மாக் ட்ரக்ஸ் தொழிலாளியான வில் லெஹ்மன், UAW இன் சர்வதேச தலைவருக்கான தகுதியான வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வில் லெஹ்மனின் பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, WillForUAWPresident.org ஐ பார்வையிடவும்.

பென்சில்வேனியாவில் மாக் ட்ரக்ஸ் தொழிலாளியான வில் லெஹ்மன், ஐக்கிய வாகன தொழிற்சங்கத் (UAW) தலைவராக போட்டியிட தகுதியான வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். தேர்தல்களை மேற்பார்வையிடும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளரிடமிருந்து புதன் கிழமை பிற்பகல் லெஹ்மன் 'சர்வதேச அலுவலகத்திற்கான நம்பகரமான வேட்பாளர்' என்ற செய்தியை பெற்றார்.

'நம்பகரமான வேட்பாளர்' என்ற அந்தஸ்து, லெஹ்மன் பதவிக்கு போட்டியிடுவதற்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளார் என்பதாகும். வாக்குச்சீட்டில் இணைக்கப்பட ஜூலை 25 அன்று தொடங்கும் UAW மாநாட்டில் அவர் பிரதிநிதிகளால் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இந்தச் செய்தி பற்றி குறிப்பிட்ட லெஹ்மன், உலக சோசலிச வலைத் தளத்திடம், “அதிகாரத்தை சாமானிய தொழிலாளர்களின் கைகளில் வைப்பதற்கான எனது பிரச்சாரத்தில் இது ஒரு முக்கியமான படியாகும். நான் UAW ஐக் கட்டுப்படுத்தும் அதிகாரத்துவ அமைப்பை சீர்திருத்துவதற்காக அல்ல, மாறாக சாமானிய தொழிலாளர்களின் சக்திவாய்ந்த இயக்கத்தின் மூலம் அதை ஒழிப்பதற்காகவே போட்டியிடுகின்றேன்' என்றார்.

லெஹ்மன் மாநாட்டுப் பிரதிநிதிகளிடம் தன்னைப் பரிந்துரைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் தனது பெயரை வாக்குச்சீட்டில் பதிவிடக்கோருமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். 'தொழிலாளர்கள் பரந்த அளவிலான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும், மேலும் UAW அதிகாரத்துவத்தின் பெருநிறுவன சார்பு கொள்கைகளுக்கு சோசலிச மாற்றீட்டைக் கேட்கும் வாய்ப்பும் இருக்க வேண்டும்' என்று அவர் கூறினார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது பிரச்சாரத்தை அறிவிக்கும் ஒரு அறிக்கையில், பெருநிறுவன சார்பு UAW அமைப்பின் சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க லெஹ்மன் அழைப்பு விடுத்தார்; அனைத்து பேரம் பேசுதல், வாக்கு எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் மீது முழு சாமானிய தொழிலாளர்களின் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை; பாரிய ஊதிய உயர்வுகள், உயர்ந்து வரும் பணவீக்கத்தை எதிர்கொள்ள வாழ்க்கைச் செலவை ஈடுசெய்தல், அனைத்து அடுக்குமுறைகளையும் ஒழித்தல் மற்றும் முழு சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் உட்பட, தொழிலாளர்களுக்கு தேவையானவற்றிற்காக போராடும் திட்டம் அதில் அடங்கியிருந்தது.

அனைத்து UAW தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் சாமானிய தொழிலாளர்களின் குழுக்களை உருவாக்க லெஹ்மன் அழைப்பு விடுத்தார். மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியையுடன் இணைந்துகொள்ள அழைப்புவிட்டார்.

'சமீபத்திய பணவீக்க புள்ளிவிவரங்கள், கடந்த மாதம் நுகர்வோர் விலைகளில் 9 சதவிகிதத்திற்கும் அதிகமான அதிகரிப்பைக் காட்டுகின்றன,' என லெஹ்மன் புதனன்று கூறினார். இது 'UAW விதித்த சலுகை ஒப்பந்தங்களின் விளைவாக தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பேரழிவு நிலைமைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொழிலாளர்களுக்கு ஒரு புதிய மூலோபாயம் தேவை. பெருநிறுவனங்களும் UAWஅதிகாரத்துவங்களும் கட்டுபடியானது என்று கூறுவதற்கு அல்லாமல் நமக்குத் தேவையானவற்றிற்காகப் போராட வேண்டும்'.

