மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அகாடமி விருது பெற்ற ஓபன்ஹைமர் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடனான உரையாடலை இயற்பியலாளர் நினைவு கூர்ந்தார். அந்த நேரத்தில் அவர்களின் தத்துவார்த்த வேலை “உலகம் முழுவதையும் அழிக்கக்கூடிய” ஒரு சங்கிலி தொடரான எதிர்வினையைத் தூண்டியிருக்கலாம் என்று அவர்கள் கருதினர். அணு ஆயுதப் போரின் உடனடி ஆபத்தால் திகிலடைந்த ஓபன்ஹைமர், “நாங்கள் அதைச் செய்துவிட்டோம் என்று நான் நம்புகிறேன்” என்று ஐன்ஸ்டீனிடம் கூறினார்.
பின்னர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டு வெடிப்புகள் பூகோள கிரகத்தை மூழ்கடிக்கும் காட்சிகளுடன் திரைப்படம் முடிகிறது.
ராபர்ட் ஓபன்ஹைமரின் திகிலூட்டும் பார்வை இப்போது யதார்த்தமாக மாற அச்சுறுத்துகிறது. யப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் பொசுக்கப்பட்டு ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்குப் பிறகு, வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஏகாதிபத்திய மனநோயாளிகளும், ஐரோப்பாவில் உள்ள அவர்களது நட்பு நாடுகளும் ரஷ்யாவுடனான மோதலை பொறுப்பற்ற முறையில் தீவிரப்படுத்தி, அணுவாயுத வெடிப்பு அச்சுறுத்தலால் கட்டுப்படுத்தப்பட மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
பைடென் நிர்வாகமும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் உக்ரேனில் அணு ஆயுதங்களுடன் ரஷ்யாவின் ரவுலட்டை விளையாடும்போது, (ஒரே ஒரு குண்டு மட்டுமே ஏற்றப்பட்ட ரிவால்வரின் சிலிண்டரை சுழற்றி, தலையை நோக்கி சுடும் விளையாட்டு) அவர்கள் 75 ஆண்டுகால சியோனிச அடக்குமுறைக்கு பாலஸ்தீனிய எதிர்ப்பின் “பிரச்சினைக்கு” இஸ்ரேலின் இனப்படுகொலை “இறுதி தீர்வுக்கு” பணம் மற்றும் ஆயுதங்களை வழங்கி ஆதரவளிக்கின்றனர். இஸ்ரேலின் இராணுவப் படைகளால் 30,000க்கும் மேற்பட்ட காஸா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
காஸா இனப்படுகொலையும், மூன்றாவது அணுவாயுத உலகப் போரை நோக்கிய நேட்டோவின் இடைவிடாத விரிவாக்கமும் முதலாளித்துவ அமைப்பு காட்டுமிராண்டித்தனத்திற்குள் இறங்கியதன் மிகக் கொடூரமான வெளிப்பாடுகள் மட்டுமே ஆகும். இன்றைய முதலாளித்துவம் மற்றும் அதன் ஆளும் வர்க்கத்தின் வரையறுக்கும் குணாதிசயங்கள், தீராத பேராசை, மிருகத்தனம் ஆகியவற்றை மனிதகுலத்தின் தலைவிதி மற்றும் பூமியின் எதிர்காலம் மீதான குற்றவியல் அலட்சியத்தை காட்டுகின்றன. பெரு நிறுவன லாபம் மற்றும் தனிப்பட்ட செல்வக் குவிப்பு ஆகியவற்றின் வழியில் எதுவும் தடையாக இருக்க அனுமதிக்கப்படாது.
