முன்னோக்கு

ஒட்டாவாவில் அதி-வலதுசாரிகளின் ஆக்கிரமிப்பு: ஜனவரி 6 சதி உலகளவில் விரிவடைகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கனடாவின் நாடாளுமன்றமும் தேசிய தலைநகரமும் 12 நாட்களாக அதிவலது மற்றும் பாசிச நடவடிக்கையாளர்களால் இப்போது முற்றுகையிடப்பட்டுள்ளது, அவர்களில் பலர் வெடிபொருட்களும் பிற உயிராபத்தான ஆயுதங்களும் வைத்துள்ளனர். கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான எல்லா பொது சுகாதார நடவடிக்கைகளும் நீக்கப்படும் வரையில் ஒட்டாவா நகர மையப்பகுதியில் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர அவர்கள் சூளுரைத்திருக்கிறார்கள்.

டிரக் ஓட்டுனர்களில் ஏறக்குறைய 90 சதவீதத்தினர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர், இவர்கள் உட்பட கனேடியர்களில் பரந்த பெரும்பான்மையினர் இந்த அதிவலது 'Freedom Convoy” (சுதந்திர தொடரணி) இயக்கத்தை வெறுப்புடன் பார்க்கின்றனர்.

Protestors show their support for the Freedom Convoy of truck drivers who are making their way to Ottawa to protest against COVID-19 vaccine mandates by the Canadian government on Thursday, Jan. 27, 2022, in Vaughan. (Photo by Arthur Mola/Invision/AP) [AP Photo/Arthur Mola/Invision/AP]

எவ்வாறிருப்பினும், Convoy இயக்கம் கனடா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கு ஓர் மரண ஆபத்தான உடனடி அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

இதற்கு இரண்டு இன்றியமையா காரணங்கள் உள்ளன. முதலாவதாக, அரசியல்ரீதியில் உத்தியோகபூர்வ எதிர்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி மற்றும் பெரும்பாலான பெருநிறுவன ஊடகங்களால் இந்த Convoy இயக்கம் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது, இது நாடாளுமன்றத்திற்கு விரோதமான ஒரு கருவியாக சேவையாற்றுகிறது. இரண்டாவதாக கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் நீக்குவது மற்றும் உள்நாட்டில் இன்னும் அதிக ஆக்ரோஷமாக வர்க்கப் போர் தொடுக்கவும், உலகளவில் கனேடிய ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் நலன்களைப் பின்தொடரவும் ஜஸ்டின் ட்ரூடோவின் சிறுபான்மை தாராளவாத பெருவணிக அரசாங்கத்தை விட இன்னும் ஆக்ரோஷமாகத் தொடர பொறுப்பேற்கக் கூடிய ஓர் ஆட்சியைக் கொண்டு பிரதியீடு செய்வதில் தொடங்கி, அரசியலை மேலும் அதிகமாக வலதுக்கு நகர்த்துவது அவர்களின் நோக்கமாக உள்ளது.

டொனால்ட் ட்ரம்பும் தோல்வியுற்ற ஜனவரி 6, 2020 ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் இருந்த மற்ற முன்னணி பிரமுகர்களும் மற்றும் அமெரிக்க தலைமைச் செயலகத்தை நொறுக்கி 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றும் முயற்சியில் அவர்களுக்கு அதிரடிப்படை துருப்புகளாக சேவையாற்றிய பாசிச அடியாட்களும், இந்த ஜனநாயக-விரோத மற்றும் தொழிலாள வர்க்க விரோத சூழ்ச்சிக்கு துணை போவதுடன், உதவியும் வருகிறார்கள். இந்த சக்திகள் Convoy இயக்கத்திற்கு கணிசமான அரசியல், நிதியியல் மற்றும் தளவாட உதவிகளை வழங்கி வருகின்றன.

