ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை ஆயுதபாணியாக்குக!

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாகிஸ்தானிய பிரிவைக் கட்டுக!

WSWS : Tamil : நூலகம்
பொருளடக்கம்
முன்னுரை :  பாகிஸ்தானிய மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு
வரவேற்கத்தக்க முன்னேற்றம்
ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் பாகிஸ்தானிய தொழிலாளர்களை
ஆயுதபாணியாக்குக!
63 ஆண்டு கால “சுதந்திர” முதலாளித்துவ ஆட்சி: சமூகப் பேரழிவு பற்றிய மதிப்பீடு
நடப்பு நெருக்கடி
பிரிவினையும் ஜனநாயகப் புரட்சி மீதான அடக்குமுறையும்
பாகிஸ்தானிய தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான அனுபவங்கள்
நிரந்தரப் புரட்சி இன்று
தெற்காசிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்திற்காக!
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விளக்கியிருப்பதைப் போல:
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்
பாகிஸ்தானியப் பிரிவைக் கட்டுக!

63 ஆண்டு காலசுதந்திர முதலாளித்துவ ஆட்சி: சமூகப் பேரழிவு பற்றிய மதிப்பீடு

63 ஆண்டு கால சுதந்திர முதலாளித்துவ ஆட்சிக்குப் பின்னர், பாகிஸ்தான் படுபயங்கர இடர்ப்பாடு மற்றும் வறுமை, விகாரமான சமூக ஏற்றத்தாழ்வு நிலை, சிதைந்துபோனதொரு உள்கட்டமைப்பு, தேசிய-இன மற்றும் பிரிவினைவாத மோதல் மற்றும் அமெரிக்க ஆதரவிலான இராணுவத்தின் தொடரும் அரசியல் மேலாதிக்கம் ஆகியவற்றால் குறிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் 45 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கினர் ஒரு நாளைக்கு இரண்டு டாலருக்கும் குறைவான வருமானத்திலேயே வாழ்க்கை நடத்துகின்றனர். ஐந்து வயதுக்குக் குறைந்த பாகிஸ்தான் குழந்தைகளில் 60 சதவீதம் பேர் ஓரளவுக்கோ அல்லது கடுமையாகவோ வளர்ச்சி குன்றியிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறுகிறது. இதனிடையே, பெரும் வணிகர்கள், நிலச் சுவாந்தர்கள், உயர் அதிகார மட்டத்தினர், அதிகாரிகள் மற்றும் அவர்களது வணிகக் கூட்டாளிகள் ஆகியோர் கொண்ட ஒரு சிறிய கறைபடிந்த ஆளும் வர்க்கம் தான் அந்நிய மூலதனத்துடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நாட்டின் செல்வத்தைக் கொள்ளையிடுகின்றன.

வறுமையினாலும், ஒரு அடிப்படைக் கட்டமைப்பை வழங்குவதற்கும் கூட அரசு தோல்வியுற்றுள்ளதாலும், பத்து மில்லியன் கணக்கான மக்கள் பள்ளிகளுக்கு, ஆரோக்கியப் பராமரிப்புக்கு, சுகாதாரத்துக்கு அல்லது மின்சாரத்துக்கு வாய்ப்பில்லாமல் உள்ளனர். மின்வெட்டு என்பது சமூகப் பொருளாதார வாழ்க்கைக்கு ஒரு நீடித்த இடராக மாறியிருக்கிறது. குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவை புறக்கணிக்கப்படுவதால், ஏழைகளும் கூட தனியார் ஸ்தாபனங்களையும் இஸ்லாமிய அடிப்படைவாத தொண்டு அமைப்புகளையும் மற்றும் மதரசாக்களையும் நோக்கித் திரும்பத் தள்ளப்பட்டுள்ளனர். கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கென பாகிஸ்தான் அரசு மொத்தமாய் செலவிடும் தொகை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்திற்கும் குறைவானதாகும்.  

நாட்டுப்புறங்களில் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை காரணமாகவும் கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கான துணை வேலைகளைத் தேடுவதில் உள்ள சிரமத்தினாலும் கிராமப் பகுதிகளில் இருந்து நகரப் பகுதிகளுக்கு இடம்பெயர்வதென்பது அதிகரித்துள்ளது. கிராமப்புற மக்களில் எழுபது சதவீதம் பேருக்கு நிலம் கிடையாது. இவர்கள் விளைச்சல்பங்கு அடிப்படையிலான குத்தகைதாரர்களாகவோ, அல்லது வாடகைதாரர்களாகவோ விவசாயக் கூலிகளாகவோ தான் பிழைத்து வருகின்றனர். நகரங்களில், சிறந்த பொது மற்றும் சமூக சேவைகள் மற்றும் வேலைகள் இல்லாத ஒரு நிலையுடன் தான் மக்கள் திருப்திக் கொள்ள வேண்டியதான ஒரு நிலையும் உள்ளது.

