இலங்கைத் தொழிலாளர்களும் மாணவர்களும், உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மில்லியன் கணக்கான அவர்களது சமதரப்பினரைப் போலவே, காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான ஏகாதிபத்திய ஆதரவுடன் கூடிய தாக்குதலுக்கு எதிராகப் பேசுகின்றனர்.
சம்பளத்தை அதிகரித்துக்கொள்வதற்கான கடும் தேவை மற்றும் முதலாளிமாரும் அரசாங்கமும் 1,000 ரூபா நாள் சம்பள கோரிக்கையை நிராகரிப்பது சம்பந்தமாக நிலவும் கோபத்தினதும் காரணமாக, இந்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக ஊடகங்களில் அறிவிக்கப்பட்ட உடனேயே, பொகவந்தலாவை மற்றும் பதுளை உட்பட பிரதேசங்களில பல தோட்டங்களில் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக வேலை நிறுத்தங்களில் இறங்கினர்.
இலங்கையிலும் சர்வதேச அளவிலும் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்ட அலைகளின் முக்கிய அம்சங்கள் இந்த வேலைநிறுத்தத்திலும் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களுக்கும் அதன் அதிகாரத்துவத்திற்கும் எதிரான ஒரு தொழிலாளர் கிளர்ச்சியின் வளர்ச்சி முக்கிய அம்சமாகும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் பங்கெடுக்காமைக்கு எதிராக மொரட்டுவ பல்கலைக்கழக கிளையின் உறுப்பினர்கள் தொழிற்சங்கத்தை விட்டு வெளியேறுவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இது வேறு இடங்களிலும் காணப்படும் ஒரு நிலைமை ஆகும்.
அசான்ஜ் மீதான துன்புறுத்தலானது ஜனநாயக உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் மீதான தீவிரமான தாக்குதலின் முன்னணியில் உள்ளது, மேலும் இது அரசாங்கக் குற்றங்களை அம்பலப்படுத்துவதைத் தடுப்பதையும் சமூக சமத்துவமின்மை மற்றும் போருக்கு எதிரான எதிர்ப்பை அடக்குவதையும் இலக்காகக் கொண்டதாகும்
தொழிலாளர்கள் அனைவரும் ஹட்டன் பொலிஸ் நிலயத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு, அவர்களுக்கு எதிரான மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தோட்ட நிர்வாகம் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
“குண்டுத்தாக்குதல் நடந்து அரை மணித்தியாலத்துக்குப் பின்னர், ஒரேயொரு அம்புலன்ஸ் மட்டுமே வந்திருந்தது. பாதிக்கப்பட்டவர்கள், உள்ளூர் வாசிகளுக்குச் சொந்தமான பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வாடகை கார்கள் மூலமே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.”
ங்களுடைய அங்கத்தவர்கள் மத்தியில் வளர்ந்துவரும் கோபங்களுக்கு பதிலளிக்கும் முகமாக, போதனைசாரா ஊழியர்களை உள்ளடக்கிய பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி (JCUTU), பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்துடனும் இணைந்து, இந்த அறிவித்தலை விடுத்துள்ளன.
தமிழர்-விரோத மற்றும் முஸ்லிம்-விரோத பேரினவாத குழுக்களின் தூண்டுதல்களை நிராகரித்தும் தரவரிசை பிரிவுகளைக் கடந்தும் அனைத்து ஆசிரியர்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொண்டமை வேலைநிறுத்தத்தின் மிக முக்கியமான வளர்ச்சியாகும். இதனால் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
முதலாளித்துவத்தின் நெருக்கடி, போட்டி தேசிய அரசுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள் தீவிரமடையச் செய்வதோடு, பேரழிவு தரும் வளர்ந்து வரும் உலகப் போர் ஆபத்தையும் உருவாக்கியுள்ளது. தொழிலாள வர்க்கத்துக்கு இதைத் தடுக்க உள்ள ஒரே வழி, ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்குக்காக போராடுவதே ஆகும்,
டிசம்பரில் தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் போது சோ.ச.க.வின் அரசியல் உதவியுடன் உருவாக்கப்பட்ட எபோட்சிலி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்கள் உட்பட தோட்டத் தொழிலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சிங்கள மற்றும் தமிழில் "சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றது என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரையின் ஆயிரக்கணக்கான பிரதிகள் தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன.
இலங்கையில் நவம்பர் 16 அன்று நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன, அக்டோபர் 10 அன்று கொழும்பில் தேசிய நூலக கட்டிடத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை செயல்படுத்த, தொழிலாளர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
இலங்கையில் கடந்த வாரங்களாக பெய்துவரும் மழை காரணமாக நாடு பூராவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பரந்தளவு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. செய்திகளின்படி நாடுபூராவும் 44,952 குடும்பங்களைச் சேர்ந்த 153,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தினதும் அதிகாரிகளதும் அலட்சியம் காரணமாக இந்த தொடர் மழை மக்களின் சமூக மற்றும் வாழ்க்கை பிரச்சினைகளை மேலும் உக்கிரமாக்கியுள்ளது.