பிரித்தானியா: நியூபோர்ட் எழுச்சியில் இருந்து 180 ஆண்டுகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

பின்வருவது, இரண்டு பகுதி கட்டுரையின் முதல் பகுதியாகும். இரண்டாம் பகுதி விரைவில் வெளியிடப்படும்.

1839 ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி, பல ஆயிரம் சார்ட்டிஸ்டுகள் (Chartists), ஆயுதங்களை ஏந்தியபடி வேல்ஸ்சில் உள்ள நியூபோர்ட்டுக்கு அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் வெஸ்ட்கேட் ஹோட்டலை (Westgate Hotel) முற்றுகையிட்டு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சக சார்ட்டிஸ்டுகளை விடுவிக்கக் கோரியபோது, பதிலுக்கு அங்கிருந்த துருப்புக்களும் மற்றும் சிறப்பு போலிசார்களும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சுமார் 22 பேர் கொல்லப்பட்டதோடு,  பலர் காயமடைந்தனர். அத்துடன், 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த அணிவகுப்பினுடைய மூன்று முக்கிய தலைவர்களுக்கு, தேசத்துரோக குற்றத்திற்காக மரண தண்டனை வழங்கப்பட்டது. அவர்களின் தண்டனைகள் பின்னர் நாடு கடத்துதல் அல்லது தண்டனை இடமாற்றமாக ஆக்கப்பட்டது. 

நியூபோர்ட் எழுச்சியானது, அறியப்பட்டபடி, பிரிட்டனின் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியிலும் தொழிலாள வர்க்கத்தின் அமைப்புமுறையிலும் ஒரு வரலாற்றுப் புள்ளியைக் குறிக்கிறது.

சார்டிஸ்ட் இயக்கமானது, 1789 பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து பல தசாப்தங்களில் தொழிலாள வர்க்க அரசியல் வளர்ச்சிகளின் உச்சக்கட்டமாக இருந்தது. வாக்குரிமை சீர்திருத்தத்திற்கான உடனடி கோரிக்கைகளின் பதாகையின் கீழ் உருவாக்கப்பட்டது என்றாலும், ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் கீழ் சார்டிஸ்ட் இயக்கம் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர வளர்ச்சியின் தொடக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது.

பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் இந்த நிலைமையை விவரிக்கையில், 1885ல் பின்வருமாறு எழுதினார்:

 “ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் தொழில்துறையின் நடைமுறை வழக்கங்கள் ஒரு பொதுவான வணிக வீழ்ச்சியால் வன்முறை ரீதியாக குறுக்கிடப்பட்டுள்ளது, அதைத்தொடர்ந்து, நீடித்த மந்தநிலைக்கு பிறகு, சில குறுகிய ஆண்டுகள் செழிப்புடனும், எப்போதும் ஒழுங்கற்ற பதட்டமான அதீத உற்பத்தி மற்றும் அதன் விளைவாக நிகழும் புதுப்பிக்கப்பட்ட சரிவு ஆகியவற்றிலும் முடிவடைகிறது. முதலாளித்துவ வர்க்கம் மக்காச்சோளத்தில் சுதந்திர வர்த்தகத்திற்காக முழக்கமிட்டது  மற்றும் நகரங்களில் பட்டினியால் வாடும் மக்கள் அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்தந்த கிராமப்புற மாவட்டங்களுக்கு அவர்களை திருப்பி அனுப்புவதன் மூலம் அதை நடைமுறைப்படுத்த அச்சுறுத்தியது. சுதந்திர வர்த்தக முதலாளித்துவத்தின் ஒரு அரசியல் பிரதிநிதி ஜோன் பிரைட் (John Bright) கூறியது போல், ரொட்டிக்காக பிச்சை எடுக்கும் ஏழைகளாக அல்ல மாறாக எதிரிக்கு எதிராக நிறுத்தப்பட்டிருக்கும் படைபோல், அவர்கள் மீது படையெடுக்க வேண்டும்.“

“நகரங்களின் உழைக்கும் மக்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தின் பங்கை, மக்கள் சாசனத்தைக் (the people's charter) கோரினர், அவர்கள் பெரும்பான்மையான சிறு வணிக வர்க்கத்தால் ஆதரிக்கப்பட்டனர், மற்றும் இரண்டுக்கும் இடையே உள்ள ஒரே வேறுபாடு என்னவாக இருந்ததெனில், சாசனம் (charter) உடல் ரீதியாகவோ அல்லது தார்மீக சக்தியாலோ செயல்பட வேண்டும் என்பதாகும். பின்னர் 1847 ஆம் ஆண்டு வணிகத்தில் சரிவு ஏற்பட்டதுடன் அயர்லாந்து பஞ்சம், மற்றும் புரட்சிக்கான வாய்ப்பு இரண்டும் வந்தது. (ஏங்கெல்ஸின் 1892 'ஆங்கில பதிப்பிற்கான முன்னுரை,' இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமை' யில் மேற்கோள் காட்டப்பட்டது)“

