ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குக!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாகிஸ்தானிய பிரிவைக் கட்டுக!

WSWS : Tamil : நூலகம்
பொருளடக்கம்
முன்னுரை :  பாகிஸ்தானிய மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு
வரவேற்கத்தக்க முன்னேற்றம்
ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை
ஆயுதபாணியாக்குக!
63 ஆண்டு கால “சுதந்திர” முதலாளித்துவ ஆட்சி: சமூகப் பேரழிவு பற்றிய மதிப்பீடு
நடப்பு நெருக்கடி
பிரிவினையும் ஜனநாயகப் புரட்சி மீதான அடக்குமுறையும்
பாகிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான அனுபவங்கள்
நிரந்தரப் புரட்சி இன்று
தெற்காசிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்காக!
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விளக்கியிருப்பதைப் போல:
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்
பாகிஸ்தானியப் பிரிவைக் கட்டுக!

நிரந்தரப் புரட்சி இன்று

நிரந்தரப் புரட்சி என்பது முதலாளித்துவத்தின் உலகத் தன்மை, சோசலிசத்துக்கான போராட்டம் மற்றும் தொழிலாள வர்க்கம் ஆகியவற்றின்  இருந்து எழுகிற ஒன்றுபட்ட உலகப் புரட்சிக்கான கருத்தாக்கம் ஆகும். 1917ல் நடந்த இரண்டு ரஷ்யப் புரட்சிகளில் இது நிரூபணம் பெற்றது.அதன் உச்சமாய் போல்ஷிவிக் கட்சியின் தலைமையின் கீழ் ரஷ்யத் தொழிலாள வர்க்கம் ஏழை விவசாயிகளுடன் புரட்சிகரக் கூட்டணியமைத்து உலக சோசலிசப் புரட்சியை முன்நின்று நடத்திச் செல்லும் நோக்கத்துடன் அதிகாரத்திற்கு வந்தது. ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியதைப் போல, நவீன சகாப்தத்தில், சோசலிசப் புரட்சியில் இருந்து சுயாதீனப்பட்டதான, அல்லது பிரிந்த எந்த ஜனநாயகப் புரட்சியும் இருக்க முடியாது. பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளில், ஜனநாயக மற்றும் தேசியக் கடமைகளானவை பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலமும் உலகெங்கும் அது விரிவாக்கப்படுவதின் மூலமும் மட்டுமே நிறைவேற முடியும்.

முதலாளித்துவத்தின் உதய காலத்தில் மேற்கு ஐரோப்பாவில் மற்றும் வட அமெரிக்காவில் முதலாளித்துவ வர்க்கம் ஆற்றியிருந்த புரட்சிகரப் பாத்திரத்தைத் திரும்ப ஆற்ற வகையில்லாத அளவு தாமதமாக காலனித்துவ நாடுகளிலும் தாமதப்பட்ட முதலாளித்துவ அபிவிருத்தி கொண்ட மற்றைய நாடுகளிலும் முதலாளித்துவ வர்க்கம் எழுந்தது என்பதை ட்ரொட்ஸ்கி தனது நிரந்தரப் புரட்சி தத்துவத்தில், உலக சமூகப்பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்க்கப் போராட்டத்தின் மீதான ஒரு ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு, விளக்கினார். காலனித்துவ முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்தை மிதமிஞ்சி சார்ந்திருந்தது, தொழிலாள வர்க்கத்தைக் கண்டு மிதமிஞ்சி அஞ்சியது, அத்துடன் அதன் ஆதாரவளங்கள் பதினேழாம், பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வரலாற்றுரீதியாய் முதலாளித்துவ வர்க்கத்தின் எழுச்சியுடன் தொடர்புபட்டதாய் அமைந்திருந்த கடமைகளான பரந்த நிலங்களை பிரித்தளிப்பது, தேசிய ஒருமைப்பாடு, ஜனநாயகத்தை நிறுவுவது போன்றவற்றை நிறைவேற்றுவதற்கான ஒரு புரட்சிகரப் போராட்டத்தை முன்னெடுக்க  முடியாத அளவுக்கு அதன் வளங்கள்  குறுகியதாய் இருந்தன. பதிலாக, தனது சொந்த வர்க்க சிறப்புரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு ஏகாதிபத்தியத்தின் பக்கமும் பிற்போக்குத்தனத்தின் பக்கமும் தான் அது எப்போதும் ஒதுங்குகிறது.

