50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை சுகாதார தொழிலாளர்கள் சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வேலைநிறுத்தம் செய்தனர்

இந்த்த மொழிபெய்ர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான சுகாதார தொழிலாளர்கள் அரசாங்கத்தினால் தமது கோரிக்கைகள் தொடர்ந்து மறுக்கப்டுகின்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 25, 26 ஆகிய தினங்களில் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தேசிய அளவிலான இப் பிரச்சாரத்தில் தாதியர்கள், உதவி மற்றும் இடைக்கால சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆய்வு கூட தொழில் நுட்பப் பணியாளர்களும் பங்குபற்றினர்.

பல தொழிற் சங்கஙகளின் கூட்டணியான சுகாதாரத் தொழில்வல்லுனர் கூட்ணியின் படி, 1,100 மருத்துவ மனைகள் மற்றும் 365 மருத்துவ சுகாதார சேவை அலுவலகங்களில் இருந்து தொழிலாளர்கள் இந்த வெளி நடப்பில் ஈடுபட்டனர்.

25 நவம்பர் 2021 அன்று கண்டி மருத்துவமணைக்கு வெளியில் சுகாதார ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். [Photo: WSWS Media]

ரனுக்கே சம்பள ஆணைக்குழு அறிக்கையால் பரிந்துரைக்கப்பட்டதன் படி சம்பள முரண்பாடுகளைத் தீர்த்தல், இரவு நேரப் பணிக்கான அதிகரிக்கப்பட்ட மாதாந்த கொடுப்பனவுகள், உயர்ந்த போக்குவரத்து மற்றும் திடீர் சேவை அழைப்புக்கான கொடுப்பனவு அதிகரிப்பு (ரூபா 3 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் வரை), சிறந்த மேலதிக நேரக் கொடுப்பனவுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பதவி உயர்வு நடைமுறைகள் ஆகியன பிரதான கோரிக்கைகளாக உள்ளடங்குகின்றன். ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்ப்படுத்தப்பட்டால், சுகாதார ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளத்தில் 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 ஆயிரம் வரை உயர்வு ஏற்படும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

பெதுச் சுகாதாரத் துறைத் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கடந்த வார நடவடிக்கையானது கடந்த மூன்று வாரங்களில் மூன்றாவது ஆகும். நவம்பர் 9 அன்று நடந்த சுகயீன விடுமுறை பிரச்சாரம் மற்றும் நவம்பர் 17 அன்று சுகாதார அமைச்சுக்கு வெளியே நடந்த வெகுஜனப் போராட்டம் இவற்றில் அடங்கும்.

நவம்பர் 9 எதிர்ப்பானது, பொதுச் சுகாதாரத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை தீர்ப்பதற்கு கடந்த வாரத்தில் அதனது வரவு செலவுத் திட்டத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டதை அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துவதற்கானது என அரச தாதிமார் சேவை சங்கம் தனது முகப் புத்தக பக்கத்தில் அறிவித்திருந்தது. அவற்றை வழங்காதுவிட்டால், மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற் சங்கம் எச்சரித்தது.

அரச தாதிமார் சேவை சங்கம் மற்றும் ஏனைய சுகாதாரத்துறை சங்கங்கள், தொழிற் சங்க நடவடிக்கையை முடித்துக்கொள்வதற்கான சாக்குப் போக்காக அரசாங்கத்தின் இந்த போலி வாக்குறுதிகளை பற்றிக்கொண்டன. சுகாதாரத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்துவரும் கோபத்தை உடைப்பதற்கும் கலைப்பதற்கும் சுகாதார தொழில் வல்லுனர்கள் கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த அதேவேளை, பரந்த பிரதிபலிப்பானது அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுவதற்கான தொழிலாளர்களின் உறுதிப்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்த வேலைநிறுத்தத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக சுகாதார அமைச்சர் கெஹெலியே ரம்புக்வெல்ல, சுகயீன விடுமுறைக் வேலை நிறுத்தத்தை கீழறுக்கும் முயற்சியில் அரச-சார்பு பொதுச் சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டார். பொ.சே.ஐ.தா.சங்கம், சுகாதார தொழில் வல்லுனர்கள் கூட்டமைப்பின் அங்கம் அல்ல.

அரசாங்க வரவு செலவு திட்டம் அமுல்படுத்தப்படும் போது சில கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளை அரசாங்கம் அதிகரிக்கும் என பௌத்த துறவியும் பொ.சே.ஐ.தா.சங்கத் தலைவருமான முருத்துட்டுவ ஆனந்த தேரருக்கு கெஹெலியே ரம்புக்வெல்ல பொய் வாக்குறுதியளித்தார்.

கடந்த வார நடவடிக்கையில் பொ.சே.ஐ.தா சங்கம் கலந்து கொள்ளாத போதும் கூடுதலான அதன் அங்கத்தவர்கள் இந்த வெலை நிறுத்தத்தில் ஈடுபட்டனரர். சுகாதார தொழில்வல்லுனர்கள் கூட்டமைப்பானது புதன்கிழமை இன்னொரு போராட்டத்தை நடத்தியது.

