மொழிபெயர்ப்பின்மூலக்கட்டுரையைஇங்கேகாணலாம்
ஏப்ரல் 1 இல் இருந்து, பிரிட்டனில் ஒவ்வொரு குடும்பமும் குரல்வளையை நெரிக்கும் எரிசக்திக் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டன. அதிர்ச்சிகரமாக 54 சதவிகித உயர்வு என்பது (£1,277 இல் இருந்து £1,971 ஆக) சராசரியாக ஆண்டுக்கு 693 பவுண்ட்அல்லது மாதத்திற்கு 57.75 பவுண்ட்உயர்வைக் குறிக்கிறது. முன்பணம் செலுத்தும் திட்டத்தில் உள்ள சமூகத்தின் மிகவும் வறிய 4.5 மில்லியன் மக்களைப் பொறுத்த வரையில், இந்த விலை உயர்வு படுமோசமாகும், 708 பவுண்ட்என்பது சராசரி வருடாந்தர கட்டணத்தை 1,309 இல் இருந்து 2,017 க்குக் கொண்டு செல்கிறது (அதாவது மாதத்திற்கு கூடுதலாக 59 பவுண்ட்).
42 சதவீத வரம்பில் இந்த அக்டோபரில் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள மற்றொரு உயர்வு, வருடத்திற்கு மற்றுமொரு 830 பவுண்ட்செலவு வைக்கும், ஒட்டுமொத்தமாக இது சராசரி ஆண்டு கட்டணத்தைச் சுமார் 2,800 பவுண்ட் ஆக இரட்டிப்பாக்கும்.
வினியோகிப்பாளர்கள் பணத்தை நேரடியாக எடுத்துக் கொள்ளும் (direct debit payments) முறையை இரட்டிப்பாக்குவதாக பல வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். வாடிக்கையாளர்கள் விலை உயர்வுக்கு முன்னரே மீட்டர் அளவீடுகளைச் சமர்ப்பிக்க முயன்றதால் வியாழக்கிழமை பல வினியோகிப்பாளர்களின் வலைத் தளங்கள் செயலிழந்தன.
பின்னுக்கு இழுக்கும் இந்த எரிசக்தி விலை உயர்வு, ஏழைகள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைக் கடுமையாக தாக்குகிறது — சலுகை பெறுபவர்கள் அல்லது கடுமையான மருத்துவ நிலைமைகளில் இருப்பவர்கள், ஊனமுற்றோர், உழைக்கும் ஏழைகள், தனியாக வாழ்பவர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் பாதிக்கப்படுகிறார்கள். பல ஓய்வூதியதாரர்கள் இப்போது பட்டினியை எதிர்கொள்கிறார்கள்.
சான்சிலர் ரிஷி சுனாக்கின் வசந்த கால வரவு-செலவுத் திட்டக்கணக்கு எரிபொருள் வரியில் லீட்டருக்கு அற்பமாக வெறும் 5 பென்ஸ் குறைத்தது, இதைப் பின்தொடர்ந்து இந்த எரிசக்தி விலை உயர்வு வருகிறது, விலை உயர்வு காரணமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களால் அந்த நடவடிக்கை உடனடியாக கைவிடப்பட்டது.
வரலாற்றில் ஒரே தடவையில் வாழ்க்கைச் செலவை அதிகரிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் விஞ்சும் அளவுக்கு எரிபொருள் கட்டண உயர்வை முகங்கொடுத்துள்ள நிலையில், சுனாக் முகத்தில் அடித்தாற்போல் மற்றொரு அடியை வழங்கினார். குடும்பங்களுக்கான எரிசக்தி கட்டணத்தில் அக்டோபரில் வெறும் 200 பவுண்ட்ஸ்மட்டுமே அவர் மானியம் வழங்குவார், ஆனால் அதையும் குடும்பங்கள் 2023 இல் இருந்து ஆண்டுக்கு 40 பவுண்ட்வீதம் ஐந்தாண்டுகளில் அரசுக்குத் திரும்ப செலுத்த வேண்டும்.
2016 மற்றும் 2020 க்கு இடையே பிரிட்டனின் முக்கிய ஐந்து எரிசக்தி நிறுவனங்கள் இலாபமாக 7.7 பில்லியன் பவுண்டுகள் சம்பாதித்துள்ள போதினும், இந்த விலை உயர்வு நடக்கிறது. பிரிட்டனில் 14 மில்லியன் பேர் ஏற்கனவே வறுமையில் வாழ்பவர்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் போது, இந்த விலை உயர்வு விளிம்பில் உள்ள மில்லியன் கணக்கானவர்களைப் பரந்த வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்குள் இழுத்துச் செல்கிறது.
