கென்யாவின் இளம் தலைமுறையினரின் எழுச்சி, வேலைநிறுத்த அலை மற்றும் நிரந்தரப் புரட்சிக்கான போராட்டம் - பகுதி 2
‘ஜெனரேஷன் Z’ (Gen Z) என்று குறிப்பிடப்படும் நாட்டின் இளம் தலைமுறையினரின் எழுச்சியைத் தொடர்ந்து கென்யாவில் தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்த அலையானது, ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் ஆட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மீது ஆழமான கோபத்தை வெளிப்படுத்துகிறது. தொழிலாளர்களும் இளைஞர்களும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டில் அதாவது 1917 அக்டோபர் ரஷ்யப் புரட்சிக்கு உத்வேகம் அளித்த வேலைத்திட்டத்தில் வேரூன்றிய ஒரு புதிய பாதையை உருவாக்க வேண்டும். இதற்கு ஸ்டாலினிசம், மாவோயிசம், பப்லோவாதம் மற்றும் முதலாளித்துவ தேசியவாதத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிசத்தின் போராட்டத்தை புதுப்பிப்பது இன்றியமையாததாகும்.