வேறு வார்த்தைகளில் சொன்னால், இது எல்லை தாண்டி நடத்தப்படும் ஓர் அதிவலது சதியாகும். அமெரிக்கா உரிய காலத்திற்கு முந்தியே வணிகங்கள் மற்றும் பள்ளிகளை மீண்டும் திறந்து கொண்டிருந்த போது, கோவிட்-19 கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்குமாறு கோர பாசிச-தலைமையிலான பேரணிகளை ஒழுங்கமைத்து, மிச்சிகன் மற்றும் பிற மாநிலங்களை 'விடுவிக்குமாறு' ஏப்ரல் 2020 இல் ட்ரம்ப் அவரின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். மிச்சிகனில், இத்தகைய பேரணிகள் மாநில அரசைக் கவிழ்க்கவும் மற்றும் ஆளுநர் கிரெட்சென் விட்மெர்ரைக் கடத்துவதற்குமான வெகுவாக முன்னேறிய ஒரு சதிக்கு வழிவகுத்தன. இந்த சக்திகள் தான் பின்னர் ஜனவரி 6 கிளர்ச்சிக்கு ஆட்களை அனுப்பின.

தற்போதைய இந்த சதி, இந்த பெருந்தொற்றுக்கு ட்ரூடோ அரசாங்கத்தின் அழிவார்ந்த விடையிறுப்பு மீதுள்ள கோபம் மற்றும் விரக்தியைச் சாதகமாக்க முயல்கிறது. விஞ்ஞான அடிப்படையிலான பூஜ்ஜிய கோவிட் கொள்கை கனடாவின் பெருநிறுவன உயரடுக்கின் நலன்களுடன் முரண்படுவதால், ட்ரூடோ அதை நிராகரித்துள்ளார் என்பதோடு, மட்டுப்படுத்தப்பட்ட தணிப்பு நடவடிக்கைகளை மட்டுமே அதிகமாக நடைமுறைப்படுத்தி உள்ளார், இதனால் பாரிய நோய்தொற்று மற்றும் இறப்புகளின் ஐந்து அலைகள் ஏற்பட்டுள்ளன.

உயரடுக்கால் தூண்டிவிடப்பட்ட, அதிவலது தலைமையிலான Convoy இயக்கம் ஒரு நிஜமான உடனடி அபாயத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதற்கு இரண்டாவதும் இன்னும் அதிக அடிப்படையான காரணம் என்னவென்றால், தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியால் (NDP) தொழிலாள வர்க்கம் பிளவுபடுத்தப்பட்டு அரசியல்ரீதியில் மவுனமாக்கப்பட்டு வருவதாகும்.

ஏற்கனவே இந்த Convoy இயக்கம் கனேடிய அரசியலைக் கூர்மையாக வலதுக்கு நகர்த்த பயன்படுத்தப்படுகிறது. இந்த பெருந்தொற்றின் இருண்ட நாட்களில் மட்டுமே காணப்பட்ட அளவுக்கு அந்த மட்டங்களுக்கு ஓமிக்ரோன் அலை இறப்புகளை அதிகரித்துள்ள போதினும், வலதுசாரி மாகாண பிரதமர்கள் சதிக்கூட்டத்தில் உள்ள மிகவும் வெளிப்படையான Convoy இயக்க ஆதாரவாளர்கள், சாஸ்கட்ச்வன் மாகாணத்தின் ஸ்காட் மொ மற்றும் அல்பர்ட்டா மாகாணத்தின் ஜாசன் கென்னெ ஆகியோர், எஞ்சிய கோவிட் தடுப்பு பொது சுகாதார நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நீக்க சூளுரைத்துள்ளனர்.

வெள்ளியன்று, கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரியும் ட்ரூடோவின் பிரியத்திற்குரியவருமான தெரேசா டாம் கூறுகையில், கனேடியர்கள் 'இந்த வைரஸூடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்' என்று சுற்றி வளைத்து அறிவித்தார். அதிவலது Convoy இயக்க தலைவர்களின் காதுகளுக்கு மட்டும் தேனிசையாக விருந்தளிக்கும் ஓர் அறிக்கையில், டாம் அறிவிக்கையில், “இந்த வைரஸ் மறைவதாக தெரியவில்லை' ஆகவே வரவிருக்கும் வாரங்களில் பொது சுகாதார நடவடிக்கைகள் அனைத்தையும் 'மறு-ஆய்வு' செய்ய வேண்டியிருப்பதாக அறிவித்தார்.

