மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பின்வரும் மின்னஞ்சலை UAW தலைவர் வேட்பாளரும் சாமானிய தொழிலாளர் குழு தொழிலாளியுமான வில் லெஹ்மன் UAW உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ளார். 2022 UAW தேசியத் தேர்தல்களுக்கான வாக்குச்சீட்டுகள் UAW உறுப்பினர்களுக்கு அக்டோபர் 17 அன்று அஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும் மற்றும் மேலும் அவை எண்ணப்படுவதை உறுதி செய்ய நவம்பர் 18 ஆம் தேதிக்குள் திருப்பி அனுப்பப்பட வேண்டும். லெஹ்மனின் பிரச்சாரம் பற்றி மேலும் அறிய, WillforUAWPresident.org ஐ பார்வையிடவும்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
அக்டோபர் 17 அன்று, அதாவது இரண்டு வாரங்களுக்குள், ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் (UAW) தொழிற்சங்க தலைமையின் முதல் நேரடித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் வெளிவரத் தொடங்கும். நாம் எதிர்த்த மற்றும் மறுத்த உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறான ஒப்பந்தங்கள் மூலம் பல தசாப்தங்களாக நம்மை விற்றுவிட்ட ஒட்டுமொத்த அதிகாரத்துவத்திற்கும் எதிரான எதிர்ப்பை வெளிப்படுத்த, சாமானிய தொழிலாளர்களுக்கு இது ஒரு வரலாற்று வாய்ப்பாகும்.
இதனால்தான் UAW எந்திரம் தொழிலாளர்களுக்கு தேர்தல் மற்றும் வேட்பாளர்களின் நிலைப்பாடுகள் பற்றி தெரியாமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. தேர்தல் நடப்பது கூட தெரியாத பல தொழிலாளர்களுடன் நான் பேசியுள்ளேன்.
ஒன்றரை வாரத்திற்கு முன்னர், UAW தலைவர் பதவிக்கான வேட்பாளர்களிடையே நடந்த விவாதத்தில் நான் பங்கேற்றேன். ஆனால், UAW எந்திரம்,ஒரு விவாதம் இருப்பதை தொழிலாளர்களுக்கு தெரியப்படுத்துவதற்கு எதுவும் செய்யவில்லை, UAW தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களில் சுமார் 1.5 சதவிகிதம் பேர் மட்டுமே வீடியோவைப் பார்த்துள்ளனர். விவாதத்தை யாரும் பார்ப்பதை UAW விரும்பவில்லை, ஏனெனில், நிலவில் உள்ள மனிதனைப் போல சாமானிய தொழிலாளர்களுடன் மிகக் குறைந்த தொடர்பைக் கொண்டுள்ள தற்போதைய தலைவர் ரே கரி மற்றும் குழுவினர், தொழிலாள வர்க்கத்தின் பெருநிறுவன சார்பு எதிரிகள் என்பதை அது முழுமையாக அம்பலப்படுத்தியது.
எனது பிரச்சாரம், UAW அதிகாரத்துவமும் நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை என்று கூறுவதை அல்லாமல், நமக்குத் தேவையானவற்றிற்காகப் போராட ஒவ்வொரு ஆலையிலும் வேலைத் தளத்திலும் தொழிலாளர்களின் சாமானிய பாதுகாப்புக் குழுக்களைக் கட்டமைப்பதன் மூலம் ஒரு புதிய அதிகாரத் தளத்தை நிறுவுவது பற்றியதாகும். அதாவது, நமது விருப்பத்தையும் நலன்களையும் நாம் வலியுறுத்த வேண்டும். இதே பிரச்சினைகள் மற்றும் இதே எதிரிகளை எதிர்கொள்ளும் நாடு முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களுடன் UAW இல் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் நாம் ஐக்கியப்படுத்த வேண்டும்.
இந்தப் போராட்டத்தில் தேர்தல் கூட ஒரு முக்கியமான கட்டமே. UAW இல் உள்ள அதிகாரத்துவத்தினர், இந்த தேர்தலில் சாமானிய தொழிலாளர் முடிந்தவரை குறைந்த அளவில் பங்கேற்பதை விரும்புகின்றனர். நேரடித் தேர்தல் வாக்கெடுப்பை அவர்கள் எதிர்த்தனர், ஏனென்றால் உலகளவில் சாமானிய தொழிலாளர்கள் தொழிற்சங்க எந்திரத்தை வெறுக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.
நாம் செயல்படாவிட்டால் நிலைமை மாறாது. தொழிலாளர்களாகிய நம்மிடம் அளப்பரிய பலம் உள்ளது, ஆனால் நம்மைத் தவிர நமக்குத் தேவையானவற்றிற்காக வேறு எவரும் போராடப் போவதில்லை. இதுவே எனது பிரச்சாரத்தின் நோக்கமாகும், ஆனால் நான் ஒரு அற்புதம் செய்யும் தொழிலாளி அல்ல. இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான முடிவை நீங்கள் தான் எடுக்க வேண்டும்.
