முன்னோக்கு

பெருந்தொற்று நோய்களின் போது "சமத்துவமின்மையின் வெடிப்பை" ஒக்ஸ்பாம் அறிக்கை ஆவணப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்  

முடிவில்லாத போர் மற்றும் பணவீக்கத்தை எதிர்கொள்கையில், உலகத்தின் செல்வந்தர்களும் பன்னாட்டு நிறுவனங்களும் 'வியத்தகு முறையில் பணக்காரர்களாக' மாறியமை, 'சமத்துவமின்மையின் வெடிப்பை' தூண்டுகிறது எனபிரித்தானியாவை அடித்தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ஒக்ஸ்பாமின் சமீபத்திய அறிக்கை குறிப்பிடுகின்றது.

'பணக்காரர்களின் உயிர்வாழ்வு' என்ற தலைப்பில், சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த தொண்டு நிறுவனம் ஒரு சிறிய பெருநிறுவன மற்றும் நிதி தன்னலக்குழுவின் கைகளில் மகத்தான செல்வச் செறிவை ஆவணப்படுத்துகிறது.

உலகம் முழுவதும் வளர்ந்து வரும் 'உலகளாவிய அரசியல் நெருக்கடி' என்று அழைக்கப்படுவதை அறிக்கை குறிப்பிடுகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பட்டினியை எதிர்கொள்கின்றனர். இன்னும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் அடிப்படை பொருட்களின் விலை அல்லது தங்கள் வீடுகளை சூடாக்குவதற்கான செலவில் சாத்தியமற்ற உயர்வை எதிர்கொள்கின்றனர். காலநிலை சீர்குலைவு பொருளாதாரத்தை முடக்குகிறது மற்றும் சூறாவளி மற்றும் வெள்ளம் மக்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்துகிறது. ஏற்கனவே 20 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ள கோவிட்-19 இன் தொடர்ச்சியான தாக்கத்திலிருந்து மில்லியன் கணக்கானவர்கள் இன்னும் தவித்து வருகின்றனர். 25 ஆண்டுகளில் முதல் முறையாக வறுமை அதிகரித்துள்ளது.

இந்த சமூகப் பேரழிவின் மத்தியில், 'மிகப் பணக்காரர்கள் வியத்தகு முறையில் பணக்காரர்களாகிவிட்டனர் மற்றும் பெருநிறுவனங்களின் இலாபங்கள் சாதனை உச்சத்தைத் தொட்டுள்ளன' என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

அதன் நிர்வாகப்பிரிவின் சுருக்கத்தின் முதல் பக்கத்தில், ஒக்ஸ்பாம் பின்வரும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை முன்வைக்கிறது:

2020ல் இருந்து, பணக்காரர் 1 சதவிகிதத்தினர் புதிய சொத்துக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கைக் கைப்பற்றியுள்ளனர் - இது உலக மக்கள்தொகையில் கீழ்மட்டத்தில் உள்ள 99 சதவிகிதத்தினரினதை விட கிட்டத்தட்ட இரு மடங்கு பணமாகும்.

இந்தியாவின் மக்கள்தொகையை விட பணவீக்கம் குறைந்தது 1.7 பில்லியன் தொழிலாளர்களின் ஊதியத்தை விட அதிகமாக இருந்தாலும் கூட, பில்லியனர்களின் சொத்துக்கள் ஒரு நாளைக்கு $2.7 பில்லியன் அதிகரித்து வருகின்றன.

800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பசியுடன் படுக்கைக்குச் செல்கின்ற போது, உணவு மற்றும் எரிசக்தி நிறுவனங்கள் 2022 இல் தங்கள் இலாபத்தை இரட்டிப்பாக்கி, 257 பில்லியன் டாலர்களை பணக்கார பங்குதாரர்களுக்கு வழங்கின.

ஒவ்வொரு டாலரின் வரி வருவாயில் 4 சென்ட் மட்டுமே செல்வ வரிகளிலிருந்து வருகிறது. மேலும் உலகின் பாதி பில்லியனர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் பணத்திற்கு பரம்பரை வரி இல்லாத நாடுகளில் வாழ்கின்றனர்.

