டெல்டா மாறுபாடு பரவுகையில் வணிகங்களுக்காக கோவிட்-19 கட்டுப்பாடுகளை பிரான்ஸ் முடிவுக்கு கொண்டு வருகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜூன் 30 அன்று, ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் பிரான்சில் வணிக நடவடிக்கைக்கு தடையான சமூக இடைவெளி நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்தியாவில் முதன்முதலில் காணப்பட்ட கொரோனா வைரஸின் மிகவும் தொற்றுநோயான டெல்டா மாறுபாடு ஐரோப்பா முழுவதும் பாரிய அளவில் பரவுகையில் இதனைக் கட்டுப்படுத்தும் விதிகள் அகற்றப்படுகின்றன.

ஜூன் 17, 2021, வியாழக்கிழமை, பாரிஸில் உள்ள சாம்ப்ஸ் எலிசே வீதியில் மக்கள் நடந்து செல்கின்றனர்.

பணியிட சிற்றுண்டிச்சாலைகள், கடைகள், அருங்காட்சியகங்கள், சினிமாக்கள், தியேட்டர்கள், உணவகங்கள் மற்றும் பிற மூடிய பொது இடங்கள் தொற்றுநோய்க்கு முந்தைய நிலையிலே செயல்படும். உணவகங்கள் இனி ஒரு அட்டவணையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை ஆறாகக் கட்டுப்படுத்தாது. உத்தியோகபூர்வ நெறிமுறை, கேண்டீன்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பணியிடங்கள் “முடிந்தவரை, பணிநிலையங்களில் சாப்பிடக்கூடிய மதிய உணவை அமைக்கவும்” என்று அறிவுறுத்துகின்றன, ஆனால் இந்த நடவடிக்கை முதலாளிகளின் விருப்பப்படி விடப்படுகிறது, எனவே, எந்த அர்த்தமுமற்றது.

இன்னும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் சில இடங்களில் இசை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் 2,500 பேருக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன, இருப்பினும் 1,000 க்கும் மேற்பட்ட நபர்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்பாளர்கள் தாங்கள் தடுப்பூசி போடப்பட்டதாக நிரூபிக்க வேண்டும் அல்லது சமீபத்தில் கோவிட் -19 பரிசோதனை செய்திருக்க வேண்டும். இரவு களியாட்டங்கள் மீண்டும் திறக்கப்படுவது ஜூலை 9 வரை தாமதமானது, அதே நேரத்தில் அதனை அதிகப்படியான கட்டுப்பாடுகளுடன் திறப்பதை நிராகரித்த வணிக உரிமையாளர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

முழு அரசியல் ஸ்தாபகமும் மௌனமாக ஏற்றுக்கொண்ட மக்ரோனின் கொள்கையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முழு ஆதரவுடன் டெல்டா மாறுபாட்டை தடையின்றி பரவ அனுமதிக்கின்றது. நோய்த்தொற்றின் தவிர்க்க முடியாத தன்மையை தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமெனவும் மேலும் தடுப்பூசிகள் அவர்களைப் பாதுகாக்கும் என நம்புவதாக கூறுகிறார்கள்.

குழந்தைகள் மற்றும் பல தொழிலாளர்கள் உட்பட, தடுப்பூசி போடாதவர்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் தலைவிதியை தீர்மானிக்க வேண்டும். உலகளாவிய வயது வந்தோருக்கான தடுப்பூசிக்கான அவசியத்தை வலியுறுத்த அல்லது தடுப்பூசிக்கான ஊடக பிரச்சாரத்தை ஏற்பாடு செய்ய மக்ரோன் மறுத்துவிட்டார். இதன் வெளிப்பாடு “சமூக நோய் எதிர்ப்பு சக்தி”யானது வைரஸ் தடையின்றி பரவ அனுமதிப்பதுடன் புதிய அதிக நோய்த்தொற்றுகளைத் தூண்டும் மற்றும் புதிய ஆபத்தான மாறுபாடுகளின் பரவலையும் அதிகரிக்கும்.

