151. ICFI இன் மூன்றாம் மாநாட்டிற்கு பின்னர் - அதிலும் குறிப்பாக 1968 மே-ஜூன் வரையான நிகழ்வுகளுக்கு பின்னர் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு பகுதிகள் இரண்டிலும் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது தீவிர அரசியல் மோதலுக்கு இட்டுச் சென்றது. பிரிட்டிஷ் தரப்பு OCI இன் மையவாத நோக்குநிலை குறித்த சரியான விமர்சனங்களை மேற்கொண்டாலும், சோசலிச தொழிலாளர் கழகத்திற்குள்ளேயே கூட அரசியல் வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்திருந்தன. ICFI செயலாளராக இருந்த கிளீவ் சுலோட்டர் நான்காம் அகிலத்தின் "மறுகட்டுமானத்திற்கான" OCI இன் அழைப்பு மீது அனுதாபத்தினை வெளிப்படுத்தியிருந்தார் என்பது அறியப்பட்டிருந்தாலும், அந்த பிரச்சினை தலைமைக்குள் பின்தொடரப்படவில்லை. மாவோவின் "கலாச்சாரப் புரட்சி" மற்றும் வியட்நாமில் தேசிய விடுதலை முன்னணியின் கொள்கைகள் குறித்த SLL இன் மற்றுமொரு முன்னணித் தலைவரான மைக்கல் பண்டாவின் விமர்சனமற்ற மனப்போக்கு குறித்து இதே போன்றதொரு நழுவல் நிலை மனப்போக்கு தான் எடுக்கப்பட்டது. இந்த முக்கிய விஷயங்கள் மீது திறந்த விவாதத்தில் ஈடுபடுவதற்கு SLL தலைமை காட்டிய தயக்கம் ஹீலியின் பக்கத்தில், தனது சொந்த அமைப்புக்குள்ளான அரசியல் மோதல் பிரிட்டிஷ் பகுதியால் மேற்கொள்ளப்பட்ட நடைமுறை வேலை மற்றும் அமைப்பு ரீதியான முன்னேற்றங்களை பலவீனப்படுத்தலாம் என்கின்ற கவலையை பிரதிபலிப்பதாக இருந்தது.
152. ஒரு அரசியல் வேலைத்திட்ட உருவாக்கத்திற்கு அத்தியாவசியமானதான, முன்னோக்குகள் குறித்த முக்கியமான பிரச்சனைகள் மீதான வெளிப்படையான ஆய்வை தடுத்தது- சோசலிச தொழிலாளர் கழகத்திற்குள்ளாக ஒரு விநோதமான தத்துவார்த்த வடிவத்தை எடுத்தது. 1970-71 இல் OCI உடனான வேறுபாடுகள் தீவிரமடைந்ததால், கலந்துரையாடலில் இருக்கும் அரசியல் பிரச்சினைகள் வெறுமனே இரண்டாம் நிலையான, இன்னும் அத்தியாவசியமல்லாததான, மெய்யியலின் (Philosophy) மீதான முரண்பாடுகளின் வெளிப்பாடுகளே என்பது போல் வலியுறுத்த OCI மேலும் மேலும் தலைப்பட்டது. தத்துவார்த்த வழிமுறை என்பது அரசியல் ஆய்வுப் பயிற்சியின் மூலமே வெளிப்படுத்தப்படுகிறது என்கின்ற முக்கியமான உண்மையானது, அரசியல் விஷயங்கள் பற்றிய ஸ்தூலமான ஆய்வினை முன்னை விட அருவமான தத்துவ ஞான நுண்ணியல் கலந்துரையாடலாக கலைத்து விடுவதை நியாயப்படுத்துவதற்கு மட்டும் என ஒரு வழிப் பாதையில் வெளிக்கொணரப்பட்டது. ளிசிமி பிழையாக, இயங்கியல் சடவாதம் ஒரு "அறிவுனுடைய தத்துவம்" அல்ல என்று உறுதிபடக் கூறியபோதும், அதிகரித்த வகையில் பிரெஞ்சு அமைப்பின் வெளிப்படையான மத்தியவாத அரசியல் மீதான ஒரு ஆய்வில் இருந்து கவனத்தை திருப்ப அது உடனே பற்றிக் கொள்ளப்பட்டது. பேர்ன்ஹாம் மற்றும் சாக்ட்மனுக்கு எதிரான 1939-40 போராட்டத்தில் ட்ரொட்ஸ்கி மேற்கொண்ட அணுகுமுறையான இயங்கியல் சடவாத வழிமுறையின் முக்கியத்துவமும் முறையான பயன்பாடும் தெளிவாகவும் துல்லியமாகவும் அரசியல் முன்னோக்கு சம்பந்தமான பெரும் பிரச்சனைகளுடன்] தொடர்புபடுத்தப்பட்டது என்பதற்கு மாறானதாக ஹீலியும் சுலோட்டரும் இயங்கியல் சம்பந்தமான கலந்துரையாடலில் அரசியல் பிரச்சனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இயங்கியலை மிதமிஞ்சியவகையில் தூக்கிப்பிடிக்க முன்வந்தனர்.
