மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
UAW தொழிற்சங்கம், GM, Ford மற்றும் Stellantis ஆகியவற்றில் உள்ள தங்கள் 150,000 உறுப்பினர்களின் ஒப்பந்தங்கள் செப்டம்பர் 14 அன்று 11:59 மணிக்கு முடிவடையும்போது வேலைநிறுத்தத்திற்கு தயாராக இருக்குமாறு பல வாரங்களாக அறிவித்து வருகிறது. டெட்ரோயிட்டில் நடைபெற்ற தொழிலாளர் தின ஊர்வலத்தில், UAW தலைவர் ஷான் ஃபெய்ன், “அது ஒரு கடைசி நாள், குறிப்பு புள்ளி அல்ல” என்று அறிவித்தார், மேலும் “நாம் சமூக மற்றும் பொருளாதார நீதியைப் பெறவில்லை என்றால், உங்களுக்கு ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்ல முடியும், செப்டம்பர் 14 அன்று, நாங்கள் எந்த வகையிலும் அதை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்போம்” என்று குறிப்பிட்டார்.
எனினும், திங்கள்கிழமை, அதே தொழிலாளர் தின நிகழ்ச்சியில், பைடென் செய்தியாளர்களிடம், “நான் வேலைநிறுத்தத்தைப் பற்றி கவலைப்படவில்லை” என்று கூறினார், மேலும் “அது நடக்கப் போவதில்லை என்று நான் நினைக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
தனது கருத்துக்களுடன், பைடென் பையிலிருந்து பூனையை வெளியே எடுத்து விட்டார். கடந்த இரண்டு மாதங்களில் எண்ணற்ற விவாதங்களின் போது அதற்கு மாறாக, அவர்களின் பொது அறிக்கைகள் எதுவாக இருந்தபோதிலும் பெய்ன் மற்றும் UAW அதிகாரத்துவம் ஏற்கனவே நிர்வாகத்திற்கு உறுதிப்படுத்தி இருப்பதை அவர் வெளிப்படுத்தினார்.
சேதத்தை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக டெட்ரோயிட் பத்திரிகையாளர்களிடம், “அதிபரின் கருத்துக்களால் நான் அதிர்ச்சியடைந்தேன்” என்று பெய்ன் கூறினார், “அவர் எங்களுக்கே தெரியாத ஒன்றை அறிந்திருக்க வேண்டும், ஒருவேளை வாகன நிறுவனங்கள் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நம்மை சந்திக்கப் போவதாக இருக்கலாம்” என்று ஷான் பெய்ன் தெரிவித்தார்.
உண்மை என்னவென்றால், பெய்ன் பைடெனுக்கு வழங்கும் “ஆதரவுக்கு” அவரை தொடர்ச்சியாக அடிமைத்தனமான முறையில் புகழ்ந்து பேசி வந்தார். பெய்ன் தனது அதிர்ச்சியை பைடெனின் கருத்துக்கள் குறித்து வெளிப்படுத்திய அதே நாளில், அவர் மற்றும் பிற UAW அதிகாரிகள், ஓபாமா-பைடென் நிர்வாகத்தின் 2009 ஆம் ஆண்டு GM மற்றும் Chrysler மறுசீரமைப்பின் போது தொழிலாளர்களின் மீது பரந்தளவில் வேலை இழப்புகள் மற்றும் ஒப்பந்தங்களை திணித்த அதே ஜனநாயக கட்சி அரசியல்வாதிகளுடன் தொழிலாளர் தின பேரணியில் அணிவகுத்துச் சென்றனர். UAW, இரண்டு பெரு நிறுவனக் கட்டுப்பாட்டிலுள்ள கட்சிகளில் ஒன்றான ஜனநாயக கட்சியை ஆதரிப்பது என்பது பெய்ன் மற்றும் கம்பனி விற்பனைக்கு (காட்டிக்கொடுக்க) தயாராகி வருவதற்கான மிக உறுதியான அறிகுறியாகும்.
