திசாநாயக்க, ஜே.வி.பி.யின் வரலாற்றில் சோசலிச வாய்வீச்சுக்களை புறக்கணித்து, சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கும் இலங்கை ஆளும் வர்க்கத்தின் ஏகாதிபத்திய சார்பு கட்சியாக அதை மாற்றுவதில் ஒரு கனிசமான பாத்திரத்தை வகித்துள்ளார்.
அவர்களின் தந்திரோபாய வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், தமிழ் வெகுஜனங்களின் இழப்பில் தமிழ் முதலாளித்துவத்திற்கு அதிக அதிகாரங்கள் மற்றும் சலுகைகளுக்காக அடுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதே அவர்களின் பொதுவான நோக்கமாகும்.
மாணவர் சங்கம் மட்டுமல்ல, இலங்கையில் அதிக அதிகாரங்களுக்கான தங்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு சியோனிச ஆட்சியின் பிரதான ஆதரவாளரான அமெரிக்காவிடம் கெஞ்சும் தமிழ் தேசியவாதக் கட்சிகளும் காஸா படுகொலை பற்றி குற்றவியல்தனமாக மௌனம் காக்கின்றன.
விக்கிரமசிங்கவின் புதிய சட்டமூலம், அடுத்த சுற்று சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளின் விளைவாக மீண்டும் தலை தூக்கக் கூடிய வெகுஜனப் போராட்டங்களை நசுக்குவதற்கான தயாரிப்பில் அடக்குமுறை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதாகும்.
இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் மீது தொடரும் இராணுவத் துன்புறுத்தல், இரு நாடுகளிலும் ஆளும் வர்க்கங்களால் பராமரிக்கப்படும் எதேச்சதிகாரமான தேசிய எல்லைகளின் பிற்போக்கு மற்றும் பகுத்தறிவற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.
தொற்றுநோய் துரிதமாக பரவுவதாலும் போதிய சுகாதார வசதிகள் இல்லாமையாலும் நாடு சுகாதார பேரழிவை எதிர்கொள்ளக் கூடும் என்று மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் முந்தைய, ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான கொவிட்-19 நோய்த்தொற்றுகள் காணப்பட்டமை, முக்கியமாக முறையான சோதனைகளை மேற்கொள்ள அரசாங்கம் மறுத்ததன் விளைவாகும்.