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களுக்கிடையில் பல்வேறுபட்ட தந்திரோபாய வேறுபாடுகள் இருப்பினும் இவை அனைத்தும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வழங்குவதற்கு அரசாங்த்தை நெருக்க முடியும் என்ற மாயையை பரப்புகின்றன.

சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எங்களை செவிமடுக்க போதுமான அளவில் இசைவாக இருந்திருந்தால் அடையாளப் போராட்டங்களை இலகுவாகத் தவிர்திருக்க முடியும் என சுகாதார தொழில் வல்லுனர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஸ் கடந்ந வார போராட்டத்தின் போது ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஸவுக்கு ஒரு பரிதாபகரமான வேண்டுகோளை விடுத்தார். பின்னர், இதை தீவிரப்படுத்தவும் மக்களை அசௌகரியப்படுத்தவும் அனுமதிக்க வேண்டாம் எனதெரிவித்த குமுதேஸ், இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சரிடம் கெஞ்சினார்.

சுகாதாரத் தொழிலாளர்களின் போராட்டமானது, ஏனைய துறையைச் சேர்ந்த தொழிலாளர்களுடைய போராட்டத்தினதும் குவிமையமாக உருவெடுக்கும் மற்றும் அவை அரசாங்கத்துடன் நேரடியான அரசியல் மோதலுக்கு இட்டுச் செல்லும் என்பதே குமுதேஸ் மற்றும் ஏனைய சுகாதாரத்துறை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பீதியாக உள்ளது

கடந்த வாரங்கள் ஆசிரியர்கள், துறைமுக, பெற்றோலிய, மின்சாரத் தொழிலாளர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களைக் கண்ட அதே வேளை, இன்று உயர்ந்த சம்பளத்துக்காக பத்தாயிரக்கணக்கான ஏனைய பொதுத் துறை ஊழியர்கள் ஒரு வார தொழிற் துறை நடவடிக்கை மற்றும் எதிர்ப்புகளை ஆரம்பிக்கின்றனர். இந்தப்போராட்டங்கள் சர்வதேச ரீதியாக அபிவிருத்தியடைந்து வரும் தொழிலாளர்களின் தொழிற் துறை நடவடிக்கை அலையின் பாகமாகும்.

கடந்த வாரம், சோசலிச சமத்துவக் கட்சியால் ஆரம்பிக்கப்பட்ட சுகாதாரத் தொழிலாளர்களின் சுயாதீனக் குழுவான சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு, போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான வேலைத்திட்டத்தைப் பற்றிய ஒரு அறிக்கையை விநியோகித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் தலையிட்டது.

“இந்த வருடம் மட்டும், சுகாதாரத் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்களினால் அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டங்களின் எண்ணிக்கை இருபத்தைந்தை கடந்தது. தனியாகவோ அல்லது கூட்டாகவோ தொழிற் சங்கங்களால் அழைப்பு விடுக்கபட்ட இந்த நடவடிக்கைகள் தொழிலாளர்களின் நலன்களுக்கு சேவையாற்றியதில்லை. மாறாக, தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் தேவைகளுக்காக சேவையாற்றி, தொழிலாளர்களை காட்டிக்கொடுத்தன என அந்த அறிக்கை கூறியது.

“’அரச துறையானது ஒரு தாங்க முடியாத சுமையாகும்’, ’குறைந்தது ஒரு வருடத்துக்கு மேல் அரசாங்கத் துறை ஊழியர்கள் மீது பொதுப் பணத்தை செலவு செய்வதற்கு இயலாது’ என தனது கடுமையான சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை சமர்பிக்கையில் நிதி அமைச்சர் பசில் இராஜபக்ஷ தெரிவித்தார். இந்த கருத்துக்கு உண்மையாக இருக்கும் அரசாங்கம், இப்போது சுகாதாரத் தொழிலாளர்கள் உட்பட பொதுத் துறை ஊழியர்கள் மீது ஒரு கூர்மையான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

“அரசாங்கம், 2021 ஆம் ஆண்டுக்கான அதன் வரவு-செலவு ஒதுக்கீட்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டுக்கான அதன் ஒதுக்கீட்டில் சுகாதாரத் துறையில் இருந்து ரூபா 6 பில்லியனை வெட்டியுள்ளது. கோவிட்-19 பரவல் அதிகரிக்கையில் கொடூரமான வைரஸை கட்டுப்படுத்துவதற்காகப் போராடுகின்ற துறைக்கான அடுத்த ஆண்டுக்கான செலவில் ரூபா 18 பில்லியனில் இருந்து ரூபா 12 பில்லியனாக, ரூபா 6 பில்லியன் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளது.

“கொரோனாத் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை போதாமையினதும் மத்தியில் நாம் ஏற்கனவே முகங் கொடுத்துள்ள கடினமான நிலமைகள், மேலும் மோசமடைந்துள்ளதோடு அத்தியவசியப் பொருட்கள் மீதான விலைக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியமையால் வாழ்க்கைச் செலவில் மேலதிக அதிகரிப்பையும் இப்போது நாம் முகங் கொடுக்கின்றோம்.