முந்தைய தசாப்தங்களில் வாக்குகளை நீட்டிப்பதற்கான கோரிக்கைகள் அதிகரித்தன. இது உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள பேரழிவு தரும் சமுக நெருக்கடியையும் வளர்ந்து வரும் வர்க்க நனவையும் பிரதிபலித்தது. ஆரம்பகாலத்தில், நெப்போலியனின் போர்களுக்குப் பிந்தைய காலகட்டத்தின் வாக்குரிமைக்கான இயக்கம், வாக்குரிமை இழந்த குட்டி முதலாளித்துவத்தின் தாராளவாத கோரிக்கைகளுக்குப்  பின்னால் வெளிப்பட்டு வந்த தொழிலாள வர்க்கத்தை பெரிதும் ஐக்கியப்படுத்தியது. அதே அச்சில் அல்லது பீட்டர்லூவைப் போல் பொதுக்கூட்டங்களில் அதை கோருபவர்கள் மீது நடத்தப்பட்ட  மிருகத்தனமான அடக்குமுறை பிரியோகிக்கப்பட்டதிலிருந்து தொழிலாள வர்க்கத்தின் மிகவும் போர்க்குணமிக்க இயக்கத்தை உருவாக்கத் தொடங்கியிருந்தது, அது தன்னை ஒரு வர்க்கமாக அடையாளப்படுத்தத் தொடங்கியது.

1832 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தச் சட்டம் தொழிலாள வர்க்கத்தை இன்னும் உரிமையற்றதாக ஆக்கியது. இந்த சட்டத்தின் கீழ் நகரங்களில் உள்ள 10 டொலர்கள் மதிப்புள்ள நிலத்தின் உரிமையாளர்களுக்கும் மற்றும் வருட வாடகையாக 50 டொலர்கள் செலுத்தும் குத்தகைதாரர்களுக்கும் வாக்களிக்க அதிக சொத்து தகுதிகள் அமைக்கப்பட்டன. சட்டத்திற்கு முன்னர் வாக்காளர்கள் சுமார் 400,000 ஆக இருந்தனர். அதற்கு பின்னர் அனுமதிக்கப்பட்ட வயதுவந்த ஆண்களில் ஐந்தில் ஒருவருக்கு 650,000 பேர் மட்டுமே வாக்களிக்க முடிந்தது. 

வாக்குரிமை சீர்திருத்தத்திற்காக பிரச்சாரம் செய்தவர்களில் சிலர், அது எங்கும் போதுமானதாக இல்லை என்று மகிழ்ச்சியடையாத நிலையில், வாக்குகளின் மட்டுப்படுத்தப்பட்ட நீட்டிப்பு வரையறைகளை கூர்மைப்படுத்தினர். ஒரு நில உரிமையாளரும் பீட்டர்லூவின் முன்னணி பேச்சாளருமான ஹென்றி 'ஓரேட்டர்' ஹன்ட், 1832ம் ஆண்டு சட்டத்தை எதிர்த்தார். அதே ஆண்டு, அவர் பெண்களின் வாக்குரிமையை ஆதரித்ததற்காக பாராளுமன்றத்தில் கேலி செய்யப்பட்டார். சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜோன் ரசல் பிரபு, பிரிட்டிஷ் அரசியலமைப்பை முழுமையாக்கியதாகவும் அதற்கு மேலும் திருத்தங்கள் தேவையில்லை என்றும் அறிவித்தார்.

1834 ஆம் ஆண்டின் ஏழைச் சட்டத்தால் நிலைமை மோசமாகியது, இது பணிமனைகளை உருவாக்கியது. பழமைவாத தொழில்துறை சீர்திருத்தவாதி ரிச்சர்ட் ஓஸ்ட்லர் (Richard Oastler) அவற்றை 'ஏழைகளுக்கான சிறைகள்' என்று விவரித்தார்

தொழிலாள வர்க்கம் ஆரம்பத்தில் அதன் கோரிக்கைகளை ஜனநாயக வடிவில் முன்னெடுக்கப்படவேண்டியது தவிர்க்க முடியாததாக இருந்தது. 1845 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் நிலைமை என்ற புத்தகத்தில் ஏங்கெல்ஸ் விளக்கியது போல், 'தொழிலாளர்கள் சட்டத்தை மதிக்கவில்லை, ஆனால் அதை மாற்ற முடியாதபோது அதன் அதிகாரத்திற்கு அடிபணிவார்கள், குறைந்தபட்சம் அவர்கள் மாற்றங்களை முன்மொழிவது மிகவும் இயல்பானது. அதில் முதலாளித்துவத்தின் சட்டக் கட்டமைப்பிற்குப் பதிலாக அவர்கள் பாட்டாளி வர்க்கச் சட்டத்தை வைக்க விரும்புவார்கள்.

