ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குக!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாகிஸ்தானிய பிரிவைக் கட்டுக!

WSWS : Tamil : நூலகம்
பொருளடக்கம்
முன்னுரை :  பாகிஸ்தானிய மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு
வரவேற்கத்தக்க முன்னேற்றம்
ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை
ஆயுதபாணியாக்குக!
63 ஆண்டு கால “சுதந்திர” முதலாளித்துவ ஆட்சி: சமூகப் பேரழிவு பற்றிய மதிப்பீடு
நடப்பு நெருக்கடி
பிரிவினையும் ஜனநாயகப் புரட்சி மீதான அடக்குமுறையும்
பாகிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான அனுபவங்கள்
நிரந்தரப் புரட்சி இன்று
தெற்காசிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்காக!
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விளக்கியிருப்பதைப் போல:
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்
பாகிஸ்தானியப் பிரிவைக் கட்டுக!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாகிஸ்தானியப் பிரிவைக் கட்டுக!

கடந்த இரண்டு தசாப்த காலங்களில் பாகிஸ்தானிய மாவோயிஸ்டுகள் மற்றும் பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி (CPP) ஸ்ராலினிஸ்டுகளின் அரசியல்ரீதியான மற்றும் அமைப்புரீதியான உடைவின் விளைவாக முக்கியத்துவத்தை பெற்றிருக்கும் போலி-ட்ரொட்ஸ்கிச குழுக்களை அரசியல்-தத்துவார்த்தரீதியாக அம்பலப்படுத்துவது பாகிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகரக் கட்சியைக் கட்டுவதற்கான போராட்டத்தின் ஒரு முக்கிய பாகமாக இருக்கிறது. ஸ்ராலினிஸ்டுகளின் உடைவு என்பது முதலாகவும் முதன்மையாகவும் அவர்களது அரசியல் தலைவர்களான கிரெம்ளின் அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் மூலம் நிகழ்ந்தது. ஆனால் பாகிஸ்தானிய ஸ்ராலினிஸ்டுகளின் அரசியல்ரீதியான திவால்நிலை என்பது ஆப்கானிஸ்தானில் ஆப்கான் மக்கள் ஜனநாயக கட்சியின் (PDPA) ஆட்சியின் படுதோல்வியிலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) 1989ல் மீண்டும் அதிகாரத்திற்குத் திரும்பிய போது கூடுதலாய் வலது நோக்கித் திரும்பியதிலும் தோலுரித்துக் காட்டப்பட்டது.

தீவிரமான சந்தர்ப்பவாதக் கட்சிகளாய் இருக்கும் போராட்டம் (The Struggle) மற்றும் பாகிஸ்தான் தொழிற்கட்சி (Labour Party of Pakistan) ஆகிய போலி-ட்ரொட்ஸ்கிசக் குழுக்கள் முற்றுமுதலாய் குழப்பம்மிக்க (கண்டிக்கத்தக்க) ஒரு பாத்திரத்தை வகித்திருக்கின்றன. அவை தொழிலாளர்களையும் சோசலிச எண்ணம் கொண்ட இளைஞர்களையும் உண்மையான ட்ரொட்ஸ்கிசத்தில் இருந்து தடுப்பதற்குச் சேவை செய்கின்றன. உலக சோசலிசப் புரட்சியின் மூலோபாயவாதியும், ஸ்ராலினிசத்தின் சமரசமற்ற எதிர்ப்பாளருமான ட்ரொட்ஸ்கியின் மதிப்பை அவர்கள் சுரண்டுகின்ற அதேசமயத்தில் ட்ரொட்ஸ்கி எதற்காக நின்றாரோ அதற்கு நேரெதிராக தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனும் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்துடனும் மோசமான வலதுசாரி சூதுக்களை  நடத்திக் கொண்டு வருகின்றன.

