகளாக வரையறை செய்யப்பட முடியாது என்பதை முதலில் ஸ்தாபித்தது. ரஷ்யா, உக்ரேன், ஜோர்ஜியா மற்றும் எஞ்சிய நாடுகள் வெளிப்படையாக தேசியமயமாக்கப்பட்ட சொத்துடைமையை அழிப்பதையும் முதலாளித்துவ தனியார் சொத்துடைமைக்கான உறுதிப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருந்தது. ஒரு புதிய சமூகத்தை உருவாக்குவதற்கு தொழிலாள வர்க்கத்தின் முதன்முறையான இடைவிடாத முயற்சியால் உருவாக்கப்பட்ட அரசுகள் இனியும் இல்லாது மறைந்து விட்டிருந்தன. இந்த உருமாற்றத்தின் தாக்கங்கள் என்னவாக இருந்தன? சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் நான்காம் அகிலத்திற்கும் இது எதனை அர்த்தப்படுத்துகின்றது?

உலக முதலாளித்துவம் அதன் அடிப்படை முரண்பாடுகளை வெற்றி கண்டிருக்கவில்லை, வெற்றி காண அதனால் முடியாது என்பதை எமது இயக்கம் வலியுறுத்தியது. உண்மையில் தொழிலாள வர்க்கத்தின் பாரிய வளர்ச்சி மற்றும் பொருளாதார வாழ்வின் உலகளாவிய ஒருங்கிணைப்பு ஆகிய சோசலிசத்திற்கான புறநிலை முன்நிபந்தனைகள் 1917 ஐ விடவும் மிகவும் அபிவிருத்தி கண்டிருந்தன. இந்த பொருளாதார வாழ்வின் பொதுவான குணாம்சங்கள், அவை எத்தனை வெகுமுக்கியமானவையாக இருந்த போதிலும், அவை விடயத்தை தீர்த்து விடவில்லை. ஒரு தீர்க்கமான போராட்டத்தில் நுழைவதற்கு தொழிலாள வர்க்கத்தின் அகநிலை தயார்நிலை குறித்த கேள்வியும் அங்கே இருந்தது. ரஷ்ய புரட்சியின் எஞ்சியிருந்த தேட்டங்கள் மற்றும் அவற்றின் தொடர்ச்சியை பாதுகாப்பதற்கு 1989-91 இல் சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய தொழிலாளர்களால் இயலாதிருந்தமையானது இந்தப் பிரச்சினையை கொண்டுவந்து முன்னால் நிறுத்தியிருந்தது. (Introduction to The Sky Between the Leaves, David Walsh, 2013)

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சோசலிசப் புரட்சிக்கான அகநிலை முன்நிபந்தனைகள் என்ன? எந்த நிகழ்ச்சிப்போக்கின் ஊடாக முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்கான புறநிலை உந்துதல்கள் தொழிலாளர்களின் மிகப்பெரும் எண்ணிக்கையிலானோரது நனவில் அகநிலை வெளிப்பாட்டைக் காணப் போகிறது?

இருபதாம் நூற்றாண்டில் கடந்து செல்ல நேர்ந்த அனைத்திற்கும், அத்துடன் மிக சமீபத்தில், சோவியத் ஒன்றியத்தில் துன்பியலான விதத்தில் நிகழ்ந்து விட்டிருந்த, அனைத்திற்கும் பின்னர், அந்தப் பிரச்சினைகளை புதிதாக “புதிய கண்களுடன்” — அத்துடன் ஒரு மிகத் தீவிரமான மற்றும் துருவிக்காணும் விதத்தில்— பரிசீலிப்பது அனைத்துலகக் குழுவிற்கு முற்றிலும் நியாயபூர்வமானதாக இருந்தது.

1982 முதல் 1986 வரையான போராட்டமானது அனைத்துலகக் குழுவை தயாரிப்பு செய்திருந்தது, பிரெடெரிக் ஏங்கெல்ஸின் வார்த்தைகளில் கூறுவதானால், வெகுஜனங்கள் என்ன “பணயத்தில் உள்ளது” என்பதை புரிந்துகொள்ள வேண்டும் “உடலையும் உள்ளத்தையும்” ஒருசேர புரட்சிக்காய் அர்ப்பணிக்க வேண்டும் என்ற அதன் வலியுறுத்தல் கொண்டு, செவ்வியல் மார்க்சிசத்தின் ஒரு மறுபிறப்பை சாத்தியமாக்கியது.

தொழிலாளர் புரட்சிக் கட்சி எவ்வாறு ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக்கொடுத்தது (1986) என்ற சஞ்சிகையில் “லியோன் ட்ரொட்ஸ்கியின் மகத்தான விடுதலையளிக்கும் சிந்தனைகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள்ளாக மீண்டும் உறுதியுடன் காலூன்றி நிற்கின்றன” என்று குறிப்பிட்டது. உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும் (1988), அறிக்கையின் ஒரு வெகுமுக்கியமான பத்தியில், “தொழிலாள வர்க்கத்தில் மத்தியில் சோசலிச நனவுக்கான எந்தவொரு பகிரங்கமான போராட்டத்தின் அவசியத்தையும் மறுக்கின்ற” சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராய் கோட்பாடான சோசலிச அரசியலுக்கான போராட்டத்தை வலியுறுத்தியது. “மார்க்சிச கலாச்சாரத்தின் வளமிக்க விளைபயனைக் கொண்டு தொழிலாளர் இயக்கத்தை பொறுமையுடன் வளர்த்தெடுக்க அவசியமில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். மாறாக, வெகுஜனங்களை கவரக் கூடியதாக அவர்கள் சொல்கின்ற சில எளிமையான கோரிக்கைகளை முன் வைத்து அவர்களது இறுதி இலக்கைக் குறித்த நனவும் கூட இல்லாமலேயே அவர்களை சோசலிசப் புரட்சிக்கு வழிநடத்துவது போதுமானது என்கிறார்கள்.”

தொழிலாள வர்க்கத்தினுள் ஒரு சோசலிச அரசியல் கலாச்சாரத்திற்கான போராளியாக கட்சி தன்னை அபிவிருத்தி செய்து கொள்ள அவசியமாயிருந்தது என்ற வலுவான புரிதலானது ஒரு முக்கியமான கருப்பொருளாகியிருந்தது.

