முன்னோக்கு

ரஃபா மீதான தாக்குதலும் பாலஸ்தீனத்தில் இனச் சுத்திகரிப்பும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

சர்வதேச நீதிமன்றத்தின் வெள்ளிக்கிழமை உத்தரவையும் மீறி, இஸ்ரேல் கடந்த இரண்டு நாட்களில் ரஃபா நகரில் 60 க்கும் மேற்பட்ட குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், ரஃபாவின் பாதுகாப்பான வலயங்களில் ஒன்றில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் மேற்கொண்ட படுகொலையின் காட்சிகளால் திகிலடைந்துள்ளனர். இந்த படுகொலை தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர்.

டிசம்பர் 26, 2023 செவ்வாய்க்கிழமை, காஸா பகுதியின் ரஃபாவில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் உடல்கள் புல்டோசரில் இறக்கப்படுகிறது. [AP Photo/Fatima Shbair]

மூன்று வாரங்களாக தொடர்ச்சியான குண்டுவீச்சுக்கு உள்ளாகி வரும் ரஃபா நகரில், இஸ்ரேலிய டாங்கிகள் ஒவ்வொரு நாளும் தெருத் தெருவாக முன்னேறி வருகின்றன. குண்டுவீச்சுக்கள் மற்றும் தரைவழித் தாக்குதல்களின் தீவிரம் நகரத்தில் மனிதாபிமான உணவு விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்த வழிவகுத்துள்ளது. மேலும் இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து உணவு உதவிகளையும் இப்பகுதிக்கு கிடைக்கவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது.

உலகில் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் கண்களால் பார்க்கும் காட்சிகளுக்கு மாறாக, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள் ரஃபாவிற்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதல் எதுவும் இருக்காது என்று பகிரங்கமாக அறிவித்துள்ளன. பைடெனின் வார்த்தைகளில் சொன்னால், நகரத்தில் இஸ்ரேல் 'மட்டுப்படுத்தப்பட்ட' இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவிற்கு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தன்னால் இயன்ற அனைத்தையும்  செய்து வருகிறது என்பதாகும்.

இந்த கோரமான மற்றும் அபத்தமான பொய் செவ்வாயன்று பிரித்தானிய பாராளுமன்றத்தின் கீழ் சபையில் மிகவும் வெளிப்படையான பரிமாற்றத்திற்கு உட்பட்டிருந்தது.

800,000ம் மக்கள் நகரத்திலிருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ள நிலையில், ரஃபாவில் 'குறிப்பிடத்தக்க' இராணுவத் தாக்குதல் எதுவும் இல்லை என்று அரசாங்கம் எவ்வாறு கூற முடியும் என்று பிரிட்டனின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரூ மிட்செலை எதிர்க்கட்சியான தொழிற்கட்சி எம்பி ஆண்டி மெக்டொனால்ட் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார பிரதி அமைச்சர், இந்த 800,000ம் மக்களும் தாமகவே 'தேர்வு செய்து' இடம்பெயர்ந்து வெளியேறியுள்ளனர் என்று தெரிவித்தார்.

'அவர்கள் வெளியேறுவதற்கு என்ன தேர்வு இருந்தது? நான் வேறு எங்காவது சென்று வாழ வேண்டும் என்று நினைக்கிறேன் என்பது மட்டும்தானா? இது ஒரு அபத்தமான ஆலோசனை அல்லவா?' என்று மெக்டொனால்ட் கேட்டார்.

பாலஸ்தீனியர்கள் தப்பி ஓடுவதை 'தேர்வு செய்தனர்' என்ற பிரகடனம், நிச்சயமாக அபத்தமானது என்றாலும், அது பிரமாண்டமான வரலாற்று அதிர்வலைகளைக் கொண்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற இஸ்ரேலிய வரலாற்றாசிரியர் இலன் பாப்பே (சமீபத்தில் அமெரிக்கப் பயணத்தின் போது மணிக்கணக்கான விசாரிக்கு உள்ளானவர்) இது சியோனிசத்தின் 'அடிப்படைக் கட்டுக்கதை' என்று அழைத்ததை மறுபரிசீலனை செய்கிறது: 750,000 பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 1948 'நக்பா', இஸ்ரேலியப் படைகளின் நடவடிக்கைகளால் தூண்டுதல் இல்லாமல், பாலஸ்தீனியர்களின் ஒரு தன்னார்வமான மீள்குடியேற்றமாகும் என்று கருத்தை வழங்குகிறது.

