வர்க்கப் போராட்ட காலகட்டத்துடன் சேர்த்து அமெரிக்காவில் விடுமுறை காலமும் தொடங்கிவிட்டது. ஆயிரக் கணக்கான அமேசான் மற்றும் ஸ்டார்பக்ஸ் (Amazon and Starbucks) தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பலர் இப்போராட்டத்தில் இணைந்துகொள்ள விரும்புகின்றனர்.
ஐந்து நாட்களுக்கு முன்னர் தொடங்கிய வாஷிங்டன், ஓரிகான் மற்றும் கலிபோர்னியா மாநிலங்களில் 33,000 போயிங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
தொழிலாளர் செலவுகளைக் குறைப்பதன் மூலமாகவும், ஒரு சில தொழிலாளர்களைக் கொண்டு அதிக உற்பத்தியைப் பிழிந்தெடுப்பதன் மூலமாகவும் பெருநிறுவனங்கள் இலாபங்களை அதிகரிக்க முயன்று வருகின்றன.
விநியோக இராட்சத பெருநிறுவனங்களின் பரந்த பணிநீக்கங்கள், இந்த ஆண்டின் முதல் பாதியில் நடைமுறைக்கு வரவிருக்கின்றன, இவை வாகன உற்பத்தித்துறை, தொழில்நுட்பத்துறை மற்றும் பிற தொழிற்துறைகளில் வேலை-வெட்டுக்களின் வேகமான மற்றும் பூகோளரீதியான அலையின் ஒரு பாகமாக உள்ளது.
ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் (UAW) தொழிற்சங்க அதிகாரத்துவமானது, அதன் ஒப்புதலுடன், காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை ஒருங்கிணைத்து வருகின்றவரும், பரவலாக வெறுக்கப்படும் வெள்ளை மாளிகை போர்க் குற்றவாளியுடன் கைகோர்த்துக் கொள்ளுகிறது.
இந்த ஒப்பந்தங்கள் "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை" என்று UAW இன் தலைவர் பெய்ன் மற்றும் பைடென் நிர்வாகம் கூறிய போதிலும், தொழிலாளர்கள் மத்தியில் பரவலான எதிர்ப்பு இருந்தது, இது வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் மட்டுமே இந்த எதிர்ப்பு வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கலாம்.
கடந்த 45 ஆண்டுகளில் ஏறக்குறைய ஒவ்வொரு வாகனத் தொழிற்துறை ஒப்பந்தத்தையும் போலவே, ஐக்கிய வாகன தொழிலாளர் சங்க (UAW) அதிகாரத்துவம் தவறான தகவல், அச்சுறுத்தல்கள் மற்றும் வெளிப்படையான வாக்காளர் மோசடி மூலம் அதன் விற்றுத்தள்ளலை கட்டாயப்படுத்தியுள்ளது.
Ford உடன் செய்துகொள்ளப்படவிருக்கும் ஒப்பந்தத்தை பற்றிய பல அறிகுறிகள் உள்ள போதிலும், UAW சாதாரண உறுப்பினர்கள் மத்தியில் அதிகாரத்துவம் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்வதுடன் நேரத்தை கடத்துவதற்காக வெள்ளியன்று இன்னும் சில ஆலைகளில் வேலை நிறுத்தத்துக்கு அழைக்க கூடும்.
வாகன வேலைநிறுத்தம் நடக்கப்போவதில்லை என்று பைடென் பிலடெல்பியாவில் உள்ள செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன் மூலம் வளர்ந்து வரும் வாகனத்தொழிலாளர் கிளர்ச்சியின் கழுத்தை நெரிப்பதற்கு ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தில் (UAW) சார்ந்திருப்பதை வெளிப்படுத்தினார்.