கடந்த புதன்கிழமை, பழமைவாதிகள் ஒட்டாவா ஆக்கிரமிப்புக்கு முழு மூச்சான ஆதரவு வழங்காததற்காக அவர்களின் தலைவர் எரின் ஓ'டூலெ வை நீக்கினர். அவருக்குப் பதிலாக தற்காலிகமாக அமர்த்தப்பட்டுள்ள கேன்டைஸ் பெர்ஜென் ஒட்டாவா நகர மையத்தை ஆக்கிரமித்துள்ள இந்த அதிவலது கூறுபாடுகளை 'தேசப்பற்றாளர்கள், சமாதானம் விரும்பும் கனேடியர்கள்' என்று பகிரங்கமாக புகழ்ந்துரைத்ததுடன், அவர்களுக்கு 'சமரச கரம்' நீட்டுமாறு பிரதம மந்திரி ட்ரூடோவுக்கு அழைப்பு விடுத்தார். Globe and Mail க்கு கசியவிடப்பட்ட உயர்மட்ட கட்சி தலைவர்களுக்கான மின்னஞ்சல்களில், தனிப்பட்டரீதியில் அவர் குறிப்பிடுகையில், ஒட்டாவாவின் தொடர் ஆக்கிரமிப்பை “ட்ரூடோ பிரச்சினையாக” ஆக்கும் விதத்தில் பழமைவாதிகள் அதை ஆதரிக்க வேண்டுமென வாதிட்டார்.

நிரந்தரமாக ஓ'டூலெ க்கு அடுத்து வர இருப்பவர்களில் முன்னிலையில் உள்ள பியர் பொலிவர் சனிக்கிழமை ஒரு சிறிய காணொளியை வெளியிட்டு அவர் தலைமைக்கான பிரச்சாரத்தைத் தொடங்கினார், அதில் அவர், வரிகளைக் குறைத்தும், பாரியளவில் சிக்கன நடவடிக்கைகள் மேற்கொண்டும், பொது சுகாதார நடவடிக்கைகளை அகற்றியும், “கனேடியர்களை உலகிலேயே மிகவும் சுதந்திரமானவர்களாக' ஆக்க சூளுரைத்தார்.

ஒட்டாவா மீது அபாயகமான முறையில் அரசியல் வன்முறை அச்சுறுத்தல் தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்நகரில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதுடன், கூடுதலாக 1,800 பொலிஸ் அதிகாரிகள் கேட்கப்பட்டுள்ளனர். இராணுவத்தை அழைப்பதற்கான திட்டங்களும் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் பாசிசவாத கூட்டாளிகளுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே ஒரு வன்முறை மோதல் வெடித்தால், பழமைவாதிகளும் முதலாளித்துவ உயரடுக்கு பிரிவுகளும் ட்ரூடோ 'விட்டுக்கொடுக்காததால் தான்' இது ஏற்பட்டதாக அதற்கான பழியை அவர் அரசாங்கம் மீது சுமத்துவார்கள் என்பதோடு, அவ்வாறு ஏற்படும் நெருக்கடியை வலதுசாரி விட்டுக்கொடுப்புகளைப் பெறுவதற்கோ அல்லது அரசாங்கத்தைக் கலைக்க சிறந்த உபாயங்களை மேற்கொள்வதற்கோ பயன்படுத்த முயல்வார்கள்.