கடந்த கோடையில் அரசாங்கம் முழுமையாக பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிட்ட நிலையில், இரண்டு மில்லியனுக்கும் அதிகமான குறைவூதிய தொழிலாளர்கள் உட்பட மிகவும் வறியவர்கள் நம்பி இருக்கும் அனைவருக்குமான கடன் உதவித் திட்டத்தில் வாரத்திற்கு 20 பவுண்ட்வழங்குவதைச் சுனாக் வெட்டினார். இது நலன்புரி சலுகைகள் வரலாற்றில் செய்யப்பட்ட ஒருமுறை வெட்டிலேயே மிகப் பெரியதாக இருந்தது. வரவிருப்பது இன்னும் மோசமாக உள்ளது, பலரால் அவர்கள் வீட்டை வெப்பமூட்ட முடியாமலோ, உணவு வாங்க முடியாமலோ அல்லது பயணிக்க முடியாமலோ போகலாம்.
பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 10 சதவீதத்தை நோக்கி அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஜனவரி 2021 மற்றும் ஜனவரி 2022 க்கு இடையே, உணவு விலைகள் ஐந்து சதவீதம் அதிகரித்தன. பல உணவுப் பொருட்கள் 10 சதவீதம் மற்றும் 16 சதவீதம் வரையிலும் உயர்ந்துள்ளன. உடல் திரவ பரிசோதனை(Lateral flow tests)கருவிகள் ஒவ்வொன்றும் இப்போது 3 பவுண்ட்அல்லது ஏழு எண்ணிக்கையிலான பெட்டி 20 பவுண்ட்ஆகின்றன. பிராட்பாண்ட், தொலைபேசி, தொலைக்காட்சி ஒப்பந்தங்கள் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 42 பவுண்டாவது அதிகரிக்கின்றன.
பெட்ரோல் 39 சதவீதம் அல்லது ஒரு டேங்கிற்கு 23 பவுண்ட் உயர்ந்துள்ளது. ஒரு சராசரி குடும்பத்தின் காருக்கான எரிபொருள் நிரப்பும் செலவு இப்போது முதல் முறையாக 90பவுண்டுக்கு அதிகமாக உள்ளது. ஒன்பது ஆண்டுகளில் அதிகபட்ச இரயில்வே கட்டண உயர்வு மார்ச் மாதம் 3.8 சதவீத அதிகரிப்புடன் அமலுக்கு வந்தது. ஒரு சராசரி பயணி இப்போது இரயில்வே காலநிர்ணய பயணச்சீட்டு(season ticket)கட்டணமாக இப்போது 3,263 பவுண்ட்டுகள் செலுத்த வேண்டியிருக்கும், இது 2010 ஐ விட 49 சதவீதம் அதிகமாகும்.
தொழிலாளர்களிடம் இருந்து ஆண்டுதோறும் கூடுதலாக நூற்றுக்கணக்கான பவுண்டுகளை உருவுவதற்கான பிற நடவடிக்கைகளில், ஏப்ரல் 1 இல் இருந்து தேசிய காப்பீட்டு வரியில் 10 சதவீத உயர்வும் மற்றும் மதிப்புக்கூட்டு விற்பனை வரியின் (VAT) அதிகரிப்பும் உள்ளடங்கும். கவனிப்பு மற்றும் பராமரிப்புத்துறையில் VAT வரி இந்த பெருந்தொற்றின் போது ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால் கடந்த அக்டோபரில் இந்த வெட்டு பகுதியாக திரும்பப் பெறப்பட்டதால், இது 12.5 சதவீதமானது, இந்த வாரம் இது 20 சதவீதத்திற்குத் திரும்பியது.
கவுன்சில் வரி சுமார் 3 சதவீதம் அதிகரிக்க உள்ளது, சராசரி Band D பிரிவில் உள்ள சொத்துக்களுக்கான கட்டணங்கள் 67 பவுண்ட்அளவுக்கு அதிகரித்து ஆண்டுக்கு சுமார் 2,000 பவுண்டாக ஆகலாம். ஒட்டுமொத்தமாக ஏப்ரலில் இருந்து தண்ணீர் கட்டணங்கள் 1.7 சதவீதம் அளவுக்கு உயரும், இது 7 பவுண்டில் இருந்து 419 பவுண்டாக இருக்கும், ஆனாலும் சில பிரதேசங்கள் 10.8 சதவீத உயர்வைக் கோரி வருகின்றன.