ஆயினும், எண்ணிக்கையளவுடன் ஒப்பிட்டால் பெரும் சமூக எடை கொண்டதாய் இருக்கிற (நவீன தொழிற்துறையில் மற்றும் போக்குவரத்தில் அதன் தீர்மானமான பாத்திரம் மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்துடன் அது கொண்டுள்ள ஜீவனுள்ள இணைப்பு ஆகியவற்றைக் கொண்டு பார்க்கும்போது), அத்துடன் உழைக்கும் மக்கள் அனைவரையும் ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக அணிதிரட்டுவதில் தனது வர்க்க நலன்களைக் கொண்டிருக்கிற ஒரு தொழிலாள வர்க்கத்தை இதே வரலாற்று நிகழ்வுப்போக்கு தான் அரங்கிற்குக் கொண்டு வந்து இருக்கிறது.

சமீப தசாப்தங்களில் ஆசியாவில் மலிவு-உழைப்பு உற்பத்தி விரிவாக்கப்பட்டிருப்பதும் அதனைத் தொடர்ந்து முதலாளித்துவ சமூக உறவுகள் வலுப்பட்டிருப்பதும் அத்துடன் தொழிலாள வர்க்கத்தின் அளவில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சாத்தியத்தை மிகப் பெருமளவில் அதிகரித்திருப்பதோடு ஜனநாயகக் கடமைகளை தீர்ப்பதை முதலாளித்துவ சொத்துடைமையின் மீதான தாக்குதலுடனும் சோசலிசத்திற்கான போராட்டத்துடனும் இன்னும் கூடுதலாய்ப் பிணைத்துள்ளது.

தெற்காசியாவில் அபிலாசைகளுடன் இருந்த இந்திய மற்றும் பாகிஸ்தானிய முதலாளித்துவ வர்க்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடனான தங்களது உடன்பாட்டின் மூலமும் பிரிவினையின் மூலமும் தெற்காசியாவில் ஜனநாயகப் புரட்சியைக் கருச்சிதைவு செய்திருந்தன என்கின்ற உண்மையில் நிரந்தரப் புரட்சியானது எதிர்மறை வகையில் உறுதி செய்யப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பாக 1939ல் இந்தியத் தொழிலாளர்களுக்கு ட்ரொட்ஸ்கி எழுதிய பகிரங்கக் கடிதத்தில், முதலாளித்துவ வர்க்கம் தான் வரலாற்றுரீதியாய் ஜனநாயகப் புரட்சிக்கு நியாயபூர்வமான தலைமையாக இருந்ததெனக் கூறி இந்திய தேசிய காங்கிரஸ் உடன் தொழிலாள வர்க்கத்தைப் பிணைத்ததற்கு ஸ்ராலினிஸ்டுகளைக் கண்டனம் செய்தார்.

ட்ரொட்ஸ்கி உறுதிபடக் கூறினார்: “இந்திய முதலாளித்துவ வர்க்கம் ஒரு புரட்சிகரப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் திறனற்றதாய் உள்ளது. அவர்கள் பிரிட்டிஷ் முதலாளித்துவத்துடன் நெருக்கமாய் பிணைந்துபட்டுள்ளதோடு அவர்களைச் சார்ந்தும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் சொந்த உடைமைகளுக்காகத் தான் நடுங்குகின்றனர். வெகுஜனங்களைக் கண்டு அஞ்சி நிற்கிறார்கள். இவர்கள் என்ன விலை கொடுத்தேனும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் சமரசங்களைச் செய்து கொள்ள முனைவதோடு இந்திய வெகுஜனங்களை மேலிருந்தான சீர்திருத்தங்கள் குறித்த நம்பிக்கைகளின் மூலம் மழுங்கடிக்க செய்கின்றனர். இந்த முதலாளித்துவ வர்க்கத்தின் தலைவரும் தீர்க்கதரிசியுமானவர் தான் காந்தி. ஒரு போலியான தலைவர் ஒரு பொய்யான தீர்க்கதரிசி!

”...பாட்டாளி வர்க்கம் மட்டுமே ஒரு துணிச்சலான புரட்சிகர விவசாய  வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும், பத்துமில்லியன்கணக்கான விவசாயிகளைத் தட்டியெழுப்பி அவர்களை அணிதிரளச் செய்து பூர்விக ஒடுக்குமுறையாளர்களுக்கும் மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்தில் அவர்களைத் தலைமை தாங்கி நடத்துவதற்கும் திறன்படைத்ததாகும். தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் கூட்டணி மட்டுமே இந்தியப் புரட்சியின் இறுதி வெற்றியை உறுதி செய்யத்தக்க ஒரே நேர்மையான, நம்பகமான கூட்டணியாகும்.”

சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவமானது, சோவியத் ஒன்றியத்தில் தொழிலாள வர்க்க அதிகாரத்தை அது தட்டிப் பறித்து ”தனியொரு நாட்டில் சோசலிசம்” என்கின்ற பேரில் சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்துடன் சமாதானத்திற்கு முனைந்து வந்ததால், மென்ஷிவிக் இருகட்டப் புரட்சித் தத்துவத்திற்கு மீண்டும் உயிரளித்து அதற்கு சட்ட வடிவமும் கொடுத்தது. இந்த தத்துவமானது தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்திற்கு அடிபணியச் செய்வதை நியாயப்படுத்துகிறது, உழைக்கும் மக்கள் மீதான தலைமையையும் அதற்கு விட்டுக் கொடுக்கிறது, அத்துடன் முதலாளித்துவம் தான் ஜனநாயகப் புரட்சிக்கு வரலாற்றுரீதியாக நிர்ணயிக்கப்பட்ட தலைமை என்றும் தீர்க்கப்படாத பற்றியெரிகின்ற ஜனநாயகப் பிரச்சினைகள் இருப்பதென்பதே சோசலிசத்திற்கான நிலைமைகள் கனிந்து வரவில்லை என்பதற்கான நிரூபணம் தான் என்றும் காரணம் கூறி அதிகாரத்திற்கு முதலாளித்துவம் உரிமை கோருவதை ஏற்றுக் கொள்கிறது. பல்வேறு ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்தப் பாதையை பல தசாப்தங்கள் பின்பற்றி முதலாளித்துவத்தின் அரசியல் மேலாதிக்கத்திற்கும் வெகுஜனங்கள் வகைதொகையின்றி காட்டிக் கொடுக்கப்படுவதற்கும் வழிவகை செய்தன. இதன் விளைவாக தொடர்ச்சியான பல பேரழிவுகள் விளைந்தன:  சீனாவில் 1927ல், ஸ்பெயினில் 1930களில், ஈரானில் 1953ல் மீண்டும் 1979ல், இந்தோனேசியாவில் 1965 ஆம் ஆண்டில் சுகார்தோ தலைமையில் இடதுசாரிகள் படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய காலத்தில். இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது.

பாகிஸ்தான் மற்றும் தெற்கு ஆசியாவில் ஜனநாயகப் புரட்சியின் கடமைகள் முதலாளித்துவம் அல்லது அதன் எந்த பிரிவினாலோ, அல்லது அதனுடன் கூட்டணி வைத்தோ நிறைவேற்றப்பட முடியாது, மாறாக முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரான மற்றும் முதலாளித்துவ சமூக ஒழுங்கிற்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்தில் தான் நிறைவேற்றப்பட முடியும். முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து செல்வதையும், வெகுஜனங்களின் ஜனநாயக அபிலாசைகளை அது உதாசீனப்படுத்துவதையும், தனது வர்க்க நலன்களை அது மூர்க்கத்துடன் நாடிச் செல்வதையும் அம்பலப்படுத்துவதன் மூலமாக, அதன் அரசியல் செல்வாக்கில் இருந்து வெகுஜனங்களை விடுவிப்பதற்கான ஒரு தளர்ச்சியற்ற போராட்டத்தை நிகழ்த்துவதன் மூலமாக மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையாளனாகவும் தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளுக்கு இடையிலான கூட்டின் தலைவனாகவும் தொழிலாள வர்க்கம் எழுந்து நிற்க முடியும். ஒரு தொழிலாளர்’ மற்றும் விவசாயிகளின் அரசாங்கமானது புரட்சிகர ஜனநாயக நடவடிக்கைகளை இணைக்கும் (மிக முக்கியமாக நில உறவுகளில் ஒரு தீவிரமான மாற்றத்துடன் பெரு வணிகங்களை அரசுடைமையாக்குவதும் மற்றும் பிற சோசலிச நடவடிக்கைகளும் இருக்கும்). அத்துடன் முதலாளித்துவத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு உலகத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்தை தனது மூலோபாயத்தின் இருதயத்தானத்தில் வைக்கும்.

ஏகாதிபத்தியத்தில் இருந்தும் முதலாளித்துவ சுரண்டலில் இருந்தும் விடுதலை என்கிற தெற்காசியாவிலும் மற்றும் உலகமெங்கிலும் வெகுஜனங்களின் பிரச்சினைகளுக்கான எந்தஒரு நீண்டகாலத் தீர்வுக்குமான முன்நிபந்தனையானது உலக சோசலிசப் புரட்சி என்னும் நிகழ்வுப்போக்கின் பகுதியாக மட்டுமே எட்டப்பட முடியும். இந்த நிகழ்வுப் போக்கு தேசியக் களத்தில் ஆரம்பித்து சர்வதேசரீதியாக அல்லது நிரந்தரமாக விரிவடைகிறது, அத்துடன் நமது ஒட்டுமொத்த பூமிக் கோளத்திலும் புதிய சமுதாயம் பெறக் கூடிய இறுதி வெற்றியில் தான் பூர்த்தியாகிறது.