முன்னோக்கு

தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புதல்

பகுதி இரண்டு

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கோவிட்-19 பெருந்தொற்று நோய் மற்றும் வெகுஜன இறப்புக்களையும் துயரங்களையும் இயல்பாக்குதல்

1. புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், கோவிட் -19 பெருந்தொற்று நோயானது உலக மக்களின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, உலகமானது வெகுஜன நோய்த்தொற்று, பலவீனம் மற்றும் இறப்பு ஆகியவற்றின் மற்றொரு அலையைத் தாங்கிக் கொண்டிருக்கிறது, இது டிசம்பர் மாதத்தில் உலகளவில் வேகமாக ஆதிக்கம் செலுத்திய, அதிக உருமாறிய, அதிக தொற்று மற்றும் நோயெதிர்ப்பு எதிரான JN.1 திரிபு வகையால் எரியூட்டப்படுகிறது. 'பெருந்தொற்று நோய் முடிந்துவிட்டது' என்று 2022 செப்டம்பரில் ஜோ பைடெனின் அறிவிப்பால் எடுத்துக்காட்டப்பட்ட ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கத்தின் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் பொய்கள் வெறும் பிரச்சாரம் என்று அம்பலப்படுத்தப்படுகின்றன.

2. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) அமைப்பு வெளியிட்டுள்ள மிக சமீபத்திய கழிவுநீர் தரவுகளின்படி - இப்போது வைரஸ் பரவுவதைத் தடமறிவதற்கான ஒரே நம்பகமான அளவீடாக இருக்கும் அனைத்து பெருந்தொற்று நோய் கண்காணிப்பு அமைப்புகளையும் அகற்றிக்கொண்டிருக்கிறது - டிசம்பர் 23 அன்று அமெரிக்கா ஏற்கனவே முழு பெருந்தொற்று நோய் வைரஸ் பரவலின் இரண்டாவது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியது. 115 மில்லியன் அமெரிக்கர்கள் விடுமுறைக்காக குடும்ப உறுப்பினர்களைப் பார்க்க நீண்ட தூரம் பயணம் செய்து, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அறியாமல் வைரஸை பரப்புவதற்கு முன்பு இது நிகழ்ந்தது.

3. இந்த அலை விரைவில் ஒரு நாளைக்கு சுமார் 2 மில்லியன் நோய்த்தொற்றுகளை எட்டும் என்றும், அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர், சுமார் 100 மில்லியன் மக்கள், இந்த அலையின் காலப்பகுதியில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். கழிவுநீர் தரவு இன்னும் கண்காணிக்கப்படும் அனைத்து நாடுகளிலும், JN.1 திரிபு வகை உலகளவில் ஆதிக்கம் செலுத்துவதால், கடந்த மாதத்தில் இதேபோன்ற பதிவு அல்லது பதிவு செய்யப்பட்ட பரவல் அளவுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

4. ஒவ்வொரு விளைவுக் குறிகாட்டியும் – அதாவது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், இறப்புகள் மற்றும் நெடும் கோவிட் (Long COVID) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் - வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் உலகளவில் சீராக மோசமடையும். அமெரிக்காவில் கடுமையாக பாதிக்கப்பட்ட வடகிழக்கு மற்றும் மிட்வெஸ்ட் பிராந்தியங்களின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் ஏற்கனவே அதிகரித்து வருகின்றனர். பல மருத்துவமனை சங்கிலிகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்ற அதே நேரத்தில் சமாளிக்க அவசர போராட்டத் தீவிர முயற்சியில் முகக்கவசங்கள் அணிவதற்கான கட்டளைகளை மீண்டும் செயல்படுத்த கட்டாயப்படுத்துகின்றன. ரோம் மற்றும் இத்தாலியின் பிற பகுதிகளிலும், பிற நாடுகளிலுமுள்ள மருத்துவமனைகள் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அமெரிக்காவில் அதிகாரப்பூர்வ கோவிட்-19 இறப்புகள் கடந்த மூன்று மாதங்களாக ஒவ்வொரு வாரமும் 1,000 ஐத் தாண்டியுள்ளன, அவைகள் தொடர்ந்து அதிகரிக்கும். 10 சதவீத நோய்த் தொற்றுகள் நெடுங் கோவிட்டுக்கு (Long COVID) வழிவகுக்கும் என்ற உலக சுகாதார அமைப்பின் (WHO) மட்டுப்படுத்தப்பட்ட மதிப்பீட்டைப் பயன்படுத்தி, வரும் மாதங்களில் குறைந்தது 10 மில்லியன் அமெரிக்கர்கள் இந்த பயங்கரமான நோயால் பாதிக்கப்படுவார்கள்.