இலன் பாப்பேயின் 2006ம் ஆண்டு வெளிவந்த புத்தகம், பாலஸ்தீனத்தின் இனச் சுத்திகரிப்பு, அதிகாரப்பூர்வ இஸ்ரேலிய வரலாற்றின் அனைத்து பொய்களையும் பேரழிவு தரும் அம்பலப்படுத்தலாகும். 1948 பாலஸ்தீனியர்களின் இடம்பெயர்வு மற்றும் பாரிய படுகொலைகள் மற்றும் ஒரு விரிவான நனவான திட்டத்தின் விளைவு என்பதை இது நிரூபிக்கிறது.

இன்றைய நிகழ்வுகளுக்கு இணையாக, ஒரு அரபு போராளிகளின் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேல் தனது திட்டங்களை மறைத்து நிறைவேற்றிக் கொண்டதாக பாப்பே விளக்கினார். 'சியோனிச கொள்கை ஆரம்பத்தில் பிப்ரவரி 1947 இல் பாலஸ்தீனிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் அடிப்படையில் இருந்தது. ஆனால், அது இறுதியில் மார்ச் 1948 இல் முழு நாட்டையும் இன ரீதியாக சுத்திகரிக்கும் ஒரு முயற்சியாக உருவானது'. அவர் பின்வருமாறு கூறினார்.

முடிவு எடுக்கப்பட்டதும், பணியை முடிக்க ஆறு மாதங்கள் ஆனது. முடிவில், பாலஸ்தீனத்தின் பழங்குடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், கிட்டத்தட்ட 800,000 மக்கள், வேரோடு பிடுங்கப்பட்டனர். 531 கிராமங்கள் அழிக்கப்பட்டன மற்றும் பதினொரு நகர்ப்புற சுற்றுப்புறங்கள் அவற்றின் குடிமக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. 1948 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி இத்திட்டம் முடிவு செய்யப்பட்டு, எல்லாவற்றிற்கும் மேலாக, அடுத்த மாதங்களில் அது முறையாக செயல்படுத்தப்பட்டது, இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் தெளிவான வழக்கு, இன்று சர்வதேச சட்டத்தின் கீழ் மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக கருதப்படுகிறது. (பக்கம் 14)

காஸா இனப்படுகொலையானது, 'சியோனிச இயக்கம் பாலஸ்தீனத்தில் தோன்றிய காலத்தில் மிக ஆரம்பத்திலேயே நிர்ணயித்த இலக்காகும். அந்த இலக்கானது, முடிந்தவரை பாலஸ்தீனத்தில், முடிந்தளவு சில பாலஸ்தீனியர்களுடன் இருக்க வேண்டும் என்பதன் உச்சக்கட்டம்' என்று இலன் பாப்பே விளக்கியிருந்தார்.

தற்போதைய இனப்படுகொலை என்பது ஒரு நனவான திட்டத்தின் வெளிப்பாடு என்பது இரகசியமல்ல. செப்டம்பர் 22, 2023 அன்று, காஸா மீதான தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 'புதிய மத்திய கிழக்கு' பற்றிய வரைபடத்தை காட்சிப்படுத்தினார். அமெரிக்காவுடன் இணைந்த வகையில், மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, சூடான், ஜோர்டான் மற்றும் சவூதி அரேபியாவுடன் புவிசார் அரசியல் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இஸ்ரேல் அனைத்து பாலஸ்தீனப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக அந்த வரைபடம் காட்டியது.

வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோரை சந்தித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, நெதன்யாகு இந்த ஆத்திரமூட்டும் காட்சியை வெளிப்படுத்தினார். அந்த சந்திப்பின் போது பைடென், அமெரிக்கா தலைமையிலான மத்திய கிழக்கின் மறுஒழுங்கமைப்பில் 'தலைமுறைகளின் கனவு நிறைவேறும், மேலும், நான் பலமுறை சொல்வதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்: இஸ்ரேல் இல்லை என்றால், நாம் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும்' என்று அறிவித்தார்.

