Socialist Equality Party (US)
சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வீழ்ச்சியும் அனைத்துலகக் குழுவில் பிளவும்

189. 1985 ஆகஸ்டில் அனைத்துலகக் குழுவின் உறுப்பினர்கள் லண்டனில் ஒன்று கூடினார்கள், அங்கு அவர்களுக்கு பிரிட்டிஷ் பிரிவு தீவிர நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாக ஹீலி மற்றும் பிற தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்களால் அறிவிக்கப்பட்டது. எதிர்பாராத வரிச் சுமைகளாலும், தொழிலாளர் புரட்சிக் கட்சி நாளிதழின் வினியோக செலவுகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உயர்வினாலும் இந்த பிரச்சனைகள் ஏற்பட்டதாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உறுப்பினர்களுக்கு கூறப்பட்டது. தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்களால் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளிடம் நிதியுதவி கோரி ஓர் உடனடி முறையீடு முன்வைக்கப்பட்டது. விரைவாக வெளிப்பட இருந்தவாறு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் பெரும்பகுதி முழுவதும் பொய்களை கொண்டிருந்தது. அதற்கும் மேலாக, ஹீலியின் தனிப்பட்ட முறையற்ற நடவடிக்கைகள் மீதான குற்றச்சாட்டின் மீது பிரிட்டிஷ் பகுதியின் தலைமைக்குள் குழப்பம் வெடித்திருந்ததை அனைத்துலகக் குழு உறுப்பினர்களுக்கு தொழிலாளர் புரட்சிக் கட்சி தெரிவிக்கவில்லை. இந்த குற்றச்சாட்டுகளின் மீது ஒரு கட்டுப்பாட்டு விசாரணை கமிஷன் ஏற்படுத்தக் கோரி தலைமை குழுவிற்குள் எழுந்த கோரிக்கைகள் ஹீலியால் மட்டுமின்றி, மைக்கல் பண்டா மற்றும் கிளீவ் சுலோட்டராலும் எதிர்க்கப்பட்டன. பிரிட்டிஷ் பகுதியில், உள் அரசியல் நெருக்கடிகளினால் உருவான இந்த பிரச்சினைகளை சமாளிக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிடம் இருந்து பணம் கோரிய அதேவேளை, தொழிலாளர் புரட்சிக் கட்சி இந்த உண்மைகளை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு உறுப்பினர்களிடம் இருந்து மறைக்க முயற்சித்தது, எவ்வாறிருப்பினும், அடுத்த சில வாரங்களில் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் இருந்த கன்னைவாத மோதல்கள் தீவிரமடைந்ததால், குழப்பங்களுக்கான உண்மைகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு தெரிய வந்தது. வேர்க்கர்ஸ் லீக்கில் இருந்த டேவிட் நோர்த் மற்றும் நிக் பீம்ஸ் (ஆஸ்திரேலியாவின் சோசலிச தொழிலாளர் கழகத்தில் இருந்து), உல்றிச் ரிப்பேர்ட் மற்றும் பீட்டர் சுவார்ட்ஸ் (ஜேர்மனியின் Bund Sozialistische Arbeiter இருந்து) மற்றும் கீர்த்தி பாலசூரியா (இலங்கை புரட்சிக்கம்யூனிஸ்ட் கழகத்தில் இருந்து) ஆகியோர் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் நிலைமையை மீளாய்வு செய்ய பிரிட்டன் பயணித்தனர். பிரிட்டிஷ் பகுதிக்குள் உருவாகி இருக்கும் குழப்பங்களானது, சர்வதேச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்குகள் தொடர்பான நீண்டகால அரசியல் பிரச்சனைகளில் வேரூன்றி இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைமைகளுக்குள் பல்வேறு கோட்பாடற்ற கன்னைகளின் மத்தியிலான கன்னைவாத போராட்டங்களில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பக்கசார்பு எடுக்காது என அவர்கள் தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களின் சொந்த தேசியவாத மற்றும் சந்தர்ப்பவாத நோக்கங்களுக்காக சர்வதேச இயக்கத்தை பயன்படுத்தும் தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்களின் முயற்சிகளை நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு முழுமையாக நிராகரித்தது. உண்மையில், அதன் நெருக்கடியிலிருந்து தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் மீட்சியானது பிரிட்டிஷ் அமைப்பு சர்வதேச இயக்கத்தின் ஒழுங்கையும் அதிகாரப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும் மட்டத்திற்குத்தான் சாத்தியமாகி இருந்தது.