153. 1971 வசந்தகாலத்தில் SLL வெளிப்படையாக நான்காம் அகிலத்தில் ஒரு பிளவு குறித்து அறிவித்தது. இந்த பிளவினை உருவாக்கிய அரசியல் வேறுபாடுகள் தெளிவுபடுத்தப்படாமலேயே விடப்பட்டன. தீவிரமடையும் முதலாளித்துவ நெருக்கடி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அதிகரிக்கும் போராட்டங்கள் இவற்றிலிருந்து எழும் புரட்சிகர மூலோபாயங்களுடனான பிரச்சினைகளுடன் பிணைந்த, எண்ணிலடங்கா முக்கிய அரசியல் பிரச்சனைகள் இருந்தாலும், இந்த பிளவு அமைப்புரீதியான பிரச்சனைகளுடன் தொடர்பில்லாதது என்றும் "இது நான்காம் அகிலத்தை எப்படி கட்டுவது என்பதன் தந்திரோபாய அம்சங்கள் குறித்ததல்ல.... பிளவானது டஜன்கணக்கான அமைப்பு பற்றிய விரிவான புள்ளிகள் குறித்தோ, அல்லது பல்வேறு பிரச்சனை மீதான அரசியல் நிலைப்பாடுகள் குறித்தோவான ஒரு பிரச்சனை அல்ல" என்றும் 1972 மார்ச் 1 ம் தேதி வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் SLL குறிப்பிட்டு அறிவித்தது. மாறாக, இது நான்காம் அகிலத்தில் -மார்க்சிச தத்துவத்தின் அடித்தளங்களுக்கு செல்லும் ஒரு அரசியல் பிளவாகும் என்று SLL அறுதியிட்டது.[86]
ஆனால் கருத்து வேறுபாட்டில் இருக்கும் உண்மையான அரசியல் விடயங்களின் மீதான அவசியமான விவரிப்பு இல்லாமல், "மார்க்சிச தத்துவத்திற்கு" அழைப்புவிடுவது என்பது தெளிவற்ற சொல்லாடல் பயிற்சி என்பதை விட வேறெதுவுமில்லை. உண்மையில், SLL இப்போது கூறிக் கொண்டது, தான் "பிரிட்டனில் புரட்சிகர கட்டுவதன் அனுபவத்திலிருந்து,கருத்து முதல்வாத சிந்தனைக்கு எதிரான முழுமையான கஸ்ரமான போராட்டம் வேலைத்திட்டம் சம்பந்தமான,கொள்கை சம்பந்தமான பிரச்சனையிலும் மேலாக ஆழமாக இருக்க வேண்டும்" என்ற பாடத்தை உண்மையில் பெற்றுக்கொண்டதாக சோசலிச தொழிலாளர் கழகம் பிரகடனம் செய்தது.[87] இந்த அறிக்கையானது "வேலைத்திட்டத்தின் முக்கியத்துவம் கட்சியின் முக்கியத்துவம்" என்றும் இந்த வேலைத்திட்டம் "நிகழ்வுகள், பணிகள் மீதான ஒரு பொதுவான புரிதலை"க்[88] கொண்டிருக்கிறது எனவும் கூறிய ட்ரொட்ஸ்கி உடன் நேரடியாகவே முரண்படுகின்றது... இப்போது SLL ஒரு தெளிவற்ற உருவாக்கமான "கருத்துமுதல்வாத சிந்தனை வழிகளுக்கு எதிரான போராட்டமானது" வேலைத்திட்ட உடன்பாட்டை விடவும் மிகவும் முக்கியம் என்று கூறிக் கொண்டிருந்தது- மேலும், தனது வேலையின் அடித்தளத்தை ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் பப்லோவாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் போராட்டத்தின் படிப்பினைகளில் இருந்து கொள்வதற்கு பதிலாக, "பிரிட்டனில் புரட்சிகர கட்சியைக் கட்டுவதன்" அனுபவத்தின்" மேல் என்று உறுதிபடத் தெரிவித்ததானது அதன் அரசியல் அச்சில் -சர்வதேசியவாதத்தில் இருந்து தேசியவாதத்திற்கு - ஒரு குழப்பமிக்க நகர்வை வெளிப்படுத்தியது.