இந்த திசையிலான கலந்துரையாடல்கள் வேர்க்கர்ஸ் லீக்கில் 1980களின் பிற்பகுதியில் நடந்தது. உதாரணத்திற்கு, 1989 பிப்ரவரி மற்றும் மார்ச்சில் அரசியல் குழு கூட்டங்களில் டேவிட் நோர்த் அவதானித்தார், “நாம் ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டிக் கொண்டிருக்கிறோம் என்று தோழர்கள் அடிக்கடி சொல்வதுண்டு... அந்த புரட்சிகரக் கட்சி எது?.. நாம் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு சர்வதேசக் கட்சியை கட்டியெழுப்ப போராடிக் கொண்டிருக்கிறோம். ஒரு சில புத்திசாலித்தனமான சுலோகங்களுடன் அது முடிந்து விடக் கூடியதில்லை. அத்தகையதொரு இயக்கம் எழுவதற்கு, ஒரு வானளாவிய கட்டிடத்திற்கான சாரம் கட்டுவதைப் போன்று, பிரம்மாண்டமானதொரு தத்துவார்த்த அடித்தளம் கட்டியெழுப்பப்பட்டாக வேண்டும். ஏராளமான தயாரிப்பு வேலைகள் செய்யப்பட்டாக வேண்டும்.. நீடித்து நிற்கக் கூடியதும் ஒரு வெகுஜன இயக்கத்திற்குத் தகுதியானதுமான தத்துவார்த்த போஷாக்கினை கட்சி உருவாக்கியாக வேண்டும்.” (பிப்ரவரி 12, 1989)

“இறுதி ஆய்வில் நம்மை மற்ற அனைவரிடம் இருந்தும் பிரித்துக் காட்டுவது எது? நாம் அதிகாரத்துவத்தை எதிர்க்கிறோம். நாம் தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர நனவுக்காகப் போராடுகிறோம். நாம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் கலாச்சார அபிவிருத்திக்காகப் போராடுகிறோம்.” (மார்ச் 19, 1989)

சோவியத் ஒன்றியத்திலான நாசத்திற்கு, தொழிலாளர் இயக்கத்தின், குறிப்பாக, 1917க்கு முன்வந்த தசாப்தங்களிலான அதன் அபிவிருத்தியின், வரலாற்றை ஆய்வு செய்வதன் மூலமாக 12ஆவது நிறைபேரவை பதிலிறுப்பு செய்தது. போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றியமையானது போரினால் சிரமப்பட்டு மூச்சுத்திணறிக் கொண்டிருந்த ஜாரிச ரஷ்யாவிலான ஒரு குறிப்பான தீவிர நெருக்கடியின் அதிர்ஷ்டவசமான விளைவினால் நடந்ததல்ல. அல்லது அது போல்ஷிவிக்குகளின் தரப்பில் குறிப்பான பொருளாதார மற்றும் அரசியல் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் —அவை எத்தனை முக்கியமானவையாக இருந்தன என்றபோதிலும்— விளைபொருளாக மட்டும் இருந்தவையன்று. அதேபோல புரட்சியை சாத்தியமாக்கிய “அரசியல் நனவின் மட்டமும்” வெறுமனே “1917 பிப்ரவரிக்கும் அக்டோபருக்கும் இடையில்” உருவாக்கப்பட்டதல்ல.

இதுதான் முதல் மிகமுக்கிய புள்ளி:

அக்டோபர் புரட்சி வானத்தில் இருந்து விழுந்ததல்ல. ஒரு புறநிலை வரலாற்று நிகழ்ச்சிப்போக்காக வர்க்கப் போராட்டத்தின் மற்றும் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தினது அரசியல் அபிவிருத்தியின் நேர்மறை உச்சநிலையாக அது இருந்தது.

புரட்சியானது, 1848 இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்டதை தொடர்ந்து வந்த தசாப்தங்களில், குறிப்பாக 1871 இல் பாரிஸ் கம்யூன் ஒடுக்கப்பட்டதற்கு பிந்தையகாலத்தில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவிலான தீவிரமான வளர்ச்சியின் விளைபொருளாக இருந்தது. பாரிஸ் கம்யூனுக்கும் ரஷ்யாவில் போல்ஷிவிக்-தலைமையிலான சோவியத்துகள் வெற்றிகண்டதற்கும் இடையிலான 46 ஆண்டுகளின் போது அந்த வளர்ச்சியின் மிக முன்னேறிய வெளிப்பாடாக இருந்தவை 1889 இல் இரண்டாம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டு வளர்ச்சி கண்டதும் ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி உள்ளிட பரந்த சோசலிச கட்சிகள் எழுச்சி கண்டமையும் ஆகும்.

அந்த அறிக்கை மேலும் கூறியது: “மார்க்சிசத்தின் அபிவிருத்தியும் வெகுஜனங்களை ஒரு நனவான அரசியல் சக்தியாக அபிவிருத்தி செய்தமையும் தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களுக்கும் அதன் தனிச்சிறப்பான குணாம்சங்களைக் கொடுத்தன என்று சொல்லலாம்.”

“1848 பிப்ரவரி புரட்சி மற்றும் இரத்தக்களரியான நாட்களில் பிறந்து, பின்னர் ஒரு இளைஞராக 1871 இல் பாரிஸ் கம்யூன் போராட்டத்தில் பங்குபெற்று, இரண்டாம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்ட சமயத்தில் வெறும் 41 வயதே ஆகி, அவரது எழுபதாவது பிறந்தநாளை எட்டும் முன்பாகவே 1917 இல் ரஷ்யத் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தை வெற்றி காண்பதை கண்ணால் கண்ட ஒரு பாரிஸ் தொழிலாளி” பற்றிய ஒரு மலைப்பூட்டும் உதாரணத்தையும் டேவிட் நோர்த் வழங்கினார், அது சுமார் 27 வருடங்களுக்கு முன்பாக அந்த அறிக்கையை முதலில் வாசித்த எவருக்கும் நிச்சயமாக மனதில் நிற்கக் கூடியதாகும்.

ஆனால் 12வது நிறைபேரவையின் தேதிக்கு முன்பாக வந்த 70 ஆண்டுகாலத்தின், அதாவது 1920களின் தொடக்கம் முதல் 1990களின் தொடக்கம் வரையான காலத்தின் நிலை, என்ன? ஒரு முக்கியமான நகரத்தில் அதேபோல 1923 இல் பிறந்திருக்கக் கூடியதொரு தொழிலாளி, அவர் என்ன விதமான அனுபவத்தைக் கண்டிருப்பார்?