கோவிட் பரவுவதைத் தடுக்க நன்கு அறியப்பட்ட மற்றும் பயனுள்ள பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்த மறுத்து, அவை இலாப வரம்பைக் குறைக்கும் என்பதால், முதலாளித்துவ அரசாங்கங்கள் உலகளவில் 28 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் மரணத்தை ஏற்றுக்கொண்டன. அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மரணமடைந்தனர். தொற்றுநோயைப் புறக்கணிப்பதன் மூலம் அதை நிறுத்த முடியும் என்பது போல, பைடென் நிர்வாகம் கடந்த காலத்தை மட்டுமே கோவிட் பற்றி பேசுகிறது. ஆனால், வைரஸ் நம்மை புறக்கணிப்பதில்லை. மில்லியன் கணக்கான மக்கள் நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கானோர் தொற்றுநோயால் இறக்கின்றனர்.
காட்டுமிராண்டித்தனத்தில் இறங்குவது ஜனநாயகத்துக்குப் பொருந்தாதது. அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் பாசிசப் போக்குகள் எழுகின்றன. வருங்கால ஹிட்லர்கள் தங்களின் நேரம் வர இருக்கிறது என்று நம்புகிறார்கள். டொனால்ட் டிரம்ப் இந்த உலகளாவிய செயல்முறையின் அமெரிக்காவில் கோரமான வெளிப்பாடு ஆகும்.
ஜனநாயகத்தை காப்பாற்ற வருகின்ற நவம்பரில் பைடென் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று அவர் கூறுகிறார். ஆனால், பைடெனின் தள்ளாட்டம் ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையில் நிற்கிறது என்றால், ஜனநாயகம் அதன் கடைசிக் கால்களில் உள்ளது என்று அர்த்தமாகும். எவ்வாறாயினும், பைடென் நிர்வாகத்தின் மைய இலக்கு, ரஷ்யாவுடனான போரைத் தீவிரப்படுத்துவதற்கும், சீனாவுடனான மோதலை தீவிரப்படுத்துவதற்கும் சமூகத்தினை இராணுவமயமாக்குவது தேவையாகும் - அதாவது காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வாதிகார வடிவங்களைத் திணிக்க வேண்டும்.
ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய பாரிய இயக்கத்தை அபிவிருத்தி செய்வதைத் தவிர, சமூகம் மற்றும் அரசியல் காட்டுமிராண்டித்தனத்திற்குள் அது இறங்குவதை எதுவும் தடுக்க முடியாது.
மனிதகுலத்தின் எதிர்காலம் தங்கியிருக்கும் இந்த வரலாற்று செயல்முறையில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவற்றின் இணையக் குரலான உலக சோசலிச வலைத் தளம் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது.
உண்மையான சோசலிச முன்னோக்குடன், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் நுழையும் போது, தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்க போராடும் ஒரே வெளியீடு உலக சோசலிச வலைத் தளம் ஆகும்.
உலக சோசலிச வலைத் தளம் தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையைக் கூறுகிறது. முதலாளித்துவத்தை சீர்திருத்த முடியாது. இன்னும் நியாயமான மற்றும் மனிதாபிமானக் கொள்கைகளை பின்பற்றுமாறு நாம் அதற்கு அழுத்தம் கொடுக்க முடியாது. இலாப அமைப்புமுறை தொழிலாள வர்க்கத்துடன் சமரசம் செய்து கொள்ளாது. எனவே, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்துடன் சமரசம் செய்து கொள்ள முடியாது.
வரவிருக்கும் மாதங்களில், முதலாளித்துவ ஊடகங்கள் ஏகாதிபத்திய போர் மற்றும் இனப்படுகொலை குற்றங்களை நியாயப்படுத்துவதற்கு பொய்களை பரப்பி, கவனச்சிதறல்களை உருவாக்கி, பிரச்சாரத்தை பரப்பி, தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும்.
பெரும் நிறுவனங்களால்-கட்டுப்படுத்தப்படும் ஊடகங்கள், வரம்பற்ற ஆதாரங்களுடன், பைடென் மற்றும் டிரம்பிற்கு மாற்று இல்லை என்று பாசாங்கு செய்யும். இது மூன்றாம் இடத்தில் உள்ள வேட்பாளர்கள் பற்றிய அறிக்கைகளைக் குறைக்கும், மேலும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளரான ஜோசப் கிஷோரின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் நிச்சயமாக நசுக்க முற்படும். பத்திரிகைகளில் வந்துள்ள அறிக்கைகளின்படி, ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு, மூன்றாம் இடத்திலுள்ள வேட்பாளர்களுக்கு எதிராக “முழுமையான போரை” நடத்தத் திட்டமிட்டுள்ளது.
