டெல்டா திரிபு உலகளவில் அதிகரித்து வருகையில் அரசாங்கங்கள் கோவிட்-19 கட்டுப்பாடுகளை கைவிடுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகெங்கிலும், தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் கோவிட்-19 இன் டெல்டா திரிபுகளின் பரவலைப் பற்றி எச்சரிக்கை செய்கிறார்கள். இது முன்னர் ஆதிக்கம் செலுத்திய திரிபுகளை விட 60 சதவிகிதம் அதிகமாக பரவக்கூடியதும் மற்றும் சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஓரளவு கட்டுப்படக்கூடிய அறிகுறிகளைக் காட்டுகிறது.

"டெல்டா திரிபு வேகமானது, அது பலமானது மற்றும் இது முந்தைய வகைகளை விட மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது" என்று திங்களன்று உலக சுகாதார நிறுவனத்தின் செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் மைக்கல் ரியான் எச்சரித்தார். Buffalo பல்கலைக்கழகத்தின் மரபணு ஆராய்ச்சி மையத்தின் இணை இயக்குனர் ஜெனிபர் சேர்ஸ்டிஸ், “இந்த திரிபு உண்மையில் காட்டுத்தீ போல் பரவக்கூடும்” என்று பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார்.

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட டெல்டா திரிபு, இங்கிலாந்தில் தொற்றுநோயை மீண்டும் அதிகரித்திருப்பதற்கான காரணமாகும். அங்கு கடந்த ஆறு வாரங்களில் தினசரி புதிய கோவிட்-19 தொற்றுக்குகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. போர்த்துக்கல் மற்றும் ரஷ்யாவில் தொற்றுக்குகள் மற்றும் இறப்புகளின் கூர்மையான உயர்வுக்கு இந்த திரிபு காரணமாக உள்ளது. செவ்வாயன்று, ரஷ்யா பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து தொற்றுநோயால் இறந்த அதிகூடிய தினசரி இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்தது. ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற நாடுகளும் புதிய திரிபின் காரணமாக தொற்றுக்குகள் அதிகரித்து வருகின்றன.

மிசூரியின் லீ உச்சி மாநாட்டில் பயணிகள் Missouri River Runner Amtrak ரயிலில் ஏறுகிறார்கள். மாநிலங்களில் வேகமாக பரவி வரும் டெல்டா திரிபு மற்றும் தடுப்பூசி போடுவதற்கு பல மக்கள் மத்தியில் காணப்படும் பிடிவாதமான எதிர்ப்புடன் இணைந்து தொற்றுக்குகளில் ஆபத்தான உயர்வு காணப்படுகிறது. (AP Photo/Charlie Riedel, File)

உலகின் பிற பகுதிகள், குறிப்பாக ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் பரவக்கூடிய இந்த திரிபு பரவலாகக் கண்டறியப்படுவதற்கு முன்பே தொற்றுக்குகளில் கூர்மையான உயர்வு காணப்படுகிறது. தென்னாபிரிக்காவில், தினசரி புதிய தொற்றுக்கள் மீண்டும் 11,000 க்கு அதிகரித்து, முந்தைய ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்த 19,000 இனை எட்டியுள்ளன. பிரேசிலில், 500,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். புதிய தொற்றுக்கள் ஒரு நாளைக்கு 75,000 க்கு அண்மித்து உள்ளன.

இந்த திரிபு அமெரிக்காவில் தொற்றுநோய்களின் புதிய எழுச்சியை ஏற்படுத்த அச்சுறுத்துகிறது. இது தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 12,000 புதிய தொற்றுக்களையும் 300 க்கும் மேற்பட்ட இறப்புகளையும் பதிவு செய்கிறது. அமெரிக்க மக்கள் தொகையில் 45.8 சதவீதம் பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்படுகிறார்கள். ஆனால் சில மாநிலங்களில் தடுப்பூசி விகிதம் 35 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

ஒரு அச்சுறுத்தும் எச்சரிக்கையில், தொற்றுநோயியல் நிபுணர் எரிக் பைகல்-டிங், டெல்டா திரிபு அமெரிக்காவில் ஒரு சில கிழமைக்குள் “ஆதிக்கம் செலுத்தும்” என்று கணித்துள்ளார். பைனான்சியல் டைம்ஸின் தரவுகளை பற்றி அவர் குறிப்பிட்டு, அமெரிக்க தொற்றுக்குகளில் மூன்றில் ஒரு பங்கு டெல்டா திரிபால் ஏற்படுகிறது. அதாவது இந்த திரிபின் காரணமான தொற்றுக்களின் பங்கு "1 வாரத்தில் இரட்டிப்பாக / மும்மடங்காக இருக்கலாம்!" என்றார்.

பைனான்சியல் டைம்ஸ் வழங்கிய தரவுகளின்படி, அமெரிக்காவில் தடுப்பூசி விகிதங்கள் மிகக் குறைவாக உள்ள ஆர்கன்சாஸ் மாநிலத்தில் டெல்டா திரிபுகள் இப்போது வரிசைப்படுத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளிலும் 56 சதவீதமாக உள்ளது. இந்த திரிபு "உட்டாவில் புதிய வழக்குகளில் 49 சதவிகிதம் மற்றும் மிசோரியில் 42 சதவிகிதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது" என்று செய்தித்தாள் கூறியது. மிசோரி சராசரிக்கும் குறைவான தடுப்பூசி விகிதங்களைக் கொண்டுள்ளது".

