ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குக!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாகிஸ்தானிய பிரிவைக் கட்டுக!

WSWS : Tamil : நூலகம்
பொருளடக்கம்
முன்னுரை :  பாகிஸ்தானிய மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு
வரவேற்கத்தக்க முன்னேற்றம்
ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை
ஆயுதபாணியாக்குக!
63 ஆண்டு கால “சுதந்திர” முதலாளித்துவ ஆட்சி: சமூகப் பேரழிவு பற்றிய மதிப்பீடு
நடப்பு நெருக்கடி
பிரிவினையும் ஜனநாயகப் புரட்சி மீதான அடக்குமுறையும்
பாகிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான அனுபவங்கள்
நிரந்தரப் புரட்சி இன்று
தெற்காசிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்காக!
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விளக்கியிருப்பதைப் போல:
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்
பாகிஸ்தானியப் பிரிவைக் கட்டுக!

ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குக!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாகிஸ்தானிய பிரிவைக் கட்டுக!

 

லக சோசலிச வலைத் தளம் மார்க்சிச குரல் அறிக்கையை வெளியிடுகிறது. இந்த அமைப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்குகளுடன் அரசியல் உடன்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்ற அத்துடன் நா.அ.அ.கு.வை சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக கட்டியெழுப்புவதற்கு அதனுடன் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டிருக்கின்ற ஒரு பாகிஸ்தானிய குழு ஆகும்.

மார்க்சிச குரல் அறிக்கை பாகிஸ்தான் மற்றும் தெற்கு ஆசியாவைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஒரு புரட்சிகர முன்னோக்கிற்கு வடிவம் கொடுப்பதில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. தெற்கு ஆசியாவில் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையான மூலோபாய அனுபவங்களின் மீதான ஒரு திறனாய்வின் அடிப்படையில், பாகிஸ்தான் தொழிலாளர்கள் நிரந்தரப் புரட்சியின் மூலோபாயத்தை தங்களது போராட்டங்களின் அடித்தளமாகக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை இது விளங்கப்படுத்துகிறது.

மார்க்சிசக் குரல் அறிக்கையை படிப்பதற்கும் மற்றும் விநியோகம் செய்வதற்கும், அத்துடன் கருத்துகளையும் கேள்விகளையும் எங்களுக்கு அனுப்புவதன் மூலம் பாகிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர சோசலிசக் கட்சியை அபிவிருத்தி செய்வதற்கான முன்னோக்குகள் மற்றும் வேலைத்திட்டத்திற்கு உருவம் கொடுப்பதில் பங்கேற்பதற்கும் உலக சோசலிச வலைத் தளம் பாகிஸ்தானிய வாசகர்களிடம் விண்ணப்பம் செய்கிறது.

பாகிஸ்தான் ஒரு கூர்மைப்பட்ட அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் கடந்து சென்று கொண்டிருக்கிறது. உலக அளவில் துரிதமாய் கட்டவிழ்ந்து கொண்டிருக்கின்ற அத்துடன் பில்லியன்கணக்கான சாதாரண மக்களின் வாழ்க்கைகளில் பேரழிவான தாக்கத்தைக் கொண்டிருக்கின்ற உலக முதலாளித்துவ நெருக்கடியின் பகுதியாக அமைந்த ஒன்று தான் இந்த நெருக்கடி. இரண்டு உலகப் போர்கள், பாசிசம் அத்துடன் ஏறக்குறைய முடிவில்லாத தொடர்ச்சியாக பிராந்திய இராணுவ மோதல்கள் மற்றும் மிருகத்தனமான போலிஸ்-இராணுவ சர்வாதிகாரங்கள் ஆகிய இருபதாம் நூற்றாண்டுப் பயங்கரங்களை உருவாக்கிய அதே தீராத முரண்பாடுகளால் தான் உலக முதலாளித்துவ அமைப்புமுறை இப்போதும் சூழப்பட்டிருக்கிறது. அடிப்படை முரண்பாடுகள் உலகளாவிய உற்பத்திக்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலும் மற்றும் சமூகமயப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்தி சாதனங்கள் தனியார் உடைமையாய் இருப்பதற்கும் இடையிலும் இருக்கின்றன. இந்த முரண்பாடுகளில் இருந்து எழுவது இன்னொரு பேரழிவான உலகப் போருக்கான அபாயம் மட்டுமல்ல, மாறாக முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கான புற நிலைமைகளான தொழிற்துறை மற்றும் நிதித்துறை சமூகமயமாதல், பொருளாதார வாழ்க்கையின் உலகமயமாக்கம், அத்துடன் உலகத் தொழிலாள வர்க்கத்தின் சமூக சக்தி ஆகியவையும் எழுகின்றது.

இந்த அறிக்கையின் மூலம், (1917 ரஷ்யப் புரட்சியில் சக தலைவராய் இருந்தவரும் சோவியத் தொழிலாளர்களின் அதிகாரத்தை தட்டிப் பறித்து இறுதியாக சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தை மீட்சி செய்த சலுகைபடைத்த அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் கோட்பாட்டாளராக இருந்தவருமான) லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பாகிஸ்தானிய பிரிவைக் கட்டுவதற்கான போராட்டத்திற்கு மார்க்சிச குரல் முன்முயற்சி எடுக்கிறது.

உலக முதலாளித்துவ நெருக்கடியின் தாக்கத்தின் கீழ் தொழிலாள வர்க்கமானது போராட்டத்திற்குள் உந்தித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது, ஆனால் அதே சமயத்தில் எங்குபார்த்தாலும் அதனது பெயரால் பேசுவதாய் ஒருசமயம் கூறிக் கொண்ட அமைப்புகளான ஸ்ராலினிச கட்சிகளின் மிச்ச சொச்சங்கள், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவை முதலாளித்துவ இலாப அமைப்புமுறையை தாங்கிப் பிடிப்பதும் தொழிலாள வர்க்கத்தை தேசிய கோடுகளில் பிரிக்க முனைவதுமான உண்மைக்கு நேரெதிரே உடனடியாய் வந்து நிற்கிறது என்கின்ற உண்மையின் மூலமாக நா.அ.அ.கு.வைக் கட்டுவதற்கான அவசர முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது.