"தற்போதுள்ள அதிகாரத்துவத்தின் சீர்திருத்தத்திற்கு அல்ல, ஆனால் அதன் ஒழிப்புக்கு"

மாக் ட்ரக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளியான வில் லெஹ்மன் UAW தலைவர் பதவிக்கான பிரச்சாரத்தை அறிவிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வில் லெஹ்மனின் பிரச்சாரம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, WillForUAWPresident.org ஐ பார்வையிடவும்.

பென்சில்வேனியாவின் மாக்கன்கி இல் உள்ள மாக் ட்ரக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் வில் லெஹ்மன், வியாழக்கிழமை ஐக்கிய வாகன தொழிலாளர் (United Auto Workers – UAW) தொழிற்சங்கங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான தனது வேட்புமனு அறிவிப்பை சமர்ப்பித்தார். 34 வயதான லெஹ்மன், மாக் ட்ரக்ஸ் நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் சற்று குறைவான காலம் பணிபுரிந்துள்ளார்.

'எனது பிரச்சாரம் மற்றவற்றிலிருந்து வேறுபட்டது, ஏனென்றால் ஒரு அதிகாரத்துவவாதியை இன்னொரு அதிகாரத்துவவாதியால் மாற்றுவது UAW இன் 'சர்வதேச' அல்லது உள்ளூர் மட்டத்தில் அதிகாரத்துவத்தின் தன்மை குறித்து எதையும் மாற்றாது என நான் வலியுறுத்துகிறேன்,' என லெஹ்மன் தனது வேட்புமனுவை அறிவிக்கும் காணொளி அறிக்கையில் கூறினார். 'அதிகாரத்துவவாதிகளால் அல்ல, சாமானிய தொழிலாளர்களால் உருவாக்கப்படும் மற்றும் கட்டுப்படுத்தப்படும் நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதன் மூலம், எங்கள் சுயாதீன வலிமையை நாங்கள் ஒழுங்கமைக்கும் அளவிற்கு மட்டுமே மாற்றம் நடைபெறும்.”

லெஹ்மனின் காணொளி அவரது பிரச்சாரத்தின் நான்கு அடிப்படை புள்ளிகளை கோடிட்டுக் காட்டுகிறது:

  1. தற்போதுள்ள அதிகாரத்துவத்தின் சீர்திருத்தத்திற்கு அல்ல, ஆனால் அதன் ஒழிப்புக்கு;
  2. அனைத்து UAW-பெருநிறுவன அமைப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தல், அது எந்திரத்திற்கு ஒரு சட்டவிரோத நிதியமைப்பாக செயல்படுகிறது;
  3. ஒட்டுமொத்த பேரம் பேசல், வாக்கு எண்ணிக்கை மற்றும் பாதுகாப்பு உட்பட சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கை குழுவின் முழுமையான கட்டுப்பாடும் மேற்பார்வையும்;
  4. பாரிய ஊதிய உயர்வு, உயரும் பணவீக்கத்தை பூர்த்தி செய்ய வாழ்க்கைச் செலவை சரிசெய்தல் (COLA), அனைத்து அடுக்கு கூலிகளையும் ஒழித்தல் மற்றும் தொழிலாளர்களுக்கும் ஓய்வு பெற்றவர்களுக்கும் முழு சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட தொழிலாளர்களுக்குத் தேவையானவற்றுக்காக போராடுவதற்கான ஒரு வேலைத்திட்டம்.

'எனது பிரச்சாரம், அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களின் வளர்ந்து வரும் இயக்கத்துடன் ஒற்றுமையுடன் UAW இல் உள்ள வாகனத் தொழிலாளர்கள், பிற உற்பத்தித் தொழிலாளர்கள், பட்டதாரி மாணவர்கள் மற்றும் தொழில்முறை தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் அமைப்பின் வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வரவிருக்கும் மாதங்களில், பல்லாயிரக்கணக்கான கப்பல்துறை ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சேவைத்துறை தொழிலாளர்கள் நாங்கள் எதிர்கொள்ளும் அதே பிரச்சினைகளுக்காக போராட்டத்தில் ஈடுபடுவார்கள்”.

சமூக சமத்துவமின்மையின் மகத்தான வளர்ச்சியை அவர் சுட்டிக்காட்டினார், ஏனெனில் பெருநிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்பிலிருந்து இலாபம் ஈட்டுகின்றன, மேலும் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர், தொற்றுநோய் அமெரிக்காவில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற நிலையில், ஆலைகள் முழுவதும் கோவிட்-19 புதுப்பிக்கப்பட்டுள்ளது.