UAW ஆதரவு பெற்ற ஒப்பந்தங்களின் ஆண்டுகளை மறுபடியும் மாற்றி, ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைய வாகன தொழிலாளர்கள் 97 சதவீதம் வாக்களித்துள்ளனர். பணவீக்கம் அவர்களின் சம்பளத்தை உறிஞ்சி எடுப்பது, சகிக்க முடியாத பணி நேரங்கள் மற்றும் வேலை நிலைமைகள், மற்றும் இரண்டாம் நிலை மற்றும் தற்காலிக தொழிலாளர்களை துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவற்றால் வெறுப்படைந்துள்ள வாகன தொழிலாளர்கள், திரை வசன எழுத்தாளர்கள், நடிகர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் வெடித்துள்ள வேலைநிறுத்த அலைகளில் சேர தீர்மானமாக உள்ளனர். இந்த வளர்ச்சியடையும் கிளர்ச்சி உணர்வு குறித்து தான், பைடென் நிர்வாகம் ஒரு தினசரி அடிப்படையில் அதை எப்படி சமாளிப்பது என்பது பற்றி UAW எந்திரத்துடன் பேசி வருகின்றது.
கட்டுப்பாட்டைப் பராமரிக்கும் முயற்சியில், 40 சதவீத ஊதிய உயர்வு, வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகளை (COLA) மறுசீரமைத்தல் மற்றும் அடுக்குகளுக்கு முடிவு கட்டல் உள்ளிட்ட தொழிலாளர்கள் மத்தியில் மிக ஆதரவு பெற்ற தொடர்ச்சியான திட்டங்களை பெயின் ஏற்றுக்கொண்டார். ஆனால் பெயினுக்கும் அவர் வழிநடத்தும் அதிகாரத்துவத்திற்கும் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகப் போராடும் எந்த எண்ணமும் இல்லை, உத்தி கிடையாது என்பது பற்றி சொல்ல வேண்டியதில்லை.
பெயின் தனது நேர்மையற்ற திட்டங்களை கைவிடத் தயாராகி வருவது மட்டுமல்லாமல், நூறாயிரக்கணக்கில் இல்லையென்றாலும் பத்தாயிரக்கணக்கில் வேலைகளை அழிக்கவும், மின்சார வாகன உற்பத்திக்கு மாறுவதன் ஒரு பகுதியாக வாகன உற்பத்தியாளர்கள் கோரும் அபாரமான ஊதிய வெட்டுக்களுக்கும் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு பரிவர்த்தனையாக UAW அதிகாரத்துவம், வாகன நிறுவனங்கள் தங்கள் திட்டங்களில் UAW ஐ சேர்க்க தூண்டுவதற்கு பைடென் நிர்வாகத்தை நம்பியுள்ளது. கடந்த வாரம் அவர் வாகன உற்பத்தியாளர்களுக்கு $15.5 பில்லியன் உதவிகள் வழங்கப்பட்டதை பாராட்டினார், அது “மின்சார வாகன மாற்றத்தில் வலுவான தொழிற்சங்க கூட்டாண்மைகள் இருக்க வேண்டும் என்பதை முதலாளிகளுக்கு தெளிவுபடுத்தியது.”
இந்த சதித்திட்டங்களுக்கு எதிராக சாமானிய தொழிலாளர்கள் கிளர்ந்தெழாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் குறைந்தபட்ச ஊதியத்தில் வேலை செய்வார்கள், மேலும் முழுப் பட்டணங்களும் நகரங்களும் பிளின்ட் மற்றும் டெட்ரோயிட் மாதிரியைப் பின்பற்றி தொழில்துறை பாலைவனங்களாக மாற்றமடையும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த போராட்டத்தின் விளைவு அமெரிக்கா மட்டுமல்லாமல் கனடா, மெக்சிகோ மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து வாகன தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
இந்த சதித்திட்டத்தை தோற்கடிக்கவும், தொழிலாளர்களால் தங்கள் விருப்பப்படி கட்டுப்படுத்தப்பட்டு வழிநடத்தப்படும் முழுமையான வேலைநிறுத்தத்தை தயாரிக்கவும், வாகன உற்பத்தியாளர்களின் வேலை மற்றும் ஊதியக் குறைப்பு கோரிக்கைகளை தோற்கடிக்கவும். இந்தப் போராட்டத்தில், இப்போது எல்லாமே சாமானிய தொழிலாளர்களின் முன் முயற்சியில் தங்கியுள்ளது,
இந்த சண்டையில், மேக் ட்ரக்ஸ் தொழிலாளியும் UAW தலைவருக்கான சோசலிச வேட்பாளருமான வில் லெஹ்மனால் முன் வைத்து போராடிய கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வில் லெஹ்மன், தொழிற்சங்க அதிகாரத்துவத்தை ஒழிப்பதற்கும், UAW எந்திரத்திடமிருந்து அதிகாரத்தை சாமானிய தொழிலாளர்களுக்கு மாற்றுவதற்கும் அழைப்பு விடுததார்.