190. 1985, அக்டோபர் 25 இல், ஹீலிக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் நிகழ்வுகளின் அடிப்படையை ஆராய்ந்த பின்னர், அனைத்துலகக் குழு அவரை வெளியேற்றுவதற்கு வாக்களித்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அளித்த அறிக்கை பின்வருமாறு பிரகடனப்படுத்தியது:

ஹீலியை வெளியேற்றுவதால், அவரின் கடந்த கால அரசியல் பங்களிப்புகளை, குறிப்பாக, 1950 மற்றும் 1960களில் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டங்களில் அவரின் பங்களிப்புகளை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மறுக்கும் உள்நோக்கம் எதையும் கொண்டிருக்கவில்லை. உண்மையில், இந்த வெளியேற்றுதலானது, கடந்தகால போராட்டங்களுக்கு அடித்தளமாக இருந்த ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகள் பற்றிய அவரின் நிராகரிப்புக்கான இறுதிவிளைவாகும் மற்றும் சந்தர்ப்பவாதத்தின் மிக கொச்சையான வடிவங்களுக்குள் சென்ற அவரின் கீழ்நோக்கிய சரிவாகும்.

இந்த பெறுபேறுகள் உருவாகிய, ஸ்ராலினிசம் மற்றும் திருத்தல்வாதத்திற்கு எதிராக வரலாற்றுரீதியான மற்றும் சர்வதேச அடிப்படையிலான போராட்டங்களில் இருந்து பிரிட்டனில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நடைமுறை ரீதியான மற்றும் அமைப்பு ரீதியான வெற்றிகளை, அவர் என்றுமில்லாத வகையில் வெளிப்படையாக பிரித்தெடுத்தலில் ஹீலியின் அரசியல் மற்றும் தனிப்பட்ட சீரழிவை தெளிவாக தடம்காணமுடியும்.

கட்சி எந்திரத்தின் வளர்ச்சியை பாதுகாப்பதன் மீது மையப்பட்டிருந்த உடனடி நடைமுறை தேவைகளுக்கு கோட்பாடு பற்றிய பிரச்சினைகளை அதிகரித்தவகையில் கீழ்ப்படுத்தலானது, அரசியல் சந்தர்ப்பவாதத்திற்குள் சீரழிந்தன. இது, உலகின் பழமைவாய்ந்த முதலாளித்துவ நாட்டில் ஏகாதிபத்திய அழுத்தங்களுக்கு எதிரான அவரின் சொந்த அரசியல் மற்றும் தார்மீக பாதுகாப்புகளை உறுதியாக அழித்துவிட்டன.

இந்த நிலைமைகளின் கீழ், அவரின் கடுமையான அகநிலை பலவீனங்கள் ஒரு பாரிய அபாயகரமான அரசியல் பாத்திரத்தை ஆற்றியது.

தொழிலாளர் புரட்சிக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இரண்டிற்குள்ளும் எப்போதுமில்லாத வகையில் தன் விருப்பப்படி செயல்பட்ட ஹீலி, நான்காம் அகிலத்தின் மார்க்சிச கோட்பாடுகளுக்கும் மற்றும் அதன் காரியாளரின் கூட்டுப் போராட்டங்களுக்காகவும் அல்லாமல் அவரின் சொந்த தனிப்பட்ட திறமைகளுக்காகவே உலக கட்சியின் முன்னேற்றங்களை அதிகளவில் கற்பித்துக் கூறி வந்தார்.

