ஒரு பூகோள பேரழிவான -- தொற்றுநோய்க்கு இந்திய ஆளும் உயரடுக்கின் குற்றவியல் பதிலிறுப்பு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கீத் ஜோன்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியின் (கனடா) தேசிய செயலாளராக உள்ளார். தெற்காசியாவின் அரசியல் மற்றும் வரலாறு குறித்து உலக சோசலிச வலைத் தளத்திற்காக அவர் விரிவாக எழுதியுள்ளார். மே 1 அன்று WSWS மற்றும் ICFI நடத்திய 2021 சர்வதேச மே தின இணைய வழி பேரணியில் அவர் இந்த கருத்துக்களை வழங்கினார்.

2021 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கீத் ஜோன்ஸ் ஆற்றிய உரை

கோவிட்-19 தொற்றுநோய் உலகத்தை நாசமாக்கியுள்ளது, வெகுஜன துன்பங்களையும் மரணத்தையும் விவரிக்கும் கொடூரமான சொற்களின் அகராதியை விரைவாக வெறுமையாக்கியது. ஆனால் இந்தியாவில் இப்போது விரிவடையும் பேரழிவு, எந்த அளவுகோளில் பார்த்தாலும் பூகோள தொற்றுநோயின் ஒரு பயங்கரமான புதிய கட்டத்தை குறிக்கிறது.

பணியாளர்கள், படுக்கை, மருந்து மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இந்தியாவின் தலைநகரான டெல்லி மற்றும் நிதி மையமான மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாத நோயாளிகளின் அறிக்கைகளை தெற்காசியாவிற்கு வெளியில் இருந்து நீங்கள் பார்த்திருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள்; மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம் முடிந்த மருத்துவமனைகளில் மூச்சுத்திணறலில் இறக்கும் நோயாளிகளின்; மற்றும் தகனம் அல்லது அடக்கம் செய்ய காத்திருக்கும் சடலங்களும் மலை போல் குவிந்திருந்தன. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், ஒரு நாளைக்கு 24 மணிநேரம் இயங்க நிர்ப்பந்திக்கப்பட்டதால் எரியூட்டிகளின் உலோக கட்டுகள் விரிசல் அடைகின்றன மற்றும் உருகுகின்றன.

ஏப்ரல் 4 முதல், ஏழு மாதங்களில் இந்தியா முதன்முறையாக 100,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுநோய்களைப் பதிவு செய்தபோது, மொத்த COVID-19 பாதிப்புகள் 6 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளன என்று அதிகாரபூர்வ அரசாங்கத்தின் எண்ணிக்கை தெரிவிக்கிறது. கடந்த மூன்று நாட்களில் 10,000 க்கும் அதிகமானோர் உட்பட 45,000 க்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் உள்ளன. இந்தியாவின் ஏழு நாள் சராசரி தினசரி புதிய பாதிப்புகள் இப்போது 350,000 ஐ விட அதிகமாக உள்ளன, அல்லது 16 மாதங்களுக்கு முன்பு வைரஸ் முதலில் சீனாவில் தோன்றியதிலிருந்தது மொத்தம் COVID-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை விட மூன்றரை மடங்கிற்கு அதிகமாகும்.

இந்தியாவில் இப்போது விரிவடைந்துவரும் மனித பேரழிவினால், இழந்த உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டதை பற்றிய உண்மையான உணர்வை அப்பட்டமான புள்ளிவிவரங்களால் கொடுக்க முடியாது. ஐரோப்பா அல்லது அமெரிக்காவை பற்றி ஒருவர் பேசினால் இது சமமான உண்மையாக இருக்கும்.

இந்தியாவின் விஷயத்தில் மட்டுமே, புள்ளிவிவரங்கள், நெஞ்சை பிழிகிறதாக இருந்தாலும் COVID-19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைத்து காட்டப்படுகின்றன. இந்தியா முழுவதும் பரவியுள்ள வட்டாரங்களில் உள்ள அதிகாரிகள் வழங்கிய இறப்பு புள்ளிவிவரங்களை தகனம் மற்றும் கல்லறை பதிவுகளுடன் ஒப்பிடும் ஆய்வுகள் சமீபத்திய வாரங்களில் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை ஐந்து, 10 மடங்கு கூட அதிகமாக இருக்கலாம் என்று காட்டுகின்றன.