அதனால்தான் உங்கள் பணியிடங்களில் சாமானிய தொழிலாளர்கள் தேர்தல் குழுவை உருவாக்குமாறு உங்களை நான் அழைக்கிறேன்.
இந்த குழுக்கள் பின்வருவனவற்றை நிறைவேற்றும்:
1. தொழிலாளர்கள் வாக்குச்சீட்டைப் பெறுவதை உறுதிசெய்ய என்ன செய்ய வேண்டும் மற்றும் எப்போது அதைத் திருப்பியனுப்ப வேண்டும் என்பது உட்பட, தேர்தலில் எவ்வாறு பங்கேற்பது என்பது பற்றிய தகவல்களை உங்கள் பணியிடம் முழுவதும் அவை விநியோகிக்கும். UAW தேர்தல்கள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை willforuawpresident.org/uawelections என்ற எனது இணைய தளத்தில் நீங்கள் பார்க்கலாம் மற்றும் உங்கள் கேள்விகளைப் பகிரலாம்.
2. எனது இணைய தளத்தில் நான் பதிவிட்டுள்ள தலைவர் பதவி வேட்பாளர்களின் விவாதத்தை அனைத்து தொழிலாளர்களும் பார்க்கிறார்களா என்பதை அவை உறுதிப்படுத்தும்.
3. தேர்தலில் உள்ள பிரச்சினைகள் மற்றும் நமது நலன்களைப் பாதுகாக்க என்ன கோரிக்கைகளுக்காக நாம் போராட வேண்டும் என்பது பற்றி விவாதிக்க உங்கள் ஆலை அல்லது பணியிடத்தில் தொழிலாளர் கூட்டங்களுக்கு அவை ஏற்பாடு செய்யும்.
4. தகவல்களை விநியோகிக்கவும், மற்றும் UAW தலைவர் பதவிக்கான எனது சாமானிய தொழிலாளர்கள் குழு பிரச்சாரத்தை மேம்படுத்தவும் உங்கள் பணியிடங்களுக்கு வெளியே தகவல் அளிப்பு குழுவை அமைக்கும்.
5. தேர்தல் முடிந்ததும் நமக்குத் தேவையானவற்றிற்காக தொடர்ந்து போராடத் தேவையான சாமானிய தொழிலாளர்கள் குழு வலையமைப்பை உருவாக்க அவை அடித்தளம் அமைக்கும்.
6.தேர்தல் குழுவை அமைப்பதற்கான உதவிக்கு எனது பிரச்சாரம் தொடர்பான willforuawpresident@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுமாறு அல்லது (267) 225-6633 என்று தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புமாறு இன்று நான் உங்களைக் கேட்கிறேன். அதில், நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள், மற்றும் இந்த தேர்தலிலும் அதற்கு அப்பாலும் நாம் எதற்காகப் போராட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரிவியுங்கள். உங்கள் பணியிடத்தில் ஒரு குழுவை அமைப்பதற்கும், மற்றும் நாடு முழுவதும் அமைக்கப்பட்டு வரும் இதுபோன்ற குழுக்களுடன் உங்கள் குழுவை இணைப்பதற்கும் என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன்.
சக சாமானிய தொழிலாளர்களே! நமக்குத் தேவையானதை பெற நாம் போராட விரும்பினால், அந்த முன்முயற்சி தொழிற்சங்க எந்திரத்தின் கைகளில் இருக்க நாம் அனுமதிக்கக் கூடாது. நாமே நம்மை ஒழுங்கமைக்க வேண்டும்! இன்றே எனது பிரச்சாரத்தைத் தொடர்பு கொண்டு, சாமானிய தொழிலாளர்களின் தேர்தல் குழுவை உருவாக்குங்கள்!
நன்றி,
வில் லெஹ்மன்
பின் குறிப்பு: தேர்தல்கள், எனது பிரச்சாரம், மற்றும் தொழிலாளர்கள் தொடங்கும் வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற போராட்டங்கள் பற்றி தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கப்படுவதை உறுதிப்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்ய விரும்புகிறேன். ஆனால் அதைச் செய்ய, எனக்கு உங்கள் நிதி உதவி தேவை. நான் எதற்காகப் போராடுகிறேன் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், இன்றே எனது பிரச்சாரத்திற்கு உங்களால் முடிந்த அளவு நன்கொடை அளியுங்கள்.
மேலும் படிக்க
- UAW தலைவர் தேர்தல் விவாதம்: ஒரு சாமானிய சோசலிசவாதி தொழிற்சங்க அதிகாரத்துவத்தை எதிர்கொள்கிறார்
- வரலாற்று விவாதத்தில், UAW தலைவர் வேட்பாளர் வில் லெஹ்மன், தொழிற்சங்க அதிகாரத்துவத்தை ஒழிக்கவும், சாமானிய தொழிலாளர்களுக்கு அதிகாரமளிக்கவும் அழைப்பு விடுத்தார்
- இரயில் தொழிலாளர்களுக்கு ஏன் முழு தொழிலாள வர்க்கத்தின் ஆதரவு தேவை?