தமது உள்ளுணர்வால் அறியப்பட்ட கணிப்புகள் பற்றிய அவரது தற்புகழ்ச்சியானது தவிர்க்க முடியாமல் சடவாத இயங்கியலை ஓர் ஒட்டுமொத்த கொச்சைப்படுத்தலுக்கும் முழுமையான அகநிலை கருத்துவாதியாகவும் நடைமுறைவாதியாகவும் அவரை மாற்றுதலுக்கு இட்டுச் சென்றது.

சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் காரியாளரை உருவாக்குவதில் இருந்த சிக்கலான பிரச்சனைகளில் அவருக்கிருந்த கடந்தகால ஆர்வங்களுக்கு பதிலாக, பிரிட்டனில் இருந்த முதலாளித்துவ தேசியவாத தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்கட்சி சீர்திருத்தவாதிகளுடனான கோட்பாடற்ற உறவுகளை அபிவிருத்தி செய்வதில் ஹீலியின் செயல்பாடுகள் பெரும்பாலும் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டன.

அவரின் தனிப்பட்ட வாழ்க்கை-முறையும் அதற்கொப்ப தரமிறங்கிச் சென்றது.

எந்தக் கோட்பாடுகளுக்காக ஒருசமயம் போராடினார்களோ அதே கோட்பாடுகளை கைவிடும் ஹீலியைப் போன்றவர்களும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தேசியப் பகுதிகளை கட்டியமைப்பதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு தம்மை கீழ்ப்படுத்திக்கொள்ள மறுப்பவர்களும் வர்க்க எதிரியின் அழுத்தத்தின் கீழ் தவிர்க்க முடியாமல் சீரழிவர்.

இந்த வரலாற்று விதிக்கு எவ்வித விதிவிலக்கும் இருக்க முடியாது.

தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களுக்கு அப்பாற்பட்டு எந்த தலைவரும் நிலைநிறுத்தப்படுவதில்லை என்பதை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்துகிறது.[104]

191. ஹீலியுடனான அவர்களின் கன்னைவாத மோதலில் அகநிலை கசப்புணர்வுடன் மட்டுமல்லாமல், பண்டா மற்றும் சுலோட்டர் ஹீலியின் சந்தர்ப்பவாத மற்றும் தேசியவாத முன்னோக்கையும் பகிர்ந்து கொண்டார்கள். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தாங்கள் முக்கிய பங்கு வகித்த அமைப்பில் ஏற்பட்டிருந்த பிரச்சனையின் மூலத்தையும் அதன் அபிவிருத்தியையும் புறநிலைரீதியாக ஆராய்வதை, ஹீலிக்கு குறைவின்றி, அவர்களும் தவிர்க்க விரும்பினார்கள். அதற்கும் மேலாக, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் கூட்டணிகள் மற்றும் செயல்பாடுகளின் மீதான சர்வதேச வற்புறுத்தல்களை பண்டா மற்றும் சுலோட்டர் ஏற்க மாட்டார்கள் என்பதும் வெகு விரைவில் தெளிவானது.

1985, டிசம்பர் 11 இல், வேர்க்கர்ஸ் லீக்கின் அரசியல் குழு, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மத்திய குழுவிற்கு பின்வருமாறு எழுதியது: பிரிட்டிஷ் பகுதியின் சர்வதேச தோழர்களுடன் நெருங்கிய ஒத்துழைப்பின் மூலமாக மட்டும் தான் தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் இருக்கும் அரசியல் நெருக்கடியை தீர்க்க முடியும் என்று கடந்த மூன்று மாதங்களில், வேர்க்கர்ஸ் லீக் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளது. துரதிஷ்டவசமாக, ஹீலியின் கீழான பல ஆண்டு கால திட்டமிட்ட தவறான கற்பித்தலினால், அனைத்துலகக் குழுவை ஏளனத்துடன் பார்க்கும் பல தோழர்கள் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமைக்குள் உள்ளனர் மற்றும் உண்மையான ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைக்கான அனைத்துலகக் குழுவின் முறையீட்டை பிரிட்டிஷ் பகுதியின் வாழ்க்கைக்குள் அவர்கள் அளிக்கும் உரிமையற்ற அழையாத தலையீடாக காண்கின்றனர். "அனைத்துலகக் குழுவிற்கு தொழிலாளர் புரட்சி கட்சி அடிபணிய வேண்டும்" என்ற குறிப்புகள் சில தோழர்களிடம் இருந்து ஒரு விரோத பிரதிபலிப்பை ஏற்படுத்துகிறது. உண்மையில், ஒவ்வொரு உறுப்பினர்களின் அகநிலை பலவீனங்களுடன் நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை. தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் சக்திவாய்ந்த தேசியவாத போக்கு இருப்பது என்பது உலகின் பழைய ஏகாதிபத்திய நாட்டினது தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று முன்னேற்றத்தின் ஓர் அரசியல் பிரதிபலிப்பாகும். போராடி இந்த போக்கை மாற்ற முடியும் என்று அவர்கள் இதுவரை உணர்ந்திருக்கும் வரையில், இந்த போராட்டத்தை கொண்டு செல்வதற்கான பொறுப்பு தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைவர்களின் மீது விழுகிறது.