அக்டோபர் புரட்சியானது முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய உடனடி காலத்தில் புரட்சிகரப் போராட்டங்களின் ஒரு அலைக்கு உந்துதலளித்தது, ஆனால் சமூக ஜனநாயகக் கட்சிகளின் காட்டிக்கொடுப்புகளின் காரணத்தால் அவையெல்லாம் தோற்கடிக்கப்பட்டன. அந்த இழப்புகளும் பின்னடைவுகளும் சோவியத் அரசின் தனிமைப்படலை மோசமாக்கின, நீட்டித்தன, இது அதிகாரத்துவ போக்குகளை வலுப்படுத்தியது, அது அதன் பங்காக, ஸ்ராலினிசக் கொள்கைகளின் பலனால், இன்னும் நாசகரமான உலக-வரலாற்றுத் தோல்விகளை பிரிட்டன், சீனா, ஜேர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிற இடங்களில் உருவாக்கியது.

இடது எதிர்ப்பாளர்கள் அணி 1923 தொடங்கி இந்தப் பாதையின் ஒவ்வொரு அடியிலும் இந்த நிகழ்ச்சிப்போக்கை எதிர்த்து நின்று போராடியது. ஸ்ராலினிச சீரழிவு குறித்த சிறந்த, கூர்மையான பகுப்பாய்வுகளை ட்ரொட்ஸ்கி வழங்கினார். இறுதியாக, நாமெல்லாம் அறிந்தவாறாக, 1930களின் பிற்பகுதியில் மார்க்சிஸ்டுகளை மொத்தமாக அழித்தொழித்தமை உள்ளிட்ட சோவியத் அதிகாரத்துவத்தின் காட்டிக்கொடுப்புகள் “ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தின் வெற்றியைத் தடுத்து நிறுத்தி விட்டன என்பதுடன் சர்வதேச மார்க்சிச இயக்கத்தையும் முடக்கி விட்டன.”

1991 நிகழ்வுகள், ஒட்டுமொத்த எதிர்ப்புரட்சிகர ஸ்ராலினிச அமைப்புமுறையின் —அதன் “தத்துவார்த்த” நியாயப்படுத்தல்கள் மற்றும் தேசிய-சந்தர்ப்பவாத அரசியல், எல்லாவற்றுக்கும் மேல், தனியொரு நாட்டில் சோசலிசம் உட்பட— மீதான ஒரு வரலாற்றுக் கண்டனமாகும். 1991 இல் அப்போதும் மில்லியன் கணக்கான உறுப்பினர்களுடன் இருந்த ஸ்ராலினிச எந்திரங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் எல்லாம் ஒரு குப்பைக் குவியலாய் முடிவடைந்தன. ஸ்ராலினிச அமைப்புகள் தமது சொந்த உருவாக்கத்திலான இடிபாட்டுக் குவியலாக குறைக்கப்பட்டு விட்டிருந்தன.

ஆயினும், தொழிலாள வர்க்கமானது, அதிகாரத்துவத்தின் அரசியல் பொறியில் சிக்கியிருந்த மட்டத்திற்கு, அது இந்த குற்றவியல் கொள்கைகளின் பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டது. 1990 முதல் 1998 வரை மட்டும் ரஷ்யாவில் 3.4 மில்லியன் முன்கூட்டிய அகால மரணங்கள் இருந்ததாக பொருளாதார நிபுணரான ஸ்டீவன் ரோஸ்பீல்ட் 2001 ஆய்வு ஒன்றில் மதிப்பீடு செய்தார், ஒரு உலகப் போரின் நிலைமைகளுக்கு அப்பாற்பட்ட எதனுடனும் இணைசொல்ல முடியாத முதலாளித்துவ “அதிர்ச்சி வைத்தியம்” இதற்கு ஒரு பகுதிக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

தொழிலாளர்களின் ஒரு பிரிவினர் முதலாளித்துவத்தின் கீழ் தமக்கு மேம்பட்ட நிலைமைகள் கிடைக்கும் என்று நம்பக்கூடிய அளவுக்கு சோசலிசத்தை முழுமையாக மதிப்பிழக்கச் செய்தது ஸ்ராலினிசத்தின் படுபயங்கரக் குற்றங்களில் ஒன்றாகும். தொழிலாள வர்க்கத்தின் தன்னெழுச்சியான இயக்கத்தின் அடிப்படையில் மட்டும் எதிர்ப்புரட்சிகர அபாயத்தை தடுத்து விட முடியாது என்பதை ICFI புரிந்து வைத்திருந்தது. அத்துடன் சோவியத் ஒன்றியம் போன்றதொரு சமூகத்தில் செல்வ சமத்துவமின்மை, தனியார்மயமாக்கங்கள் மற்றும் முதலாளித்துவ-ஆதரவு நடவடிக்கைகளுக்கு அதிகாரத்துவத்தையும் மீறி அங்கே பிரம்மாண்டமான எதிர்ப்பு இருந்தது. ஏனென்றால் 1988 இன் ஒரு ஆய்வு வாதிட்டதைப் போல, “மக்கள்... பல தசாப்தங்களாக சோசலிச நீதியின் இலட்சியங்களைக் குறித்து கல்வியூட்டப்பட்டு வந்திருக்கின்றனர்”

மூலதனம் மற்றும் உழைப்பில் வரைமுறைகள் இல்லாத சந்தைகள் குறித்து பரவலான சந்தேக நிலை [சோவியத் ஒன்றியத்தில்] இருக்கிறது என்பதை கருத்துக்கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. ... ஆய்வு என்ன முடிவுக்கு வருகிறது என்றால் ஒரு மேற்கத்திய-பாணி சந்தைப் பொருளாதாரம் (முதலாளித்துவம்) ‘வெறும் 25 முதல் 30 சதவீத ஆதரவை மட்டுமே கொண்டிருக்கிறது. பெரும்பான்மையினர், தனியார் சொத்துடைமையை எதிர்க்கவில்லை என்ற அதேநேரத்தில், அதனைக் கண்டிப்பான வரம்புக்குள் வைத்திருக்க விரும்புகின்றனர். 1990 ஜனவரியில் முக்கியமான வார்த்தைகளை நோக்கிய மனோநிலைகள் குறித்தான ஒரு ஒன்றியம்-தழுவிய கருத்துக்கணிப்பு “சோசலிசம்” என்ற வார்த்தைக்கு 61 சதவீதம் “ஆதரவு” மனோநிலை (17 சதவீதம் “எதிர்ப்பு” மனோநிலை) கொண்டிருந்த அதேவேளையில் “முதலாளித்துவம்” என்ற வார்த்தைக்கு 34 சதவீதம் “ஆதரவு” மனோநிலையை வெளிப்படுத்தினர் (38 சதவீதம் “எதிர்ப்பு” மனோநிலை). (“சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்தின் எதிர்காலம்?”, ஜஸ்டின் சுவார்ட்ஸ், 1991)