மேலும், இலவச கோவிட்-19 சோதனையை முடிவுக்கு கொண்டுவர மக்ரோன் திட்டமிட்டுள்ளதாக பரவலாக தெரிவிக்கப்படுகிறது. குடியிருப்பு பத்திரமற்றவர்கள் ஜூலை 7 முதல் கோவிட்-19 சோதனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் மற்றும் பிரெஞ்சு குடிமக்களும் குடியிருப்பு பத்திரமுள்ளவர்களும் செப்டம்பர் மாதத்தில் இருந்து கட்டணம் செலுத்த வேண்டும்.

டெல்டா மாறுபாட்டின் மீதான பெருகிய ஆபத்து மற்றும் தடுப்பூசி செயல்திறனின் அதன் தாக்கத்தின் மத்தியில், டெல்டா மாறுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பிரான்சின் தென்மேற்குப் பகுதியான லாண்ட் (Landes) இல் ஜூலை 6 வரையே மக்ரோன் வணிகங்களுக்கு கட்டுப்பாடுகளை வைத்திருந்தார். டெல்டா மாறுபாட்டின் பரவலைத் தடுக்கும் தீவிர எண்ணம் அவருக்கு இல்லை என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஜூலை 6 க்குள் மாறுபாடு (variant) மறைந்துவிடும் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. மேலும், ரிவியேரா (Riviera), ஆல்ப்ஸ் (Alps) மற்றும் பாரிஸ் பகுதியில் டெல்டா மாறுபாட்டிற்கான இருப்பு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அங்கு இதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

செப்டம்பர் மாதத்திற்குள் ஐரோப்பாவில் கோவிட்-19 டெல்டா மாறுபாடு பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கும் விஞ்ஞான அதிகாரிகளின் எச்சரிக்கைகளை மக்ரோன் மீண்டும் மறுத்தலித்து வருகிறார். கடந்த மாதத்தில், அதன் பரவலானது பிரிட்டனில் 3,000 த்தில் இருந்து 26,000 ஆகவும், ரஷ்யாவில் இரட்டிப்பாக 21,000 ஆகவும், போர்த்துக்கலில் நான்கு மடங்கு 1,700 ஆகவும் அதிகரித்துள்ளது. போர்த்துக்கேய அதிகாரிகள் தலைநகர் லிஸ்பன் (Lisbon) மீது குறுகிய பூட்டலுடன், அதன் பரவலைத் தடுக்க முயன்றனர். ஆனால் இப்போது இப் பரவலானது ஐரோப்பா முழுவதும் அதிகரித்துள்ளது.

சூப்பர்-ஸ்ப்ரெடர் (Super-spreader) நிகழ்வுகள் இப்போது நடைபெறுகின்றன, குறிப்பாக யூரோ கால்பந்து கோப்பையின் போது. வைரஸால் பாதிக்கப்பட்ட 182 ஸ்காட்டிஷ் (Scottish) இரசிகர்கள் ஜூன் 18 அன்று லண்டனில் உள்ள வெம்ப்லி (Wembley) மைதானத்திற்கு பயணம் செய்ததாக இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்தனர், அதே நேரத்தில் உதைபந்தாட்ட கோப்பையில் இருந்து திரும்பும் ரசிகர்கள் மத்தியில் பின்லாந்து (Finland) நூற்றுக்கணக்கான தொற்றுநோய்களை எதிர்பார்க்கிறது. ஸ்பெயினில், மல்லோர்காவில் மாணவர்களின் ஆண்டு இறுதி விடுமுறையின் போது ஒரு சூப்பர்-ஸ்ப்ரெடர் நிகழ்வைத் தொடர்ந்து 1,000 க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்சில் கோவிட்-19 நோய்த்தொற்றுகளில் 20 சதவீதம் இப்போது டெல்டா மாறுபாட்டால் ஏற்படுகிறது என்பதை பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் (Olivier Véran) உறுதிப்படுத்தியுள்ளார். புதன்கிழமை, ராபர்ட் கோச் நிறுவனம், டெல்டா மாறுபாடு ஜேர்மனியில் “அனைத்து புதிய தொற்றுநோய்களிலும் குறைந்தது பாதி” என்று கூறியுள்ளது.