சர்வதேச மார்க்சிசப் போக்கு (IMT) அமைப்புடன் இணைந்த பாகிஸ்தான் குழுவான போராட்டம் (The Struggle), இரண்டு தசாப்தங்களுக்கும் கூடுதலான காலத்திற்கு, ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் பேசுபவராக, அதன் ஒருங்கிணைந்த பாகமாக செயல்பட்டிருக்கிறது. 1960களின் பிற்பகுதியிலான வெகுஜன எழுச்சிகளின் போது தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஏற்றவாறு அரசியல்ரீதியாக அணிதிரட்டிகொடுப்பதற்கு ஒரு கருவியாக சேவை செய்த பாகிஸ்தான் மக்கள் கட்சி தான் பாகிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றுரீதியான வெகுஜனக் கட்சி என்றும் அக்கட்சியை அதன் உண்மையானசோசலிச வேலைத்திட்டத்திற்குமீண்டும் வென்றெடுக்க தொழிலாளர்கள் போராட வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்துகிறது. உண்மையில், பாகிஸ்தானிய தேசியவாதம் மற்றும்இஸ்லாமிய சோசலிசம் ஆகிய இரட்டைத் தூண்களின் மீது நிறுத்தப்பட்ட பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஸ்தாபக வேலைத்திட்டம் என்பது ஒரு அரசியல் மோசடி ஆகும். அது வடிவப்படுத்தும் ஜனரஞ்சக அரசியல் மீதான ஒரு விமர்சனத்தை மார்க்சிசத்தின் நிலைப்பாட்டில் இருந்து எடுத்து வைப்பது என்பது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கும் மேலாதிக்கத்திற்குமான போராட்டத்தில் ஒரு அத்தியாவசியமான பாகம் ஆகும்.

போராட்டத்தின் (The Struggle) முன்னோக்கினை அதன் தர்க்கரீதியான பிற்போக்குத்துவ முடிவுக்கு  எடுத்துச் செல்லும் விதமாக, அதன் இரண்டாம் நிலைப் பிரதானத் தலைவரான சவுத்ரி மன்சூர் அகமது மற்றும் இன்னும் பலர் (இவர்களில் பழைய தலைவர்களும்” [அதன் சொந்த அறிக்கை வாசகத்தின் படி] உண்டு) முதலாளித்துவ பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முகவர்களாக இன்னும் அற்பத்தனமாக செயல்படும் வகையில் சமீபத்தில் இந்த அமைப்பில் இருந்து முறித்துக் கொண்டு சென்று விட்டனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தேசிய நாடாளுமன்ற உறுப்பினராக 2002 முதல் 2008 வரை இருந்த மன்சூர் அகமதை "பாகிஸ்தானின் மார்க்சிஸ்ட் எம்பி என்பதாக போராட்டமும் (The Struggle), IMT யும் ஊக்குவித்தன. இப்போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின்மக்கள் செயலகத்தின் மற்றும் அக்கட்சியின் தொழிற்சங்க முன்னணியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள, அத்துடன் அரசாங்கத்தின் தனியார்மயமாக்க வேலைத்திட்டத்தின் முன்னோடி ஆலோசகர்களில் ஒருவராக எழுந்துள்ள மன்சூரை சர்தாரியின் அடியாள் என்று இது கண்டனம் செய்கிறது. மன்சூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த போதே வெட்கமில்லாமல் PTCL தொலைத்தொடர்பு நிறுவனத்தில் நடந்த ஒரு போர்க்குணமிக்க வேலைநிறுத்தத்தைக் காட்டிக் கொடுத்தார் என்பதை போராட்டம் (The Struggle) ஒப்புக் கொள்கிறது. ஆனால் மன்சூர் வேலைநிறுத்தத்தை உடைக்க உதவிக் கொண்டிருந்த சமயத்தில், போராட்டம் (The Struggle) அவரது பாத்திரத்தைக் குறித்த எந்த பொது விமர்சனத்தையும் வைக்கவில்லை. ஏனென்றால் அந்த சமயத்தில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் உத்தியோகங்களில் ஒரு தலைமையான பதவியையும் அவர் ஏற்றுக் கொண்டு அதே சமயத்தில் தங்களது அமைப்புகளிலும் அவரை தொடரச் செய்வதற்கான ஒரு ஒப்பந்தத்திற்கு இந்த அமைப்பும் IMTயும் முயற்சித்துக் கொண்டிருந்தன. இந்த வகையான கீழ்த்தரமான வலதுசாரி உறவுகளைத் தான் போராட்டம் (The Struggle) பாகிஸ்தானின் ஆளும் கட்சியின் தலைமைக்குள்ளாக வளர்த்தெடுக்கிறது.