மேலும், உத்தியோகபூர்வமாக செயலிலுள்ள தொற்றுநோய்களின் எண்ணிக்கை--தற்போது 3 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது -பாழடைந்து போன இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பு முறை மற்றும் அதன் மக்களின் வறுமை மற்றும் மோசமான ஆரோக்கியம்– நன்றாக இருக்கும் நேரங்களிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் தான் இருக்கின்றனர், இவை எடுத்துக்காட்டுவது இந்தியாவின் இரண்டாவது அலை என்று அழைக்கப்படுவது அதன் ஆரம்ப கட்டங்களில் மட்டுமே உள்ளது என்பதைக் குறிக்கிறது.

இது உலகெங்கிலும் உள்ள மக்களை அச்சுறுத்தும் ஒரு பூகோள பேரழிவு என்பது கோவிட் -19 இன் புதிய, அதிக தொற்று மற்றும் தடுப்பூசி-எதிர்ப்பு விகாரங்கள் தோன்றுவதன் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது, இதில் இந்தியாவின் இரட்டை-விகாரி மாறுபாடு என்று அழைக்கப்படுவதும் உள்ளடங்கும்.

ஆயினும், மோடி, அவரது தீவிர வலதுசாரி, இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி மற்றும் இந்திய ஆளும் வர்க்கம் அடமாக இருக்கின்றனர்: மனித உயிரை காட்டிலும் முதலாளித்துவ இலாபத்திற்கு முன்னுரிமை அளிப்பதில், அவர்களின் சுயநல வர்க்க நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருப்பதை காட்டுகிறது. "நோயை விட குணமடைதல் மோசமாக இருக்கக்கூடாது" என்ற படுகொலை முதலாளித்துவ மந்திரத்தின் சொல்லமைப்பை மாற்றி, கடந்த வாரம் தேசத்திற்கு உரையாற்றிய மோடி, "இன்றைய சூழ்நிலையில், நாம் நாட்டை பொது முடக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்" என்று அறிவித்தார். அதாவது, மோடியின் மற்றும் அவரது அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோள் பொருளாதாரத்தை "திறந்து” வைத்திருப்பதே, உயிர்களைக் பாதுகாப்பதல்ல.

இந்தியா வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரு நாடு. ஆனால் பரந்தளவிலான வறுமை மற்றும் பின்தங்கிய நிலை இருந்தபொழுதிலும், இது குறிப்பிடத்தக்க தொழில்துறை திறன், முன்னேறிய தொழில்நுட்பம் மற்றும் பரந்த செல்வத்தின் சேர்மங்களைக் கொண்டுள்ளது. தொற்றுகளின் போது ஒரு சிலரின் கைகளில் செல்வம் இன்னும் குவிந்திருக்கிறது. ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் பில்லியனர்களின் செல்வம் கிட்டத்தட்ட இரு மடங்காக 596 பில்லியன் டாலராக இருந்தது.

இருப்பினும் இந்த வளங்கள் எதுவும் தொற்றை எதிர்த்து போராட அணிதிரட்டப்படவில்லை. இதற்கு, அரசியல் ஸ்தாபனம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும் குற்றவாளிகள் ஆவர். பல தசாப்தங்களாக, இந்திய அரசு, காங்கிரஸ் கட்சி அல்லது பாஜக தலைமையிலான யூனியன் அரசாங்கங்களின் கீழ் இருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தை மட்டுமே சுகாதாரத்துக்காக செலவிட்டுள்ளது. ஆபத்தான வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவதற்கும், உழைக்கும் மக்களுக்கு வீட்டிலேயே இருப்பதற்கான சமூக ஆதரவை வழங்குவதற்கும் பாஜக தலைமையிலான அரசாங்கங்களை போலவே எதிர்க் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கங்களும் கடுமையாக எதிர்க்கின்றன.