நெடுங் கோவிட்டின் (Long COVID) மிகவும் பொதுவான சில அறிகுறிகள்

5. பெருந்தொற்று நோயின் தற்போதைய நிலையைச் சுற்றியுள்ள அனைத்து உண்மைகளும் தரவுகளும் உலக மக்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன. அதற்கு பதிலாக முடிவில்லாத பொய்கள், உண்மைச் சிதைவுகள் மற்றும் பிரச்சாரங்களுக்கு உட்படுத்தப்பட்டு, இப்போது மௌனத்தின் திரையால் மறைக்கப்பட்டுள்ளன. அரசாங்கம், பெருநிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், நெருக்கடியின் உண்மையான தீவிரத்தை திட்டமிட்டு மூடிமறைக்கின்றன. ஒவ்வொரு நாளும் உலகளவில் மில்லியன் கணக்கானோர் நோய்வாய்ப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதால், என்ன விளைவுகள் ஏற்பட்டாலும், பெருந்தொற்று நோயின் யதார்த்தத்தை வெறுமனே புறக்கணிப்பது, மறுப்பது மற்றும் பொய்யாக்குவது என்று உத்தியோகபூர்வக் கொள்கைகள் விரிவடைந்துள்ளது.

6. முதலாளித்துவ வர்க்கம் ஒவ்வொரு ஆண்டும் பில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்க வைப்பதற்கு வைரஸுக்கு சுதந்திரம் அளித்து, மில்லியன் கணக்கானவர்களை பலவீனப்படுத்தி கொல்லும் மற்றும் கட்டுப்பாடற்ற வைரஸ் பரிணாமத்திற்கு உகந்த நிலைமைகளை உருவாக்குதல் என்ற 'என்றென்றும் கோவிட்' கொள்கையைத் தேர்ந்தெடுத்துள்ளது. கோவிட்-19 மிகவும் வீரியமான நோய்க்கிருமி மற்றும் கொடியதாக மாறுவதைத் தடுக்க எதுவும் இல்லை என்று கொள்கைரீதியான விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரிக்கின்றனர், மேலும் அனைத்து தணிப்புகளையும் நீக்குவது அத்தகையதான திரிபு வகைகள் உருவாகக்கூடிய வாய்ப்பை மட்டுமே அதிகரிக்கிறது.

7. ஆளும் உயரடுக்குகள் இனப்படுகொலை மற்றும் அணு ஆயுதப் போரை இயல்பாக்கியது போலவே, கோவிட்-19 இன் தடையற்ற பரவல் மூலம் நடந்து வரும் பாரிய இறப்புகளையும் மனித துயரங்களையும் அவர்கள் வேண்டுமென்றே இயல்பாக்கியுள்ளனர். 21 ஆம் நூற்றாண்டை முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்குள் தள்ளுவதற்கு தலைமை தாங்கும் ஏகாதிபத்திய மையங்களில், எல்லாவற்றிற்கும் மேலாக, மனித வாழ்க்கையின் மீதான அதே அலட்சியம் இப்போது அதிகார அரங்குகளில் வீழ்ந்துள்ளது.

8. பெருந்தொற்று நோயால் ஏற்படும் இறப்புகளின் உண்மையான அளவின் மிகவும் துல்லியமான அளவீடு பெருந்தொற்று நோய்க்கு முந்தைய அடிப்படைகளை விட அதிகப்படியான இறப்புகளாக இருக்கின்றன. 2020 ஆம் ஆண்டில், தி எகனாமிஸ்ட்டின் தடமறிதல் படி, பெருந்தொற்று நோயால் 5,460,000 இறப்புகள் ஏற்பட்டன. பெருந்தொற்று நோயின் கொடிய ஆண்டான 2021 ஆம் ஆண்டில், டெல்டா திரிபு வகை இந்தியாவில் மட்டும் மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றதோடு, இது அதிர்ச்சியூட்டும் வகையில் 12,540,000 கூடுதல் இறப்புகளாக இருந்தன. 2022 ஆம் ஆண்டில், மேலும் 6,900,000 இறப்புகள் ஏற்பட்டன. கடந்த ஆண்டில், தி எகனாமிஸ்ட் தனது தடமறிதலைப் புதுப்பித்த கடைசி திகதியான நவம்பர் 18 வரை 2,500,000 க்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் நிகழ்ந்தன. மொத்தத்தில், இப்போது 27.4 மில்லியன் ஒட்டுமொத்த அதிகப்படியான இறப்புகளாக உள்ளன, இது உத்தியோகபூர்வ எண்ணிக்கையான 7 மில்லியனை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

9. இந்த இறப்புகளில் பெரும்பாலானவைகள் நோய்த்தொற்றின் கடுமையான கட்டத்திலோ அல்லது வைரஸ் உடலில் ஏற்படுத்தக்கூடிய எண்ணற்ற எதிர்மறையான தாக்கங்கள் காரணமாகவோ கோவிட்-19 நேரடியாக ஏற்படுகின்றன. 2020 முதல் ஆயிரக்கணக்கான ஆய்வுகளில் ஆவணப்படுத்தப்பட்டபடி, கோவிட் -19 தொற்று ஒருவரின் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக நோய், நீரிழிவு நோய், நோயெதிர்ப்பு குறைபாடு, பல்வேறு நரம்பியல் கோளாறுகள் மற்றும் பலவற்றின் அபாயத்தை உயர்த்துகிறது.