  • சுகாதார ஊழியர்களின் நடவடிக்கை குழுவின் அறிக்கையானது பின்வருவனவற்றுக்காக அழைப்பு விடுத்தது:
  • சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான தொற்று நோய்–சம்பந்தப்பட்ட மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் சகல வைத்தியசாலை ஊழியர்களுக்கும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.
  • சகல சுகாதாரத் தொழிலாளர்களுக்கும் கோவிட்-19 பாதுகாப்பு போக்குவரத்து வசதிகள்.
  • அதிகிரிக்கின்ற வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ப அதிகரிக்கும் ஊதிய திட்டம்
  • அதிகரிக்கின்ற கொரோன தொற்று நோயுடன் போராடுவதற்கு நவீன, உயர் தரத்திலான சுகாதார உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொதுச் சுகாதார சேவைக்கு பில்லியன் தொகைகள் ஒதுக்கப்பட வேண்டும்.

“இந்தக் கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் சுகாதாரத் தொழிலாளர்கள் ஏனைய துறைகளில் உள்ள தொழிலாளர்கள் பக்கம் திரும்பி, அவர்களுடன் ஐக்கியப்பட வேண்டும். அரசாங்கத்தின் சிக்கன தாக்குதல்களுக்கு சவால் விடுக்கவும் தோற்கடிக்கவும் எமக்கு ஒரு அரசியல் வேலைத் திட்டம் அவசியம்” என அந்த அறிக்கை மேலும் கூறியது.

“தொழிற்சங்கங்கள், இலாப முறைமையை பாதுகாக்கவும் தூக்கி நிறுத்தவும் தங்களால் முடியுமான அனைத்தையும் செய்து அரசாங்கத்துக்கான ஒரு தொழிற்துறை பொலிஸ்காரனாக செயற்படுகின்றன.

“நாம் ஒவ்வொரு வேலைத் தளங்களிலும், தொழிற்சங்கங்களிடம் இருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை அமைக்க வேண்டும். இவை, இந்த போராட்டத்தில் ஏனைய தொழிலாளர்களையும் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகளையும் அணுகவும் வழியமைக்கும்.

“நாம் ஒரு சிலரின் இலாபங்களுக்காக அன்றி மனிதத் தேவையின் அடிப்படையில் உற்பத்திகளை மறு ஒழுங்குபடுத்துவதற்காக போராடுகின்ற ஓர் வேலைத்திட்டத்தை முன் வைக்கின்றோம். இது சர்வதேச சோசலிசத்துக்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் வேலைத் திட்டமாகும்.

உலக சோசலிச வலைத் தள நிரூபர்கள் பல வைத்தியசாலைகளில் சுகாதாரத் தொழிலாளர்களுடன் பேசினர். அவர்கள் சுகாதார ஊழியர்களின் நடவடிக்கை குழுவின் பிரச்சாரத்துக்கு தமது ஆதரவைத் வெளிப்படுத்தினார்கள்.

25 நவம்பர் 2021 அன்று அனுராதபுரத்தில் சுகாதார ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம். [Photo source: Facebook-GNOA]

தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட நடவடிக்கைக்கான தேவையை வலியுறுத்தி கம்பொல வைத்திய சாலையில் பணிபுரியும் ஒரு தாதி குறிப்பிடுகையில், “நாம் போராடுவதென்றால் ஒற்றுமைப்பட்டு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். போராட்டங்களும் பிரச்சாரங்களும் ஒரு சரியான வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். நாம் தொழிற் சங்கஙகளின் ஊடாக எமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது. எம்மை அவை கட்டுப்படுத்துகின்றன்,” என தெரிவித்தார்.

அதே வைத்தியசாலையில் ஒரு ஆண் தாதி, தொழிலாளர்களின் ஐக்கியத்துக்கு தொழிற் சங்கங்கள் பிரதான தடையாக உள்ளதாக கூறினார். “தொழிற்சங்கங்கள், முதலாளித்துவ வர்க்கத்துடன் எந்த ஒரு மோதலையும் விரும்பாததால் அவை எமது போராட்டங்களை காட்டிக் கொடுக்கின்றன. சுகாதாரத் தொழிலாளர்கள் 25 வருடங்களுக்கு முன் தொழிற்சங்கங்களினால் தீர்க்கப்படாத அதே பிரச்சினைகளையே இன்னமும் முகங்கொடுக்கின்றனர்.

கண்டி மனநல தேசிய வைத்தியசாலை தாதி ஒருவர் குறிப்பிடுகையில், “தொழிற்சங்கங்களினால் கோரப்பட்ட அற்ப தொகை வழங்கப்பட்டாலும், அதை வைத்துக்கொண்டு இன்று நாம் வாழ முடியாது. ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ஒழுக்கமான வாழ்க்கைக்கு போதுமான சம்பள அதிகரிப்புகள் அவசியம்,“ என்றார்.

Loading