லெஹ்மன், தேர்தலில் கிட்டத்தட்ட 5,000 வாக்குகளை வென்றார். மேலும் UAW அதிகாரத்துவமானது, அவசரகதியில் வாக்களிப்பை கட்டுப்படுத்துவது, இறுதி தேர்தல் சுற்றை பெய்ன் உள்ளிட்ட இரண்டு நீண்டகால அதிகாரிகளுக்கு இடையில் மட்டுமே மட்டுப்படுத்துவது போன்ற எல்லாவற்றையும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி செய்திருக்காவிட்டால், லெஹ்மன் இன்னும் அதிகமான வாக்குகளுடன் தேரதலில் வென்றிருப்பார். இது அடிக்கோடிட்டு காட்டுவது என்னவென்றால், ஒவ்வொரு தொழிற்சாலையிலும் சாமானிய தொழிலாளர்களின் அதிகாரம் மற்றும் முடிவு எடுப்பது தொடர்பாக புதிய அதிகார மையங்களை நிறுவுவதற்கு வலுவான ஆதரவு உள்ளது என்பதையாகும். லேமன், தற்போது 90 சதவீத UAW உறுப்பினர்களின் வாக்குரிமையை பறித்த போலியான தேர்தலுக்கு அங்கீகாரம் வழங்கியதற்கு எதிராக பைடெனின் தொழிலாளர் துறைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
UAW தலைவர் பெய்ன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) மற்றும் பிற போலி-இடதுசாரி அமைப்புகளில் உள்ள தங்கள் சகாக்களின் முன்மாதிரியை பின்பற்ற எண்ணியுள்ளனர், அவர்கள் 340,000 UPS தொழிலாளர்களுக்கான ஒப்பந்தக்கெடு முடிவடையும் நேரத்திற்கு முன்பாகவே ஒரு ஒப்பந்தத்தை அறிவித்தனர், பின்னர் பொய்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய வாக்கெடுப்பு முறைகள் அடிப்படையிலான ஒப்பந்தத்தை திணித்தனர். டெம்ப்ஸ்டர்ஸ் கையெழுத்திட்ட “வரலாற்று” ஒப்பந்தம் UPS தொழிலாளர்களில் பெரும்பாலானோர் வறுமை ஊதியங்களை பெறுவதற்கும், மற்றும் பொதி விநியோக தொழிலாளர்கள் கொடிய நிலைமைகளை எதிர்கொள்வதற்கும் வழி வகுத்தது.
இதை செய்வதற்கு UAW அதிகாரத்துவத்தினால் இயலாது என்று நிரூபிக்கப்படுமாயின் மற்றும் ஒப்பந்தங்கள் முடிவடைந்தவுடன் வேலைநிறுத்தங்களின் வாய்ப்புகளை எதிர்கொள்ளும் பட்சத்தில், பெய்ன் சில ஆலைகளில் ஒரு “ஹாலிவுட் வேலைநிறுத்தத்தை” அழைக்க வேண்டியிருக்கலாம். இது வாகன உற்பத்தியாளர்களின் லாபங்களுக்கும் மற்றும் UAW இன் 825 மில்லியன் டொலர்கள் வேலைநிறுத்த நிதியத்திற்கும் முடிந்தவரை குறைந்த அளவு சேதத்தை விளைவிக்கும். இத்தகைய மக்கள் தொடர்பு ஸ்டண்ட், தொழிலாளர்கள் வெளியேறவும், ஒரு பெரிய காட்டிக்கொடுப்புக்கு, அவர்களை தயாராக மென்மையாக அனுமதிக்கும் நோக்கத்துடன் இருக்கும்.