ஆயினும், ரஷ்ய தொழிலாளர்கள் தங்களது வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான அச்சுறுத்தல்களுக்கு, இன்னும் ஒட்டுமொத்தமாய் ஒரு “சந்தைப் பொருளாதாரத்திற்கு” பொதுவாக குரோதம் காட்டினர் என்பது ஒரு விடயம் என்றால், முதலாளித்துவம் மீட்சி செய்யப்படுவதை ஒரு கடைந்தெடுத்த சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயலூக்கத்துடன் எதிர்ப்பது, ஒரு அரசியல் புரட்சியின் மூலமாக ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை அழிப்பதற்கும் மக்களின் பரந்த அடுக்குகளது தேவைகளைப் பிரதிபலிக்கும் விதத்தில் தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதற்கும் போராடுவது ஆகியவை முற்றிலும் வேறொரு விடயமாக இருந்தது. அதற்கு ICFI இன் ஒரு பிரிவு அங்கே அவசியமாக இருந்திருக்கும். கிடைக்கப்பட்ட சூழ்நிலைகளில், அது காலத்தே சாதிக்கப்பட முடியாமல் போய்விட்டிருந்தது.

சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தின் மீட்சியானது, “தொழிலாள வர்க்கத்தின் அத்தனை அமைப்புகளது நாள்பட்ட சிதைவு மற்றும் சீரழிவின் உச்சகட்டமாகும்” என்று 12வது நிறைபேரவை அறிக்கை வாதிட்டது.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், 1847 முதல் 1917 வரையான 70 ஆண்டுகளில், நமது பாரிஸ்வாசியின், சோசலிச-சிந்தனையுடைய தொழிலாளரின், பகுதியான வாழ்க்கைக்காலம், பல முரண்பாடுகளுடன் தான் என்றாலும்கூட, “இறுதியாக ரஷ்யப் புரட்சியில் தனது உயர்ந்த வெளிப்பாட்டைக் கண்ட வெகுஜனங்களின் புரட்சிகர சுய-நனவின் தீவிரமானதொரு வளர்ச்சி”யைக் கொண்டு குணாம்சப்படுத்தப்பட்டிருந்தது. மறுபக்கத்தில், குறிப்பாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்து அரசியலோ, தொழிலாள வர்க்கம் அதிகாரத்துவத்தால் மேலாதிக்கம் செலுத்தப்படுவதில் வேரூன்றியிருந்தது. மிஷேல் பப்லோ, ஏர்னெஸ்ட் மண்டேல் மற்றும் பப்லோவாதிகள் ஸ்ராலினிஸ்டுகளுக்கும், சமூக ஜனநாயகக் கட்சியினருக்கும் மற்றும் இருந்த ஒவ்வொரு மற்ற மேலாதிக்க தலைமைக்கும் நியாயமான இன்னும் ஒரு முற்போக்கான பாத்திரத்தையும் கூட வழங்க முயற்சித்தனர் என்றபோதும், மொத்தத்தில் அது “தேக்கம், சீரழிவு மற்றும் சிதைவின் ஒரு காலகட்டமாக” இருந்தது.

1991 அல்லது 1992 இல், உடைவுக்கு முந்தைய WRP இல் ஒரு முன்னணி உறுப்பினராகவும் ஜெர்ரி ஹீலியின் அமைப்பு உதவியாளராகவும் இருந்த அதே ஷீலா டோரன்ஸ் உம், அவரது சக சிந்தனையாளரான மார்ட்டின் பூத்தும், முதலாளித்துவ சந்தை மறுஅறிமுகம் செய்யப்படுவதை சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் தடுக்கவியலாமல் இருப்பதில் வெளிப்பட்ட சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேர்க்கர்ஸ் லீக் மேற்கொண்ட முயற்சிகளை கேலிசெய்தனர்.

வேர்க்கர்ஸ் லீக் ஒரு முன்னோக்குகள் தீர்மானத்தில், “ஸ்ராலினிச ஆட்சிகளின் சிதறிக் கலைதலானது பாட்டாளி வர்க்கத்தில் புரட்சிகர நனவு அபிவிருத்தி கண்ட வேகத்தை விடவும் துரித வேகத்தில் நடந்தேறியிருக்கிறது” என்ற உண்மையைக் குறிப்பிட்டிருந்தது. டோரன்ஸ், பூத் இருவரும் அவமதிக்கும் விதத்தில், “தொழிலாள வர்க்கம் அதனை ஒடுக்குபவரை தூக்கியெறிவதற்காக நடத்துகின்ற உண்மையான போராட்டத்திற்கு வெளியில் புரட்சிகர நனவு அபிவிருத்தி காண எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?” என்று கேட்டனர்.

"புரட்சிகர நனவு” என்பது தொழிலாள வர்க்கத்தின் தன்னெழுச்சி இயக்கத்தின் வெளிப்பாட்டுக்கு அதிகமாய் வேறெதுவுமாக இருக்க முடியாது என்ற அவர்களது நிலைப்பாட்டின் இருதயத்தானம் தவறானது என்பதுடன் அது லெனினின் என்ன செய்ய வேண்டும்? (1902) மற்றும் ரஷ்யாவில் 1917 இல் புரட்சி கட்டவிழ்ந்தமை ஆகியவற்றில் மகுடம் கண்ட மார்க்சிசத்தின் வரலாற்று அபிவிருத்தியுடனும் முரண்பட்டதாகும். 12வது நிறைபேரவை அறிக்கை விளக்கியதைப் போல, இதுவே ஒட்டுமொத்தப் புள்ளியாகும்: “அக்டோபர் புரட்சியை உருவாக்கிய அரசியல் நனவின் மட்டம் வெறுமனே 1917 பிப்ரவரிக்கும் அக்டோபருக்கும் இடையில் மட்டும் உருவாக்கப்பட்டதல்ல. முந்தைய 70 ஆண்டுகாலத்தில் ஐரோப்பிய மற்றும் ரஷ்யத் தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக மார்க்சிசத்திற்காக நடத்தப்பட்ட நெடியதொரு போராட்டத்தின் விளைபொருளாக அது இருந்தது.”