ட்ரம்பும் ஜனவரி 6 கிளர்ச்சியின் மற்ற தலைவர்களும் ஒட்டாவா ஆக்கிரமிப்பை மட்டும் அரவணைக்கவில்லை. அவர்கள் ஜனநாயக அரசியலமைப்பு ஒழுங்கு மீது கூடுதலாக வன்முறை தாக்குதல் நடத்துவதற்காக அவர்களின் ஆதரவாளர்களை அணித்திரட்டும் முயற்சியில் அதை மையத்திற்குக் கொண்டு வருகிறார்கள். வெள்ளிக்கிழமை ஓர் ஆத்திரமூட்டும் அறிக்கையில் ட்ரம்ப் அறிவிக்கையில், “கடுமையான கோவிட் ஆணைகளுடன் கனடாவைச் சீரழித்துள்ள பைத்தியக்காரத்தனமான மற்றும் கடுமையான அதிஇடது கொள்கைகளை எதிர்த்து Freedom Convoy இயக்கம் அமைதியான முறையில் போராடி வருகிறது,” என்றார்.

டெக்சாஸ் செனட்டரும் ட்ரம்பின் கூட்டாளியுமான டெட் க்ரூஸ், பாசிசவாத QAnon குழுவின் ஓர் உறுப்பினரான காங்கிரஸ் சபையின் பெண் பிரதிநிதி மர்ஜொரி டெய்லர் க்ரீன் ஆகியோரும் இதே நிலைப்பாட்டுக்குப் பலம் சேர்த்துள்ளனர். Convoy திரட்டிய 10 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை முடக்குவதற்கான GoFundMe இன் முடிவை அவர்கள் அனைவரும் கண்டித்துள்ளனர், அந்த தொகையில் பெரும்பான்மை அநாமதேயர்களிடம் இருந்து பெறப்பட்டது, கனடாவில் முன்னொருபோதும் இந்தளவுக்கு அரசியல் நிதிதிரட்டல் நடந்ததில்லை. ஒரு 'அமைதியான' போராட்டத்திற்கு அல்ல மாறாக ஓர் 'ஆக்கிரமிப்புக்கு' நிதித்திரட்ட அனுமதிக்க முடியாதென குறிப்பிட்டு, GoFundMe நிறுவனம் கடந்த வாரயிறுதியில் அந்த நிதித்திரட்டும் பயனர் கணக்கை இரத்து செய்தது.

அந்த ஆக்கிரமிப்பாளர்களில் பெரும் பிரிவினர் அமெரிக்கர்கள் என்றும், Convoy பெற்றிருக்கும் நிதி ஆதாரங்களில் பெரும்பான்மை அமெரிக்காவில் இருந்து வந்துள்ளதாகவும் ஒட்டாவா பொலிஸ் உறுதிப்படுத்தியது. கனடா நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ள அதிவலது அமெரிக்க நடவடிக்கையாளர்கள், ஒன்று அமெரிக்க தலைமைச் செயலகத்தை ஜனவரி 6 இல் நொறுக்கியவர்கள் அல்லது அதை ஒழுங்கமைக்க உதவிய Proud Boys போன்ற பாசிசவாத குழுக்களின் வட அமெரிக்க வலையமைப்பான close-knit இன் பாகமாக இருப்பவர்கள்.

ட்ரம்ப் மற்றும் அவரின் சக-சதிகாரர்களின் முன்னோக்கில் இருந்து, ஒட்டாவா ஆக்கிரமிப்பானது ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் ஒரு தொடர்ச்சியாக உள்ளது. அமெரிக்கர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக சேவையாற்றுமாறு Convoy இயக்கத்திற்கு ட்ரம்ப் விடுத்த அழைப்பின்படி செயல்பட்டு, அமெரிக்கா எங்கிலும் உள்ள அதிவலது குழுக்கள், மார்ச் முதல் பாதியில் வாஷிங்டன் டி.சி. இல் ஒருங்கிணையும் ஒரு திட்டத்துடன், இப்போது அலபாமாவில் இருந்து வியோமிங் வரையில் மாநில தலைநகரங்களை ஆக்கிரமிக்க Freedom Convoy போராட்டங்களை ஒழுங்கமைத்து வருகின்றன.