10. தடுக்கக்கூடிய மரணத்தின் இந்த மாபெரும் மட்டத்திற்கு அப்பால், பெருந்தொற்று நோய் மனித வரலாற்றில் மிகப் பெரிய அளவிலான பலவீனத்தையும் உருவாக்கியுள்ளது. உலகளவில் மில்லியன்கணக்கான மக்கள் இப்போது நெடும் கோவிட் எனப்படும் நீண்டகால அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும். பல ஆய்வுகள் ஒருவரின் நெடும் கோவிட் உருவாக்கும் ஆபத்து ஒவ்வொரு மறுதொற்றுடனும் அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது, கடந்த மாதம் Statistics Canada  என்பதில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நெடும் கோவிட்-19 நோய்த்தொற்றில் பாதிக்கப்பட்ட கனேடியர்களின் சதவீதம் அவர்களின் முதல் கோவிட்-19 நோய்த்தொற்றுக்குப் பிறகு, 14.6 சதவீதத்திலிருந்து மூன்றாவது தொற்றுநோய்க்குப் பிறகு 38 சதவீதமாக அதிகரித்துள்ளது.

'என்றென்றும் கோவிட்' கொள்கையின் பரிணாமம்

11. பெருந்தொற்று நோயின் முதல் ஆண்டில், வெவ்வேறு நாடுகளிலும் ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளிலும் மூன்று மாற்று உத்திகள் தோன்றின: அதாவது ஒழித்தல், தணித்தல் மற்றும் 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்' ஆகியவைகளாகும். எந்தவொரு பொது சுகாதார நடவடிக்கைகளும் இல்லாமல் வெறுமனே வைரஸ் பரவ அனுமதிக்கும் பிந்தைய கொள்கையான 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கம்' உத்தியானது முதலில் ஸ்வீடன், பெரிய பிரித்தானியா, பிரேசில், அமெரிக்காவின் சில பகுதிகள் மற்றும் பிற நாடுகளில் செயல்படுத்தப்பட்டது. இக்கொள்கையானது விரைவாக மக்களுக்கு எதிரான ஒரு போரின் வடிவத்தை எடுத்தது மற்றும் வார்த்தையின் முழு அர்த்தத்தில் குற்றமாக இருந்தது.

12. முதலாளித்துவ இலாப வெறியின் மூலக் கணக்கு இந்த நாடுகளின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கிறது: அதாவது பங்குச் சந்தைகளில் ஒரு பில்லியன் டாலர்களை இழப்பதை விட ஒரு மில்லியன் மக்கள் இறப்பதே சிறந்ததாக இருந்தது. 2020 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் உலகளாவிய நிதியத் தலைநகரங்களில் கேர்ஸ் சட்டம் (CARES Act) மற்றும் பிற பிணையெடுப்புகள் பாதுகாக்கப்பட்டவுடன், ஆளும் வர்க்கத்தின் அணுகுமுறை உடனடியாக பொது சுகாதாரத்தின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக விரோதம் மற்றும் நெடும் கோவிட்டால் (Long COVID) வெகுஜன இறப்பு மற்றும் பலவீனமடைதல் குறித்து அலட்சியமாக மாறியது. பிரிட்டனின் அப்போதைய பிரதமர் போரிஸ் ஜோன்சன், சமீபத்திய பிரிட்டன் கோவிட் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டபடி, கோவிட் -19 என்பது 'வயதானவர்களைக் கையாள்வதற்கான இயற்கையின் வழி' என்று இந்தப் படுகொலை கண்ணோட்டத்தை இவ்வாறு தொகுத்துக் கூறினார்.

பிரதமர் போரிஸ் ஜோன்சன் அக்டோபர் 10, 2020 அன்று கருவூலத் தலைவர் ரிஷி சுனக் உடன் கோவிட் -19 செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறார் [Photo by Pippa Fowler/No 10 Downing Street / CC BY 2.0]

13. அமெரிக்காவில், நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையாளர் தோமஸ் ஃப்ரீட்மேன் ஸ்வீடனின் பொறுப்பற்ற கொள்கையை ஏற்றுக்கொண்டு, 'சிகிச்சையானது நோயை விட மோசமாக இருக்க முடியாது' என்ற சொற்றொடரை உருவாக்கினார், இது விரைவில் டொனால்ட் டிரம்பின் வேலைக்கு திரும்பிச் செல், பொதுமுடக்க எதிர்ப்பு (anti-lockdown) பிரச்சாரத்திற்கான தாரக மந்திரமாக மாறியது. கோவிட், முதலாளித்துவம் மற்றும் வர்க்கப் போர்: பெருந்தொற்று நோயின் ஒரு சமூக மற்றும் அரசியல் காலவரிசை வெளியீட்டின் அறிமுகத்தில், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு குறிப்பிட்டது:

சாராம்சத்தில், இந்தச் சொற்றொடர் நிதிய தன்னலக்குழுவின் வர்க்க நலன்களை வெளிப்படுத்தியது. இது, இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலத்திற்குப் பிறகு, வைரஸ் பரவலை மெதுவாக்கும் பொதுமுடக்கங்கள் அல்லது பிற அத்தியாவசிய பொது சுகாதார நடவடிக்கைகளை இனியும் பொறுத்துக் கொள்ளாது. ஆனால் பெருநிறுவனங்கள் தொழிலாளர்களின் இழப்பில், உழைப்பை சுரண்டி இலாபங்களை உருவாக்குவது அவர்களுக்கு தேவையாக இருந்தது.