1917 வெற்றிகளில் எஞ்சியிருந்தவற்றைப் பாதுகாப்பதற்கு சோவியத் தொழிலாளர்கள் ஏன் எழுந்து நிற்காமல் போயினர் என்பதைப் புரிந்து கொள்ள ஒருவர் விரும்பினால், முந்தைய கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்கள் “வெகுஜனங்களின் அரசியல் நனவின் மீதான இடைவிடாத தாக்குதல்களால் குணாம்சப்பட்டிருந்ததை ஒருவர் கணக்கிலெடுக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் நனவை அபிவிருத்தி செய்வது, ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட வெகுஜன மக்களை ஒரு நனவான வரலாற்று சக்தியாக உருமாற்றுவது ஆகிய மார்க்சிசத்தின் மகத்தான வெற்றிகளை அழிப்பதற்கு ஸ்ராலினிசம் தலைப்பட்டிருந்தது.”

உண்மையில், புரட்சிகரக் காரியாளர்களை ஒட்டுமொத்தமாய் அழித்தமை, சோவியத் ஒன்றியத்திலும் பிறவெங்கிலும் அவர்களை KGB அணுக முடிந்தது. மார்க்சிஸ்டுகளை உடலியல்ரீதியாக அழித்தமை, அதனால் விளைந்த ஆழமான விரக்தி மற்றும் நோக்குநிலை பிறழல், மற்றும் உலகளவில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவு மட்டம் படுபயங்கரமாய் ஒட்டுமொத்தமாய் கீழிறங்கியமை ஆகியவை தான் ஸ்ராலினிசத்தினால் விளைந்த மற்றும் திணிக்கப்பட்ட மாபெரும் தோல்வியாகும்.

மீண்டும், 12வது நிறைபேரவையானது உலக முதலாளித்துவத்தின் அரசியல் ஸ்திரமின்மையையும் உற்பத்தி சக்திகளது உலகளாவிய அபிவிருத்திக்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான மோதலின் பொதுவான தாக்கங்களையும் ஆற்றல்மிக்க விதத்தில் சுட்டிக்காட்டியது. உண்மையில், கிழக்கு ஐரோப்பிய மற்றும் சோவியத் தன்னிறைவு ஆட்சிகளின் மறைவானது அனைத்துலகக் குழுவின் முன்னோக்குக்கான ஒரு ஊர்ஜிதமாக அமைந்திருந்தது. ஸ்ராலினிஸ்டுகளால்-நடத்தப்படும் அரசுகள் தான் உற்பத்தி சக்திகளின் உலகளாவிய ஒருங்கிணைப்புக்கு முதல் பலிகளாக இருந்தன. அந்த அரசுகளின் பொறிவானது போருக்குப் பிந்தைய ஒழுங்கின் முறிவையும் ஒரு புதிய புரட்சிகர நெருக்கடியின் உதயத்தையும் வெளிப்படுத்தியது.

ஆயினும், உலக நெருக்கடியால் முன்நிறுத்தப்படுகின்ற சாத்தியங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான நான்காம் அகிலத்தின் திறன் என்பது ஒரு பெரும் மட்டத்திற்கு, நாம் கடந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த வரலாற்றுக் காலகட்டத்தின் படிப்பினைகளைப் புரிந்துகொள்வதற்கும் உட்கிரகித்துக் கொள்வதற்குமான நமது திறன், மற்றும் அந்த அடிப்படையில் இப்போதைய சூழ்நிலையில் நாம் முகம்கொடுக்கும் கடமைகளை துல்லியமாக வரையறை செய்வது ஆகியவற்றைச் சார்ந்ததாய் இருக்கிறது. தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக மார்க்சிசத்தின் அரசியல் கலாச்சாரத்தை மீள்ஸ்தாபிதம் செய்யும் பொறுப்பு அனைத்துலகக் குழுவால் தலைமை கொடுக்கப்படுகின்ற நான்காம் அகிலத்தின் தோள்களில் விழுகிறது.

SLL-WRP இன் ஜெர்ரி ஹீலி, தொழிலாள வர்க்கத்தின் தன்னெழுச்சியான போராட்டங்களை நோக்கிய ஒரு விமர்சனமற்ற மனோபாவத்தை ஏற்றுக்கொள்ளும் தவறைச் செய்திருந்தார். ஆனால், மார்க்சிசக் கட்சியை ஒரு சக்திவாய்ந்த, இன்னும் சொன்னால், வர்க்கப் போராட்டத்தில் இறுதியாகத் தீர்மானிக்கும் காரணியாக அபிவிருத்தி செய்வது என்பது தொழிலாளர்களின் ஒரு கணிசமான அடுக்கிற்கு, வரலாற்றை நோக்கிய, எல்லாவற்றுக்கும் முதலில் ரஷ்யப் புரட்சி, ஸ்ராலினிசம் மற்றும் நான்காம் அகிலத்திற்கான ட்ரொட்ஸ்கியின் போராட்டம் அத்துடன் சமகால நிகழ்வுகளின் ஒட்டுமொத்த வரலாற்றை நோக்கிய, ஒரு விஞ்ஞானபூர்வ அணுகுமுறையில் அரசியல்ரீதியாக கல்வியூட்டுவதற்கான நமது திறனைச் சார்ந்ததாக இருக்கிறது.

பின்வரும் பத்தி இந்தப் பள்ளியின் கருப்பொருள்களில் ஒன்றையும், அதற்கான காரணத்தையும் சுருங்க விளக்குவதாக இருக்கும்:

வர்க்கப் போராட்டத்தின் தீவிரப்படலானது புரட்சிகர இயக்கத்துக்கான பொதுவான அடித்தளத்தை வழங்குகிறது. ஆயினும், அதன் அபிவிருத்திக்கு அவசியமாயிருக்கிறதான மற்றும் ஒரு உண்மையான புரட்சிகர சூழலுக்கான வரலாற்று நிலைமைகளை தயாரிப்பு செய்கிறதான அரசியல், புத்திஜீவித, மற்றும், கலாச்சார சூழலை அது மட்டுமே நேரடியாகவும் தானாகவும் உருவாக்கி விடுவதில்லை. புரட்சிகர இயக்கத்தின் பொதுவான புறநிலை அடிப்படைக்கும் அது ஒரு மேலாதிக்கமான வரலாற்று சக்தியாக ஆகின்ற சிக்கலான அரசியல், சமூக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிப்போக்குக்கும் இடையிலான இந்த வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ளும்போது மட்டுமே, ஸ்ராலினிசத்திற்கு எதிரான நமது வரலாற்றுப் போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதும் இன்று எம் முன்னால் உள்ள கடமைகளைக் காண்பதும் சாத்தியமாகக் கூடியதாகும்.