நேற்று, பாஸ்டர் இன்ஸ்டிடியூட் தொற்றுநோயியல் நிபுணர் அர்னாட் ஃபோண்டனெட் (Arnaud Fontanet) BFM-TV இடம், “செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் நோய்த்தொற்றுகள் கணிசமாக அதிகரிக்கும்” என்று கூறினார்: “டெல்டா மாறுபாடு, இரண்டு மாதங்களில், தற்போது பிரான்ஸில் இருக்கும் வைரஸ்களை மாற்றும், தென்னாபிரிக்க பீட்டா (Beta) மாறுபாட்டை தவிர்த்து. பிரெஞ்சு பிரதேசத்தில் 80 முதல் 90 சதவிகிதம் தொற்றுநோய்களின் வரிசையில் …. இது முதன்மையாகிவிடும்.”

பிரான்சின் தேசிய விஞ்ஞான கவுன்சிலின் தலைவரான ஜோன்-பிரான்சுவா டெல்ஃப்ரைஸி (Jean-François Delfraissy), பிரான்ஸ் இன்டர் செய்திக்கு, 1,500 முதல் 3,000 வரை பிரான்சில் தற்போதைய தினசரி தொற்று அளவு, “ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டில் ‘மிகக் குறைந்த’ அளவு என்பது பொய்யாகும்” என்று கூறினார். மேலும் “கடந்த ஆண்டு கோடையில் என்ன நடந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஜூன் 2020 இன் இறுதியில் முக்கியமான ஒப்பிடக்கூடிய புள்ளிவிபரங்களானது, இரண்டாவது அலை செப்டம்பரில் வருவதைக் கண்டோம்.”

டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக 'இரண்டு அளவையும் பெற்ற ஒருவருக்கு' தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும் என்று டெல்ஃப்ரைஸி (Delfraissy) கூறினார், ஆனால் ஒரு அளவு (one dose) மட்டுமல்ல. “எனவே தடுப்பூசி போடுங்கள், பாடசாலை தொடங்குவதற்கு முன்பு உங்கள் இரண்டு ஊசி மருந்துகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.” 60 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் மூன்றாவது பூஸ்டர் டோஸ் (booster dose) வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

இப் பேரழிவிற்கு காரணமான மக்ரோனின் கொள்கைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாக எச்சரிப்பதும் அணிதிரட்டுவதும் அவசியமாக உள்ளது. ஏற்கனவே, 1.1 மில்லியன் ஐரோப்பியர்கள் கோவிட்-19 காரணமாக இறந்துவிட்டனர், விஞ்ஞான சமூக-இடைவெளி நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்ப்பு காரணமாக. இன்னும் ஒரு புதிய அலை நோய்த்தொற்றுகள் உருவாகின்றன. “வைரஸுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும்” என்று மக்ரோன் கூறியது போல், அல்லது இன்னும் அப்பட்டமாக, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் “இனி பூட்டுதல்கள் இல்லை, உடல்கள் ஆயிரக்கணக்கான அளவில் குவிந்து போகட்டும்!” என்று கூறியதானது மில்லியன் கணக்கானவர்கள் இறந்தாலும் கூட ஐரோப்பிய அரசாங்கங்கள் செல்வந்தர்களின் மில்லியன்களை காப்பாற்ற திட்டமிட்டுள்ளன என்பதை காட்டுகிறது.

இந்த வாரம், ஐரோப்பிய ஆணையம் ஒரு தொற்றுநோய் ஏற்பட்டால், 'அடுத்த தலைமுறை ஐரோப்பிய ஒன்றியத்தின்' 750 பில்லியன் யூரோ மீட்பு தொகுப்பின் முதல் தவணையாக 39.4 பில்லியன் யூரோக்கள் பிரெஞ்சு பங்கிற்கு ஒப்புதல் அளித்தது. தொற்றுநோய் காலத்தின் போது ஐரோப்பிய பில்லியனர்கள் தங்களின் மொத்த வருவாயை 1 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளதுடன் 1.25 டிரில்லியன் டாலர் ஐரோப்பிய மத்திய வங்கி பிணை எடுப்புக்கு நன்றி கூறிக்கொள்கின்றனர். ஐரோப்பிய ஒன்றிய பிணை எடுப்பு, அதன் பங்கிற்கு, 'டிஜிட்டல் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான' தனியார் நிறுவனங்களின் திட்டங்களுக்கு நிதியளிக்கிறது. இந்த பிணை எடுப்பினை திருப்பிச் செலுத்துவதற்காக, மக்ரோன் வணிக மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்புகளுடன் ஓய்வூதியங்களைக் குறைப்பது மற்றும் ஓய்வூதிய வயதை இரண்டு ஆண்டுகளாக 64 ஆக உயர்த்துவது குறித்து விவாதித்து வருகிறார்.