14. பிற நாடுகளில், தணிப்பு மூலோபாயத்தின் ஒரு பகுதியாக முகக்கவசம் அணிவதுடன் 2020 ஆம் ஆண்டில் மிகவும் கடுமையான பொதுமுடக்கங்கள் அமல்படுத்தப்பட்டன. 2021 ஆம் ஆண்டில் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், தடுப்பூசிகள், முகக்கவசம் மற்றும் பிற வரையறுக்கப்பட்ட தணிப்பு நடவடிக்கைகள் மூலம், பெருந்தொற்று நோய் படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்ற கண்ணோட்டம் பரவலாக மாறியது. இது ஒரு மருட்சியான கற்பனை என்பதை நிரூபித்தது, இது மே 2021 இல் அதிக வீரியமுள்ள நோய்க்கிருமி டெல்டா திரிபு வகையின் பரிணாம வளர்ச்சியுடன் வெடித்தது, குறிப்பாக நவம்பர் 2021 இல் மிகவும் தீவிரமாக தொற்றக்கூடிய ஓமிக்ரான் திரிபு வகையாக இருந்தது.

15. உலகெங்கிலுமுள்ள பில்லியன் கணக்கான மக்களை ஓமிக்ரோன் விரைவாக பாதித்து மில்லியன் கணக்கான மக்களைக் கொன்ற நிலையில், பெருந்தொற்று நோய்க்கான உலகளாவிய முதலாளித்துவ விடையிறுப்பு கோவிட்-19 பரவுவதைத் தணிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் பகிரங்கமாக குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், நிராகரிப்பதாகவும் உருவெடுத்தது. ஓமிக்ரோன் மற்றும் அதன் அனைத்து மரபுவழிகளும் 'இலேசானது,' 'வழக்கமானது' மற்றும் பருவகால சளிக்காய்ச்சலுடன் ஒப்பிடக்கூடியது என்று சித்தரிக்க ஒரு இடைவிடாத பிரச்சார நடவடிக்கை தொடங்கப்பட்டது. 2022 முழுவதும், பள்ளிகள் மற்றும் பிற பொது இடங்களில் அனைத்து முககவசம் அணிதல் கட்டளைகளும் நீக்கப்பட்டன, இலவச பி.சி.ஆர் (PCR) பரிசோதனை தளங்கள் அகற்றப்பட்டன, மேலும் நோய்தொற்றுகளின் அளவுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறப்புகளின் தரவுகளின் அறிக்கையிடல் படிப்படியாக இல்லாமல் அழிக்கப்பட்டது.

16. இந்த நடவடிக்கையானது 2023 ஆம் ஆண்டில் மட்டுமே ஆழமடைந்தது. கடந்த மே மாதம், உலக சுகாதார அமைப்பு (WHO), பைடென் நிர்வாகம் மற்றும் பிற தேசிய சுகாதார முகமைகள் தங்கள் கோவிட்-19 பொது சுகாதார அவசரநிலை (PHE) பிரகடனங்களை முறையாக முடிவுக்குக் கொண்டு வந்தன, இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மிகப் பெரிய பொது சுகாதார நெருக்கடிக்கு அனைத்து அதிகாரப்பூர்வ பதிலையும் ஏற்கனவே நடைமுறையில் கைவிட்டதை சட்டமாகத் தொகுத்தது. இதன் விளைவாக, உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் நிராயுதபாணிகளாகி, பெருந்தொற்று நோயின் தற்போதைய ஆபத்துகள் குறித்து அறியாமல் உள்ளனர்.

17. அதே நேரத்தில், பொது சுகாதார அவசரநிலை (PHE) நிலையங்களின் முடிவு, நோய்த்தொற்றுக்கள் மற்றும் இறப்புகளைப் புகாரளிப்பது மற்றும் மருத்துவமனைகளில் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து பெருந்தொற்று நோய் கண்காணிப்புகளையும் இரத்து செய்ய உதவியது, இது அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை முற்றிலும் துல்லியமற்றதாக ஆக்கியது. இந்த கொள்கை மாற்றமானது, அனைத்து பரிசோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் தனியார்மயமாக்கப்படுவதையும் இறுதி செய்யப்பட்டது. ஃபைசர் மற்றும் மோடர்னா இப்போது நோயாளிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களிடம் தங்கள் தடுப்பூசிகளுக்கு 100 டாலருக்கும் அதிகமாக வசூலிக்கின்றன, மேலும் ஃபைசர் அதன் உயிர் காக்கும் சிகிச்சையான பாக்ஸ்லோவிடை (Paxlovid) 1,390 டாலர்களுக்கு விற்க திட்டமிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 13.4 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் மருத்துவ உதவி (Medicaid) இலிருந்து விலக்கப்பட்டனர். மேலும் மில்லியன் கணக்கானவர்கள் 2024 ஆம் ஆண்டில் இந்த முக்கியமான சுகாதார காப்பீட்டை இழக்க நேரிடும். நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகள் மிகவும் ஆபத்துள்ள மக்களைப் பாதுகாக்கத் தேவையான முகக்கவசம் அணியும் கட்டளைகளை நீக்கின, இது கடந்த ஆண்டு மருத்துவமனையில் பெறப்பட்ட கோவிட்-19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளில் பெரும் அதிகரிப்பை ஏற்படுத்தியது. இதேபோன்ற செயல்முறைகள் ஐரோப்பா முழுவதும் விரிவடைந்துள்ளன, அதே நேரத்தில் உலகெங்கிலும் புதுப்பிக்கப்பட்ட ஊக்கி தடுப்பூசிகள் (booster shots) மற்றும் பாக்ஸ்லோவிட் போன்ற சிகிச்சைகள் பெரும்பாலான மக்களுக்குக் கூட கிடைக்கவில்லை.