ட்ரம்ப், க்ரூஸ் மற்றும் அவர்களின் அதிவலது கூட்டாளிகள் இந்தளவுக்குப் பகிரங்கமாக பொதுவெளியில் ஒழுங்கமைக்க முடிகிறது என்றால், எல்லாவற்றையும் விட அது பைடென் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் குற்றகரமான பாத்திரத்தால் ஆகும். தோல்வியடைந்த ஜனவரி 6, 2021 ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடந்து ஓராண்டுக்கும் அதிக காலத்தில், ஜனநாயகக் கட்சியினர் அந்த பதவிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்த குடியரசுக் கட்சியின் பாத்திரத்தைத் திட்டமிட்டு மூடிமறைத்ததுடன், ட்ரம்ப் அல்லது அவரின் முன்னணி சக-சதிகாரர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தவும் மறுத்துள்ளனர்.

ஒட்டாவில் Freedom Convoy இயக்கம் ஆக்கிரமித்திருப்பது கனேடிய ஜனநாயகத்தின் உடைவில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. இது உலகெங்கிலுமான ஆளும் உயரடுக்குகள் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி திரும்புவதன் பாகமாகும்.

கடந்த இரண்டாண்டு காலம் இந்த பெருந்தொற்று நெடுகிலும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் அரசாங்கங்கள் திட்டமிட்டு உயிர்களை விட இலாபங்களை முன்னிலைப்படுத்தி உள்ளன, இது மில்லியன் கணக்கானவர்கள் இறப்பதற்கு வழிவகுத்துள்ளது. பில்லியனர்களும் உயர்மட்ட 1 சதவீதத்தினரும் அரசாங்க பிணையெடுப்புகள் மற்றும் நிதிச் சந்தைகளுக்குள் ஒருபோதும் முடிவின்றி பாய்ச்சப்பட்ட நிதிகளை விழுங்கி போது, தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் வெறுமனே பெருந்தொற்றுக்கான கண்துடைப்பு நிவாரணமே வழங்கப்பட்டன —அதுவும் இப்போது கிட்டத்தட்ட முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டன— இப்போது அவர்களின் வருமானங்கள் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் நெரிக்கப்படுவதைக் காண்கிறார்கள். இந்த கொடூரமான சுகாதார நெருக்கடி மற்றும் சமூக நெருக்கடிக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் கனேடிய ஏகாதிபத்தியம், அவற்றின் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் சேர்ந்து, அணுஆயுதமேந்திய ரஷ்யாவை ஒரு பேரழிவுகரமான போருக்குள் இழுக்க முயல்கின்றன, அத்துடன் அவை சீனாவுடனும் பதட்டங்களைத் தூண்டிவிட்டு வருகின்றன.

பாரிய நோய்தொற்று மற்றும் இறப்பு, இராணுவவாதம் மற்றும் முன்பினும் அதிகமான சமூக சமத்துவமின்மை ஆகியவற்றுக்கான அவர்களின் குற்றகரமான வேலைத்திட்டத்திற்கு மக்களிடையே ஆதரவு இல்லாத நிலையில், முதலாளித்துவ ஆளும் உயரடுக்குகள் தொழிலாள வர்க்கத்தை மிரட்ட அதிவலதை அணித்திரட்டி வருகின்றன. இது நச்சார்ந்த தேசியவாத முத்திரை, வக்கிரமான சமத்துவவாத எதிர்ப்பு, காட்டுமிராண்டித்தனத்திற்கு மதிப்பளித்தல், முழுமூச்சாக அவர்களின் சொந்த இலாப வேட்கை மற்றும் மனித உயிர்கள் மீதான அலட்சியத்தை நியாயப்படுத்துதல் ஆகியவற்றுடன் இது பாசிசவாதிகளைக் காண்கிறது.

ஒவ்வொரு பிரதான முதலாளித்துவ நாட்டிலும், ஏப்ரல் 2020 இல் அமெரிக்காவில் இருந்து ஜேர்மனி, பிரான்ஸ் இப்போது கனடா வரையில், ஆளும் வர்க்கம் கோவிட்-19 ஐ தடுக்கும் பொது சுகாதார நடவடிக்கைகள் அனைத்தையும் கலைப்பதை அமுலாக்க மற்றும் முன்னெடுக்க அதிவலது மற்றும் பாசிசவாத சக்திகளைப் பயன்படுத்தி உள்ளது.

