இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் “பரவிவரும் தொற்றுநோயும் எழுச்சிபெறும் வர்க்கப் போராட்டமும் சோசலிச வேலைத்திட்டத்தின் அவசியமும்” என்ற தலைப்பில் இணையவழி கூட்டமொன்றை நடத்தவுள்ளது. இந்த கூட்டமானது ஆகஸ்ட் 26 வியாழக் கிழமை இரவு 7 மணிக்கு சூம் (Zoom) ஊடாகவும் மற்றும் கட்சியின் முகநூல் பக்கத்தின் ஊடாகவும் நேரடி ஒளிப்பு செய்யப்படும்.
வேகமாகப் பரவுகின்ற டெல்டா மாறுபாட்டினால் ஆதிக்கம் செலுத்துகின்ற கோவிட்19 தொற்றுக்களின் புதிய புகோள அதிகரப்புக்கு மத்தியில், உலகளவில் 4.3 மில்லியன் பேர் மரணித்துள்ளதாகவும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 200 மில்லியனைக் கடந்துள்ளதாகவும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையற்ற அரசாங்கத் தரவின் அடிப்படையில் கூட இலங்கையில் நாளாந்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் மற்றும் 180க்கும் மேலான மரணங்களும் பதிவாகின்றன. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வானது இலங்கையில் ஜனத்தொகைக்கு ஏற்ப உலகில் நான்காவது ஆகக் கூடிய கோவிட்19 மரண அளவினை தற்போது நெருங்கியுள்ளதாக காட்டியுள்ளது. சுகாதாரத் தொழிலாளர்கள் வேகமாகத் தொற்றுக்குள்ளாகுவதோடு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
இந்த மோசமான நிலையிலும் கூட தேசிய அளவிலான ஒரு பொது முடக்கத்தை அறிவிப்பதற்கு விடாப்பிடியாக மறுத்து வந்துள்ள ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் அரசாங்களமானது, வெறும் பத்து நாட்களுக்கு மட்டுமே முடக்கத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் குழுவானது ஒரு பேரழிகரமான மரணங்களை தடுப்பதற்கு, அரசாங்கம் கடுமையான போக்குவரத்து தடைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது. நிபுணர்களின் படி, அத்தகைய ஒரு முன்நடவடிக்கையின் மூலம் 2022 ஜனவரியில் சுமார் 18,000 இறப்பக்களைத் தவிர்க்க முடியும்.
உலகெங்கிலும் உள்ள அதன் சர்வதேச சமதரப்பினரைப் போல இராஜபக்ஷ அரசாங்கமும் மக்களின் உயிர்களை விட இலாபங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பொருளாதாரத்தை முழுமையாக திறந்து வைத்திருப்பதில் உறுதியாக உள்ளது. அதன் காரணமாக, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தும் வைரஸ் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக மாறியுள்ளன. கட்டவிழ்கின்ற சுகாதார மற்றும் சமூக நெருக்கடிகளின் காரணமான ஒரு சமூக வெடிப்பு பற்றிய பதற்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற “எதிர்க் கட்சிகள்” மக்களை “சுய-தனிமைப்படுத்தலுக்கு” அழைப்புவிடுக்கின்றன.
தொற்றுநோய்க்கு எதிராக போராடுவதில் அரசாங்கத்தின் தோல்வி சம்பந்தமாக வெகுஜன எதிரப்புகள் வளர்ந்து வருகின்ற நிலைமையில், பல துறைகளில் உள்ள தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்புக்களையும், போராட்டங்களையும் ஆரம்பித்துள்ளர். இது சர்வதேச ரீதியில் வர்க்க போராட்ட எழுச்சியின் ஒரு பாகமாகும். இவற்றில், சுமார் 250,000 ஆசியர்கள் சம்பளக் கோரிக்கைகளை முன்வைத்து நடத்தி வரும் இணையவழி கற்பித்தல் வேலை நிறுத்தமானது இரண்டாவது மாதத்திற்குள் நுழைந்துள்ளது.
அரசாங்கம் வளர்ந்து வருகின்ற வெகுஜன எதிர்ப்புகளை நசுக்குவதற்கும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப் புற ஏழைகள் மீது நெருக்கடிகளின் சுமைகளை திணிப்பதற்கும் சர்வதிகார ஆட்சி வடிவத்துக்கான அதன் தயாரிப்புக்களை தீவிரப்படுத்துவதன் ஊடாக பதிலிறுக்கின்றது. சோ.ச.க. கூட்டமானது தொற்று நோயால் தோற்றுவிக்கப்பட்ட பேரழிவுகளுக்கு எதிராகப் போராடவதற்கு உழைக்கும் மக்களுக்கு இன்றியமையாத சோசலிச வேலைத்திட்டத்தை கலந்துரையாடி அவர்களின் போராட்டங்களை முன்னோக்கி எடுத்துச் செல்லும். நாம், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய அனைத்து உலக சோசலிச வலைத் தள வாசகர்களையும் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றுமாறும் சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
திகதி நேரம்: விழாயன் 26 ஆகஸ்ட் மாலை 7 மணி.
மொழிகள்: சிங்களம் மற்றும் தமிழ்
பின்வரும் இணைப்பின் ஊடாக இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற பதிவு செய்துகொள்ளுங்கள் https://us02web.zoom.us/meeting/register/tZUocu6rrDkjE9Z6ICySMPval66o1QJxat4N