18. 'என்றென்றும் கோவிட்' என்பதை உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்வது ஆளும் வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளுக்குள்ளும் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கத்தை ஆதரிக்கும் யூஜெனிசிஸ்ட் கருத்தாக்கங்களின் (Eugenics என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் இனப்பெருக்கம் மூலம் மனிதர்களை மேம்படுத்த முடியும் என்ற விஞ்ஞான ரீதியாக தவறான கோட்பாடு) மறுமலர்ச்சியை அவசியமாக்கியுள்ளது. பாரிய நோய்த்தொற்று, பலவீனம் மற்றும் மரணத்தின் தொடர்ச்சியான அலைகளை நியாயப்படுத்துவதற்காக, வயதானவர்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் உத்தியோகபூர்வ சமூகத்தால் பயனற்றவர்களாகக் கருதப்பட வேண்டும்.

19. இந்தப் பாசிச சித்தாந்தத்தின் மிகவும் வெளிப்படையான சூத்திரங்கள் பைடென் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் உயர்மட்ட இரண்டு பொது சுகாதார அதிகாரிகளான டாக்டர் ரோசெல் வாலென்ஸ்கி மற்றும் அந்தோனி பெளசி ஆகியோரால் வெளிப்படுத்தப்பட்டன. ஜனவரி 7, 2021 அன்று, ஓமிக்ரான் திரிபு வகை தோன்றிய சில வாரங்களுக்குப் பிறகு, அதிகரித்து வரும் கோவிட்-19 மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் இறப்புகளின் நிலைமைகளின் கீழ், வாலென்ஸ்கி ABC க்கு அளித்த பேட்டியில், 'ஆரம்பத்தில் உடல்நிலை சரியில்லாதவர்களில்' 'அதிக எண்ணிக்கையிலான இறப்புகள்' நிகழ்கின்றன என்பது 'ஊக்கமளிக்கும் செய்தி' என்று கூறினார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் 28, 2023 அன்று, பௌசி BBC யிடம், 'மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஒரங்கட்டப்படுவார்கள், அவர்கள் பாதிக்கப்படுவார்கள், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள் மற்றும் சிலர் இறந்துவிடுவார்கள்' என்று கூறினார்.

தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோணி பெளசி. [AP Photo/Sarah Silbiger]

20. 'பெருந்தொற்று நோய் முடிந்துவிட்டது' என்ற முற்றிலும் தவறான கூற்றை உலகளாவிய அளவில் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், முகக்கவசத்தை ஊக்கப்படுத்தாமலும் எதிர்ப்பதற்குமான பிரச்சாரத்தின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் கண்ட பெருந்தொற்று நோயின் நான்காவது ஆண்டில் விஞ்ஞானத்தின் மீதான தாக்குதல்கள் அவற்றின் உச்சக் கட்டத்தை அடைந்தன. உலகெங்கிலுமுள்ள அனைத்து அரசாங்கங்கள் மற்றும் பெருநிறுவன ஊடகங்களிலிருந்து வெளிவரும் இந்தத் திட்டமிட்ட தவறான தகவல் பிரச்சாரத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் எந்த அடிப்படையும் கிடையாது.

21. இறுதியில், சக்திவாய்ந்த நிதிய மற்றும் பொருளாதார நலன்கள் ஆயுட்காலத்தைக் குறைப்பதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதியாக தணிப்புகளைக் (mitigations) கைவிடுவதை வேண்டுமென்றே ஊக்குவித்துள்ளன. பைடென் நிர்வாகத்திலுள்ள முன்னணி பொது சுகாதார அதிகாரிகளால் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கத்தை ஆதரிக்கும் (eugenicist) கொள்கை அமல்படுத்தப்பட்டது. 'விஞ்ஞானத்தைப் பின்பற்றுவேன்' மற்றும் பெருந்தொற்று நோயைத் தடுப்பேன் என்ற தனது தேர்தல் பிரச்சார வாக்குறுதியின் காரணமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடென், கோவிட்-19 நோயால் 700,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களின் இறப்புகளை மேற்பார்வையிட்டுள்ளார். இது ஜனவரி 2023 க்குள் 'அதைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்திவிட்டேன்' என்று அவர் ஒப்புக்கொண்டார்.

22. பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டமானது, பீட்டர் ஹோட்டஸ் (Peter Hotez) போன்ற விஞ்ஞானிகளின் உயிருக்கு எதிரான சரீர ரீதியான அச்சுறுத்தல்கள் உட்பட, விஞ்ஞான சமூகத்தின் மீதான இடைவிடாத தாக்குதலால் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒரு பிரச்சாரத்தில் ஜனநாயகக் கட்சி தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், பல தசாப்த கால வரவுசெலவுத் திட்ட வெட்டுக்களுக்குப் பிறகு பொதுக் கல்வி சுதந்திரமான வீழ்ச்சியில் உள்ளது. இது, இப்போது அனைத்து கூடுதல் பெருந்தொற்று நோய் நிதியும் வறண்டு வருவதால் அதிகரிக்கிறது. அறிவொளிக்குப் (Enlightenment) பிந்தைய ஒவ்வொரு முற்போக்கான வளர்ச்சியும், பொது சுகாதாரத்தின் அனைத்து அடிப்படைக் கொள்கைகளும், பாசிசம் மற்றும் அணு ஆயுதப் போரை நோக்கிச் செல்லும் ஒரு ஆளும் வர்க்கத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகின்றன.