ஆளும் வர்க்கத்தின் சமூக நோய் எதிர்ப்பு கொள்கை என்பது, இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகள் மீதான தீவிரமான வர்க்கப் போர் தாக்குதலின் வெட்டு விளிம்பாகும். பொருளாதாரத்துக்கு புத்துயிர் ஊட்டவேண்டும் என்ற பெயரில், மோடி அரசாங்கம் பொது சொத்துக்களை மிக வேகமாக விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது, வேளாண் வணிகச் சார்புச் சட்டங்கள், மேலும் ஆபத்தான ஒப்பந்த-தொழிலாளர் மறு வேலையை மேலும் ஊக்குவிப்பது ஆகிய தாக்குதல்களுக்காக தொழிலாளர் குறியீட்டைத் திருத்தியது மற்றும் பெரும்பாலான தொழிலாளர் வேலை நடவடிக்கைகளை சட்டவிரோதமாக்கியது. அதே நேரத்தில், இது சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் உந்துதலுடன் இந்தியாவை மேலும் ஒருங்கிணைத்து, வாஷிங்டன் மற்றும் அதன் பிரதான ஆசிய-பசிபிக் நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் புதிய நாற்கர, முத்தரப்பு மற்றும் இருதரப்பு இராணுவ-மூலோபாய உறவுகளை உருவாக்கியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்திய தலைமையிலான உலக முதலாளித்துவ ஒழுங்கில் முழு ஒருங்கிணைப்புக்கு ஆதரவாக மற்றும் சோசலிசம் என்று இழிந்த முறையில் முத்திரை குத்திய அதன் அரசு தலைமையிலான வளர்ச்சித் திட்டங்களை இந்திய முதலாளித்துவம் கைவிட்டு 30 வருடங்களை அடுத்த மாதம் குறிக்கிறது. இந்தியாவின் முதலாளித்துவ உயர்வு குறித்து மேற்கத்திய ஊடகங்களால் எதிரொலிக்கப்பட்ட மற்றும் பெருக்கப்பட்ட அனைத்து ஊக்கங்களுக்கும் பின்னால் இந்திய முதலாளித்துவம் என்ன செய்துள்ளது என்பது குறித்து இப்போது உலகம் அப்பட்டமாக பார்க்கிறது. வெகுஜனங்கள் தேவை, பசி மற்றும் மரணம் என்ற நிலைக்கு கீழே தள்ளப்பட்டிருக்கும் போது முகலாயர்களையோ அல்லது மிகவும் கொடூரமான பிரிட்டிஷ் காலனித்துவ கிழக்கிந்திய கம்பெனியையோ வெட்கப்பட வைக்கும் அளவுக்கு செல்வத்தின் மீது ஒரு சிறிய சிறுபான்மை பேராசையுடன் நிற்கிறது. மோடி, குஜராத்தில் 2002 முஸ்லீம்-விரோத இன படுகொலையைத் தூண்டுவதன் மூலம் முதன்முதலில் தேசிய முக்கியத்துவத்திற்கு வந்த இந்து-மேலாதிக்கவாத குண்டர், அவர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEO) மற்றும் பில்லியனியர்களின் (பெரும் கோடீஸ்வரர்களின்) பொருத்தமான அரசியல் பிரதிநிதியாக திகழ்கிறார்.

எவ்வாறாயினும், கடந்த மூன்று தசாப்தங்கள் வெறுமனே வீணாக போய்விடவில்லை. ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் பிற இடங்களைப் போலவே, முதலாளித்துவ பூகோளமயமாக்கல் இந்தியாவில் தொழிலாள வர்க்கத்தின் பருமனையும் சமூக சக்தியையும் பெருமளவில் அதிகரித்துள்ளது, மேலும் உற்பத்தி செயல்முறை மூலம் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் ஏகாதிபத்திய மையத்தில் உள்ள அதன் வர்க்க சகோதர சகோதரிகள் உட்பட, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் அமைப்புரீதியாக பிணைக்கப்பட்டுள்ளது, .

மோடி ஆட்சிக்கு மற்றும் இந்திய முதலாளித்துவத்தின் காட்டு மிராண்டித்தனத்திற்கு எதிரான பரந்த சமூக கோபம் சமீபத்திய மாதங்களில், உற்பத்தி வேகத்தை அதிகரித்தல், வறுமை ஊதியங்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அல்லது செவிலியர்களுக்கு சம்பந்தமான பிபிஇ உள்ளிட்டவற்றுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், டொயோட்டா வாகனத் தொழிலாளர்கள், கர்நாடக பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் டெல்லி செவிலியர்களின் வேலைநிறுத்த அலைகளில் வெடித்தது. கடந்த நவம்பர் 26ல் இந்தியா முழுவதும் பத்து மில்லியன் கணக்காணவர்கள் ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தில் இணைந்தனர்.