அதிவலது சக்திகளிடம் ஆளும் உயரடுக்கு ஆதரவு தேடுவது, எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த பெருந்தொற்றாலும் மற்றும் தசாப்தங்களாக வாழ்க்கை தரங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களாலும் தீவிரமயப்பட்ட தொழிலாள வர்க்கம் உலகெங்கிலும் பாரிய போராட்டங்களில் இறங்கி வருகிறது என்ற அதன் பயத்தால் உந்தப்படுகிறது. கனடா, அமெரிக்கா, துருக்கி மற்றும் இந்தியாவிலும், இன்னும் பல நாடுகளிலும், சமீபத்திய மாதங்கள் தொழிலாளர்களின் போர்குணமிக்க வேலைநிறுத்தங்களைக் கண்டுள்ளன.

இருந்தாலும் இந்த அதிகரித்து வரும் தொழிலாள வர்க்க கிளர்ச்சி, போலி 'இடது' கட்சிகள் மற்றும் பெருநிறுவன தொழிற்சங்கங்கள் உள்ளடங்கலாக, இந்த ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தையும் எதிர்த்து, சோசலிசத்திற்கான ஒரு பாரிய இயக்கம் என்ற வடிவில் அதன் அரசியல் வெளிப்பாட்டைக் காணவில்லை.

கனடா சோசலிச சமத்துவக் கட்சி அதன் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டவாறு, “மற்ற இடங்களைப் போலவே, கனடாவிலும், எதேச்சதிகார நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதற்கும் மற்றும் பாரிய தொழிலாள வர்க்க போராட்டங்கள் வெடிப்பதற்கு எதிராக முன்கூட்டிய ஒரு தாக்குதலில் அதிவலது அரசியல் வன்முறையைப் பயன்படுத்துவதற்கும் ஆளும் வர்க்கத்தில் அதிகரித்தளவில் ஆதரவு உள்ளது.

“இத்தகைய சூழ்ச்சிகளை தோற்கடிக்க முடியும் மற்றும் தோற்கடிக்கப்படும். எப்போது என்றால், அதாவது, ஆளும் வர்க்கத்தின் கொலைபாதக பெருந்தொற்று கொள்கைக்கு எதிராகவும் மற்றும் தொழிலாளர்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தசாப்தகால தாக்குதலுக்கு எதிராகவும் தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் உலகளாவிய எதிர்-தாக்குதல் —இப்போது ஆரம்பக் கட்டங்களில் உள்ள இது— ஒரு சர்வதேசவாத சோசலிச அரசியல் வேலைத்திட்டத்தால் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும்.”

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் தலையீடு இல்லையென்றால், எல்லா விதத்திலும் ஒட்டாவாவில் இப்போது நிலவும் விட்டுக்கொடுப்பற்ற நிலையின் சாத்தியமான விளைவு, கூடுதலாக வலதுக்குத் திரும்பி, தொழிலாள வர்க்கத்தின் மிகவும் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை ஆபத்திற்குட்படுத்தும்.