154. OCI உடனான பிளவுக்கு பின்னிருந்த அரசியல் பிரச்சினைகளை தெளிவுபடுத்த தோல்வியுற்றதானது அனைத்துலகக் குழுவின் வேலையை துல்லியமாக, உலக முதலாளித்துவத்தின் ஆழமுற்றிருந்த நெருக்கடியானது சாத்தியமுள்ள மிகப்பெரும் அளவில் வேலைத்திட்ட தெளிவைக் கோரியதொரு புள்ளியில் பலவீனப்படுத்தியது. சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலைமை எதிர்கொண்டிருந்த முதன்மையான பணியானது OCI இன் வேலைத்திட்டம், நடைமுறை, மற்றும் சர்வதேச நோக்குநிலையில் மத்தியவாத நகர்வின் அரசியல் தாக்கங்களை வரைவதாக இருந்தது. அனைத்துலகக் குழுவில் புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் இது மிகப்பெரும் முக்கியத்துவம் கொண்டதாக இருந்தது. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது இலங்கை பகுதியாக 1968 இல் ஸ்தாபிக்கப்பட்டது. The Bund Sozialistische Arbeiter 1971ல் ஜேர்மன் பகுதியாக ஸ்தாபிக்கப்பட்டது. சோசலிச தொழிலாளர் கழகம் ஆஸ்திரேலிய பகுதியாக 1972ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. கிரீஸில், உறுப்பினர்கள் ICFI மற்றும் OCI ஆதரவாளர்களுக்கு இடையே பிளவுபட்டதொரு சூழல்களின் கீழ் 1972ம் ஆண்டு ஒரு புதிய பகுதியின் ஸ்தாபிதம் நிகழ்ந்தது.
155. 1960 களின் பின்பகுதிகள் மற்றும் 1970 களின் ஆரம்பத்தில், பிரெஞ்சு சோசலிசக் கட்சியின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்ற திரைக்குப் பின்னாலான அரசியல் தந்திரங்களில் OCI கனமான பங்கேற்பு கொண்டிருந்தது என்பது இப்போது வெளிப்படையாக அறியப்பட்ட ஒன்றாகியிருக்கிறது. ஒரு முழுமையான சந்தர்ப்பவாத அடிப்படையில் மித்திரோனின் தேர்தல் இலட்சியங்களுக்கான ஒரு கருவியாக சோசலிஸ்ட் கட்சி (PS) உருவாக்கப்பட்டிருந்தபோது OCI இன் உறுப்பினர்கள் பிரான்சுவா மித்திரோன் உடன் நெருக்கமாக வேலை செய்தனர். SLL உறுப்பினர்களில் ஒருவரான லியோனல் ஜோஸ்பன் மித்திரோனின் ஒரு மதிப்புமிகுந்த அரசியல் உதவியாளராக மாறினார், சோசலிஸ்ட் கட்சியின் தலைமைகளுக்குள்ளாக துரிதமாக முன்னேறினார், இறுதியாக பிரதமர் பதவியையும் பெற்று விட்டார். திரும்பிப் பார்த்தால், SLL இன் ஒரு வெளிப்படையான அரசியல் போராட்டமானது OCI இன் சந்தர்ப்பவாத சீரழிவையும், பிரெஞ்சு அரசின் ஒரு அரசியல் கருவியாக அது மாறியதையும் தடுத்து நிறுத்தியிருக்கக்கூடுமா என்பதை தீர்மானிப்பது சாத்தியமில்லாதது. ஆனால் இத்தகையதொரு போராட்டம் அரசியல் பிரச்சினைகளை தெளிவுபடுத்தியிருக்கும், அத்துடன் தன்னுடைய சொந்த மட்டங்களுக்குள்ளாகவே சந்தர்ப்பவாத போக்குகளின் அபிவிருத்தியால் முன்நிறுத்தப்பட்ட வளரும் அபாயங்கள் குறித்து SLL ஐ எச்சரித்திருக்கக் கூடும்.