பாங்க் ஆஃப் இங்கிலாந்து வட்டி விகித அதிகரிப்பானது, சராசரி குடும்பக் கையிருப்பில் 295 பவுண்டு அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு அதிகரிப்பையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், குடும்பங்கள் அவற்றின் கட்டணங்கள் மற்றும் பிற செலவுகளில் அதிர்ச்சியூட்டும் வகையில் 2,620 பவுண்டுகள்தாங்கொணா அதிகரிப்பை முகங்கொடுக்கின்றன.
நடைமுறையில் ஏற்கனவே எரிபொருள் மற்றும் உணவு பங்கீட்டுக் கட்டுப்பாடு நடத்தப்பட்டு வருகிறது, வாழ்க்கை செலவுகள் அதிகரித்து வருவதைக் குறித்து புகார் கூறும் 34 சதவீதத்தினர் வீட்டில் எரிவாயு மற்றும் மின்சாரத்தைக் குறைவாக பயன்படுத்தி வருவதாகவும், 31 சதவீதத்தினர் அவர்களின் உணவுப் பொருள் நுகர்வைக் குறைத்து வருவதாகவும் தேசிய புள்ளிவிபர அலுவலகம் குறிப்பிடுகிறது.
அவற்றின் வருவாயில் பெரும்பகுதியை எரிபொருள் மற்றும் உணவுக்காகச் செலவிடும் குறைந்த வருவாய் குடும்பங்கள் குறிப்பிடத்தக்களவில் அதிகமாக பாதிக்கப்படலாம். 2023 இல் 500,000 குழந்தைகள் உட்பட 1.3 மில்லியன் பேர் கூடுதலாக முழு வறுமையில் விழுவார்கள் என்று Resolution Foundation அமைப்பு மதிப்பிடுகிறது.
தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பணம் கொள்ளையடிக்கப்படுகிறது என்றால் இந்த பெருந்தொற்றின் போது பொது செலவினங்களில் இருந்து நூறு பில்லியன் கணக்கான பணம் சுரண்டப்படுவதை அர்த்தப்படுத்துகிறது, இவற்றில் பெரும்பாலானவை பெருநிறுவனங்களுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் கையளிக்கப்பட்டது. கடந்த வாரம், பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி கூறுகையில், உக்ரேனிய சம்பவங்கள் தேக்கநிலை நெருக்கடியைத் தீவிரப்படுத்தி உள்ளது என்றும், பிரிட்டானியர்கள் 'நிஜமான வருவாயில் வரலாற்று அதிர்ச்சியை' முகங்கொடுக்கிறார்கள் என்றும் அறிவித்தார்.
வாழ்க்கைச் செலவு நெருக்கடி என்பது தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைகளை எதிர்க்க வேண்டும்என்பதை அர்த்தப்படுத்துவதாக கடந்த மாதம் தான் பெய்லி வலியுறுத்தினார்.
கார்ல் மார்க்ஸுடன் சேர்ந்து விஞ்ஞான சோசலிசத்தின் இணை நிறுவுனரான பிரெடெரிக் ஏங்கெல்ஸ், 1845 இல் இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைஎன்பதில் எழுதுகையில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவ வர்க்கத்தின் 'சமூகப் போர்முறை' காரணமாக, 'ஒவ்வொரு மனிதரின் வீடும் பறிமுதல் செய்யப்படும் நிலையில் உள்ளது,” என்று குறிப்பிட்டார். அவர் மக்களின் துயரங்களைக் குறித்து ஆளும் வர்க்கத்தின் 'கொடூரமான அலட்சியத்தை' விவரித்தார். இந்த கவனமான விபரங்கள் இன்றும் ஆளும் வர்க்கத்தின் திட்டநிரலைத் தொகுத்தளிக்கின்றன.
வாழ்க்கைத் தரங்கள் மீதான இந்த வரலாற்றுத் தாக்குதலை மட்டுமே அது ஒழுங்கமைத்து திணிக்க முடியும், ஏனென்றால் அது பழமைவாத அரசாங்கம் மட்டுமல்ல, அதன் நடைமுறைக் கூட்டணி பங்காளிகளான தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களும் ஒப்புக் கொண்ட கொள்கையாகும்.