இந்த அதிவலது கும்பலுடன் ட்ரூடோ ஓர் 'அரசியல் தீர்வை' எட்டினாலும், அது பாசிசவாதிகளையும் ஆளும் வர்க்கத்தில் உள்ள அவர்களின் பிற்போக்குத்தனமான ஆதரவாளர்களை மட்டுமே பலப்படுத்தும். இந்த ஆக்கிரமிப்பை உடைக்க ட்ரூடோ அரசாங்கம் இராணுவத்தை அழைத்தால், ஆயுதப் படைகள் முன்பில்லாத வகையில் கனேடிய அரசியல் வாழ்வில் பாத்திரம் ஏற்கும் என்பதோடு, அரசாங்கம் தொடர்ந்து நிலைக்குந்தன்மை இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு எந்திரங்களைச் சாந்தப்படுத்துவதைச் சார்ந்திருக்கும். போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸிற்கு இடையிலான ஒரு வன்முறையான மோதல் ட்ரூடோ மீது அவர்களின் தாக்குதல்களையும் மற்றும் ஓர் அதிவலது பழமைவாத ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்கான அவர்களின் அழுத்தத்தையும் தீவிரப்படுத்த, Freedom Convoy இயக்கத்தைப் பகிரங்கமாக உத்வேகப்படுத்தும் Poilievre முன்னிலையில் இருப்பதைப் போல, பழமைவாதிகள் மற்றும் பெருநிறுவன ஊடகங்களால் சாதகமாக்கிக் கொள்ளப்படும்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டமே இப்போது உடனடி அவசியத்தைப் பெறுகிறது. தொழிற்சங்கம் மற்றும் NDP இன் பாத்திரத்தை இடைவிடாமல் அம்பலப்படுத்துவதே இந்த போராட்டத்தின் கூர்முனையில் இருக்க வேண்டும், இவை இந்த பெருந்தொற்று நெடுகிலும் 'உயிர்களை விட இலாபங்களை' முன்னிறுத்தும் ட்ரூடோ அரசாங்கத்தின் மூலோபாயத்தை ஆதரித்துள்ளன.

இந்த Convoy இயக்கத்தைத் தூண்டிவிடுவதிலும் மற்றும் அதிவலது தலைமையிலான நாடாளுமன்ற விரோத சக்திகளுக்குள் அதை அலங்காரப்படுத்தவும் பழமைவாதிகளும் ஆளும் உயரடுக்கின் பிற முக்கிய பிரிவுகளும் வகித்துள்ள பாத்திரத்தைத் தொழிற்சங்கங்களும் புதிய ஜனநாயகக் கட்சியும் திட்டமிட்டு மூடிமறைத்துள்ளன. அங்கே ஆக்கிரமித்திருப்பவர்களை 'இனவாதிகள்' மற்றும் 'வெள்ளையின மேலாதிக்கவாதிகள்' என்று கண்டிக்கின்ற அவை, அதேவேளையில் Convoy இயக்கம் கோவிட்-19 பொது சுகாதார நடவடிக்கைகள் அனைத்தையும் நீக்க நோக்கம் கொண்டிருக்கும் உண்மையை ஒருபோதும் குறிப்பிடுவதில்லை. தொழிற்சங்கங்களும் புதிய ஜனநாயகக் கட்சியும் இந்த பெருந்தொற்று நெடுகிலும் ட்ரூடோவுடன் கூட்டு சேர்ந்து வேலைக்குத் திரும்புவதை/பள்ளிக்குத் திரும்புவதை அமுலாக்கி உள்ளன என்பதை வைத்து பார்த்தால், இந்த புறக்கணிப்பு குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

ஒட்டாவா மற்றும் டொரொண்டோவின் தொழிற்சங்கங்கள், Convoy இயக்கத்திற்கு எதிராக சாமானியத் தொழிலாளர்களால் திட்டமிடப்பட்ட எதிர்ப்பு போராட்டங்களைத் தடுத்து நாசமாக்க சமீபத்திய நாட்களில் தலையீடு செய்தன. தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளின் கண்ணோட்டம் கனேடிய தொழிற்சங்க மாநாட்டில் தொகுத்தளிக்கப்பட்டது, 'தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலைக்குத் திரும்பட்டும்' என்று ஓர் அறிக்கையில் அது ஒவ்வொருவருக்கும் உத்தரவிட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒட்டுமொத்த மக்களுக்கும் கோவிட்-19 தொற்றுவதற்கும், தொழிலாளர்களுக்குப் பெருந்தொற்று நிவாரணங்களைக் குறைக்கவும், ரஷ்யாவுடன் போருக்குத் தயாரிப்பு செய்வதிலும் தொடர்ந்து இணைந்து செயல்பட அவை தாராளவாத/புதிய ஜனநாயகக் கட்சியின் கூட்டணியை விரும்புகின்றன.

