ஓய்வுபெற்ற ஜெனரல்கள் விமானம் பறக்கத்தடை மண்டலத்திற்கு அழைப்பு விடுக்கையில், ரஷ்யா மீது அமெரிக்கா "நிதியப் போரை" தீவிரப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாயன்று அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவிற்கு எதிரான தங்கள் 'நிதியப் போரை' முடுக்கிவிட்டு, ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் முக்கிய நடவடிக்கைகளை அறிவித்தன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ரஷ்யாவிலிருந்து அனைத்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதிகளையும் உடனடியாக தடை செய்வதாக அறிவித்தார். அதே நேரத்தில் பிரித்தானியா அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதிகளையும் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறுத்தும் திட்டத்தை அறிவித்தது.

இந்த ஆண்டு எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை மூன்றில் இரண்டு பங்கு குறைக்கும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் தனித்து அறிவித்தது.

இந்த அறிவிப்பு சந்தைகளில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியது. கச்சா எண்ணெய் 7 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 128 டாலர்களாகியது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உட்பட பெட்ரோலியப் பொருட்களுக்க்கான உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக ரஷ்யா உள்ளது.

கோப்பு - போலந்தின் ராடொம் நகர விமானக் காட்சியில் இரண்டு போலந்து விமானப் படைகள் ரஷிய தயாரிப்பான மிக் 29 விமானங்களை அமெரிக்க தயாரிப்பான F-16 போர் விமானகள் இரண்டுக்கு மேலேயும் கீழேயும் பறந்து சென்றது (AP Photo/Alik Keplicz, File)

ரஷ்ய மக்களை குறிவைக்கும் நடவடிக்கைகள் அமெரிக்க மக்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பைடென் தெளிவுபடுத்தினார். 'இது புட்டினுக்கு மேலும் வலியை ஏற்படுத்த நாங்கள் எடுக்கும் ஒரு நடவடிக்கையாகும், ஆனால் இங்கு அமெரிக்காவிலும் செலவுகள் இருக்கும்' என்றார்.

எரிசக்தி விலைகள் உயர்வதால் ஏற்படும் செலவுகளை தாங்கிக்கொள்ளுமாறு பைடென் அமெரிக்க மக்களுக்கு கூற முன்வந்தார். 'நான் ஆரம்பத்திலிருந்தே அமெரிக்க மக்களுடன் இது பற்றி பகிரங்கமாக பேசுவேன் என்று சொன்னேன். நான் முதலில் இதைப் பேசியபோது, சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு இங்கு அமெரிக்காவில் எங்களுக்கும் செலவுகள் உருவாகும் என்று கூறினேன்' என்றார்.

இந்த நடவடிக்கைகள், தேசிய பாதுகாப்பு குழுவின் முன்னாள் உறுப்பினரான ஜூலியா பிரைட்லேண்டர், ரஷ்யாவிற்கு எதிரான 'நிதியப் போர்' என்று அழைத்ததன் ஒரு பகுதியாகும். இது 'ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் போரில் இராணுவ மூலோபாயத்தை மாற்றுவதை' நோக்கமாகக் கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், இது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஒரு பெரிய பொருளாதார மந்தநிலையைத் தூண்டும் என்று அச்சுறுத்துகிறது. பைனான்சியல் டைம்ஸ் (FT) ஓபெக் (OPEC) இன் பொதுச்செயலாளர் முகமது பர்கிண்டோ, உலக எண்ணெய் சந்தையில் இருந்து ரஷ்யாவை வெட்டுவதால் ஏற்படும் விளைவுகளை சமநிலைப்படுத்த வழி இல்லை என்று எச்சரித்துள்ளார். மேலும் '7 மில்லியன் பீப்பாய்கள் ஏற்றுமதியை சமப்படுத்தக்கூடிய திறன் உலகில் தற்போது இல்லை' என்றார்.

பைனான்சியல் டைம்ஸ் 'உக்ரேன் மோதலால் தூண்டப்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளின் உயர்வு மற்றும் மாஸ்கோவைத் தண்டிக்கும் மேற்கத்திய நகர்வுகள் 1970 களில் இருந்து எரிசக்தி இறக்குமதி செய்யும் பொருளாதாரங்களைத் தாக்கும் மோசமான மந்த-வீக்க நிலை அதிர்ச்சியின் அச்சுறுத்தலை எழுப்பியுள்ளன' என எச்சரித்தது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு பதிலளித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், 2022 ஆம் ஆண்டு இறுதி வரை ரஷ்யா இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை நிறுத்தும் பொருட்களின் பட்டியலை தயாரிக்குமாறு தனது அமைச்சரவைக்கு அறிவுறுத்தினார். நோர்ட் ஸ்ட்ரீம் 1 குழாய் வழியாக ஐரோப்பாவிற்கு எரிவாயு ஏற்றுமதியை நிறுத்துவதாகவும் ரஷ்யா மிரட்டியது.