நாம் எதிர்கொண்டிருக்கும் பெரும் அபாயம் என்னவென்றால், அந்த தலைமையினால் சர்வதேசியவாத எதிர்ப்பு தூண்டிவிடப்படுகிறது. சோசலிசப் புரட்சியின் உலக கட்சிக்கான முன்னணி அமைப்பான அனைத்துலகக் குழுவின் அதிகாரத்திற்கு எதிராக தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தேசிய சுயாட்சி முன்வைக்கப்படுகிறது.[105]

192. "சர்வதேசியவாதம் துல்லியமாக வர்க்க கோடுகளை விதிப்பதுடன், தொடக்கத்திலிருந்து இறுதிவரை போராடுவதை கொண்டிருக்கிறது," என்ற சுலோட்டரின் வற்புறுத்தலுக்கு பதிலிறுக்கும் முகமாக அரசியல் குழு கேட்டது:

இந்த "வர்க்க கோடுகள்" எந்த செயல்முறையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன? நான்காம் அகிலத்தின் இருப்பு அதற்கு தேவைப்படுகிறதா? தோழர் சுலோட்டரின் வரையறை கூறுவதாவது -இவை அவரின் முழு கடிதத்தின் வெளிப்படையான எழுத்துக்கள்- "வர்க்க கோடுகள் மற்றும் அவற்றினூடாக போராடுவதன் மூலம்", அதன் சொந்த அமைப்பை நிறுவுவதன் மூலம் சர்வதேசியவாதத்தின் மட்டத்திற்கு எந்தவொரு தேசிய அமைப்பும் உயர முடியும்.

தற்கால மார்க்சிச கோட்பாடுகளின் அபிவிருத்தி, ட்ரொட்ஸ்கிசம் மற்றும் நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது என்று உயர்த்திப் பிடிக்கும் கட்சிகள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆழுமையை ஏற்கின்றன என்று வேர்க்கர்ஸ் லீக் சுலோட்டருக்கு நினைவூட்டியது. ஒருவர் சர்வதேசியவாதத்தின் வரைவிலக்கணத்தை ஒரு வேலைத்திட்டத்தை அதன் அமைப்பு ரீதியான வெளிப்பாட்டிலிருந்து பிரிப்பதை அடிப்படையாக கொண்டிருப்பது, தங்களின் தேசிய நடவடிக்கை அரங்கிற்குள் நடவடிக்கை சுதந்திரத்தை தக்கவைக்கும் பொருட்டு மார்க்சிசத்தின் தொடர்ச்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் பொதிந்திருக்கிறது என்பதை மறுக்கும் ட்ரொட்ஸ்கிசத்தின் திருத்தல்வாத மற்றும் இடைநிலை எதிப்பாளர்கள் அனைவரின் நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்வதாகும்.[106]

193. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு தெரியப்படுத்தாமல், 1976 மற்றும் 1985க்கு இடையில் மத்திய கிழக்கின் பல்வேறு முதலாளித்துவ தேசிய ஆட்சிகளுடன் தொழிலாளர் புரட்சிக் கட்சியால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மற்றும் நிதி உறவுகளுடன் தொடர்புடைய ஆதாரங்களை ஆய்வுசெய்ய சர்வதேச கட்டுப்பாட்டுக் குழு அமைக்கப்பட்டதாக அதனிடமிருந்து 1985, டிசம்பர் 16ல், அனைத்துலக குழு ஓர் அறிக்கையை பெற்றது. அந்த ஆண்டுகளின் போது நான்காம் அகிலத்தின் கோட்பாடுகளை காட்டிக் கொடுத்த அரசியல் தொடர்புகளுள் தொழிலாளர் புரட்சிக் கட்சி நுழைந்திருந்ததை அந்த அறிக்கை இறுதியாய் நிலைநாட்டியது. சுலோட்டர் மற்றும் பண்டா கன்னைகளை பிரதிநிதித்துவம் செய்த தொழிலாளர் புரட்சிக் கட்சி பேராளர்களின் ஆட்சேபனைகளை மீறி, சர்வதேச அமைப்பில் இருந்து தொழிலாளர் புரட்சிக் கட்சியின் உறுப்பான்மையை நீக்க அனைத்துலகக் குழு வாக்களித்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சி உறுப்பினர்களில் ஒரு கணிசமான பகுதியை தக்கவைத்திருந்த டேவிட் ஹைலண்டால் இந்த தீர்மானம் ஆதரிக்கப்பட்டது, அது அனைத்துலகக் குழுவுடன் ஓர் அரசியல் உடன்பாட்டை கொண்டிருந்தது.

194. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் இடைநீக்கம், நான்காம் அகிலத்திற்குள் புரட்சிகர சர்வதேசியவாத கோட்பாடுகள் மீதான ஒரு தெளிவான வலியுறுத்தலை பிரதிபலித்தது. சர்வதேச ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளை தேசிய சந்தர்ப்பவாதத்தின் எவ்வித வடிவத்திற்கும் கீழ்ப்படுத்துவதை அது பொறுத்துக் கொள்ளாது என்பதை இந்த நடவடிக்கை மூலம் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு தெளிவுபடுத்தியது. இடைநீக்கத்தின் நோக்கம் தொழிலாளர் புரட்சி கட்சியை தண்டிக்க வேண்டும் என்பதல்ல, மாறாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள் உறுப்பினர்களுக்கான கோட்பாட்டு ரீதியான நிலைமைகளை உருவாக்குதற்காகவாகும். 1985, டிசம்பர் 17ல், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவால் வெளியிடப்பட்ட இரண்டாவது தீர்மானம், அனைத்துலகக் குழு அமைக்கப்பட்டிருக்கும் வரலாற்று ரீதியான மற்றும் வேலைதிட்ட ரீதியான அடித்தளங்களை எடுத்துக்காட்டியது. இந்த கோட்பாடுகளை மீண்டும் உறுதிப்படுத்தவும், அவ்வாறு செய்வதன் மூலம், நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவிற்குள் அதன் சொந்த விரைவான மறுசேர்க்கைக்கு தயாராகவும் அந்த அறிக்கை தொழிலாளர் புரட்சி கட்சிக்கு அழைப்பு விடுத்தது. அந்த அறிக்கை பிரகடனப்படுத்தியதாவது:

ஹீலியின் கீழ் தொழிலாளர் புரட்சி கட்சியின் தேசியவாத சீரழிவின் மரபுரிமையாக நிலவுகின்ற பிரச்சனைகளை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தீர்க்கவும், தொழிலாளர் புரட்சி கட்சிக்குள் சர்வதேசியவாத அடிப்படை கோட்பாடுகளை மீண்டும் உறுதி செய்யவும் மற்றும் இதன் அடிப்படையில் அதன் முழு உறுப்பினர் பதவியை நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவிற்குள் மீண்டும் கொண்டு வருவதற்காக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும், தொழிலாளர் புரட்சி கட்சியின் மத்திய குழுவும் தற்போது நெருக்கமாக இணைந்து பணியாற்றலாம் என அது முடிவுரைத்தது. இந்த உறவின் அமைப்பு வடிவம், எல்லா காலங்களிலும், நான்காம் அகிலத்தின் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனநாயக மத்தியத்துவ லெனினிச கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.[107]