UAW தலைவர் பதவிக்கான லெஹ்மனின் பிரச்சாரம் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் வர்க்கப் போராட்டத்தின் எழுச்சியின் நிலைமைகளின் கீழ் நடைபெறுகிறது. தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை தனது பிரச்சாரத்தின் மையமாக வைத்துள்ள லெஹ்மன், இந்திய மற்றும் ஜேர்மன் போர்டு தொழிலாளர்களை ஞாயிற்றுக்கிழமை இணையத்தின் ஊடாக சந்தித்தார்.

'பல தசாப்தங்களாக, UAW அதிகாரிகள் எங்களிடம் எங்கள் எதிரிகள் எங்கள் வேலைகள் மற்றும் நிலைமைகளைத் தாக்குவது பெருநிறுவனங்கள் அல்ல, மாறாக மற்ற நாடுகளில் உள்ள நமது சக தொழிலாளர்கள் என்று எங்களிடம் கூறியுள்ளனர்' என்று கூட்டத்திற்கு கருத்து தெரிவிக்கையில் லெஹ்மன் கூறினார். 'நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களே எதிரிகள் என்றும், மற்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் நமது சகோதர சகோதரிகள் என்றும், நமது எதிரிகள் அல்ல என்பதை தொழிலாளர்கள் அதிகரித்தளவில் காண்கிறார்கள்' என்றார்.

அமெரிக்காவில், கார் மற்றும் வாகன உதிரிப்பாக தொழிலாளர்களிடையே தொடர் போராட்டங்கள் உருவாகியுள்ளன. இந்த வார தொடக்கத்தில், லெஹ்மன் ஒரு அறிக்கையை வெளியிட்டு அனைத்துத் தொழிலாளர்களும் சமீபத்தில் UAW-ஆதரவு ஒப்பந்தத்தை 95 சதவீதத்தால் நிராகரித்த மிச்சிகன், ஏவார்ட்டில் உள்ள Ventra வாகன உதிரிப்பாக தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

'எனது வேட்புமனுத்தாக்கல் வாகன மற்றும் பிற தொழிலாளர்களின் எழுச்சியின் விளைவாகும்' என்று லெஹ்மன் கூறினார். 'இது சாத்தியமான பரந்த பார்வையாளர்களை சென்றடைவது மிகவும் முக்கியமானது.'

ஜூலை 2022 இல் UAW தலைவரான வில் லெஹ்மனுக்கு சிகாகோ போர்டு தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர் [Photo: WSWS]

லெஹ்மன் UAW மற்றும் அதற்கு அப்பால் உள்ள தொழிலாளர்களை தனது பிரச்சாரத்தை ஊக்குவிக்க அழைப்பு விடுத்தார். 'உரைகளை பெறுவதற்கு WillLehmanforUAW.org இல் பதிவுசெய்யுமாறு' அவர் கூறினார். “அதிகாரத்துவ அமைப்பிற்கு எதிரான சாமானிய தொழிலாளர்களின் கிளர்ச்சிக்கான போராட்டத்தில் முடிந்தவரை பல தொழிலாளர்களை நான் அணுகுவதை உறுதிசெய்ய, UAW உறுப்பினர்கள் மட்டுமல்ல, எவரும் எனது பிரச்சாரத்திற்கு நன்கொடை அளிக்கலாம்.

'ஒரு நம்பகரமான வேட்பாளராக அறிவிக்கப்பட்டது ஒரு முக்கியமான வெற்றி' என்று லெஹ்மன் மேலும் கூறினார். 'இப்போது எனது பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறுவதை உறுதி செய்ய நாங்கள் போராட வேண்டும்' என்றார்.

Loading