மேற்குக் கரையில் இஸ்ரேலிய தாக்குதலானது, சியோனிசக் குடியிருப்புகளை விரிவுபடுத்துவதற்கும் மேற்குக் கரையை இணைப்பதற்குமான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. 1993 ஆம் ஆண்டு ஒஸ்லோ ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டை முழுமையாகக் கொண்ட மற்றும் பாலஸ்தீனப் பிரதேசத்தின் 60 சதவீத பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதி C இலிருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
ட்ரம்பும் எலோன் மஸ்க்கும் சமூக அழிப்பு மற்றும் நிர்வாக சர்வாதிகாரம் என்ற தங்கள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும்போது, ஜனநாயகக் கட்சி முடங்கிப் போயுள்ளது.
இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு உலகப் போர் பற்றிய வனப்புரைகள் இருந்தபோதிலும், அமெரிக்கா நீண்டகாலமாக மத்திய கிழக்கிலும் ஆசியாவிலும் பிற்போக்குத்தன இஸ்லாமியக் குழுக்களைப் பயன்படுத்தி வந்துள்ளது. சிரியாவில், இது கூட்டு சேர்ந்துள்ள HTS ஆட்சியுடன் தொடர்புடைய வேர்கள் நேரடியாக அல்-கொய்தாவிடம் செல்கின்றன.
போலி இடது குழுக்களால் ஆதரிக்கப்பட்டுவரும் இந்தப் போரில், கிட்டத்தட்ட 500,000 மக்கள் தங்களது உயிர்களை பலி கொடுத்துள்ளனர். இதே காலகட்டத்தில் உலகளவில் இடம்பெற்றுவரும் மோதல்களில், இந்த மரணங்கள் கிட்டத்தட்ட சரிபாதியாகும்.
உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் முன்னொருபோதும் இல்லாத விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திகளுக்கு இடையே, 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில், பலரால் தங்களுக்கு தாங்களே உணவளிக்க முடியவில்லை என்பது முதலாளித்துவ அமைப்புமுறை மீதான ஒரு கடுமையான குற்றச்சாட்டாகும்.
இஸ்ரேல் வங்கி மற்றும் இஸ்ரேலிய நிதி அமைச்சகத்தின் தகவல்படி, போரின் முதல் ஆறு மாத காலத்திற்கான செலவு, இது பல மாதங்களுக்கு தொடரும் என்றும், வடக்கில் ஹெஸ்பொல்லா மற்றும் செங்கடலில் ஹௌதிகளுக்கு எதிரான ஒரு முழுவீச்சிலான போராக தீவிரமடைவதற்கான ஒவ்வொரு அறிகுறியையும் காட்டுகிறது என்றும், மார்ச் இறுதிக்குள் 70 பில்லியன் ஷெக்கல்களுக்கும் (73 பில்லியன் டாலர்) அதிகமாக எட்டும் என்றும் கூறியுள்ளது.
இந்தப் பெருந்தொற்று நோய் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகின் மிகப் பெரிய மந்தநிலையைத் துரிதப்படுத்தியது. 2007-2008 உலக நிதி நெருக்கடியின் போது இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக உலக உற்பத்தி வீழ்ச்சியடைந்ததுடன், உலக வேலையின்மை விகிதங்கள் பெருந்தொற்று நோய்க்கு முந்தைய நிலைகளுக்கு இன்னும் திரும்பவில்லை.
அமெரிக்காவும் இங்கிலாந்தும் பிப்ரவரி 2 முதல் ஈராக் மற்றும் சிரியாவில் 100 க்கும் மேற்பட்ட ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவலர்களின் குட்ஸ் படை மற்றும் ஈரான் ஆதரவு போராளிகளின் இலக்குகளை தாக்கியதன் மூலம், லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கின்றன.
இன்றைய சம்பவங்கள், பாலஸ்தீனத்தின் தற்போதைய அரபு மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன் மூலம் 1948 இல் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டதன் விளைவும் முக்கால் நூற்றாண்டு கால கொடூரங்கள் மற்றும் வெகுஜன படுகொலைகளின் விளைவுமாகும்.
இன்றைய சம்பவங்கள், பாலஸ்தீனத்தின் தற்போதைய அரபு மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன் மூலம் 1948 இல் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டதன் விளைவும் முக்கால் நூற்றாண்டு கால கொடூரங்கள் மற்றும் வெகுஜன படுகொலைகளின் விளைவுமாகும்.
"இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை எதிர்த்துப் போராடுவது" என்ற பேரில், அனைத்துப் போர்களும் தலையீடுகளும் இருக்கின்றன. லிபியா மீது 2011ல் அமெரிக்க/நேட்டோ மேற்கொண்ட போரில் ஒரு பிணாமி இராணுவமாக ஏகாதிபத்திய சக்திகளால் இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது சஹெல் பிராந்தியம் முழுவதும் அழிவை ஏற்படுத்தும் இவர்கள், வாஷிங்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் தயாரிப்பு என்ற உண்மையை ஏகாதிபத்திய சக்திகள் புறக்கணிக்கின்றன.
நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை, அறிவு மற்றும் ஒழுக்கமான வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று அடிப்படை பரிமாணங்களில், சராசரி சாதனைகளை அளவிடும் உலகளாவிய மனித வளர்ச்சிக் குறியீட்டில் (HDI) அதிர்ச்சியூட்டும் சரிவு ஏற்பட்டுள்ளது. இது முதன்முறையாக, தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக குறைந்துள்ளது.
ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் நைஜரின் முன்னாள் காலனித்துவ எஜமானரான பிரான்சின் நிதிய உயரடுக்கின் நலன்களுக்கு எதிரான எதிர்ப்பை நசுக்குவது பற்றி, அதன் ஆட்சிக்கு எந்த வருத்தமும் இல்லை, இந்த ஆட்சிக்கவிழ்ப்பு பிராந்தியத்தில் ஏகாதிபத்திய சக்திகளின் சூறையாடும் நலன்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற கணிசமான அச்சம் உள்ளது.
இஸ்ரேல் விரும்பத்தகாத நாசகார செயல்களை ஜெனினில் நடத்தியுள்ளது. பாலஸ்தீனியப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை எதிர்க்கும் ஆயுதமேந்திய குழுக்களை மற்றும் அவர்களின் ஆயுதக் கிடங்குகளை கைப்பற்றுவதும், முகாமில் வசிப்பவர்களின் வாழ்க்கையை சகிக்க முடியாதளவு ஆக்குவதும், மேற்குக் கரை முழுவதிலும் உள்ள பொதுமக்களை பயமுறுத்தி மிரட்டுவதும்தான் இஸ்ரேலின் குறிக்கோளாக இருக்கிறது.
உலகிலுள்ள யூதர்களின் புகலிடமாக இருக்கக்கூடிய ஒரு தேசிய அரசு என்ற சியோனிச கற்பனாவாதமானது, பொலிஸ் அரசு ஆட்சி வடிவங்கள், பாசிசத்தின் தோற்றம், உள்நாட்டுப் போர் வெடிப்பு, பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலின் அரபு அண்டை நாடுகளுடன் போர் ஆகியவற்றுக்குள் தலைகீழாக சறுக்கிச் செல்வதற்கு வழிவகுத்துள்ளது.
இஸ்ரேலிய குடிமக்களைக் கொன்றதாக குற்றம் சாட்டி, கடைசி நாட்களில், பாதுகாப்புப் படையினர் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளனர். ஆனாலும், அவர்களைக் கைது செய்ய முயற்சிக்கவோ அல்லது சம்பிரதாயமாக குற்றஞ்சாட்டி அவர்களை நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுவரவோ நடவடிக்கை எடுக்கவில்லை.
சூடான் இராணுவத்தில் பல்வேறு ஆயுதக்குழுக்களை திட்டமிட்டு இணைப்பதற்கான பொது மற்றும் சர்வதேச ஆதரவுக்கும் மற்றும் இராணுவத்தின் அணிதிரட்டலுக்கும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் மத்தியில் வன்முறை வெடிக்கின்றது
கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய வழிபாட்டாளர்கள் மீது பொலிசார் வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் தாக்குதல்களைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இஸ்ரேலின் ஆவேசமான குண்டுவீச்சு நடைபெறுகிறது
அல்-அக்ஸா மசூதி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலின் சொந்த பாலஸ்தீனிய குடிமக்கள் மற்றும் ஈரான் மற்றும் சிரியா மீதான தாக்குதல்கள் என்பன போர்க் காய்ச்சலைத் தூண்டும் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவின் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றன.