கட்சியின் தலையீடு இல்லாமல், சர்வதேச தொழிலாள வர்க்கம் உட்கிரகித்துக் கொள்ளமுடியாத அனுபவங்களான “வெகுஜனங்கள் கடந்து வந்திருக்கும் முந்தைய வரலாற்று அனுபவங்களில் வேர்கொண்ட” குழப்பத்தையும் தவறான நனவையும் வெற்றி காண்பதில் ஒரு இன்றியமையாத கூறாக, வரலாற்றுத் தெளிவுபடுத்தல் மீது 12வது நிறைபேரவை அறிக்கை மிகப்பெரும் அழுத்தம் அளித்தது. மிகப் பரந்த எண்ணிக்கையிலான மக்களை நோக்குநிலை பிறழச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட மிகப்பெரும் பொய்யென்றால் அது ஸ்ராலினிசத்தை மார்க்சிசத்துடன் அடையாளப்படுத்தியதாகும்.

1937 இல் வழக்கு தொடுனர் ஜெனரல் வைஷின்ஸ்கி (நடு), குற்றச்சாட்டுகளை படிக்கிறார்

உண்மையில், ஸ்ராலினிசத்தின் அளவுக்கு, மனிதகுலத்தின் முன்னேற்ற அபிவிருத்தியின் மீது இத்தகையதொரு நாசகரமான தாக்கத்தை வரலாற்றில் வேறெந்த அரசியல் சக்தியும் ஏற்படுத்தியதில்லை. மனித அழிவின் அளவு கிட்டத்தட்ட கற்பனைக்கெட்டாததாகும். “1937க்குள்ளாக ஒரு நாளைக்கு 1,000 கம்யூனிஸ்டுகள் மாஸ்கோவில் சுட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.” அவர்கள் 10-15 நிமிட விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள், வெளியில் கொண்டு செல்லப்படுவார்கள், கழுத்தின் பின்பகுதியில் சுடப்படுவார்கள். அவர்கள் புரட்சிக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த புரட்சியாளர்களாக, சோசலிஸ்டுகளாக, தத்துவாசிரியர்களாக இருந்தார்கள். மார்க்சிசக் கலாச்சாரத்தின் மலர் மட்டுமல்ல அதன் வேர்களும் கூட அழிக்கப்பட்டன.

புத்திஜீவித, அரசியல் மற்றும் கலாச்சார அழிவை குறைமதிப்பீடு செய்வது சாத்தியமில்லாதது. இந்த சேதாரத்தின் பின்விளைவுகளில் இருந்து மீள வேண்டிய தேவையுடன் தான் நாம் இன்றளவும் வாழ்ந்து வருகிறோம்.

ஸ்ராலின், இந்த கோளத்தில் அந்த மிக அபாயகரமான சமூக கூறினை, நனவான தலையை, தொழிலாள வர்க்கத்தின் மூளையை அழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். வாடிம் ரோகோவின் விளங்கப்படுத்தியிருப்பதைப் போல, அவர் அந்த ஆபத்தை நன்கு புரிந்துவைத்திருந்தார்.

ரஷ்யாவில் மார்க்சிசம் ஆழமான வேர்களையும், ஒரு அடர்த்தியான, செறிவான வரலாற்றையும் கொண்டிருந்தது. ரஷ்ய மார்க்சிசத்தின் ஸ்தாபகரான பிளெக்ஹானோவ், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் தீவிரமான தாக்கம் தவிரவும், செர்னிஷேவ்ஸ்கி, ஹேர்ஸன் மற்றும் பெலின்ஸ்கி போன்ற மாபெரும் தீவிரப்பட்ட சிந்தனையாளர்களிடம் இருந்தும் கற்றுக் கொண்டார். 1890களில் இருந்து ரஷ்ய மார்க்சிஸ்டுகள் எழுந்து வந்துகொண்டிருந்த தொழிலாள வர்க்கத்திற்கு கல்வியூட்டும் பணியை மேற்கொண்டனர், இந்த மார்க்சிசத்தால் உருவமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கம் தான் ரஷ்யப் புரட்சியை செய்து முடித்தது. தொழிலாளர்கள் மத்தியில் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி பெற்ற செறிந்த கவுரவம் என்பது அவர்களது தனிமனித நடத்தை அல்லது பிரசங்கத் திறன்களில் இருந்து வரவில்லை. அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அபிவிருத்தியில் ஒன்றை, புரட்சிகரப் போக்கை பிரதிநிதித்துவம் செய்தனர், பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களால் அரசியல் கல்வியூட்டப்பட்டனர், அவர்களின் சிந்தனைகள் மற்றும் வேலைத்திட்டத்தை கவனமாகப் பின்பற்றினர்.

1936 இல் மாஸ்கோ போலி விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகள்

ஸ்ராலினும் அவரது உடந்தையாளர்களும் அவை அனைத்தையும் உருத்தெரியாமல் அழிக்கக் கிளம்பினர். “ஒரு தொழிற்சாலையில் ஒரு ட்ரொட்ஸ்கிச தொழிலாளி கண்டறியப்பட்டால், KGB அவரை மட்டுமல்லாது, அவரது பிரிவில் இருக்கும் மற்ற ஒவ்வொரு தொழிலாளியையும் சேர்த்தே கொன்றது.”

சோவியத் ஆட்சியால் ஒழுங்கமைக்கப்பட்ட பாரிய படுகொலையை ஆவணப்படுத்துகின்றதும் மற்றும் மோசடியான மற்றும் சிடுமூஞ்சித்தனமான விதத்தில் ஸ்ராலினிசத்தை மார்க்சிசமாக அடையாளப்படுத்துவதை மதிப்பிழக்கச் செய்கின்றதுமான பொறுப்பு ICFI இன் மீது சுமத்தப்பட்டது.

மாஸ்கோ விசாரணைகள், அழித்தொழிப்புகள் மற்றும் ட்ரொட்ஸ்கி படுகொலை ஆகியவற்றின் பதிவேடுகளைத் திறப்பது இந்த அம்பலப்படுத்தலின் வெகு மையத்தில் இருந்தாக வேண்டும்... வரலாற்று உண்மையை வெளிக்கொணர்வதற்கான ஒரு பிரச்சாரம் என்று நாம் பேசுகிறபோது, நாம் இதனை குறுகிய அர்த்தத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு மட்டும் பயனளிக்கக் கூடியதாக அல்ல, மாறாக முற்போக்கான மனிதகுலம் அனைத்திற்கும் பயனளிக்கக் கூடிய ஒரு கடமையாகக் காண்கிறோம். லுபியான்காவில் [சிறை] என்ன நடந்தது என்பது போராடும் மனிதகுலம் அனைத்தின் கவலையுமாகும். ஸ்ராலினிசத்தின் குற்றங்களை அம்பலப்படுத்துவதென்பது சமூக மற்றும் அரசியல் சிந்தனையின் அபிவிருத்திக்கு அது இழைத்த சேதத்தில் இருந்து மீள்வதிலான ஒரு அத்தியாவசியமான பகுதியாகும்.

