"நாங்கள் வாழ்வதற்கு போதுமான ஊதியம் பெற வேண்டும்": மத்திய மேற்கு முழுவதும் உள்ள போர்டு தொழிலாளர்கள் UAW இன் தலைவர் பதவிக்கு வில் லெஹ்மனை ஆதரிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

லெஹ்மனின் பிரச்சாரத்தைப் பற்றி மேலும் அறிய, WillforUAWpresident.org இனை பார்வையிடவும்.

UAW தலைவருக்கான வில் லெஹ்மனின் பிரச்சாரத்திற்கான ஆதரவாளர்கள் வார இறுதியில் மத்திய மேற்கு முழுவதும் அனைத்து பணிமுறை தொழிலாளர்களிடம் பேசினர். இதில் சிக்காகோவில் பொருத்தும் ஆலை, டியர்பார்ன் பாரவூர்தி ஆலை மற்றும் மிச்சிகனில் உள்ள வெய்னில் உள்ள மிச்சிகன் பொருத்தும் ஆலை ஆகியவை அடங்கும்.

போர்டு தொழிலாளர்கள் லெஹ்மனின் பிரச்சாரத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்

லெஹ்மனின் பிரச்சாரம் ஏற்கனவே சிக்காகோ மற்றும் டியர்போர்ன் ஆகிய இடங்களில் பிரபலமாகிவிட்டது. ஆனால் பிரபலமான ப்ரோன்கோ மற்றும் ரேஞ்சர் கனவூர்தியை உற்பத்தி செய்யும் வெய்னில் உள்ள போர்டு ஆலையில் சனிக்கிழமை முதலாவதாக ஆரம்பிக்கப்பட்டது. UAW அமைப்பிற்கு எதிரான கிளர்ச்சிக்கான லெஹ்மனின் அழைப்பைப் பற்றி தொழிலாளர்கள் நின்று கலந்துரையாடினர்.

கடந்த வியாழன் அன்று, ப்ரோன்கோ மற்றும் ரேஞ்சரருக்கான வெட்டும் உதிரிபாகங்களை தயாரிக்கும் மிச்சிகனில் ஏவார்ட்டில் உள்ள வென்ரா உதிரிப்பாகங்கள் ஆலையில் உள்ள ஆயிரம் தொழிலாளர்களில் 98 சதவிகிதம் வேலைநிறுத்த நடவடிக்கைக்கு வாக்களித்தனர். UAW வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாக, பங்குகளை குவிக்கும் கருவியாக, கடுமையான வெப்பத்திலும் வாரத்தில் ஏழு நாட்களும் கட்டாய கூடுதல் வேலைநேரத்தை விதிக்க நிறுவனத்தை அனுமதித்தது.

விஷயங்களை இன்னும் மோசமாக்க, ஆலையில் கோவிட்-19 வெடித்துள்ளது. ஆலையில் உள்ள வென்ட்ரா சாமானிய தொழிலாளர் குழுவின் உறுப்பினர் கடந்த வாரத்திற்குள் WSWS க்கு மூன்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் பற்றி புகாரளித்தார். அதற்கு மேல், கடந்த சில நாட்களில் இரண்டு தொழிலாளர்கள் முதலுதவி சாதனங்கள் பொருத்தப்பட்ட காவிகளில் வெளியேற்றப்பட்டனர். ஒருவருக்கு அதிக தண்ணீர் குடித்ததால் சிறுநீரகம் செயலிழந்தது, மற்றொருவருக்கு வெப்பத்தால் பக்கவாதம் ஏற்பட்டது. ஆயினும் UAW ஆல் ஆதரிக்கப்படும் நிறுவனம், வெப்ப இடைவேளைகளை அனுமதிக்க மறுக்கிறது.

ஒரு புதிய மின்சார வாகனக் கட்டிடம் முடிவடையும் தறுவாயில் உள்ள டியர்போர்ன் மிச்சிகனில் உள்ள பிரமாண்டமான போர்டு ரூஜ் வளாகத்தில், ஷடாஷா என்பவர் “தொழிற்சங்கம் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. சாமானிய தொழிலாளர்களை ஏன் பதவியில் இருத்தக் அமர்த்தக்கூடாது? எனக் கூறினார்.

அதே பணி மாற்றத்தின்போது, போருக்கு எதிரான லெஹ்மனின் நிலைப்பாட்டை பற்றி மேலும் அறிய குவாம் விரும்பினார். 'நான் அதை ஆதரிக்கிறேன்,' என்று அவர் கூறினார். “போரை நிறுத்த மற்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்களுடன் நாம் ஒன்றுபட வேண்டும். நாம் இங்கு மட்டும் செய்ய முடியாது. கனரக வாகனங்களில் உலகம் முழுவதிலுமிருந்து பாகங்கள் உள்ளன. நாமும் அனைத்து இடங்களிலிருந்தும் சக்திகளை இணைக்க வேண்டும்.

