96 வயதான மூத்த பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டான பார்பரா சுலோட்டர் போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்ய அழைப்பு விடுக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

இந்த அறிக்கையானது பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் ஒரு முன்னணி உறுப்பினரும் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக சோசலிசத்திற்காக போராடுபவருமான பார்பரா சுலோட்டரால் (Barbara Slaughter) வழங்கப்பட்டது. கடந்த மாதம் செலென்ஸ்கி அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டவரும், பல தசாப்தங்களாக சிறையில் அடைக்கப்படுவதற்கு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள உக்ரேனிய சோசலிஸ்டான போக்டன் சிரோட்டியுக்கை விடுவிக்குமாறு சுலோட்டர் அழைப்பு விடுக்கிறார்.

போக்டனை விடுவிக்கக் கோரும் மனுவில் கையெழுத்திடுங்கள்

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

எனது பெயர் பார்பரா ஸ்லோட்டர். தோழர் போக்டன் சிரோடியுக் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நான் சாத்தியமான வலுவான வார்த்தைகளில் கண்டனம் தெரிவிக்க விரும்புகிறேன் மற்றும் உக்ரேனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் இருந்து அவரை உடனடியாக விடுவிக்கக் கோருகிறேன். அவர் விளாடிமீர் புட்டினின் ஒரு முகவர் என்ற ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு பலியானவர் ஆவார்.

உண்மை என்னவென்றால், ஏற்கனவே இரு தரப்பிலும் நூறாயிரக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைப் பறித்துள்ள உக்ரேனிய போரை எதிர்க்கத் துணிந்ததற்காக போக்டன் மீது பெரும் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன், ஆயுள் தண்டனை விதிக்கப்படும் அச்சுறுத்தலுக்கும் அவர் உள்ளாகியுள்ளார்.

செலென்ஸ்கி மற்றும் புட்டின் இருவரின் முதலாளித்துவ அரசாங்கங்களையும் எதிர்ப்பதன் மூலமும், உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு அழைப்பு விடுத்ததன் மூலமும் போர்க் காலத்தில் அவர் முன்மாதிரியான தைரியத்தை நிரூபித்துள்ளார்.

அவ்வாறு செய்ததன் மூலம், அவர் சோசலிச இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான புரட்சிகர சர்வதேசியவாதத்திற்கு உயிரோட்டமான வெளிப்பாட்டைக் கொடுத்துள்ளார். இது அவரது சொந்த அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பின் வேலைத்திட்டத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது, இது போருக்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு சர்வதேச இயக்கத்தை ஒழுங்கமைக்க அழைப்பு விடுக்கிறது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜோசப் கோயபல்ஸ் கூறிய பொய்களைப் போலவே, போக்டனும் பெரிய பொய்யால் பலியாக்கப்பட்டுள்ளார்.

எனக்கு 96 வயதாகிறது, அந்த பயங்கரமான காலகட்டத்தில் நான் வாழ்ந்தேன். அந்த யுத்தத்தில் சோவியத் மக்கள் அனுபவித்த துன்பங்கள் கணக்கிட முடியாதவை இருந்தன. ரஷ்ய புரட்சியின் ஆதாயங்களில் எஞ்சியிருந்தவற்றைப் பாதுகாக்க அருகருகே சண்டையிட்ட ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் உட்பட 20 மில்லியனுக்கும் அதிகமானோர் போரில் இறந்தனர். இப்போது, இந்த இளைஞர்கள் ரஷ்யா மற்றும் உக்ரேன் தன்னலக்குழுக்களையும், 1991 இல் சோவியத் ஒன்றியம் பொறிந்த போது அவர்கள் பகிர்ந்து கொண்ட கொள்ளைகளையும் பாதுகாக்க ஒரு மரணகதியிலான மோதலில் ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தப்பட்டுள்ளனர்.

போக்டனின் கைது போருக்கு எதிரான அனைத்து எதிர்ப்புக்கள் மீதும் நடத்தப்படும் மிருகத்தனமான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகும். இது கட்டாய இராணுவ சேவையை தவிர்ப்பதற்காக ஆயிரக்கணக்கான உக்ரேனிய இளைஞர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்துள்ளது.

இந்த மோதல் ஒரு நேட்டோ பினாமிப் போர் என்று சரியாக குணாம்சப்படுத்தப்பட்டுள்ளது. இன்று, ரஷ்ய பிராந்தியத்தில் உக்ரேன் நேரடியாக அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் என்று ஜனாதிபதி பைடென் எடுத்த ஒரு முடிவுடன், அணு ஆயுத மோதலுக்கு தீவிரமடையும் அபாயம் முன்னெப்போதிலும் பார்க்க அதிகமாக அதிகரித்து வருகிறது.

அதனால்தான் செலென்ஸ்கி ஆட்சியானது தோழர் போக்டான் பிரதிநிதித்துவப்படுத்தும் கருத்துக்கள் மற்றும் கோட்பாடுகளை மௌனமாக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளது. எனவேதான் உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் கூட புட்டினின் கைப்பாவைகள் என்று குற்றம் சாட்டப்படுகின்றன.

போக்டனின் உதாரணத்திலிருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும். அவரது விடுதலையை அடைவதற்கான பிரச்சாரத்திற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பரந்த ஆதரவை நாம் அணிதிரட்ட வேண்டும். அவ்வாறு செய்வதன்மூலம், உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் அனைத்து பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக ஒரு அடியை வழங்க வேண்டும்.

போக்டனை விடுவிக்கக் கோரும் மனுவில் கையெழுத்திடுங்கள்!

Loading