ICFI அந்த முயற்சியை தொய்வில்லாமல் பின்தொடர்ந்தது.

ஸ்ராலினிசத்தினால் கடுமையான சேதத்துக்குள்ளாகியிருந்த சர்வதேச சோசலிசக் கலாச்சாரத்தை மீளக்கட்டியெழுப்புவதைக் குறித்து அந்த அறிக்கை பேசியது. இதுதான் அச்சமயத்தில் நாங்கள் அடிக்கடி உபயோகித்த ஒரு வாசகமாக இருந்தது. அதை இப்போது நாங்கள் அதிகமாகப் பயன்படுத்துவதில்லை என்றால், அதன் காரணம் அந்தக் கருத்து கட்சியின் இரத்தத்திலும் சதையிலும் கலந்து விட்டது என்பதாலேயே என்றே நான் நம்புகிறேன்.

ஆனால் “மார்க்சிசத்தின் அரசியல் கலாச்சாரம்” அல்லது “தொழிலாள வர்க்கத்தின் கலாச்சார அபிவிருத்தி” என்பதில் நாம் அர்த்தப்படுத்துவது என்ன?

சோசலிச கலாச்சாரமானது, தொழிலாளர்கள் முதலாளித்துவ சமூகத்தில் தமது புறநிலையான இடத்தையும் ஒரு சோசலிசப் புரட்சிக்கான சக்தியாக தமது கூட்டான பாத்திரத்தையும் உணர்ந்து கொள்ள உதவுவதற்கும் மற்றும் அவர்களை சுரண்டலுக்கான வெறும் இரையாக இருக்கும் நிலையில் இருந்து வரலாற்றைப் படைப்பவர்களாக மனிதகுலத்தை விடுதலை செய்பவர்களாக உருமாற்றுவதற்குமான நனவான நோக்கத்துடன் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும், கட்டப்பட்டிருக்கும், எழுதப்பட்டிருக்கும், உட்கிரகிக்கப்பட்டிருக்கும் மற்றும் சாதிக்கப்பட்டிருக்கும் அனைத்துமாகும்.

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதலாக சோசலிச இயக்கமானது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் சமூக வேலைத்திட்டத்தை அபிவிருத்திசெய்வதற்கும் விரிவுபடுத்துவதற்கும் பாடுபட்டு வந்திருக்கிறது. அந்தப் போராட்டத்தில் உருவாக்கப்பட்ட அத்தனை எழுத்துக்கள், நடைமுறைகள் மற்றும் ஸ்தாபனங்களும் சோசலிசக் கலாச்சாரத்தின் கூறுகளைக் கொண்டதாகும். அகுஸ்ட் பேபல், பெண்களும் சோசலிசமும் என்ற நூலின் நிறைவில், “சோசலிச இயக்கமானது, குறிப்பாக அதன் இலக்கியம், அதன் செய்தித்தாள்கள், அதன் சமூகங்கள் மற்றும் கூட்டங்கள், அதன் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் பொதுவாழ்க்கையின் அத்தனை துறைகளிலும் தொடர்ச்சியாக பயிலப்படும் விமர்சனம் ஆகியவற்றின் மூலமாக, வெகுஜனங்களின் புத்திஜீவித மட்டத்தைக் கணிசமாக உயர்த்தியிருக்கிறது” என்று எழுதினார். ஜேர்மனியில் SPD இன் நடவடிக்கைகள் முரண்பாடுகளுள் சிக்கியிருந்தது என்பதை நாம் நன்கு அறிவோம், ஆனாலும் பேபல் கூறியது சரியென்பதில் எந்த சந்தேகமுமில்லை.

மூலதனம், கார்ல் மார்க்ஸ் (1867)

சோசலிச கலாச்சாரத்தின் உச்சிப்புள்ளியில் மார்க்சின் படைப்பான எல்லாவற்றினும், முதலாளித்துவ சமூகத்தின் இயக்க விதிகளது கூறாய்வான 'மூலதனம்’ நிற்கின்றது. அத்துடன் மெய்யியல் மற்றும் பொருளாதாரத்தில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் பிற எழுத்துக்களும் இருக்கின்றன: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, கூலி உழைப்பும் மூலதனமும், கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும், டூரிங்கிற்கு மறுப்பு, 1848 புரட்சிகள் மற்றும் பாரிஸ் கம்யூன் குறித்த வரலாற்று எழுத்துக்கள். லெனின் எழுதிய பல பிரதியிடமுடியாத, விஞ்ஞானபூர்வ எழுத்துக்கள் இருக்கின்றன, ட்ரொட்ஸ்கியின் பிரம்மாண்டமான, நம்பமுடியாத அளவுக்கு சமகாலத்துக்குரியதாக இருக்கும் எழுத்துக்கள் இருக்கின்றன, மற்றும் ஜேம்ஸ் பி.கனன் போன்ற ட்ரொட்ஸ்கிச தலைவர்களின் எழுத்துக்கள் இருக்கின்றன, மற்றும் அனைத்துலகக் குழுவினால் மிக சமீபத்தில் பிரசுரம் செய்யப்பட்டிருக்கும் நாம் காக்கும் மரபியம், முடிவுறாத இருபதாம் நூற்றாண்டு, ரோகோவினின் எழுத்துக்கள், வோரோன்ஸ்கியின் கட்டுரைகள் ஆகியவை இருக்கின்றன. இந்த இயக்கத்தின் ஆவணங்கள், உலக சோசலிச வலைத் தளத்திலான விடயங்கள் இருக்கின்றன. இது ஒரு மிகப் பரந்த அரசியல்-கலாச்சார கட்டமைப்பும் மற்றும் பொதுநிபந்தனையுமாகும். இந்தப் பள்ளி மற்றும் இதனைப் போன்ற ஏனைய நடவடிக்கைகளும் சோசலிசக் கலாச்சாரத்தின் அத்தியாவசியக் கூறுகளாய் இருக்கின்றன.