2024 இல் பூகோளரீதியாக ஒழித்தலுக்கான போராட்டம்

23. பெருந்தொற்று நோயை நோக்கிய மூன்றாவது மூலோபாயமான ஒழித்தல், ஆரம்பத்திலிருந்தே சீனா மற்றும் பிற நாடுகளின் அனுபவத்தின் மூலம் சாத்தியம் என்று நிரூபிக்கப்பட்டது. இது வெகுஜன மரணத்தின் கொள்கை மற்றும் வேலைத்திட்டத்திற்கு ஒரு மாற்று உள்ளது என்பதை நிரூபித்தது. பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்ட மற்றும் துறை வல்லுநர்களுக்கு நன்கு தெரிந்த பொது சுகாதார முறைகளின் சரியான பயன்பாட்டின் மூலம், கோவிட்-19 பரவுவதைத் தடுத்து உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

24. பெருந்தொற்று நோயை ஆரம்பத்தில் தவறாக கையாண்ட பின்னர், சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஜனவரி 2020 இல் விரைவாக தனது போக்கை மாற்றி, வைரஸ் பரவலின் அனைத்து சங்கிலிகளையும் துண்டிக்கும் நோக்கத்துடன், வெகுஜன பரிசோதனை, கடுமையான தொடர்புத் தடமறிதல் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளையும் பாதுகாப்பாக தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுடன் தேவையான பொதுமுடக்கங்களை நடைமுறைப்படுத்தியது. 76 நாட்களுக்குப் பிறகு, மக்கள் பொதுமுடக்கங்களிலிருந்து மீண்டு பெருந்தொற்று நோய்க்கு முந்தைய ஒப்பீட்டளவில் இயல்பான நிலைமைகளுக்குத் திரும்பினர். இந்த வைரஸ் சீனாவின் எல்லைகள் வழியாக நுழையும் அச்சுறுத்தல் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு ஒவ்வொரு வெடிப்பும் தடுக்கப்பட்டது. நியூசிலாந்து, வியட்நாம், ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகள் சீனாவின் மாதிரியைப் பின்பற்றி, பூஜ்ஜிய-கோவிட்டை விரிவான காலத்திற்கு பராமரிக்க முடிந்தது.

25. பெருந்தொற்று நோயின் முதல் ஆண்டில், சர்வதேச அளவில் மில்லியன் கணக்கானவர்கள் இறந்தாலும், சீனாவில் ஆரம்ப வெடிப்பில் 4,634 உயிர்கள் மட்டுமே இறந்தன, அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் நான்கு இறப்புகள் மட்டுமே இருந்தன. இருப்பினும், இந்த ஒழித்தல் மூலோபாயத்தின் நீண்டகால நம்பகத்தன்மையானது அதன் சர்வதேசப் பயன்படுத்துதலைப் பொறுத்து இருந்தது. சீனாவின் பொருளாதார மூலோபாயத்தில் இருந்த அதே அடிப்படை முரண்பாடு, தேசியவாத அடித்தளத்தில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பெருந்தொற்று நோயின் போக்கில் துன்பகரமாக வெளிப்பட்டது.

26. அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு, ஏகாதிபத்திய சக்திகள் சீனாவிற்கு எதிரான பெருந்தொற்று நோயை ஆயுதமாக்கின, இது அவர்களின் நீண்டகாலப் போருக்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த சீன-எதிர்ப்பு பிரச்சாரத்தின் மைய அச்சாக 'வுஹான் ஆய்வுக்கூடத்தின் பொய்' (“Wuhan Lab Lie”) இருந்தது - இது ஜனவரி 2020 இல் ட்ரம்பின் பாசிச ஆலோசகர் ஸ்டீவ் பாணனால் பெருந்தொற்று நோய்க்கான அனைத்து பழிகளையும் சீனா மீது திசை திருப்புவதற்காக புனையப்பட்ட ஒரு சதிக் கோட்பாடாகும் - மற்றும் உயிர் காக்கும் பூஜ்ஜிய-கோவிட் கொள்கைக்கு (Zero-COVID policy) எதிரான முடிவற்ற கிளர்ச்சியாகும். இது ஆப்பிள், நைக் மற்றும் பிற முக்கிய மேற்கத்திய பெருநிறுவனங்களிடமிருந்து 2022 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் தங்கள் உற்பத்தி வசதிகளை சீனாவிலிருந்து நகர்த்துவதற்கான வெளிப்படையான அச்சுறுத்தல்களில் உச்சக்கட்டத்தை அடைந்தது, இது ஓமிக்ரான் திரிபு வகை பரவுவதைத் தடுத்த தற்காலிக பொதுமுடக்கங்களுக்கு விடையிறுப்பாகும். உண்மையில், ஏகாதிபத்தியம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மலிவு உழைப்புக்கு ஈடாக சீன மக்களின் உயிர்களையும் ஆரோக்கியத்தையும் பறித்தது.