உலகின் பலமில்லியனர்கள் மற்றும் பில்லியனர்கள் மீது 5 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டால், ஆண்டுக்கு 1.7 டிரில்லியன் டாலர்கள் திரட்ட முடியும். இது 2 பில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க போதுமானதுடன் மற்றும் பசியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உலகளாவிய திட்டத்திற்கு நிதியளிக்கும்.

சமூக சமத்துவமின்மையின் தீவிர வளர்ச்சி தொற்றுநோய்களின் மூலம் தொடர்ந்தது. இருப்பினும் கடந்த ஆண்டு தொழிலாளர்களின் அதிக ஊதியத்திற்கான கோரிக்கைகளை முறியடிக்கும் நோக்கில் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரித்ததன் காரணமாக தன்னலக்குழுவின் செல்வத்தில் சிறிது சரிவு ஏற்பட்டது.

2020க்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் 26 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான புதிய சொத்துக்களில் 63 சதவீதத்தை முதல் 1 சதவீதம் பேர் பெற்றுள்ளனர் என்று ஒக்ஸ்பாம் காட்டுகிறது. அவர்களுக்குக் கீழே உள்ள முதல் 9 சதவீதம் பேர் புதிய சொத்துக்களில் 27 சதவீதத்தை, சுமார் 11 டில்லியன் டாலருக்கும் சற்று அதிகமாகக் குவித்துள்ளனர். அடிமட்ட 90 சதவீதம் அல்லது 7.2 பில்லியன் மக்களுக்கு 10 சதவீதம் அல்லது சுமார் 5 டிரில்லியன் டாலர்கள் மட்டுமே ஆகும்.

[Photo: Oxfam]

இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுக்கு ஒரு பெரிய பேரழிவாக இருக்கும் தொற்றுநோய், பணக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று மட்டுமே முடிவு செய்ய முடியும். இந்தச் செல்வச் செறிவு முதலாளித்துவ அரசாங்கங்களால் எளிதாக்கப்பட்டுள்ளது. Research School of International Taxation (RSIT) அமைப்பு 142 நாடுகளை உள்ளடக்கிய ஒரு ஆய்வை மேற்கோள் காட்டி, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் பெருநிறுவனங்கள் மீதான வரிகளைக் குறைத்துள்ளன. அதே நேரத்தில் மதிப்பு கூட்டப்பட்ட வரிகள் (VAT) அல்லது நுகர்வு வரிகள் அதிகரிக்கின்றன. இது தொழிலாளர்களினதும் ஏழைகளினதும் வருமானத்தை விகிதாசாரத்திற்கு பொருத்தமற்றவிதத்தில் பாதிக்கிறது என்று ஒக்ஸ்பாம் குறிப்பிடுகிறது.

ஒவ்வொரு $1 வரி வருவாயிலும், 2007 முதல் 2019 வரை RSIT ஆல் மதிப்பிடப்பட்ட 75 நாடுகளில் மதிப்பு கூட்டப்பட்ட வரிகள் அல்லது நுகர்வு வரிகள் மூலம் 44 சதவீதம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பெருநிறுவன வருமான வரிகள், வரி வருவாயில் 14 சதவீதம் மட்டுமே இருந்தன. இவை ஊதியங்களுக்கான வரிகளை விட 4 சதவீத புள்ளிகள் குறைவாக உள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், 25 ஆண்டுகளில் முதல் முறையாக, சமத்துவமின்மையும் வறுமையும் 'ஒரே நேரத்தில்' அதிகரித்துள்ளதாக ஒக்ஸ்பாம் தெரிவித்துள்ளது. மற்றொரு ஆயுட்காலத்தை அளவிடும் 'முதல்,' ஐக்கிய நாடுகளின் மனித மேம்பாட்டுக் குறியீடு, எதிர்பார்க்கப்படும் பள்ளிப்படிப்பு மற்றும் ஒரு நாட்டிற்குள் சமத்துவமின்மை ஆகியவற்றை அளவிடுகிறது. இது 2020 அல்லது 2021 இல் ஒவ்வொரு 10 நாடுகளில் 9 இல் வீழ்ச்சியடைந்தது.

அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் பரவாயில்லை, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் விண்ணை முட்டும் பணவீக்கத்துடன் போராட வேண்டியிருக்கிறது. இது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளைப் பயன்படுத்தி, கடந்த ஆண்டு தொழிலாளர்களிடமிருந்து '$337 பில்லியன்' ஊதியம் அழிக்கப்பட்டுவிட்டது என்று ஒக்ஸ்பாம் மதிப்பிட்டுள்ளது.

நெருக்கடியின் உலகளாவிய தன்மையை வெளிப்படுத்தும் வகையில், ஒக்ஸ்பாம் 2022 ஆம் ஆண்டில் 96 நாடுகளின் ஊதியத் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தது. அதில் குறைந்தபட்சம் 1.7 பில்லியன் தொழிலாளர்கள், கிட்டத்தட்ட மனிதகுலத்தில் கால் பகுதியினர், பணவீக்கம் ஊதிய வளர்ச்சியை விட அதிகமாக இருக்கும் நாடுகளில் வாழ்வதுடன், சமத்துவமின்மை மற்றும் வறுமை அதிகரிக்கும் எனமுடிவிற்கு வந்தது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் முக்கிய முதலாளித்துவ நாடுகளின் மற்ற தலைவர்களின் கூற்றுக்களுக்கு மாறாக, அறிக்கையின் ஆசிரியர்கள் ஒரு தலைமுறையில் ஏற்படும் பணவீக்கத்திற்கு பெருநிறுவன இலாபம் ஈட்டுவதன் மீது முழுப் பழியையும் சுமத்துகின்றனர். இது தொற்றுநோய்க்கு முன்பே தொடங்கியது என்று ஒக்ஸ்பாம் எழுதுகிறது. உலகளாவிய பங்குவர்த்தக 500 நிறுவனங்கள் தங்கள் இலாபத்தை 156 சதவீதம் அதிகரித்துள்ளன. 2009 இல் $820 பில்லியனிலிருந்து 2019 இல் $2.1 டிரில்லியனாகி, மேலும் இந்த போக்கு வேகமாக அதிகரித்தது.

ஒரு சிறிய எண்ணிக்கையிலான பெருநிறுவனங்கள் 'உண்மையான தனிஉரிமைகளை' கொண்டிருப்பதன் மூலம் விலை உயர்வுகள் அவர்கள் நிர்வகிக்க அனுமதிக்கின்றது என்பதை அறிக்கை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் செலவுகள் குறையும் போது 'நுகர்வோரை விட பங்குதாரர்களுக்கு' சேமிப்புகளை அனுப்பவும் அனுமதிக்கிறது.

இந்த தொண்டு நிறுவனம் உலகின் மிகப்பெரிய 95 உணவு மற்றும் எரிசக்தி நிறுவனங்களின் இலாபத்தை ஆய்வு செய்து, 'பெருநிறுவன விலை இலாபமானது ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பணவீக்கத்தில் குறைந்தது 50 சதவீதத்தை உந்தி, ‘இலாப செலவு நெருக்கடியை’ வாழ்க்கைச் செலவுக்கான நெருக்கடியாக்கியுள்ளது”.

அதன் அறிக்கையில், விரிவடைந்து வரும் சமத்துவமின்மைக்கு விடையிறுக்கும் வகையில், உலகெங்கிலும் உள்ள 95 சதவிகிதமான பெரும்பான்மையான அரசாங்கங்கள், பணக்காரர்கள் மீதான வரிகளை அதிகரிக்கவில்லை என்று குறிப்பிடுகிறது. மாறாக, அவர்கள் “பணக்காரர்கள் மற்றும் பெருநிறுவனங்கள் மீதான வரிகளை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ இல்லை.”

