மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இந்த கட்டுரை முதலில் ட்விட்டரில் வெளியிடப்பட்டது
உக்ரேன் மீதான படையெடுப்பை உறுதியாக எதிர்க்கும் ஒரு ரஷ்ய தோழர், ரஷ்யாவிற்குள் உள்ள ஆழ்ந்த முரண்பட்ட மனநிலையை விவரிக்கிறார். உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து, நேர்மறையான எதுவும் வெளிவர முடியாது என்ற பரவலான உணர்வு உள்ளது.
ஆனால், மாஸ்கோவில் ஒரு ஆட்சி மாற்றம் மற்றும் ரஷ்யா உடைவதற்கான நிலைமைகளை உருவாக்கும் ஒரு போரைத் தூண்டும் நோக்கத்துடன், நேட்டோ புட்டினை ஒரு மூலையில் தள்ளியுள்ளது என பலர் நம்புகிறார்கள்.
கிரெம்ளின் தேசியவாத மற்றும் பேரினவாத உணர்வுகளைத் தூண்டுவதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கிறது, ஆனால் இந்த முயற்சிகளின் வெற்றி குறைவாகவே உள்ளது. போர் ஒரு தற்காப்பு நடவடிக்கையாக பார்க்கப்படும் அளவிற்கு மட்டுமே அது ஆதரிக்கப்படுகிறது.
ஆனால், அதன் ஆதரவாளர்கள் மத்தியிலும் கூட உற்சாகம் அதிகம் இல்லை. மிகவும் பொதுவான உணர்வாக மனச்சோர்வு உள்ளது. ஒரு ஊழல் நிறைந்த தன்னலக்குழுவின் சார்பாக செயல்படும் கிரெம்ளினால், ரஷ்ய பொதுமக்களுக்கு ஒரு பிரபலமான வேண்டுகோள் விடுக்க இயலாது, நிச்சயமாக உக்ரேனிய பொதுமக்களைப் பற்றி சொல்லவும் தேவையில்லை.
புட்டின் தவறான கணக்கீடுகளை செய்துள்ளார் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். பரந்த அளவிலான உழைக்கும் மக்கள் மத்தியில், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும், முதலாளித்துவத்தின் மறுசீரமைப்புமே தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்த ஒரு பேரழிவாக பார்க்கப்படுகிறது.
ஆனால் ஒரு நேட்டோ வெற்றி, படுபயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர் — ஒருவேளை ரஷ்யா துண்டு துண்டாகலாம் மற்றும் நேட்டோ சக்திகளால் அதன் மூலப்பொருட்கள் திருடப்படலாம். பெரும்பாலான ரஷ்யர்கள் போர் முடிவடைவதைக் காண விரும்புகிறார்கள், ஆனால் நாட்டை அழிக்காமல் அதை எவ்வாறு அடைய முடியும் என்று அவர்களுக்குத் தெரியாது.
நான் கேட்டேன்: 'அமெரிக்க/நேட்டோ ஏகாதிபத்தியம், உக்ரேனிய பாசிஸ்டுகள் மற்றும் புட்டினின் ஊழல் மற்றும் பேரினவாத ஆட்சிக்கு எதிரான தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் 'மேற்கில்' உண்மையான போர்-எதிர்ப்பு இயக்கத்தின் மீது ரஷ்ய தொழிலாளர்கள் மற்றும் இடதுசாரி புத்திஜீவிகளின் தாக்கம் என்னவாக இருக்கும்?'
ரஷ்ய ட்ரொட்ஸ்கிஸ்ட் பதிலளித்தார்: 'நிச்சயமாக, ரஷ்ய தொழிலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் மாணவ இளைஞர்கள் இந்த வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்வதைத் தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் புட்டினின் அரசாங்கம் செய்யும். புட்டின் சோசலிசத்தை வெறுக்கிறார் மற்றும் அதன் ஆதரவாளர்களை தனது மிகவும் ஆபத்தான எதிரிகளாகக் கருதுகிறார்.
'ஆனால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஒரு உண்மையான போர் எதிர்ப்பு இயக்கம் உருவாகுமானால், அது ரஷ்யாவில் சமூக நனவின் மீது ஒரு சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு உலகளாவிய முன்னோக்கு இல்லாமல் இந்த நெருக்கடியிலிருந்து ஒரு வழியைக் காண்பதும், வன்முறையை நிறுத்துவதும் மற்றும் பேரழிவைத் தவிர்ப்பதும் சாத்தியமில்லை.
'அமெரிக்கா மற்றும் ஜேர்மனியில் உள்ள தொழிலாளர்கள் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ அச்சுறுத்தல்களை எதிர்க்கின்றனர் என்ற செய்தி, ரஷ்ய மக்களிடையே நம்பிக்கையை தூண்டும் மற்றும் கிரெம்ளினுக்கு எதிராக நிற்க அவர்களை ஊக்குவிக்கும் மற்றும் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவும் கோரும்.
'புட்டின் அவநம்பிக்கையில் இருந்து தனது பலத்தை பெறுகிறார். இது ரஷ்யாவின் மீதான வெறுப்பு நிறைந்த கண்டனங்கள் அவருக்கு உதவுகிறது, இது இந்த நாட்டில் உள்ள மக்கள், அனைத்து சக்திவாய்ந்த அமெரிக்காவால் ஆதிக்கம் செலுத்தும் விரோத உலகில் தனிமைப்படுத்தப்பட்டதாக நம்புவதற்கு வழிவகுக்கிறது.
'ஆனால் அந்த அவநம்பிக்கையானது ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தின் தோற்றத்தால் களையப்படும். தற்போதுள்ள சோவியத்துக்கு-பிந்தைய சூழலுக்குள் அது அடக்கப்பட்டிருந்தபோதும் கூட, அக்டோபர் புரட்சி ஒரு மாபெரும் நிகழ்வு என்ற ஆழமான உணர்வு மக்களிடையே உள்ளது.
“புட்டின் போரைத் தொடங்கியபோது லெனினை தாக்கினார். லெனினை தொழிலாள வர்க்கத்துக்காகவும் மனித சமத்துவத்திற்காகவும் போராடிய ஒரு சிறந்த வரலாற்று மனிதராக இன்றும் கருதும் மக்கள் மத்தியில் இது பிரபலமாகவில்லை.
'நிச்சயமாக, அங்கே புரட்சி பற்றிய குழப்பம் உள்ளது. ஆனால் 1917 புரட்சியானது, முதலாம் உலகப் போரில் ரஷ்யாவின் பேரழிவுகரமான ஈடுபாட்டிற்கு எதிரான எதிர்ப்பில் எழுந்தது என்பது முற்றிலும் மறக்கப்படவில்லை.
'எனவே, ஆம், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்தின் தோற்றமானது, ரஷ்யாவின் நிலைமையை தீவிரமான முறையில் மாற்றும்.'