ஆனால், இந்தியாவில் உள்ள தொழிலாள வர்க்கம், எங்கும் போலவே அதன் பெயரில் பேசுவதாகக் கூறும் அமைப்புகளுக்கு எதிராக வருகின்றது என்ற உண்மையை எதிர்கொள்கின்றன, அவை வர்க்கப் போராட்டத்தை அடக்குவதற்கான முதலாளித்துவத்தின் கருவிகளாக இருக்கின்றனவே அன்றி அவற்றை முன்னெடுத்துச் செல்பவை அல்ல. இரட்டை ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்க அமைப்புகளும் ஆளும் வர்க்கத்தை 30 ஆண்டுகாலமாக இந்தியாவை பூகோளரீதியான மூலதனத்திற்கான பிரதான மலிவு கூலி புகலிடமாக மாற்றுவதற்கான உந்துதலுக்கு ஆதரவளித்தன், ஒன்றன் பின் ஒன்றாக வலதுசாரி தேசிய அரசாங்கங்களுக்கு முட்டுக் கொடுத்தன மேலும் அவர்கள் தடையின்றி அழைக்கும் "முதலீட்டாளர் சார்பு" கொள்கைகளை அவர்கள் பதவி வகித்த மாநிலங்களில் நடைமுறைப்படுத்தினர். இந்தியாவில் விவசாயிகளின் ஐந்து மாதகால வெகுஜன போராட்டத்திற்கு ஸ்ராலினிஸ்டுகள் வாயளவில் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் அதை தொழிலாள வர்க்கத்திலிருந்து தனிமைப்படுத்தவும், அதை தங்கள் தேர்தல் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியுடனான பிற மோசமான சூழ்ச்சிகளுடன் இணைக்கவும் வேண்டிய எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள்-- இது கவனிக்கப்பட வேண்டியது, காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டின் பெரும்பகுதியை சீனா தொடர்பாக மோடி மிகவும் மென்மையாக இருப்பதற்காக அவரை தாக்குவதில் நேரத்தை செலவிட்டது.

சர்வதேச தொழிலாளர் கூட்டணியுடன் இணைக்கப்பட்ட சாமானிய தொழிலாளர் குழு உட்பட, சோசலிச மற்றும் சர்வதேச திட்டத்தினால் உயிரூட்டப்பட்ட வெகுஜன போராட்டத்தின் புதிய அமைப்புகளை இந்திய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உலகெங்கிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் இணைந்து ஒரு புதிய வெகுஜன போராட்டத்தின் அமைப்புகளை கட்டவேண்டும்

முதன்மையான பணி தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகரமான கட்சியை அல்லது கட்டவேண்டும் –அது நான்காம் அகிலத்தின் அனைத்துலக்க குழுவின் ஒரு இந்திய பிரிவை கட்டுவதாகும். ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சிக்கு உயிரோட்டமாக இருந்த திட்டத்தின் அடிப்படையில், நிரந்தரப் புரட்சி திட்டத்தில் அது தொழிலாள வர்க்கத்தை ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக அணிதிரட்டவும் கிராமப்புற உழைப்பாளர்களையும் அனைத்து ஒடுக்கப்படும் மக்களையும் இந்திய முதலாளித்துவத்திற்கும் அதன் அனைத்து பிரதிநிதிகளுக்கும் எதிராக அணிதிரட்டப் போராடும், தொற்றுநோய், சமூக சமத்துவமின்மை மற்றும் போர் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டம், சாதி ஒடுக்குமுறையை ஒழித்தல் மற்றும் வகுப்புவாத பிற்போக்குனத்தை தோற்கடிப்பது வரை-- இந்தியவெகுஜனங்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகள் எதுவும்— இந்திய மற்றும் உலக முதலாளித்துவத்திற்கு எதிராக பூகோள சமூக பொருளாதார வாழ்வை சோசலிச மறுசீரமைப்பு செய்யும் போராட்டத்திற்கு வெளியே தீர்க்க முடியாது.

Loading