அமெரிக்க இராணுவம் மற்றும் வெளியுறவுக் கொள்கை ஸ்தாபகத்திற்குள் அமெரிக்காவிற்கு விமானங்கள் பறக்க தடைசெய்யும் மண்டலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் வேகமாக முடுக்கிவிட்ட பொருளாதாரப் போர் வந்துள்ளது. இது, வெள்ளை மாளிகை மற்றும் கிரெம்ளின் ஆகிய இரண்டும் தெளிவுபடுத்தியுள்ளது போன்று இந்த நடவடிக்கை நேட்டோவுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே போருக்கு வழிவகுக்கும்.

செவ்வாயன்று, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், இராஜதந்திரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒரு குழுவின் பகிரங்க கடிதத்தை Politico வெளியிட்டது. 'மனிதாபிமான பாதைகளுக்கான பாதுகாப்பில் தொடங்கி உக்ரேன் மீது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பறக்கத்தடை மண்டலத்தை விதிக்க வேண்டும்' என அவர்கள் அழைப்புவிட்டனர்.

கையொப்பமிட்டவர்களில் ஐரோப்பாவிற்கான அமெரிக்க இராணுவ முன்னாள் தளபதி ஜெனரலான ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் பென் ஹோட்ஜஸ் மற்றும் ஐரோப்பாவிற்கான நேட்டோவின் முன்னாள் உயர் நேச நாட்டுத் தளபதியான ஓய்வுபெற்ற ஜெனரல் பிலிப் ப்ரீட்லோவ் ஆகியோர் அடங்குவர்.

கையொப்பமிட்டவர்களில், டொனால்ட் ட்ரம்ப் மீதான முதல் பதவிவிலக்கல் குற்றச்சாட்டுக்களில் முன்னணி சாட்சிகள் பலர் இருந்தனர். இது முன்னாள் ஜனாதிபதி உக்ரேனிற்கு ஆயுதங்களைத் தடுத்து நிறுத்தியதாக கூறப்பட்டதை மையமாகக் கொண்டது.

கையொப்பமிட்டவர்களில் நேட்டோவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதரும் உக்ரேன் பேச்சுவார்த்தைகளுக்கான சிறப்புப் பிரதிநிதியும், பதவிவிலக்கலில் ட்ரம்பிற்கு எதிராக சாட்சியம் அளித்த முதல் சாட்சியும்மான குர்ட் வோல்கர் உம் அடங்குவர்.

உக்ரேனுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் வில்லியம் டெய்லரும் அவருடன் இணைந்தார். அவர் 'ஒரு புதிதான ஆக்கிரமிப்பு ரஷ்யாவுடனான மோதலின் உக்ரேன் முன் வரிசையில் உள்ளது' என்று அறிவித்தார்.

மற்றொரு முக்கிய பதவிவிலக்கல் குற்றச்சாட்டு சாட்சியான, கேர்னல் அலெக்சாண்டர் விண்ட்மன், விமானம் தடைசெய்யப்பட்ட மண்டலத்திற்கு தனது ஆதரவை கூறியுள்ளார். ஆனால் உத்தியோகபூர்வ கையொப்பமிட்டவர்களில் அவர் இல்லை.

மற்ற பாதுகாப்பு அதிகாரிகளில் முன்னாள் துணை பாதுகாப்புச் செயலாளரும், ஜெபேக்னியேவ் பிரெஜின்ஸ்கியின் மகனான இயன் பிரெசின்ஸ்கி, உலக விவகாரங்களுக்கான முன்னாள் துணைச் செயலர் பௌலா டொபிரியான்ஸ்கி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் எரிக் ஏடெல்மான் ஆகியோர் அடங்குவர்.

கடிதத்திற்கு பதிலளித்த வெள்ளை மாளிகை, கையொப்பமிட்டவர்கள் என்ன கோருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. 'பறக்கத்தடை மண்டலத்தை செயல்படுத்த ஒரு வரையறுக்கப்பட்ட பறப்பதை தடுக்கும் மண்டலம், சிறிய புவியியல் அமைப்பாக இருந்தாலும் கூட அதை நடைமுறைப்படுத்த தேவையானதாக இருக்கும். இது ரஷ்ய விமானங்கள் உங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதிக்குள் பறந்தால் சுட்டு வீழ்த்த தேவையானதாக இருக்கும்' என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறினார். 'எனவே அது ரஷ்யாவுடனான போருக்கு நம்மை இட்டுச்செல்லக்கூடிய ஒரு மோதல் நடவடிக்கையை நோக்கிய அடியாக இருக்கும் என எங்களுக்கு கவலைகள் இருக்கின்றன. இது ஜனாதிபதி செய்ய விரும்பாத ஒன்று' என அவர் மேலும் கூறினார்.

'ரஷ்யாவுடன் போர்' செய்ய விரும்பவில்லை என்று வெள்ளை மாளிகை வலியுறுத்திய போதிலும், மோதல் மூச்சடைக்கக்கூடிய வேகத்தில் அதிகரித்து வருகிறது.