அதாவது, சமத்துவமின்மையைக் குறைக்க பெரும் பிரபலமான கொள்கைகளை இயற்றுவதற்குப் பதிலாக, உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் 'பன்முக நெருக்கடியை' தொழிலாள வர்க்கத்தின் முதுகில் திணித்துள்ள, அதே நேரத்தில் ஒட்டுண்ணிகள் சிலரை செல்வந்தராக்குகின்றன.

ஒக்ஸ்பாம் அறிக்கை, பட்டினியால் வாடும் சமுதாயத்திற்கு அப்பால், பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழு நெருக்கடியைத் தீவிரப்படுத்துவதற்கும் ஒரு பாரிய காரணியாகும் எனக்கூறுகின்றது. 'பணக்காரர்கள் காலநிலை சீர்குலைவுக்கு முக்கிய பங்களிப்பாளர்கள்' என்று அது குறிப்பிடுகிறது, 'ஒரு கோடீஸ்வரர் சராசரி மனிதனை விட மில்லியன் மடங்கு அதிகமான கரியமிலை வாயுவை வெளியிடுகிறார் ...'பெரும்பாலான மக்கள் சிக்கனம், அதிகரித்து வரும் வறுமை மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்ளும் அதே வேளையில், வளர்ந்து வரும் பில்லியனர்களின் இருப்பு மற்றும் சாதனையளவிலான இலாபங்கள் என்பது மனிதகுலத்தின் தேவைக்கு வழங்கத் தவறிய பொருளாதார அமைப்புக்கு ஒரு சான்றாகும்' என்று அது மேலும் கூறுகிறது.

இந்த அறிக்கையில் உள்ள உண்மைகளையும் விவரங்களையும் ஒவ்வொரு தொழிலாளியும் அறிந்துகொள்ள வேண்டும். இருப்பினும், ஒரு தாராளவாத சீர்திருத்த அமைப்பாக, ஒக்ஸ்பாம் அடிப்படை சிக்கல்களைத் தவிர்க்கிறது. இது ஒரு சஞ்சீவியாக ஒரு 'ஒற்றுமை சொத்து வரி' என்பதை முன்வைக்கின்றது. இது இறுதியில் பில்லியனர்களை இல்லாதொழிக்கும் குறிக்கோளுடன் 'நிரந்தர வரி அதிகரிப்புக்கு' வழிவகுக்கும் என்கின்றது.

அத்தகைய முன்மொழிவு பின்வரும் இரண்டு அடிப்படை உண்மைகளை புறக்கணிக்கிறது: 1) தங்கள் செல்வத்தை குவிப்பதற்காக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தியவர்களும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களை கட்டுப்படுத்துபவர்களும் அதை விட்டுவிடப் போவதில்லை; மற்றும் 2) பெருநிறுவன இலாபத்திற்காக தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதன் அடிப்படையில், செல்வத்தின் பாரிய செறிவு முதலாளித்துவ உற்பத்தி உறவுகளில் வேரூன்றியுள்ளது.

பெருநிறுவன மற்றும் நிதிய தன்னலக்குழுவின் செல்வம் மற்றும் அதிகாரத்தின் மீது ஒரு நேரடித் தாக்குதல் இல்லாமல் மனிதகுலம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு தீர்வு இல்லை. ஆனால் இந்த தன்னலக்குழுவின் அதிகாரம் உடைக்கப்படக்கூடியதும், உடைக்கப்பட வேண்டியதுமாகும்.   மேலும் தவறான முறையில் பெறப்பட்ட சொத்துக்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய சமூக இயக்கத்தின் மூலம் மட்டுமே அபகரிக்கப்பட வேண்டும். அதன் நோக்கம் அரச அதிகாரத்தை கைப்பற்றி, சமத்துவத்தினதும்  சோசலிசத்தினதும் அடிப்படையில் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையை மறுஒழுங்கமைப்பதாகும்.