'ஏங்கெல்ஸ் பின்னர் கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும் என்ற புத்தகத்தில் பின்வருமாறு எழுதினார் '1832 ஆம் ஆண்டின் சட்டம் அவர்களை வாக்குரிமையிலிருந்து விலக்கி வைத்ததால் அவர்கள் (தொழிலாள வர்க்கம்) மக்கள் சாசனத்தில் (People's charter) தங்கள் கோரிக்கைகளை முறைப்படுத்தி பெரும் முதலாளித்துவ சோள-விரோத சட்டக் கட்சிக்கு எதிராக நவீன காலத்தின் முதல் உழைக்கும் மனிதர்களின் கட்சியான சார்ட்டிஸ்டுகள் (Chartists) என்ற ஒரு சுயாதீனக் கட்சியாக தங்களை உருவாக்கிக் கொண்டனர்'.

1838 இல் வகைப்படுத்தப்பட்ட மக்கள் சாசனத்தில் ஆறு புள்ளிகளில் சார்ட்டிஸ்டுகளின் கோரிக்கைகள் வெளிப்பட்டன. அவை, அனைத்து ஆண்களுக்குமான வாக்குரிமை; ஆண்டுதோறும் நடைபெறும் பாராளுமன்றம்; ஏழை ஆண்கள் பங்கேற்பதை உறுதி செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பணம் செலுத்துதல்; ரகசிய வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பது; சமமான தேர்தல் மாவட்டங்கள்; மற்றும் வேட்பாளர்களுக்கான சொத்து தகுதிகளை இரத்து செய்வது என்பனவாகும்.

சார்டிஸ்ட் இயக்கம் இன்னும் தொழிலாள வர்க்கத்தை குட்டி முதலாளித்துவத்தின் தீவிர பிரிவுகளுடன் இணைத்திருந்தாலும், ஜனநாயக கோரிக்கைகளை உருவாக்குவது என்பது தொழிலாளர்களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. சாசனம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இந்த இயக்கம் மேலும் மேலும் 'இன்றியமையாத சமுக இயல்புடைய ஒரு வர்க்க இயக்கமாக மாறியது', இது ஏங்கெல்ஸ் குறிப்பிட்டது போல் தொழிலாள வர்க்கத்தை அதன் பின்னால் ஐக்கியப்படுத்தியது. 'சார்டிஸ்ட் ஜனநாயகத்திற்கும், முந்தைய அனைத்து முதலாளித்துவ அரசியல் ஜனநாயகங்களுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்...' என்று ஏங்கெல்ஸ் எழுதினார்.

தீவிரமான முதலாளித்துவ வாதிகளுக்கு இந்த விஷயத்தின் 'ஆறு புள்ளிகள்' தொடக்கமும் முடிவுமாகவும் இருக்கும், உட்சபட்சமாக, இவை பொருள்படுத்தும் அர்த்தமாக இருப்பது, அரசியல் அமைப்புச் சட்டத்தில் மேலும் சில சீர்திருத்தங்களுக்கு அழைப்புவிடுப்பது, பாட்டாளிவர்க்கத்திற்கு கூடுதலான முனைகளுக்கு ஒரு வெறும் வழிமுறையாக இருக்கிறது. 'அரசியல் அதிகாரமே  நமது வழிமுறையாகும், சமூக மகிழ்ச்சியே நமது முடிவாகும்', என்பது இப்போது சார்ட்டிஸ்டுகளின் தெளிவாக வடிவமைக்கப்பட்ட போர் முழக்கமாகும்', என்று ஏங்கெல்ஸ் எழுதினார்.

1838 செப்டெம்பரில் மான்செஸ்டரின் கெர்சல் மூரில் 200.000 பேர்கள் கலந்துகொண்ட பேரணியில் ஒரு மெதடிஸ்ட் மந்திரி ஜோசப் றெய்னர் ஸ்டீபன்ஸின் வார்த்தைகளை ஏங்கெல்ஸ் மேற்கோள் காட்டினார், சார்டிசம் என்பது 'ஒரு அரசியல் இயக்கம் அல்ல, அங்கு வாக்குகளைப் பெறுவது இன்றியமையாதது. சார்டிசம் என்பது கத்தி மற்றும் முட்கரண்டி சம்பந்தப்பட்ட விஷயம்: சாசனம் என்றால் நல்ல வீடு, நல்ல உணவு மற்றும் நல்ல பானம், செழிப்பு மற்றும் குறுகிய வேலை நேரம் என்பனவாகும். 1838 இல் சில சார்ட்டிஸ்டுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், 1845 இல் அது 'அனைவருக்கும் ஒரு உண்மை' என்று எங்கெல்ஸ் எழுதுகிறார். 