பாசிசவாத அதிவலதின் அரசியல் வன்முறை அபாயத்தை விட போர், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கு எதிராக அடிமட்டத்திலிருந்து தொழிலாளர் தலைமையில் எழக்கூடிய ஒரு பாரிய இயக்கத்திற்கான சாத்தியக்கூறு நிறைய செய்துவிடும் என்றவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதையே தொழிற்சங்கங்கள் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியின் நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. இதற்காக, அவர்கள் அமெரிக்காவின் தொழிற்சங்கங்கள் மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள், ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு சதியின் போது ட்ரம்ப் மற்றும் அவருடன் இருந்த சதிகாரர்களுக்கு ஜனநாயகக் கட்சியினர் மூடிமறைப்பு வழங்கி, அவர்களின் குடியரசுக் கட்சி 'சக நண்பர்களை' சிநேகிதமாக்க முயன்ற போது, இவை சிறிதும் அயராது பைடெனுக்கு முட்டுக் கொடுக்க செயலாற்றின. DSA உடன் இணைந்த ஜாகோபின் பத்திரிகை, ஜனவரி 6 வெறும் 'கலகம்' தான், அமெரிக்க ஜனநாயகம் பலமாக இருப்பதாக வாதிட்டு கட்டுரைக்கு மேல் கட்டுரையாக பிரசுரித்தது.

தொழிலாள வர்க்கத்தின் மீது தொழிற்சங்கங்கள் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சி வைத்திருக்கும் வலுவான பிடி, ஒவ்வொரு இடத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் ஒரு வலையமைப்பைக் கட்டமைப்பதன் மூலம் உடைக்கப்பட வேண்டும். இத்தகைய குழுக்கள் Freedom Convoy ஆல் முன்னெடுக்கப்படும் பாரிய நோய்தொற்று மற்றும் மரணத்திற்கான வேலைத்திட்டத்தை ஆணித்தரமாக மறுத்தளித்து, உலகளவில் கோவிட்-19 ஐ அகற்றுவதற்கான ஒரு மூலோபாயத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்து, சமூக மற்றும் பொருளாதார வாழ்வின் எல்லா அம்சங்களிலும் நிதியியல் தன்னலக் குழு மற்றும் அதன் அரசியல் சேவகர்கள் வைத்துள்ள பிடியை உடைக்க ஓர் அரசியல் போராட்டத்தைத் தொடுக்க வேண்டும்.

இந்த போராட்டத்திற்கு முதலும் முக்கியமுமாக தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச அரசியல் தலைமையைக் கட்டமைப்பது அவசியமாகிறது. தசாப்த காலமாக ஸ்ராலினிசம், பப்லோயிச திரித்தல்வாதம் மற்றும் முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக அயராது போராடி வரும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்வரலாற்றில் இருந்து வரலாற்றுப் படிப்பினைகளை எடுத்த ஒரு புரட்சிகரக் கட்சியால் மட்டுமே, இந்த தலைமையை வழங்க முடியும். இந்த அதிவலது முன்னிறுத்தும் அச்சுறுத்தல் மற்றும் ஆளும் உயரடுக்கின் ஈவிரக்கமற்ற வர்க்க போர் திட்டநிரலை எதிர்த்து போராட தயாராக உள்ள ஒவ்வொருவரும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கனேடிய பிரிவாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டமைக்க இணையுமாறு நாம் பலமாக வலியுறுத்துகிறோம்.

இதே அரசியல் பிரச்சினைகள் அவசரமாக ஒவ்வொரு பிரதான முதலாளித்துவ நாட்டிலும் முன்நிற்கிறது. 1930 களின் காட்டுமிராண்டித்தனத்திற்கு மீண்டும் ஒருபோதும் திரும்பக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ள உலகெங்கிலுமான தொழிலாளர்களும் இளைஞர்களும் உங்கள் நாட்டில் செயலூக்கத்துடன் உள்ள சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறும், சோசலிச புரட்சியின் உலக கட்சியாக ICFI இன் புதிய பிரிவுகளைக் கட்டமைக்கும் போராட்டத்தை முன்னெடுக்குமாறும் நாம் முறையிடுகிறோம்.