27. இறுதியாக இந்த அழுத்தங்களுக்கு அடிபணிந்த சீன அரசாங்கமானது, 2022 நவம்பர்-டிசம்பர் மாதங்களுக்கு இடையில் அனைத்து பூஜ்ஜிய-கோவிட் நடவடிக்கைகளையும் விரைவாக கைவிடுவதற்கான முற்றிலும் மிருகத்தனமான மற்றும் பிற்போக்குத்தனமான முடிவை எடுத்தது. சீன மக்களைப் பொறுத்தவரை, விளைவுகள் பேரழிவுக்கு சற்றும் குறைந்தவை அல்ல. இந்த கொள்கை மாற்றத்தின் விளைவாக கடந்த குளிர்காலத்தில் 1-2 மில்லியன் சீன மக்கள் கோவிட்-19 நோயால் கொல்லப்பட்டதாக பல விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள் மதிப்பிடுகின்றன. அப்போதிருந்து, சீனா உலகளாவிய 'என்றென்றும் கோவிட்' கொள்கையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நோய்த்தொற்று மற்றும் இறப்புகளின் பல அலைகளுக்குப் பிறகு, நாட்டின் 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 100 மில்லியனுக்கும் அதிகமான சீன மக்கள் இப்போது நெடும் கோவிட் (Long COVID) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவிலுள்ள ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு, ஜனவரி 3, 2023. [AP Photo/Andy Wong]

28. சீனாவில் பூஜ்ஜிய-கோவிட் உடனான நீண்டகால வெற்றி, குறைந்த வளர்ச்சியடைந்த மற்றும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நாடுகளில் கூட கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கான மூலோபாயத்தின் நம்பகத்தன்மையை நிரூபித்தது. அதே நேரத்தில், ஏகாதிபத்திய சகாப்தத்தில் எந்தவொரு தேசிய அடிப்படையிலான வேலைத்திட்டமும் சாத்தியமற்றது என்பதை அதன் இறுதி முடிவு மீண்டும் உறுதிப்படுத்தியது. இங்கு சாத்தியமற்றது என்று நிரூபிக்கப்பட்டது தேசிய கட்டமைப்பே தவிர கொள்கை அல்ல. ஒழித்தல் சாத்தியமானது மற்றும் அவசியமானது, ஆனால் இப்போது இந்த கொள்கைகளுக்காக போராடும் ஒரு வெகுஜன இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மட்டுமே அதை அடைய முடியும்:

  • பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டம் என்பது ஒரு சோசலிச தீர்வு தேவைப்படும் ஒரு அரசியல் மற்றும் புரட்சிகரமான கேள்வியாகும்.

  • பொது சுகாதாரத்தின் அமைப்பானது சமூகத் தேவையின் அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர பெருநிறுவன இலாபத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது.

  • அனைத்து சுகாதார, மருந்து மற்றும் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்தும் இலாப நோக்கம் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும்.

29. பெருந்தொற்று நோயைத் தடுப்பதற்கான ஒரே வழி, உலகளாவிய ஒருங்கிணைக்கப்பட்ட ஒழித்தல் மூலோபாயத்தின் மூலம் ஆகும், இதில் முழு உலக மக்களும் ஒற்றுமையுடனும், பரந்த அடிப்படையிலான பொது சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கூட்டு உறுதியுடனும் செயற்பட வேண்டும். இந்த மூலோபாயம் வெகுஜன பரிசோதனை, தொடர்பு தடமறிதல், பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் பாதுகாப்பான தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை, உயர்தர முகக்கவசங்களின் உலகளாவிய பயன்பாடு மற்றும் ஹெபா வடிகட்டிகள் (HEPA filters) மூலம் சுத்தமான உட்புற காற்றை வழங்க அனைத்து பொது கட்டிடங்களையும் புதுப்பித்தல் மற்றும் Far-UVC (புற ஊதா சி ஒளியின் ஒரு குறிப்பிட்ட வரம்பு -a specific range of ultraviolet C light) சாதனங்களை பாதுகாப்பாக செயல்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.

30. பெருந்தொற்று நோயின் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தகைய ஒரு உலகளாவிய மூலோபாயம் உலக முதலாளித்துவத்தின் கீழ் ஒருபோதும் எழாது என்பது தெளிவாகிறது, இது அனைத்து பொது சுகாதார செலவினங்களையும் ஒரு பண வெறி கொண்ட நிதியத் தன்னலக்குழுவின் தணியாத இலாப நலன்களுக்கு அடிபணிய வைக்கிறது. பொது சுகாதாரத்தின் மையக் கருத்தாக நோய் ஒழிக்கப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே கைவிடப்பட்டுள்ளது. உலக சோசலிசப் புரட்சியின் மூலம் மட்டுமே பெருந்தொற்று நோயை முடிவுக்குக் கொண்டுவர முடியும், அத்துடன் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனம் மற்றும் மூன்றாம் உலகப் போருக்கு மேலும் இறங்குவதைத் தடுக்க முடியும்.