வெகுஜன மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு முற்போக்கான தீர்வினை வழங்க இயலாததாய் இருக்கும் பாகிஸ்தானிய முதலாளித்துவம், பெருகும் சமூகக் கோபத்தை பிற்போக்கான பாதைகளில் திசைதிருப்பி விடுவதற்கும் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கும் இந்திய-விரோத போட்டியாதிக்கவாதத்தையும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் மற்றும் இன தேசியவாதத்தையும் பெருகிய முறையில் ஊதிவளர்த்து வந்திருக்கின்றன. குறுங்குழுவாத விரோதங்களுக்கும் மதவாத இருட்டடிப்புகளுக்கும் ஒரு அடைகாக்கும் சாதனமாக பாகிஸ்தான் ஆகியிருக்கிறது.

இஸ்லாமிய தேசியத் தாயகம் தான் தெற்காசியாவின் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பையும் அரவணைப்பையும் வழங்கும் என்று கூறி பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு முன்மொழிந்தவர்களின் கூற்று ஒரு கொடூரப் புரளி என்பது நிரூபணமாகி உள்ளது. பாகிஸ்தான் அதன் இருப்பின் அநேக காலத்தில் போரிலேயோ அல்லது அதன் விளிம்பிலேயோ தான் இருந்து வந்திருக்கிறது, அத்துடன் அதன் மக்களில் பெரும்பான்மையானோர் அதீத வறுமையாக இல்லாவிட்டாலும் கடும் பொருளாதார பாதுகாப்பின்மையான சூழலில் தான் வாழ்ந்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பாகிஸ்தானிய ஆளும் வர்க்கம் தடவாள உதவி செய்வதன் ஒரு நேரடி விளைவாக, வடமேற்கு பாகிஸ்தானின் பகுதிகளில் (இப்பகுதி விரிந்து கொண்டே செல்கிறது) பாகிஸ்தானின் இராணுவம் உள்நாட்டுப் போரை நிகழ்த்தி வந்துள்ளது. அதில் மொத்தமாய் அழிக்கும் விரிப்புக் குண்டுவீச்சு, கூட்டுத் தண்டனை, காணாமல் போகச் செய்வது மற்றும் கூட்டாய் தண்டனையளிப்பது ஆகிய ஜனநாயக விரோத வழிமுறைகளின் மொத்தக் கிடங்கையும் அது பயன்படுத்துகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களைக் கொல்வதற்கு ஆளில்லா ஏவுகணைத் தாக்குதல்களை அதிகப்படுத்துவதற்கும் இதில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கும் அமெரிக்கா விரும்பிய எண்ணிக்கையை இட்டு நிரப்பிக் கொள்ளத்தக்க கையெழுத்திட்ட வெற்றுக் காசோலையைக் கையளிக்கப் பெற்றுள்ளது.   

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆளும் வர்க்கம் செய்து வந்திருக்கும் மூன்று தசாப்த காலத் தலையீட்டில் (இது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இருமக்களுக்குமே ஒரேவிதமாய் அழிவார்ந்ததாய் நிரூபணமாகி இருக்கிறது) இது சமீபத்திய கட்டமே அன்றி வேறில்லை. முந்தைய கட்டங்களில் போலவே, நடப்புப் போரும் பாகிஸ்தான் அரசியல் மற்றும் நிர்வாகத்தின் மீது இராணுவம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கழுத்துப் பிடியை வலுப்படுத்தியிருப்பதோடு இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் வளர்த்து வருகிறது.

பாகிஸ்தானிய ஜனநாயகம் என்பது இறந்து பிறந்த குழந்தையாகும். அதன் இருப்பின் பாதி காலத்திற்கு அமெரிக்க ஆதரவிலான இராணுவம் தான் நாட்டை நேரடியாக ஆட்சி செய்து வந்திருக்கிறது. மக்கள் ஆட்சி என்பதாய்க் கூறப்படுகின்ற காலகட்டங்களிலும் கூட இராணுவம் பரந்த அதிகாரத்தைச் செலுத்துகிறது. நெருக்கடி மிகுந்த பாகிஸ்தானிய முதலாளித்துவம் தனது சொத்துகளைப் பாதுகாப்பதற்கும் பாகிஸ்தானிய அரசின் பிராந்திய ஒருங்கிணைப்பை தாங்கிப் பிடிப்பதற்கும் இராணுவத்தையே நம்பியிருக்கிறது. இந்த நிலை இந்தியாவுடனான அதன் பிற்போக்குத்தனமான புவி அரசியல் போட்டிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான அதன் கூலிப்படை வகையான கூட்டணிக்கும் அச்சாணியாக இராணுவத்தை ஆக்கியிருக்கிறது.