அவர்கள் திட்டமிடும் இந்தப் போரில், மூன்றாம் இடத்திலுள்ள வேட்பாளர்கள், தமக்கு தேவையான நிதி திரட்டுவதைத் தடுக்கும் முறையான மற்றும் இரக்கமற்ற முயற்சிகளும் இதில் அடங்கும்.
மூன்றாவது இடத்திலுள்ள கட்சிகள் மீதான தாக்குதலில் மையப் பாத்திரம் வகிக்கும் ஒரு முன்னாள் ஜனநாயகக் கட்சி செனட்டர், நிறுவனமயமாக்கப்பட்ட இரு கட்சிகளின் (ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சி) பெருநிறுவன சர்வாதிகாரத்திற்கு வெளியில் இருந்து வரும் எதிர்ப்பை நசுக்க, பைடெனின் பிரச்சாரம் “பணத்தை நிறைய செலவழிக்கப் போகிறது” என்று கூறியுள்ளார்.
அரசியல் எதிர்ப்பை நசுக்க அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்களின் முயற்சிகளின் இலக்காக உலக சோசலிச வலைத் தளம் (இது பல ஆண்டுகளாக நடக்கிறது) இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் தணிக்கையை எதிர்த்துப் போராடப் பழகிவிட்டோம்.
ஆனால் இந்த தேர்தல் ஆண்டு, இவ்வளவு ஆபத்தில் இருக்கும் போது, உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களின் ஆதரவு முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானதாகும். WSWS இன் இன்றியமையாத மற்றும் நிகரற்ற பகுப்பாய்வு தொடர வேண்டும். நமது எழுத்தாளர்கள் உலக மற்றும் உள்நாட்டு நிகழ்வுகளை அதில் வெளிக்கொணரவும் எழுதவும் முடியும். உலக சோசலிச வலைத் தளம் காஸா படுகொலை, உக்ரேனில் அதிகரித்து வரும் இரத்தக்களரி மற்றும் பெருந்தொற்றுநோயின் தற்போதைய சமூகப் பேரழிவு ஆகியவற்றிற்கு வெகுஜன எதிர்ப்பைத் தொடர்ந்து அணிதிரட்ட முடியும்.
உலக சோசலிச வலைத் தளம் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு தலைமைத்துவம் வழங்கும் நிலையில் இருக்க வேண்டும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் துரோகத்தை அம்பலப்படுத்த வேண்டும் மற்றும் சர்வதேச சாமானிய தொழிலாளர் கூட்டணியின் குழுக்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
இரண்டு முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் விதித்துள்ள அடக்குமுறைக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், உலக சோசலிச வலைத் தளம் 2024 பிரச்சாரத்தின் ஒரு சோசலிச முன்னோக்கில் பகுப்பாய்வுகளை வழங்க வேண்டும். அது ட்ரம்ப் மற்றும் பைடெனின் பிற்போக்குத்தனமான நிகழ்ச்சி நிரல்களை அம்பலப்படுத்துவதோடு, மேலும் ஜோ கிஷோர் மற்றும் முதலாளித்துவ ஊடகங்களால் தடுக்கப்பட்ட இதர மூன்றாம் இடத்திலுள்ள வேட்பாளர்களின் பிரச்சாரம், தகுந்த பத்திரிகை செய்திகளைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
அதனால்தான் உலக சோசலிச வலைத் தளத்திற்கு இன்று கணிசமான நன்கொடையை அளிக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். போராட்டமும் தியாகமும் இல்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த எதையும் சாதிக்க முடியாது. முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது, காட்டுமிராண்டித்தனத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது மற்றும் மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதை விட முக்கியமானது என்ன?
wsws.org/donate என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களால் முடிந்த மிகப்பெரிய பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.