பத்து ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஒரு தொழிலாளி, “நாங்கள் ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். நான் 2007 இல் இங்கு தொடங்கினேன், 2008 இல் பணிநீக்கம் செய்யப்பட்டேன், 2010 இல் முழுநேர வேலைக்கு வந்தேன், ஆனால் ஓய்வூதியம் இல்லை. 2009 இல் ஒபாமா நிர்வாகம் UAW இன் உதவியுடன் வாகனத் தொழிற்துறையை மறுசீரமைத்து, தொழிலாளர்களின் ஓய்வூதியங்களை அழித்தது மற்றும் புதிதாக வேலைக்கு அமர்த்தப்படுபவர்களுக்கு ஊதியத்தை பாதியாகக் குறைத்தது.

'பணவீக்கம் பயங்கரமானது,' என்று அவர் மேலும் கூறினார். 'பெட்ரோல், உணவு, இது எல்லோரிடமும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாங்கள் வாழ்க்கை செலவு அதிகரிப்பு உதவியை (COLA) மீட்டெடுத்திருப்பதும் முக்கியம். நான் முதன்முதலில் பணியமர்த்தப்பட்டபோது, ஒரு மணிநேரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு டாலர் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இப்போது அது ஒரு வருடத்திற்கு ஒருமுறை 1,500 டாலர்களாகும். இது குறிப்பாக வரிகளுக்குப் பின்னர் பெரிய தொகை அல்ல.

'எனக்கும் எந்த அடுக்கு முறைகளிலும் உடன்பாடு இல்லை. இது ஒரு குறுகிய பயிற்சியாக இருக்க வேண்டும். முழு 'உள்ளெடுக்கும்' நடைமுறையும் ஒரு ஏமாற்றாகும். வேறு எந்த துறையும் அவ்வாறு செய்யாது. தற்காலிகமாக இருந்து முழு நேரமாக மாறவுள்ள இரண்டு வருடங்களாக இங்கு பணிபுரிபவர்களிடம் நான் பேசினேன்”.

சிக்காகோ பொருத்தும் ஆலைத் தொழிலாளி ஒருவர் பின்வருமாறு கூறினார்: “நான் பணவீக்கம் பற்றி கூறமுடியும். கோவிட் நோயின் போதான இழப்பிலிருந்து வெளியேற வாரத்தில் ஏழு நாட்களும் என்னால் முடிந்தவரை உழைத்து வருகிறேன். அதே சமயம் பணவீக்கத்தால் வெளியேறுவது இன்னும் கடினமாகிவிட்டது.

'நான் 15 டாலருக்கு சற்று அதிகமான தொகையுடன் தொடங்கினேன். இப்போது நான் சுமார் 30 டாலர் சம்பாதிக்கிறேன். ஊதியம் சரி, ஆனால் வீட்டுச் சந்தையில் அது போதாது. நான் ஒரு வீட்டை வாங்கத் தயாராக இருந்தேன். ஆனால் வீட்டுச் சந்தையில் இயலாது ... நீங்கள் எல்லா இடங்களிலும் பிழியப்படுகிறீர்கள். அவர்கள் எனது காசோலையில் மூன்றில் ஒரு பகுதியை முதலேயே இருந்து எடுக்கிறார்கள். 401(k) கூட மிகப் பெரிய தாக்குதலைப் பெற்றது. அதனால் அனைவரும் அழுத்தப்படுகிறார்கள். கடைசி ஒப்பந்தத்தில் கிடைத்த சிறியதொகை பணம், அடிப்படையில்தான் உள்ளதே தவிர, ஆனால் இறுதியில் வேலை பாதுகாப்பு அல்லது ஓய்வூதியம் இல்லை. எனவே ஓய்வூதியம் பெறுவது வெகு தொலைவில் இருப்பதாகத் தெரிகிறது”.

இன்று தொழிலாளர்கள் வசதியாக வாழ்வதற்கு என்ன தேவை என்று அவர் நினைக்கிறார் என்று கேட்டபோது, “ஒரு மணி நேரத்திற்கு 40 டாலர் என்பது மிகவும் நியாயமானது. நான் 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய சக ஊழியரிடம் பேசிக் கொண்டிருந்தேன். வரவிருக்கும் இந்த ஒப்பந்தத்தில் 40டாலர்/மணித்தியாலத்திற்கு கிடைக்காவிட்டால், வேறு இடத்தில் வேலை தேடுவதாக அவர் கூறினார். நான் நிச்சயமாக 40 டாலருக்கு நெருக்கமாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

“நீங்கள் வாரத்தில் 70 மணிநேரம் செலவிட வேண்டியதில்லை. நான் குழந்தையாக இருந்தபோது, 32 டாலர் நல்ல பணம். அதில் ஓய்வு பெற்று வீடு வாங்கலாம். ஆனால் இப்போது அது ஒன்றுமில்லை.'

லெஹ்மனின் பிரச்சாரக் கோரிக்கைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, “நான் வில்லின் பிரச்சாரத்திற்கு ஆதரவாக இருக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்கள் அனைவரும் அவ்வாறே இருப்பார்கள் என்று நினைக்கிறேன். எனது ஆதரவை அவர் நம்பலாம்”.