பாகிஸ்தான் தொழிற்கட்சி (இக்கட்சி சர்வதேச பப்லோவாத அமைப்பில் நிரந்தரப் பார்வையாளர் அந்தஸ்தைக் கொண்டிருக்கிறது) 1990களின் ஆரம்பத்தில் போராட்டத்தில் (The Struggle) ஏற்பட்ட பிளவில் இருந்து தோன்றியது. இதுவும் அதேபோல் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகப் பிரிவுகளை, தொழிற்சங்கங்களை, அரசு சாரா அமைப்புகளை (NGOs) மற்றும் உலக சமூக மன்றத்தினை (World Social Forum) நோக்கிய நோக்குநிலையைக் கொண்டுள்ளது. ட்ரொட்ஸ்கிசத்திற்கு சாதாரணமாக பிணைப்பு கொண்டிருப்பதும் கூட பாகிஸ்தானின் ஸ்தாபக அரசியலுக்குள்ளான தனது தந்திர வேலைகளுக்கு இடையூறாக அமையலாம் என்று கருதி பாகிஸ்தான் தொழிற்கட்சி (LPP) தன்னை ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சியாகக் கூட வரையறை செய்து கொள்வதில்லை.

முஷாரப்பின் 2007 அவசரகால ஆட்சிக்காலத்தின் மத்தியில், பாகிஸ்தான் தொழிற் கட்சியின் முன்னணித் தலைவரான பரூக் தாரிக், தான் பெனாசிரை நட்புரீதியாகச் சந்தித்தது குறித்தும், அதில் முஷாரபுக்கு எதிரானதொரு கூட்டணிக்கு முன்னிலை வகிக்க பெனாசிரை வலியுறுத்தியது குறித்தும், தொழிலாள வர்க்கத்தின் ஆதரவை எவ்வாறு வெல்வது என்பதில் பெனாசிருக்கு இவர் ஆலோசனை அளித்தது குறித்தும் பீற்றிக் கொண்டார். இதற்குப் பின் பாகிஸ்தான் தொழிற் கட்சி அனைத்துக் கட்சி ஜனநாயக இயக்க (APDM) கூட்டணியில் நுழைந்தது. இது 2008 தேர்தல்களை புறக்கணிப்பதற்கான ஒரு கூட்டணி ஆகும். இதில் வலதுசாரி அடிப்படைவாதக் கட்சியான ஜமாத்--இஸ்லாமி, இம்ரான் கானின் நீதிக்கான பாக்கிஸ்தான் இயக்கம் (PTI), மற்றும் பல்வேறு சிந்தி, பலூச்சி மற்றும் சராய்கி தேசியவாதக் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. வழக்கறிஞர்கள் இயக்கத்திற்கான முன்னணி ஊக்குவிப்பாளர்களில் பாகிஸ்தான் தொழிற்கட்சி இடம்பெற்றிருக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ ஸ்திரப்படல் நிலைமைகளின் கீழ் நான்காம் அகிலத்திற்குள்ளாக எழுந்த ஒரு கலைப்புவாத போக்கான பப்லோவாதத்தின் அரசியல் வாரிசுகள் தான் இந்த போராட்டம், பாகிஸ்தான் தொழிற் கட்சி மற்றும் பிற பல சிறிய குழுக்கள் ஆகும். (மிசேல் பப்லோவும் [இவர் போருக்குப் பிந்தைய உடனடியான ஆண்டுகளில் நான்காம் அகிலத்தின் செயலராய் இருந்தவர்] ஏர்னெஸ்ட் மண்டேலும் தான் இந்த போக்கின் பிரதான தலைவர்களாய் இருந்தனர்.)

இரண்டாம் உலகப் போரின் விளைவாக சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவம் வலிமையுற்றதிலும் ஒரு துரிதமான முதலாளித்துவ விரிவாக்க நிலைமைகளின் கீழ் தொழிலாள வர்க்கத்திற்கான சில சடத்துவரீதியான நலன்களை சமூக ஜனநாயகக் கட்சி பெற முடிந்ததாலும் கவரப்பட்ட பப்லோவாதிகள் ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர முன்னோக்கு காலாவதியாகி விட்டதாய் அறிவித்தனர். நான்காம் அகிலத்தின் தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கம் மறுஒழுங்குபடுவது என்பது சோசலிசத்திற்கான போராட்டத்தில் ”குறைந்த சாத்தியம் கொண்ட” ஒன்று என்று பப்லோ அப்பட்டமாய் அறுதியிட்டுக் கூறினார். மாறாக, ஸ்ராலினிச அதிகாரத்துவமும் மற்ற அந்நிய வர்க்க சக்திகளும் தான் மேலே ஏகாதிபத்தியத்திடம் இருந்தும் கீழே வெகுஜனங்களிடம் இருந்துமான நெருக்குதலின் கீழ் முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து பறிமுதல் செய்வதற்கு நெருக்கப்படும், அது “பல நூற்றாண்டு கால சீரழிந்த தொழிலாளர் அரசுகளுக்கு” இட்டுச் செல்லும் என்று பப்லோவாதிகள் வாதிட்டனர்.  

ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயகக் கட்சிகளையும், அதேபோல் பல்வேறு குட்டிமுதலாளித்துவ தேசியவாத மற்றும் தீவிரவாத இயக்கங்களையும் தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாய் அணிதிரட்டுவதற்கான அரசியல் தடைக்கற்களாய் கருதுவதற்கு மாறாக அவற்றை சோசலிசத்தை எட்டுவதற்கான மாற்று சாதனங்களாய் காண பப்லோவாதிகள் சென்றனர். அப்போது இந்த அமைப்புகளுக்கு இது நான்காம் அகிலத்தின் சுயாதீனமான முன்னோக்கினை எதிர்ப்பதான விடயமாக இருக்காது, மாறாக நான்காம் அகிலத்தை தொழிலாள வர்க்கத்தின் மற்றும் தேசிய இயக்கங்களுக்கான நடப்புத் தலைமை மீது நெருக்குதல் கொடுக்கும் ஒரு அழுத்தம் கொடுக்கும் குழுவாக மாற்றுவதான விடயமாக இருக்கும். பப்லோவாதிகள் ஸ்ராலினிஸ்டுகளுக்கும் முதலாளித்துவ தேசியவாதிகளுக்கும் வரலாற்றுரீதியாக ஒரு முற்போக்கான பாத்திரத்தை அளித்து, அவர்களது எதிர்ப் புரட்சி தன்மை குறித்த ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலை நிராகரித்தனர். “வெகுஜன இயக்கத்திற்குள் ஒன்றிணையும்” முன்னோக்கினை அடியொற்றி, இவர்கள் அரசியல்ரீதியாகவும் அமைப்புரீதியாகவும் நடப்பு ட்ரொட்ஸ்கிசக் கட்சிகளை உடைப்பதற்குக் கிளம்பினர்.

ட்ரொட்ஸ்கிச கட்சிகளை எதிர்ப்புரட்சி தொழிலாளர் அதிகாரத்துவங்களுக்கான பின்தொங்கல்களாகவும் முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் இரண்டாம் நிலை முட்டுத்தூண்களாகவும் மாற்றுவதான இந்த முன்னோக்கின் தாக்கங்கள் தெற்காசியாவின் அரசியல் நிகழ்வுகள் மூலம் அனைவரும் காணக் கூடிய வகையில் விளங்கப்படுத்தப்பட்டது. பப்லோவாத அரவணைப்பின் கீழ், லங்கா சம சமாஜக் கட்சியானது (LSSP) சிங்கள ஜனரஞ்சகவாதத்தை கைப்பிடித்தது; தொழிற்சங்க மற்றும் நாடாளுமன்றவாத சந்தர்ப்பவாதத்திற்கு ஆதரவாக நிரந்தரப் புரட்சியைக் கைவிட்டு, அத்துடன் 1964ல் திருமதி பண்டாரநாயக்கா மற்றும் அவரது சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் தலைமை கொடுக்கப்பட்ட முதலாளித்துவ கூட்டணி அரசாங்கத்தில் அது நுழைந்தது.

பப்லோவாதிகளுக்கு எதிராக உண்மையான ட்ரொட்ஸ்கிசவாதிகளை அணிதிரட்டுவதற்காக 1953ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது. அடுத்துவந்த தசாப்தங்களில் அது உலக சோசலிசப் புரட்சியின் வேலைத்திட்டத்தை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்குமான ஒரு தளர்ச்சியற்ற போராட்டத்தை நிகழ்த்தியுள்ளது. உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கப் போராட்டங்களை தகவலறிவிப்பதற்கும், ஒன்றுபடுத்துவதற்கும், அவற்றுக்கு அரசியல் தலைமையை வழங்குவதற்குமான தனது அரசியல் அங்கமாய் உலக சோசலிச வலைத் தளத்தை அது உருவாக்கியுள்ளது. மார்க்சிச மற்றும் ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளைப் பாதுகாத்து பல தசாப்தங்கள் நிகழ்த்தியிருக்கக் கூடிய போராட்டத்தில் இருந்து பெற்றுக்கொண்ட அதன் பிரம்மாண்டமான அரசியல் அனுபவத்தின் மூலம், அனைத்துலகக் குழுவானது, மரணத்தறுவாயிலுள்ள  முதலாளித்துவ அமைப்பைத் தூக்கியெறிவதற்கு உலகத் தொழிலாள வர்க்கம் தனது போராட்டங்களை நனவுடன் ஒருங்கிணைப்பதன் அவசியத்தின் உருவடிவமாக அமைந்துள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் பாரிய, தன்னெழுச்சியான போராட்டங்களில் தலையீடு செய்ய, ஸ்ராலினிஸ்டுகளுடன், சந்தர்ப்பவாதிகளுடன் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் போராடி அரசியல்ரீதியாகத் தோற்கடிக்க, அத்துடன் தொழிலாளர்களை ஒரு தெளிவான புரட்சிகர வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கினைக் கொண்டு ஆயுதபாணியாக்க திறம்படைத்திருக்கின்ற ஒரு ட்ரொட்ஸ்கிச தொழிலாள வர்க்க முன்னணிப்படையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பாகிஸ்தானிய பிரிவைக் கட்டுவது மார்க்சிசக் குரலின் முக்கியமான பணியாகும்.  