இச்சந்திப்பு அக்டோபர் 7 நிகழ்வுகளுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு நடந்தது. காஸா பகுதியில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்கள் வேண்டுமென்றே திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் படைகள் காஸா எல்லையை ஆக்கிரமித்தன. இஸ்ரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக தனது வசம் வைத்திருந்த இந்த திட்டத்தை, ஹமாசின் இந்த நடவடிக்கைமூலம் நிறைவேற்றியது. அன்றைய நிகழ்வுகள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவையின் உறுப்பினரும் விவசாய அமைச்சருமான அவி டிக்டர் 'நக்பா 2023' என்று அழைத்திருந்தார்.

கடந்த வாரம், இரண்டு தனித்தனி செனட் குழு விசாரணைகளின் போது பிளிங்கன் ஒரே மாதிரியான இரண்டு வாய்மொழி சறுக்கலை செய்தார், இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிப்படையான இனப்படுகொலை நோக்கத்தை வெளிப்படுத்தியது. செனட் வெளியுறவுக் குழுவின் முன் மே 21 அன்று அளித்த சாட்சியத்தில் பிளிங்கன், 'இஸ்ரேல் அப்பிராந்தியத்தில் ஒருங்கிணைவதற்கும், அதற்கு அவசியமான மற்றும் விரும்பும் அடிப்படை பாதுகாப்பைப் பெறுவதற்கும், மற்றும் அது ஸ்தாபிக்கப்பட்டது முதல் அது முனைந்த உறவுகளைக் கொண்டிருப்பதற்கும் அங்கே ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அது உண்மையில் முன்னோக்கி செல்ல வேண்டுமானால், காஸாவுக்கு ஒரு முடிவு இருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

அதே நாளில் மற்றொரு செனட் குழு விசாரணையில், பிளிங்கன் அதே சூத்திரத்தைப் பயன்படுத்தினார். காஸாவை 'இயல்பாக்குவதற்கு ஒரு முடிவு' தேவை என்று அறிவித்தார்.

ஒவ்வொரு நாளும், இனப்படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பு பற்றிய உண்மையான அமெரிக்க-இஸ்ரேலிய கொள்கை தெளிவாகிறது. பைடென் எதை 'தலைமுறைகளின் கனவு' என்று அழைத்தாரோ, மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்க மறுஒழுங்கமைப்பைப் பாதுகாப்பதற்கு, உண்மையில், 'காஸாவை முடிவுக்குக் கொண்டுவருவது' தேவைப்படுகிறது. அதாவது, இஸ்ரேலிய மேலாதிக்கத்திற்கு பாலஸ்தீன மக்களின் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பை திட்டமிட்டு நசுக்குவது அவசியப்படுகிறது.

ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்யா, சீனா மற்றும் ஈரானை இலக்கில் வைத்துள்ள நிலையில், உலகளாவிய போர் வெடிப்பானது, இஸ்ரேலுக்கும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களுக்கும் பாலஸ்தீன பிரச்சினையின் 'இறுதி தீர்வை' நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி வருகிறது.

பல தசாப்தங்களாக, அமெரிக்கா மற்றும் அனைத்து ஏகாதிபத்திய சக்திகளால் தொடுக்கப்பட்ட ஒவ்வொரு போரும் 'மனித உரிமைகளை' பேணுவதற்கும் இனப்படுகொலையை நிறுத்துவதற்குமான ஒரு நடவடிக்கையாக நியாயப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. யூகோஸ்லாவியா மீதான குண்டுவீச்சில் இருந்து லிபியாவில் ஆட்சி மாற்ற நடவடிக்கை வரையில் அனைத்தும் உடனடி இனப்படுகொலையைத் தடுப்பதற்கான ஒரே வழியாக விற்கப்பட்டன. உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் கூட பைடென் 'இனப்படுகொலை' என்று அழைத்ததைத் தடுக்கும் முயற்சியாக பொதுமக்களுக்கு விற்கப்பட்டது. அதில் 'புட்டின் உக்ரேனியராக இருக்க முடியும் என்ற யோசனையை துடைத்தெறிய முயற்சிக்கிறார்.'

எவ்வாறிருந்த போதிலும், கடந்த ஏழு மாதங்களின் நிகழ்வுகள், இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பின் மிகப் பெரிய அரசு ஆதரவாளர்கள் அமெரிக்காவும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளன.

Loading