வெய்னில் உள்ள மிச்சிகன் பொருத்தும் ஆலையில் ஒரு தற்காலிக பணியாளர் பின்வருமாறு கூறினார்,“அவர்கள் எங்களுக்கு அதிக ஊதியம் வழங்காவிட்டால் நாங்கள் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும். முழு நேர வேலை செய்தும், கட்டணத்தை செலுத்த முடியாமல், இப்படி வாழ முடியாது.

“ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுக்க மாதத்திற்கு 1,900 டாலர்கள் செலவாகும். அது அபத்தமானது. நான் 4,000 டாலர்கள் செலுத்த வேண்டும். எனக்குத் தெரிந்த யாரும் அதைச் செலுத்த முடியாது.

'நான் ஒரு தாய், அதனால் பலருக்கு இது எவ்வளவு மோசமானது. அவர்கள் எவ்வளவு பதற்றமடைகிறார்கள் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. பாதை ஓரங்களில் மக்கள் பணத்திற்காக பிச்சை எடுப்பதை நான் பார்க்கும் அளவுக்கு இது உள்ளது. மேலும் 'அது எனக்கு ஒரு நல்ல இரண்டாவது உழைப்பாக இருக்கலாம்.' அது பைத்தியகாரத்தனமானது'

'எங்களில் சிலர் இரசாயனங்கள் மற்றும் அது போன்றவற்றை சுவாசிக்கும் பகுதிகளில் வேலை செய்ய வேண்டும்,' என்று தற்காலிக-பகுதிநேர பணியாளரான அவரது நண்பர் கூறினார். 'அது எங்களுக்கு நல்லதாக இருக்க முடியாது என்று எங்களுக்குத் தெரியும். அது நம்மை என்ன செய்கிறது என்று யாருக்குத் தெரியும்? ஒரு மணி நேரத்திற்கு 13 டாலருக்கு மேல் எங்களுக்குக் கொடுப்பதுதான் அவர்களால் குறைந்தபட்சம் செய்யக்கூடியதாகும். ஆனால் நாங்கள் இங்கே கைவிடப்பட்டிருப்பது போல் உணர்கிறேன்.

“வாடகை செலுத்த வேலைக்குச் செல்வதுதான் என்னால் முடியும் என்ற நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. மற்ற அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தவை, வாடகை கூட கடினமாகி வருகிறது. ஆனால் நாம் வாழ போதுமான ஊதியம் பெற வேண்டும் என்று நான் சொல்கிறேன். நாங்கள் ஒரு பைத்தியக்காரத்தனமான அதிகரிப்பு அல்லது எதையாவது கேட்கவில்லை. ஆனால் நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு 13 டாலரில் உண்மையில் வாழ முடியாது.'

அவரது சக ஊழியர் மேலும் கூறினார், “வில்லின் பிரச்சாரத்தைப் பற்றி அறிய ஆர்வமாக உள்ளேன். நான் இன்னும் எனது முதல் 90 நாட்கள் வேலையில் இருக்கிறேன். ஆனால் UAW இலிருந்து யாரும் ஆலையைச் சுற்றி வந்து எங்களைப் பற்றியோ அல்லது எதையும் பார்ப்பதையோ நான் பார்க்கவில்லை. எங்கள் பிரதிநிதிகள் யார் அல்லது அப்படி எதுவும் எனக்கு தெரியாது. சிறந்த நிலைமைகள், வாழ்க்கைச் செலவு, அது போன்ற விஷயங்களைப் பற்றி அவர்களிடமிருந்து நிச்சயமாக எந்த விவாதமும் இல்லை. ஆனால், நமக்குத் தேவையானவற்றுக்காகப் போராட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அவருடைய பிரச்சாரம் அதுதான் என்றால், நான் ஆர்வமாக உள்ளேன்.

'இப்போது எங்களுக்கு நிச்சயமாக போதுமான ஊதியம் இல்லை. நம்மில் பலர் அப்படி உணர்கிறோம் என்று நினைக்கிறேன்.'

மற்றொரு தொழிலாளி மேலும் கூறினார், 'வில் கூறுவது சுவாரஸ்யமாக தெரிகிறது. வாழ்க்கை செலவு அதிகரிப்பு உதவி (COLA) அதிகரிப்பு, பாதுகாப்பான பணி நிலைமைகளுக்கு நாங்கள் தகுதியானவர்கள். அடுக்கு முறைகளும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. எங்களுக்கு சிறந்த ஊதியம் மற்றும் அனைத்திற்கும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் இன்னும் எதையும் பார்க்கவில்லை. உயரும் செலவுகள் பைத்தியக்காரத்தனமானவை, இந்த விகிதத்தில் எரிவாயு மற்றும் உணவு செலவுகளை சமாளிக்க முடியாது. நான் இன்னும் தொழிற்சங்கத்திடம் இருந்து எதுவும் கேட்கவில்லை. வில்லின் பிரச்சாரத்தைப் பற்றி கேள்விப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”.

லெஹ்மனின் பிரச்சாரத்தைப் பற்றி மேலும் அறிய, WillforUAWpresident.org ஐ பார்வையிடவும்.

Loading