சர்வதேச மார்க்சிச போக்கு-போராட்ட சந்தர்ப்பவாதிகளுடன் ஏற்பட்டதொரு பிளவிலேயே 2001ல் மார்க்சிசக் குரல் தோன்றியது. முதலாளித்துவ பாகிஸ்தான் மக்கள் கட்சிக்குத் தேவையானவாறு தொழிலாள வர்க்கத்தைப் அணிதிரட்டி கொடுப்பபதற்கு நாங்கள் காட்டிய எதிர்ப்பு, ஜனநாயக மத்தியவாதத்தை மீறுவதை அவை வழமையாகக் கொண்டது மற்றும் அவற்றின் சந்தர்ப்பவாத நடைமுறைகள், மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பை மத்திய ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நகர்த்தலில் வேர் கொண்டதாய் கருதாமல் குற்றத்தன்மையுடனான ஒரு அலட்சியத்துடன் அதனை ஒரு கடந்து செல்லும் அத்தியாயமாக அவை நிராகரித்தது ஆகியவற்றால் இந்தப் பிளவு நேர்ந்தது. இதற்குப் பின், உலக சோசலிச வலைத் தளத்தின் மூலமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தொடர்பு மார்க்சிசக் குரலுக்கு ஏற்பட்டது. அதன் சர்வதேசிய முன்னோக்கிலும், அரசியல் கேள்விகளுக்கான கோட்பாட்டு ரீதியான அணுகுமுறையிலும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய (அமெரிக்க தொழிலாளர்கள் உட்பட) புரட்சிகர நோக்குநிலையிலும் மார்க்சிசக் குரல் உடனடியாகக் கவரப்பட்டது. பல வருட கால விவாதங்களுக்கு பின்னர், சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான நா.அ.அ.கு.வின் நெடிய போராட்டத்தின் அதிமுக்கியத்துவத்தின் மீதும் அந்த போராட்டத்தின் படிப்பினைகளை பாகிஸ்தானியத் தொழிலாளர்களுக்கு கொண்டுவருவதன் அவசியத்தின் மீதும் அதிகமான உறுதி எங்களுக்கு ஏற்பட்டது. இலங்கையில் நா.அ.அ.கு. வழிகாட்டுதலின் கீழ் RCL/SEP (புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சி) நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிகழ்த்தியிருந்த போராட்டம் சிறப்புப் பொருத்தம் வாய்ந்ததாகும்.

1938ல் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்திற்கான வாழ்த்துச் செய்தியில் ட்ரொட்ஸ்கி, புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத் தலைமையின் நெருக்கடியை வெல்வதற்கான சாதனமாக அதன் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ட்ரொட்ஸ்கி அறிவித்தார்: “நாம் மற்ற கட்சிகளைப் போன்றதொரு கட்சி அல்ல.... உழைக்கும் மக்களின் மற்றும் சுரண்டப்படும் மக்களின் முழுமையான சடரீதியான மற்றும் ஆன்மரீதியான விடுதலையை சோசலிசப் புரட்சியின் மூலமாக சாதிப்பதே எங்களது நோக்கம். எங்களைத் தவிர யாரும் இதற்குத் தயாரிக்க முடியாது, அதில் வழிகாட்டவும் முடியாது.”

இந்த அறிக்கையைப் படிப்பதற்கும் எங்களது பொறுப்புகளிலும் மற்றும் நா.அ.அ.கு.வைக் கட்டுவதற்கான போராட்டத்திலும் இணைவதற்கும் மார்க்சிசக் குரலின் அனைத்து ஆதரவாளர்கள் மற்றும் வாசர்களையும் அத்துடன் உலக சோசலிச வலைத் தளத்தின் பாகிஸ்தான் வாசகர்கள் அனைவரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.