ப்ளூம்பெர்க்கின் ஒரு புதிய அறிக்கையானது, கடந்த ஆறு மாதங்களில் உலகின் 2,640 பில்லியனர்கள் திகைப்பூட்டும் தொகையை தங்களுடைய பைகளில் குவித்துள்ளனர், அதே நேரத்தில் உலக மக்கள் மோசமடைந்து வரும் பொருளாதார ஸ்திரமின்மை, நடந்து வரும் பெருந்தொற்று நோய் மற்றும் உக்ரேன் போர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டோலிடோ, ஓஹியோ பகுதியில் உள்ள வாகன பேட்டரி ஆலையில் தொழிலாளர்களின் துணிச்சலான வேலைநிறுத்தத்தை ஐக்கிய வாகன தொழிலாளர் தொழிற்சங்க அதிகாரத்துவம் நாசப்படுத்தியுள்ளது. இந்த செப்டம்பரில் தங்கள் சொந்த ஒப்பந்தப் போராட்டத்தை எதிர்கொள்ளும் வாகனத் தொழிலாளர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகும்.
கூட்டத்தில் தொழிலாளர் பிரதிநிதிகள் தங்கள் பணியிடங்களில் உள்ள வேதனையான நிலைமை, கோவிட்-19 இன் கொடிய மற்றும் நடந்து வரும் தாக்கத்தை விவரித்தனர். பெருநிறுவன சார்பு UAW அதிகாரத்துவத்தின் அலட்சியம் மற்றும் உடந்தையாக இருப்பதைக் கண்டனம் செய்தனர். மேலும் உழைக்கும் வர்க்கத்தினரின் உலகளாவிய இயக்கத்தினை கட்டுவதற்கு ஆதரவாக உணர்ச்சியுடன் பேசினார்கள்
ஷான் ஃபெயினின் தேர்வு UAW தொழிற்சங்க எந்திரத்திற்கு எதிரான கிளர்ச்சியின் வெளிப்பாடு அல்ல. மாறாக, அவர் கீழ் இருந்து வளர்ந்து வரும் இயக்கத்திற்கு எதிரான தொழிற்சங்க எந்திரத்தினதும் ஆளும் வர்க்கத்தினதும் தற்காப்பிற்கான பிரதிபலிப்பாக இருக்கிறார்.
பென் மற்றும் மேக்ஸ் மோரிஸ்ஸி ஆகிய இருவரும் டோலிடோவிற்கு வெளியே ஓஹியோவின் ஓரிகானில் உள்ள BP ஹஸ்கி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிப்பு மற்றும் தீயில் எரிந்து இறந்தனர். அமெரிக்க முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை, ஒரு தொழிலாளியின் வாழ்க்கை மிகவும் மலிவானது
அமெரிக்காவில், ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கத்தால் (UAW) மீண்டும் கொண்டுவரப்பட்ட ஒப்பந்தத் திட்டத்திற்கு எதிராக 7,000 கேட்டர்பில்லர் தொழிலாளர்களின் எதிர்ப்பு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இது, அவர்களின் உண்மையான ஊதியத்தை ஆறு வருட தொழிலாளர் ஒப்பந்தத்தின் காலத்தில் 20 சதவீதம் அல்லது கூடுதலாகக் குறைக்கும்
தொழிலாளர்களின் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் வேலை நிலைமைகளை திட்டமிட்ட முறையில் அழிப்பதில் பெருநிறுவனங்கள் மற்றும் அடுத்தடுத்து பதவிக்குவந்த அரசாங்கங்களுடன் பல தசாப்தங்களாக ஒத்துழைத்த பிறகு, தொழிற்சங்கத்தின் தவறான பெயரிடப்பட்ட "ஐக்கிய பணிமனை" மற்றும் அதன் துணை அமைப்புகளை ஆக்கிரமித்துள்ள வசதியான உயர்-நடுத்தர வர்க்க நிர்வாகிகள் சாமானியத் தொழிலாளர்களால் இழிவாகப் பார்க்கப்படுகிறார்கள்
அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவும், கேட்டர்பில்லர் தொழிலாளர்களின் இந்தத் தீர்க்கமான போராட்டத்தை வெற்றிபெற அவர்களுக்குப் பரந்தளவில் ஆதரவை வழங்க வேண்டும்.
இரண்டாம் சுற்று வாக்களிப்பில் பெருமளவில் தொழிலாளர்கள் வாக்களிக்கவில்லை என்பது UAW தொழிற்சங்க எந்திரத்தில் இருந்து தொழிலாளர்கள் பெருமளவில் அந்நியப்பட்டிருப்பதை பிரதிபலிக்கிறது