சோசலிசக் கலாச்சாரத்தின் இன்னொரு கூறு கலைக் கலாச்சாரத்தை நோக்கிய அதன் மனோபாவமும் உறவுமாகும். The Sky Between the Leaves க்கான அறிமுகத்திலான இந்த பத்திகளுக்கு 12வது நிறைபேரவை அறிக்கை ஆதர்சமளித்தது:

சோசலிச நனவின் வளர்ச்சியானது வெறுமனே குறிப்பிட்ட பொருளாதார மற்றும் அரசியல் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைபொருள் மட்டுமன்று. கலை மற்றும் கலாச்சார அபிவிருத்தி —எழுத்தாளர்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்களது (பெரும்பாலும், ஆயினும் எப்போதும் அல்ல, சோசலிசத்திற்கு சார்புடையோர்) படைப்புக்கள் மற்றும் அவர்களது முயற்சிகளை மதிப்பீடு செய்கின்ற மார்க்சிச விமர்சகர்கள் மூலமாக— தொழிலாள வர்க்கத்தின் கண்ணோட்டத்திற்கு உருக்கொடுப்பதிலும் விசாலப்படுத்துவதிலும், முதலாளித்துவத்தின் அநீதிகள் குறித்த அதன் விழிப்புணர்வைக் கூர்மைப்படுத்துவதிலும், தொழிலாளர்களின் ஆவேசம் மற்றும் தியாகத்திற்கான விருப்பத்தை வலுப்படுத்துவது மற்றும் சுத்திகரிப்பதிலும், மற்றும் சோசலிசத்தை அடைவதற்கான மற்றும் உண்மையான சமூக சமத்துவம் மற்றும் ஒற்றுமையின் அடிப்படையில் ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான சாத்தியத்தில் அவர்களது நம்பிக்கை மற்றும் மனத்திடத்தை மேலும் பற்றிநிற்பவர்களாக அவர்களை ஆக்குவதிலும் ஒரு தீவிரமான பாத்திரத்தை வகித்தது.

சோசலிசத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு கணிசமான பகுதியின் மத்தியில் ஒரு கலாச்சார விழிப்பூட்டல் அவசியமாயிருந்தது... ஆயினும், இந்த தட்டியெழுப்பலானது, புரட்சிகரக் கட்சியின் முயற்சிகளில் இருந்து சுயாதீனப்பட்டு நிகழ்ந்து விடவில்லை. மாறாக, தொழிலாள வர்க்கத்தின் மிக நனவான பகுதியான கட்சிதான், இந்த அபிவிருத்திக்கான போராட்டத்திற்கு தலைமை கொடுக்கிறது. நிலவும் சமூக உறவுகள் மற்றும் அன்றாட அரசியல் அனுமானங்கள் மற்றும் கருத்தாக்கங்களை — அவை எழுகின்ற மற்றும் அவை முதலாளித்துவ சமூகத்தில் “தன்னியல்பான” வெளிப்பாட்டைக் காண்கின்ற வேளையில்— நோக்கிய ஒரு விமர்சனபூர்வ புரட்சிகர மனோபாவம் சோசலிச நனவின் புத்திஜீவித சாரமாக இருக்கிறது. (The Sky Between the Leaves க்கான அறிமுகம்)

இது, முதலாளித்துவத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தின் பொதுவான அரசியல்-கலாச்சார அபிவிருத்திக்கான போராட்டத்தின் உள்ளடக்கத்தில் பார்க்கப்பட வேண்டுமே தவிர, இப்போதைய சமூகத்தில் ஒரு கலை-கலாச்சார புகலிடத்தை உருவாக்குவதற்கான ஏதோ முயற்சியாக பார்க்கப்படக் கூடாது. சமூகம் தன்னை கலாச்சார அணுகலுக்கு அனுமதிக்க மறுக்கிறது என்ற காரணத்தால் தான் முதலாளித்துவ சமூகத்தை தூக்கிவீச தொழிலாள வர்க்கம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது. தொழிலாள வர்க்கம் பொருளாதாரரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கிறது —ட்ரொட்ஸ்கி இலக்கியமும் புரட்சியும் இல் விளக்கினார்— அதன் “சுய-நிர்ணயத்தின் ஒட்டுமொத்த நிகழ்ச்சிப்போக்கும்... ஒரு தீவிர ஒருதரப்பான, புரட்சிகர மற்றும் அரசியல் குணாம்சத்தை ஏற்கிறது, அதன் மிக உயர்ந்த வெளிப்பாட்டை” புரட்சிகரக் கட்சியில் எட்டுகிறது. இன்னுமொரு சந்தர்ப்பத்தில் ட்ரொட்ஸ்கி ஒரு பிரெஞ்சு எழுத்தாளருக்கு விளக்கினார், “முதலாளித்துவத்திற்குள்ளாக ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதல்ல பாட்டாளி வர்க்கத்தின் கடமை, மாறாக ஒரு புதிய கலாச்சாரத்திற்காக முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதாகும்”.

எங்களது உறுப்பினர்களுக்கும், தொழிலாள வர்க்கத்தின் மிக முன்னேறிய பிரிவினருக்கும், மற்றும் உலகின் ஒவ்வொரு பகுதியிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் இன்னும் இன்னும் விரிந்த பகுதிகளுக்கும் அரசியல் மற்றும் வரலாற்றுக் கல்வியூட்டல் மற்றும் தயாரிப்பு செய்வதில் தான் எங்களது முழுக்கவனமும் இருக்கிறது, ஏனென்றால் அதுவே இந்தக் கட்சியை ஒரு புரட்சிகரக் கட்சியாக அபிவிருத்தி செய்வதற்கு இன்றியமையாததாக இருப்பதாகும்.

12வது நிறைபேரவை வாதிட்டதைப் போல, இந்த இயக்கம் மட்டுமே இந்த பணியை முன்னெடுப்பதற்கு அரசியல் இலட்சியப்பார்வையும் அறநெறித் தகுதியையும் கொண்டிருக்கிறது. வரலாற்று உண்மையை ஸ்தாபிப்பதிலும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தில் மார்க்சிசத்தின் மறுமலர்ச்சிக்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதிலும் “எந்தவொரு முயற்சியையும் விட்டுவிடப் போவதில்லை” என்ற இந்த இயக்கம் கொண்டிருக்கின்ற தீர்க்கமான உறுதியை, இந்த தொடர் வகுப்புகளும், இந்த வாரத்தில் நாம் மேற்கொள்கின்ற கலந்துரையாடல்களும், விளங்கப்படுத்துகின்றன.

Loading