அதே நேரத்தில், ஐரோப்பிய அரசாங்கங்களின் கொள்கையானது மில்லியன் கணக்கான புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். பிரெஞ்சு ஊடகங்கள் மேற்கோள் காட்டிய புள்ளிவிவரங்கள் சரியானவையாக இருந்தாலும், தடுப்பூசியின் இரண்டு அளவுகள், டெல்டா மாறுபாட்டுடன் கூட, நோய்க்கு எதிராக 90 முதல் 95 சதவிகிதம் பாதுகாப்பை வழங்கினாலும், அது பரந்தளவிலான நோயைத் தடுக்காது.

முதலாவதாக, செல்வந்த நாடுகளில் கூட, அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர். பிரிட்டன் கோவிட்-19 மீண்டும் எழுச்சி காண்கிறது, இருப்பினும் அதன் மக்கள் தொகையில் 67 சதவீதம் பேர் ஒரு தடுப்பூசி அளவைக் கொண்டுள்ளனர், 49 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளார்கள்.

தடுப்பூசிகளின் இருப்பு ஐரோப்பிய கண்டத்தில் இன்னும் குறைவாக உள்ளன. பிரான்சில், 30 சதவீத மக்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளார்கள், 50 சதவீதம் பேர் ஒரு அளவை (one dose) பெற்றுள்ளனர். ஜூன் மாதத்தில், மேலும், பிரான்சில் தினசரி தடுப்பூசிகள் வழங்கும் அளவு 350,000 இலிருந்து 180,000 ஆக குறைந்தது. இதன் பொருள், Le Point பத்திரிகை குறிப்பிடுகையில், “அரசாங்கத்தின் நோக்கம், 35 மில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டனர், ஆகஸ்ட் மாதத்திற்குள் குறைந்தது ஒரு டோஸ் (one dose) பெற்றுக்கொண்ட 45 மில்லியன்களை, எட்டுவது கடினம்.” எவ்வாறாயினும், இந்த இலக்கு கூட 52 சதவிகித பிரெஞ்சு மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடுவதையும் 67 சதவிகிதம் ஒரே அளவுடன் (one dose) மட்டுமே இருக்கும்.

இரண்டாவதாக, தடுப்பூசி போடப்பட்ட முழு மக்களும் 95 சதவிகித செயல்திறனுடன் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட மற்றும் தடுப்பூசி போடாத மக்களுக்கு மீண்டும் மீண்டும் வெளிப்படுவதால் பலர் நோய்வாய்ப்படுவார்கள். முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் 4,100 அமெரிக்கர்கள் கோவிட்-19 இலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அல்லது இறந்துவிட்டதாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையங்கள் தெரிவித்துள்ளன. 'சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்' கொள்கைகள் காரணமாக நோய்த்தொற்றுகள் அதிகரித்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிணை எடுப்பு மற்றும் “சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தும் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக, பணியிடத்திலும் பள்ளிகளிலும் வைரஸ் பரவுவதை கண்காணிக்கவும் நிறுத்தவும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர்களின் சொந்த, சாமானிய பாதுகாப்புக் குழுக்கள் அவசியப்படுகிறது. தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தேவையான வளங்களைக் கட்டுப்படுத்த, தொழிலாளர்கள் சர்வதேச அளவில் ஐக்கியப்பட்டு, ஐரோப்பிய ஒன்றியத்தை தூக்கிவீசி, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை கட்டியெழுப்ப வேண்டும்.

Loading