தொழிற் கட்சி இப்போது 'குறைந்த வரிவிதிப்பின்' கட்சியாக தன்னை முன்னிலைப்படுத்துகிறது, ஆனால் சர் கெய்ர் ஸ்டார்மர் நவம்பரில் பிரிட்டிஷ் தொழில்துறை கூட்டமைப்புக்குக் கூறுகையில் அவர் 'வணிகத்தின் கட்சியை' பிரதிநிதித்துவம் செய்வதாகவும், “… ஒவ்வொரு பிரச்சினைக்கும் பணத்தைப் பாய்ச்சுவதே தீர்வு என்று நாங்கள் நினைக்கவில்லை' என்றார். ஸ்டார்மர், இந்த உறுதிமொழிக்கு இணங்க, “தேவைப்படுபவர்களுக்கு 600 பவுண்டு வரை எரிசக்தி கட்டணங்களைக் குறைக்க' வட கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களுக்கு 'அதிருஷ்ட வரிச்சலுகை' வழங்க அவரே தான் டோரிகளுக்கு அழைப்புவிடுத்து வருகிறார். இது 'உடனடி நெருக்கடியைக் கையாள' ஒரு 'முறை' வரிச்சலுகையாக இருக்கும் என்றவர் வலியுறுத்தினார்.
உலகளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால், உக்ரேனில் நடக்கும் உண்மையான படுகொலையைக் கொண்டு நிதிய படுகொலை செய்ய நிறுவனங்கள் தொழிலாளர்களை வறுமையாக்கி வருகின்றன என்ற உண்மையை ஸ்டார்மரின் முன்மொழிவு வெறுமனே மூடிமறைக்கிறது. சான்றாக Exxon Mobil Corp இன் முதல் காலாண்டு உற்பத்தி முடிவுகள், செயல்பாட்டு இலாபங்களுடன் 9.3 பில்லியன் டாலர் வரை, ஏழு ஆண்டுகளில் காலாண்டு சாதனை செய்ய உள்ளது. நேட்டோவினால் போர் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டுள்ள காரணத்தால், அடுத்த குளிர்காலத்தில் ஒரே மாதத்தில் குடும்பங்களின் எரிசக்தி செலவுகள் அனேகமாக 400 பவுண்டை எட்டும் என்கின்ற நிலையில், இன்னும் நான்காண்டுகளுக்கு, 2026 வரை, எரிசக்தி கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருக்குமென பொருளாதார மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ள நிலையில் இது நடக்கிறது.
தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த கடுமையான சூழ்நிலையில், தொழிற் கட்சி 'இடது' தலைவர் இன்னமும் அங்கீகரித்து என்ன வழங்குகிறார்? கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்மி கோர்பின் சனிக்கிழமை டவுனிங் வீதிக்கு வெளியே People’s Assembly ஆல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு சிறிய போராட்டத்தில் பேசுகையில், “எரிவாயு மற்றும் மின்சார கட்டணங்களின் விலை வரம்பு நிர்ணயிப்பதும் மற்றும் எரிசக்தி நிறுவனங்களை அரசுடைமை ஆக்குவதும்' அவர் முன்மொழியும் தீர்வாக வழங்கினார் — இந்தவொரு கொள்கை டோரிகளுக்குப் போலவே அவரின் சொந்த கட்சிக்கும் ஒவ்வாத ஒரு கொள்கையாகும்.
ஆளும் வர்க்கம் வெளிநாடுகளில் ஏகாதிபத்திய போர் நடத்துவதற்கும் மற்றும் உள்நாட்டில் வர்க்கப் போர் நடத்துவதற்கும் அது கோரும் எல்லா 'தியாகத்தையும்' நிராகரித்து, டோரி அரசாங்கம் மற்றும் முதலாளிமார்களுக்கு எதிரான ஓர் உறுதியான போராட்டத்தை நடத்துவது மட்டுமே, தொழிலாளர்களுக்கு உள்ள ஒரே பாதையாகும். இந்த வாரம் P&O படகு நிறுவனத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருப்பதைப் போல, பெருநிறுவனங்களின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் மற்றும் தொழிலாளர்கள் திருப்பி எதிர்ப்பதற்கும் ஓர் அழுகிய விற்றுத் தள்ளப்பட்ட ஒப்பந்தத்தைக் கொண்டு விடையிறுக்கும் தொழிற்சங்கங்களின் இறுக்கிப் பிடியில் இருந்து முறித்துக் கொள்வதையே இது அர்த்தப்படுத்துகிறது.