செவ்வாயன்று, போலந்து தனது சோவியத்கால MiG-29 விமானங்கள் அனைத்தையும் அமெரிக்காவிற்கு மாற்றும் திட்டத்தை அறிவித்தது. மேலும் அவற்றை ஜேர்மனிக்கு பறக்கவிருப்பதாக தெரிவித்தது. அங்கிருந்து ரஷ்ய விமானங்களை எதிர்க்க உக்ரேனிய வான்வெளியில் பறக்கவிடப்படும்.

'போலந்துக் குடியரசின் அதிகாரிகள் ... உடனடியாகவும் இலவசமாகவும் தங்கள் MIG-29 ஜெட் விமானங்கள் அனைத்தையும் ஜேர்மனியிலுள்ள ரம்ஸ்ரைன் விமானத் தளத்திற்கு அனுப்பவும், அவற்றை அமெரிக்காவின் அரசாங்கத்தின் வசம் வைக்கவும் தயாராக உள்ளனர்' என போலந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடுமையான வார்த்தைகள் கொண்ட அறிக்கையில், பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, 'போலந்தின் முன்மொழிவு உறுதியான ஒன்று என நாங்கள் நம்பவில்லை.'

'ஜேர்மனியில் உள்ள அமெரிக்க/நேட்டோ தளத்திலிருந்து புறப்பட்டு வான்வெளியில் பறப்பது, உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுடன் போட்டியிடுவது முழு நேட்டோ கூட்டணிக்கும் தீவிர கவலையை எழுப்புகிறது' என்று அவர் மேலும் கூறினார்.

வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது, “ரஷ்ய இராணுவ பதிலடிக்கு ஆபத்தை விளைவிக்கும் போலந்தின் இந்த நடவடிக்கை விமானத்தை வழங்குவதற்கான பொறுப்பை அமெரிக்காவிற்கு மாற்றும் நோக்கத்துடன் உருவாகியது. வெளியுறவுத் துறையின் மூன்றாம் தர அதிகாரியான விக்டோரியா நூலாண்ட், செனட் வெளியுறவுக் குழுவின் முன் சாட்சியம் அளித்தபோது இது நிகழ்ந்தது.

நேட்டோ நாடுகள் உக்ரேனுக்கு விமானங்களை அனுப்புவதற்கு 'பச்சை விளக்கு' காட்டியிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை வெளியுறவுச் செயலர் அண்டனி பிளிங்கன் கூறியிருந்தும் அமெரிக்க இந்த பதில் வந்துள்ளது.

போலந்தின் முன்மொழிவுக்கு அமெரிக்காவின் பதில் இருந்தபோதிலும், உக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்புவதற்கான அமெரிக்க முயற்சியானது திகைக்க வைக்கும் மட்டத்தை அடைகின்றது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் 'வரலாற்றில் மிகப் பெரிய மற்றும் வேகமான ஆயுதப் பரிமாற்றங்களில் ஒன்றை அமெரிக்கா செய்கின்றது' என்று எழுதியது.

ஜேர்னல் மேலும் “போலந்தில், உக்ரேனிய எல்லையில் இருந்து 60 மைல் தொலைவில் அமைந்துள்ள ரெஸ்ஸோ மாகாண விமான நிலையத்தில் இராணுவ சரக்கு விமானங்கள் நிரம்பி வழிந்ததால், சனிக்கிழமையன்று சில விமானங்கள் விமான நிலைய இடம் கிடைக்கும் வரை சிறிதுநேரம் திருப்பிவிடப்பட்டன. நாட்டின் நெடுஞ்சாலைகளில், போலீஸ் வாகனங்கள் இராணுவ போக்குவரத்து டிரக்குகளை எல்லைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்கின்றன. ஏனைய வாகனத்தொடர்கள் மலைகள் வழியாக பனி மூடிய பின் சாலைகள் வழியாக உக்ரேனுக்குள் நழுவுகின்றன” எனக் குறிப்பிட்டது.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், 'உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான போட்டியானது சில வரலாற்று சமாந்தரங்களுடன் ஒரு விநியோக நடவடிக்கையாக உருவாகி வருகிறது' என்று கூறியது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இந்த ஆயுதத்தின் பெரும்பகுதி நவ-நாஜி ஆயுதக்குழுக்களுக்கு செல்கின்றது. அமெரிக்க காங்கிரஸின் 40 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக குறிப்பிட முயன்று தோல்வியுற்ற அசோவ் படைப்பிரிவிற்கு செல்கின்றது.

திங்கட்கிழமை, பெலாரஷ்ய எதிர்க்கட்சியுடன் இணைந்த நெக்ஸ்டா என்ற ஊடகம், நேட்டோ பயிற்றுனர்கள் நவ-நாஜி முத்திரைகளை அணிந்த அசோவ் படைப்பிரிவின் உறுப்பினர்களுக்கு NLAW டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை எவ்வாறு இயக்குவது குறித்து பயிற்சி அளித்த புகைப்படங்களை வெளியிட்டது.

Loading