195. மீண்டும் ஒருமுறை, டேவிட் ஹைலண்ட் தவிர, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் பிரதிநிதிகள், இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்தையோ அல்லது அரசியல் அதிகாரத்தையோ தொழிலாளர் புரட்சிக் கட்சி ஏற்காது என்பதை அவர்களின் வாக்களிப்பு தெளிவுபடுத்தியது. ஒரு மாதத்திற்கு பின்னர், பிரிட்டிஷ் பிரிவின் உறுப்பினர் பதவிக்கு அனைத்துலகக் குழுவின் அரசியல் அதிகாரத்திடமிருந்து ஒப்புதல் பெறவேண்டும் என்ற, 1985 அக்டோபரில் வெளியிடப்பட்ட அதன் முந்தைய உடன்பாட்டை தள்ளுபடி செய்ய தொழிலாளர் புரட்சிக் கட்சியின் மத்திய குழு வாக்களித்தது. தொழிலாளர் புரட்சி கட்சியின் மத்திய குழுவில் இருந்த ஹைலண்ட் மற்றும் பிற இரண்டு உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்தனர். அனைத்துலகக் குழுவில் இருந்து பிளவுறுவதற்கான முடிவையே தொழிலாளர் புரட்சி கட்சியின் மத்திய குழுவின் இந்த வாக்களிப்பு எடுத்து காட்டியது. 1986, பெப்ரவரி 8 இல், அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட ஒரு இகழ்ச்சிக்குரிய காங்கிரசை தொழிலாளர் புரட்சிக் கட்சி நடாத்தியது. இந்த அரசியல் கேலிக்கூத்து, ட்ரொட்ஸ்கிச அமைப்பிலிருந்து தொழிலாளர் புரட்சி கட்சிக்கு உறுதியான முடிவை குறித்து காட்டியது. இந்த காங்கிரசிற்காக உருவாக்கப்பட்ட முக்கிய ஆவணமானது, " 27 Reasons Why the International Committee Should be Buried Forthwith and the Fourth International Built " என்று தலைப்பிட்டு பண்டாவால் எழுதப்பட்ட ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு ஆவணமாகும். இந்த ஆவணத்தை எழுதிய சில மாதங்களில், பண்டா அவரின் சுமார் 40 ஆண்டு கால நான்காம் அகிலத்துடனான தொடர்புகளை துறந்தார் மற்றும் ஸ்ராலினுக்கான அவரின் பாராட்டுக்களை தொடர்ந்தார். தொழிலாளர் புரட்சிக் கட்சியை பொறுத்த வரை, அதன் பல்வேறு கன்னைகள் ஒன்றன் பின் ஒன்றாக பிரிந்து சென்றன. ஒரு தசாப்தத்திற்கும் குறைவாக, தொழிலாளர் புரட்சி கட்சியின் சுலோட்டர் மற்றும் பிற முன்னாள் தலைவர்கள் பொஸ்னியாவில் நடந்த அமெரிக்க-நேட்டோ நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கு கொண்டிருந்தனர். பிரிட்டீஷ் அமைப்பில் ஒரே நீடித்து நிற்கவல்ல அரசியற்போக்கு தொழிலாளர் புரட்சி கட்சியின் நெருக்கடி மற்றும் உடைவில் இருந்து தோன்ற இருந்த டேவிட் ஹைலண்ட்டின் தலைமையிலான ஒரே அரசியல் போக்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கோட்பாடுகளை உயர்த்திப்பிடித்தது. இந்த பிரிவு, 1986 பெப்ரவரியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பகுதியாக விளங்கும் இன்றைய சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியது.


[104]

நான்காம் அகிலம், Volume 13, No. 2, Autumn 1986, p. 52.

[105]

Ibid, p. 77.

[106]

Ibid.

[107]

Ibid, p. 102.