31. பெருந்தொற்று நோயைப் பற்றி கூறப்பட்ட அனைத்தும், காலநிலை மாற்றத்தின் வளர்ந்து வரும் இருத்தலியல் அச்சுறுத்தலுக்கு இன்னும் அதிக சக்தியுடன் பொருந்தும், இதன் தாக்கம் உலகின் பரந்த பகுதிகளால் இன்னும் தீவிரமாக உணரப்படுகிறது. கடந்த ஆண்டு உலகெங்கிலும் வெப்பநிலை பதிவுகள் கிட்டத்தட்ட தினசரி மீறல்கள் மற்றும் பல தீவிர வானிலை நிகழ்வுகளைக் கண்டது. ஒவ்வொரு கண்டத்திலும் பாரிய காட்டுத்தீ, வெப்ப அலைகள் மற்றும் காற்று மாசுபாடு பரவலாகிவிட்டது. அதே நேரத்தில் பனிப்பாறைகள் மற்றும் பனிப்பாறைகளின் உலகளாவிய உருகுதல் விரைவுபடுத்தப்படுகிறது. காலநிலை மாற்றம் மற்றும் திட்டமிடப்படாத நகரமயமாக்கல் ஆகியவற்றின் மூலம் பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஸ்திரமின்மை, ஆயிரக்கணக்கான உயிரினங்களை அவற்றின் பூர்வீக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இதனால் கசிவு நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பெருந்தொற்று நோய்களின் வாய்ப்புகள் அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

ஜூன் 7, 2023 அன்று கியூபெக் கனடா காட்டுத்தீ புகை நியூ ஜெர்சி மற்றும் நியூயோர்க் நகரத்தை சூழ்ந்துள்ளது. [Photo by Anthony Quintano]

32. விஞ்ஞானத்தின் வளர்ச்சியும், இந்த நெருக்கடியான சமூகத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான சமூகத்தின் வளங்களைப் பயன்படுத்துவதும் ஒரு உலக சோசலிச சமூகத்தின் கீழ் மட்டுமே அடையப்பட முடியும். போருக்கு எதிரான போராட்டத்திற்கு சற்றும் குறைவில்லாமல், பெருந்தொற்று நோய் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவது அவசியமாகிறது. இந்தக் கொள்கைகளுக்காகப் போராடும் உலகின் ஒரே உண்மையான சோசலிச இயக்கம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே ஆகும்.

33. பெருந்தொற்று நோய் என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்திற்கு இணையான எந்த செய்தியும் ஒப்பிடத்தக்க வகையில் அறிக்கையிடல் ஒரு ஊடகத்தில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெருந்தொற்று நோய்க்கு எதிரான ஒரே முறையான, ஐக்கியப்பட்ட பிரச்சாரத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகள் மற்றும் உலக சோசலிச வலைத் தளம் ஆகியவை உலகெங்கிலும் நடத்தியுள்ளன. பல்வேறு நடுத்தர வர்க்க போலி-இடது போக்குகள் பெருந்தொற்று நோயைப் புறக்கணித்துள்ளன அல்லது வெளிப்படையாக 'என்றென்றும் கோவிட்டை' தழுவியுள்ளன. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் தொடர்ந்து ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்துள்ளன. ஒவ்வொரு தொழில்துறையிலும் சாமானிய தொழிலாளர்களால் எழுப்பப்பட்ட பெரும் கவலைகளுக்கு மத்தியில் —எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் ஆபத்தான நிலைமைகளில் பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில்— தொழிற்சங்க அதிகாரத்துவங்களானது வேலைவாங்கும் எஜமானர்களாக செயல்பட்டன, பாரிய தொற்று, பலவீனம் மற்றும் மரணத்திற்கு தொழிலாளர்களை தியாகம் செய்ய நிர்ப்பந்தித்தன.

34. பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டமானது முற்றிலும் புரட்சிகரமான கேள்வியாகும். ஆரம்பத்தில் இருந்தே இதைப் புரிந்துகொண்டு, அதற்காகப் போராடிய, தொழிலாள வர்க்கத்திற்குள் கல்வி மற்றும் தெளிவுபடுத்தலுக்கான ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை மேற்கொண்ட ஒரே அரசியல் அமைப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே ஆகும். பெருந்தொற்று நோய் குறித்து 6,000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. உலகின் வேறு எந்த பத்திரிகையும், முதலாளித்துவ அல்லது போலி-இடது பத்திரிகைகள், பெருந்தொற்று நோயின் வளர்ச்சியை தொடர்ந்து அறிக்கையிட்டு செய்தியாக்கவில்லை.

35. பெருந்தொற்று நோய்க்கு எதிரான போராட்டமானது வரவிருக்கும் ஆண்டில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களின் மையத்தில் வைக்கப்பட வேண்டும், இது வெறுமனே ஒப்பந்த பிரச்சினைகளுடன் மட்டுப்படுத்தப்படாது. வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்திற்கான மிக அடிப்படை உரிமைகள் மற்றும் பொது சுகாதாரத்திற்கான பல நூற்றாண்டு காலப் போராட்டம் உள்ளிட்ட ஆழமான சமூக பிரச்சினைகள் இந்த போராட்டத்தின் மையத்தில் உள்ளன. தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களை வெளிப்படுத்தும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே, உலக அளவில் இந்தக் கொள்கைகளுக்காகப் போராடியது, தொடர்ந்தும் போராடி வருகிறது.

Loading