'இந்த இறப்புகள் மற்றும் பிற காயங்களுக்கு அலட்சியமாக இருக்கும் நிறுவனங்களையும் UAW அதிகாரத்துவத்தையும் மன்னிக்க நாங்கள் அனுமதிக்க முடியாது' என்று குறிப்பாக கோவிட் -19 நோயால் இறந்த வாகனத் தொழிலாளர்களான காத்தரின் பேஸ் மற்றும் வில்லே டீ மற்றும் மோசமான வேலை நிலைமைகளால் இறந்த ஸ்டீவன் டியர்க்ஸ் மற்றும் டானி வால்டர்ஸ் ஆகியோரின் மரணங்களைக் குறிப்பிடுகிறார். 'ஒற்றுமை என்பது இது போன்ற மரணங்களைத் தடுப்பதை உறுதிசெய்வது, எமக்கு எங்கள் சொந்த முதுகு உள்ளது என்பதை உறுதிப்படுத்துவது நம் கையில் உள்ளது.'

சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு கூட்டணிக்கு லெஹ்மன் தனது ஆதரவை அறிவித்தார், இது 'தொழிலாளர்களை ஆலைகள், தொழில்கள் மற்றும் நாடுகள் முழுவதும் ஒன்றிணைக்க வளர்ந்து வரும் இயக்கம்' என அவர் கூறினார். தனது பிரச்சாரம், அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை நோக்கி இயக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்:

'சர்வதேச' UAW தலைமையகம் என்று தவறாகப் பெயரிடப்பட்ட போதிலும், அதிகாரத்துவம் முற்றிலும் தேசியவாதமாக உள்ளது, இங்கு அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் மற்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்களை எதிர்ப்பதன் மூலம் நமது நலன்களைப் பாதுகாக்க முடியும் என்று கூறுகின்றனர். இது ஒரு அப்பட்டமான பொய். பெருநிறுவனங்கள் உலகளாவிய ரீதியில் போராடுகின்றன, அது தற்போது பணிபுரிபவர்களுக்கு வழங்குவதை விட குறைவாக கொடுக்க தொழிலாளர்களை தொடர்ந்து தேடுகின்றன. நமது உழைப்பின் விற்பனையாளர்களாகிய நாம், சர்வதேச அளவில் ஒன்றுபட்டு, எங்கும் குறைத்து விற்கப்படாமல், இந்த ஒற்றுமையின் மூலம் நமது பொருளாதார நிலைமைகள் அனைத்தையும் உயர்த்த வேண்டும். நாம் வெற்றி பெற வேண்டுமானால், ஒரு சர்வதேச இயக்கத்தின் பாகமாக நம்மைப் பார்க்க வேண்டும்.

அவர் ஒரு சோசலிஸ்ட் என்றும் லெஹ்மன் விளக்கினார். 'தொழிலாளர்கள் சோசலிசம் பற்றி நிறைய தவறான கருத்துக்களைக் கொண்டுள்ளனர், ஏனெனில் அது என்ன என்பதில் பல பொய்கள் உள்ளன. சோசலிசம் என்பது சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு சமூகமாகும், அங்கு உற்பத்தியானது தொழிலாளர்களால் ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்படுகிறது, பில்லியனர்கள் மற்றும் பங்குதாரர்களின் உயரடுக்குகளால் அல்ல.”

அவரது பிரச்சாரத்தை ஆதரிக்க தொழிலாளர்கள் சோசலிஸ்டுகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார். 'நீங்கள் விற்கப்படுவதால் களைப்படைந்து போயிருந்தால், அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு, அடுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் ஒரு சலுகை ஒப்பந்தத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், இந்த இயக்கத்தில் சேர்ந்து, கட்டியெழுப்புங்கள்' என்று அவர் கூறினார்.

உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசிய லெஹ்மன், 'அதன் நோக்கங்களை அடைவதற்காக, எனது பிரச்சாரம் வெவ்வேறு ஆலைகளிலும் பல்வேறு நாடுகளிலும் உள்ள சாமானிய தொழிலாளர் குழு கூட்டணிக்கு இடையே தகவல்தொடர்புகளை ஏற்படுத்துகிறது, இதன் மூலம் நாம் UAW அதிகாரத்துவத்தின் பொய்களையும் தனிமைப்படுத்தலையும் உடைக்க முடியும்.

“எல்லா இடங்களிலும் உள்ள வாகனத் தொழிலாளர்கள் இப்போது எனது வலைத் தளத்திற்கு சென்று எனது உரைப் பட்டியலுக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பிரச்சாரத்தை நகர்த்துவோம்!”

வில் லெஹ்மனின் பிரச்சாரம் குறித்த கூடுதல் தகவலுக்கு, WillForUAWPresident.org ஐ பார்வையிடவும்.

Loading