ஆறு புள்ளிகளுடன் இயக்கம் (Chartists) அதன் பின்னணியை பிரதிபலிக்கும் வகையில் இரண்டு தனித்துவமான பிரிவுகளை உருவாக்கியது. நீண்ட கால தீவிர சீர்திருத்தவாதிகளான வில்லியம் லோவெட் மற்றும் ஹென்றி ஹெத்ரிங்டன் ஆகியோருடன் தொடர்புடைய தார்மீக சக்தியாக சார்டிசம் வன்முறையை உள்ளடக்கிய எந்த செயல்முறைகளுக்கும் எதிராக வலியுறுத்தப்பட்டது. லோவெட்டின் வார்த்தைகளில், சார்டிசம் என்பது 'மனதுக்கு தெரிவிக்க வேண்டும்' மற்றும் 'உணர்வுகளைக் கவர்ந்திழுக்க' கூடாது, அது 'கிளர்ச்சி அல்லது வன்முறை இல்லாமல்' சலுகைகளை கட்டாயப்படுத்தும் ஒரு அழுத்த பிரச்சாரமாக இருக்க வேண்டும். லோவெட் சாசனத்தின் வரைவதில் முக்கிய பங்கு வகித்தார் மற்றும் இயக்கத்தின் ஆரம்ப தலைவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும், சாசனத்தின் கோரிக்கைகளின் உருவாக்கம் இயக்கத்தில் அரசியல் பிளவுகளை கூர்மைப்படுத்தியது. நவம்பர் 1836 இல் ஐரிஷ் எம்.பி (MP) ஃபியர்கஸ் ஓ' கார்னர், லீட்ஸுக்குச்(Leeds) செல்வதற்கு முன்னர் மிகவும் முக்கியமான சார்டிஸ்ட் ஆவணங்களில் ஒன்றான, வாராந்திர இதழான நோர்தர்ன் ஸ்டாரை (Northern Star) நிறுவுவதற்கு முன்பு, லோவெட்டின் லண்டன் உழைக்கும் மனிதர்களின் கூட்டமைப்பில் சேர்ந்தார்.

லோவெட்டையும் மற்றும் ஹெதரிங்டனையும் அதிகமாக விமர்சித்து ஓ கார்னர், அதிக மோதல் அணுகுமுறையை எடுத்தார் மற்றும் சார்ட்டிசத்தின் உடல் வல்லமைக்கான ஒரு செய்தி தொடர்பாளராகவும் ஆனார். தொடர்ந்து வாக்குரிமை மறுக்கப்பட்ட நிலையில், உற்பத்தியை கட்டுப்பாடற்ற முறையில் தீவிரப் படுத்துதல் மற்றும் ஏழைகளின் மீதான அடக்குமுறையை அதிகரித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் வர்க்க மோதலின் யதார்த்தம் மறுக்கமுடியாதாக இருந்தது.

ஜுன் 1839 இல் சாசனத்தை பரிசீலிக்கக்கோரி 1.3 மில்லியன் மக்கள் கையொப்பமிடப்பட்ட ஒரு மனு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மிக அதிகளவிலான எம்.பிக்கள் மனுதாரர்களை விசாரிக்காமலே அதற்கு வாக்களித்தனர்.

மனுவை முன்வைத்து நாடு முழுவதும் ஒரு தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டன, கிளாஸ்கோ கிரீனில் (Glasgow Green) 200.000 பேர் கலந்து கொண்டனர். மேற்கு யோர்க்க்ஷயரில் (West Yorkshire) ஹார்ட்ஸ்ஹெட் மூரில் 100,000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த திட்ட நோக்கத்திற்காக இயக்கம் ஒழுங்கமைப்பு செய்திருந்த தேசிய மாநாட்டின் மூலம் மனு அளிக்கப்பட்டது. மக்கள் கூட்டங்களுக்கு எதிரான சட்டத்தின் மூலம் வருகையின் அளவு மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அது ஒரு மாற்று மக்கள் தலைமையின் விதையாக இருந்தது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் ஆத்திரம் ஆழமாக சென்றது.

தொடரும்…..

Loading