தன் பங்கிற்கு பைடென் நிர்வாகம், அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியின் செலவுகளை மற்றும் ரஷ்யா மற்றும் சீனாவுடன் இராணுவ மோதலை உக்கிரமடைய செய்வதற்கான செலவுகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த, தொழிற்சங்க அதிகாரத்துவத்தை முதலாளித்துவ அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒருங்கிணைத்து வருகிறது. இது சர்வாதிகாரங்களுடன் தொடர்புடைய கடுமையான பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் மற்றும் “தொழிலாளர் ஒழுக்கத்தை” உள்ளடக்கும்.
இவை அவர்களின் திட்டங்கள், ஆனால் தொழிலாளர்கள் தங்கள் சொந்த திட்டங்களுடன் அவற்றை எதிர்கொள்ள வேண்டும். எல்லாமே UAW அதிகாரத்துவம் மற்றம் இரண்டு பெரு நிறுவன-கட்டுப்பாட்டிலுள்ள இரண்டு கட்சிகளுக்கும் எதிரான சாமானிய தொழிலாளர்களின் சுயாதீனமான முயற்சி மற்றும் நடவடிக்கை ஆகியவற்றில் தங்கியுள்ளது.
இதற்கு முதல் படியாக, GM ப்ளின்ட் அசெம்பிளி, ஸ்டெல்லண்டிஸ், வாரன் டிரக், GM டெல்டா/லேன்சிங் மற்றும் பிற இடங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் சரக்குக் கிடங்குகள் அனைத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பை விரிவுபடுத்துவது அவசியம். இது தொழிலாளர்களை, பொய்களைக் கடந்து செல்லவும், ஒருவருக்கு ஒருவர் தகவல் பரிமாறிக்கொள்ளவும், அவர்கள் திணிக்கப்படும் பிளவுகளை அகற்றவும், தங்கள் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், மாநிலங்கள் மற்றும் நாடுகளில் உள்ள பல்வேறு தரங்கள், ஷிப்ட்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களைத் தாண்டி ஒன்றிணைவதை சாத்தியமாக்கும்.
தொழிலாளர்கள் உடனடியாக வேலைநிறுத்த ஊதியத்தை வாரத்திற்கு 750 டொலர்களாக ஆக உயர்த்தும்படி கோர வேண்டும், அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் விரிவான அறிக்கைகள் மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் மேற்பார்வையை கோர வேண்டும், மேலும் செப்டம்பர் 15 அன்று வாகன மற்றும் வாகன உதிரி பாகங்கள் தொழிலாளர்கள் முழுமையான வேலைநிறுத்தத்தை தொடங்க வேண்டும்.
இது உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் அதில் செப்டம்பர் 18 அன்று ஒப்பந்தம் முடிவடையும் கனேடிய தொழிலாளர்கள், மெக்சிகோ, ஜேர்மனி, துருக்கி, சீனா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும், அவர்களும் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் பெரும் தாக்குதலை எதிர்கொள்கின்றனர்.
“மின்சார வாகன வேலைகளின் இரத்தக்களரியை நிறுத்து” என்ற அறிக்கையை வெளியிட்ட சர்வதேச சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டமைப்பு (IWA-RFC), தேசிய எல்லைகளைக் கடந்து இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து வருகிறது.
ஒப்பந்தம் முடிவடைய இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான நேரம் இருப்பதால், ஒரு கணம் கூட வீணடிக்கக்கூடாது. நாங்கள், வாகன தொழிலாளர் சாமானிய குழுக்களின் வலையமைப்பை விரிவுபடுத்துமாறு வலியுறுத்துகிறோம், இந்தப் போராட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து உங்கள் சக தொழிலாளர்களுக்கு தகவல் அளிக்கவும், தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், வாழ்க்கைத் தரம், வேலை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்கவும், தொழிலாள வர்க்கத்தின் மகத்தான சக்தியை திரட்டவும், புதிய தலைமையை உருவாக்க வேண்டும்.