புதிய திரிபால் ஏற்படும் ஆபத்து இருந்தபோதிலும், அமெரிக்கா முழுவதும் உள்ள மாநிலங்கள் தொற்றுநோய் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் அகற்றுவதை துரிதப்படுத்துகின்றன.

செவ்வாயன்று, மிச்சிகன் ஆளுனர் கிரெட்சன் விட்மர் டெட்ரோய்டின் Belle Isle பூங்காவில் கடற்கரையில் நின்று, கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசு முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்தார்.

"இது ஒரு அற்புதமான அறிவிப்பாகும். நாங்கள் இப்போது தொற்றுநோய் உத்தரவுகளை கைவிடுகிறோம்," என்று விட்மர் கூறினார். "இன்று முதல், முகக்கவசம் அல்லது ஒன்றுகூடுதல் மீதான கட்டுப்பாடு இல்லை. இன்று முதல், உட்புறங்களில் அல்லது வெளியில் ஒன்றுகூடுதல் மட்டுப்படுத்தல்கள் இல்லை. இன்று முதல், எங்கள் தூய மிச்சிகன் கோடைகாலம் மீண்டும் வந்துவிட்டது” என்றார்.

நியூயோர்க் மற்றும் கலிஃபோர்னியாவின் இதேபோன்ற அறிவிப்புகளுடன், முகக்கவச கட்டளைகளின் முடிவு மற்றும் சமூக தூரவிலக்கல் பற்றிய மிச்சிகன் அறிவிப்பு, விஞ்ஞானிகள் நோயின் மிகப்பெரிய மீள்எழுச்சி பற்றி எச்சரிகையிலும் கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசாங்கங்களின் நாடு தழுவிய மற்றும் உலகளாவிய நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

ஐரோப்பா முழுவதும், அரசாங்கங்களும் இதேபோல் கோவிட்-19 பரவுவதற்கு எதிரான கட்டுப்பாடுகளை நீக்குகின்றன. அவற்றை முடிவுக்குக் கொண்டுவருவது ஒரு புதிய அலை தொற்றுகளுக்கு வழிவகுக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

டெல்டா திரிபால் ஏற்படும் தொற்றுக்குகள் அதிகரித்த போதிலும், உட்புற இடங்களில் முகக்கவசம் அணியும் தேவைகளை கைவிட்டு டென்மார்க் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வாரம் கட்டுப்பாடற்ற சுற்றுலா பயணத்தை கிட்டத்தட்ட அனுமதித்து, அமெரிக்கா உட்பட 14 நாடுகளில் இருந்து அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை கைவிட்டது.

தடுப்பூசி கிடைத்த போதிலும் தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கைவிடுவது, கடந்த ஆண்டின் அதிகரிப்பின் அளவிற்கு தொற்றுக்கள் மீண்டும் எழுச்சியுறுவதற்கு வழிவகுக்கும் என்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் எச்சரித்தது. அது பின்வருமாறு அறிவித்தது:

இவ்வாறான உருவாக்கங்கள், கோடை மாதங்களில் மருத்துவவகைப்படாத நடவடிக்கைகளின் கடுமையான எந்தவொரு தளர்வு… எல்லா வயதினரிடமும் தினசரி தொற்றுக்களில் வேகமான மற்றும் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கும். மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இது மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய அதிகரிப்புடன், 2020 இன் இலையுதிர்காலத்தின் அதே அளவை எட்டக்கூடும்.

இது ஒரு அசாதாரண எச்சரிக்கை. தடுப்பூசிகள் கிடைத்த போதிலும், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் மேற்கொள்ளப்படும் கொள்கைகளின் ஒரு முன்கணிக்கத்தக்க விளைவாக இறப்பு விகிதங்கள் கடந்த வீழ்ச்சியைக் கண்ட நிலைகளை மீண்டும் அடையக்கூடும்.

இதற்கிடையில், பைடென் நிர்வாகம் மழலைகள் பள்ளிகளிலிருந்து 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் நேரடி பயிற்றுவிப்பை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அதன் கோரிக்கைகளை விட்டுக்கொடுப்பின்றி தொடருகின்றது. புதன்கிழமை, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) இயக்குனர் ரோசெல் வலென்ஸ்கி NBC யிடம் டெல்டா திரிபு விரைவாக பரவினாலும், டெல்டா திரிபு குழந்தைகளை அளவுக்கு மீறி பாதிக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருந்தபோதிலும் பள்ளிகளை முழுமையாக திறப்பதை உறுதி செய்யும் நிர்வாகத்தின் திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறினார்.

கட்டாய முகக்கவச ஆணைகளை கைவிடுமாறு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தியதிலிருந்து அமெரிக்கா முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து மறைத்தல் மற்றும் சமூக தூரவிலக்கல்ளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, ஒன்றின் பின் ஒவ்வொரு பணியிடங்கள் கட்டுப்பாடுகளை கைவிடுகின்றன. Stellantis வாகன உற்பத்தியாளர் கடந்த வாரம் வெப்பநிலை சோதனைகள் மற்றும் பிற சமூக தூரவிலக்கல் நடவடிக்கைகளை கைவிடுவதாக அறிவித்தது.

இதற்கிடையில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தபடி, "தொற்றுக்கள், இறப்புகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் உள்ளிட்ட முக்கிய தொற்றுநோய் தரவுகள் குறித்த அறிக்கைகளை மந்தமான வேகத்திலேயே மாநிலங்கள் அறிவித்து வருகின்றன."

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். கணக்கிடப்பட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, தினசரி புதிய தொற்றுக்கள் 360,000 க்கும் அதிகமாகவும், தினசரி இறப்புகள் கிட்டத்தட்ட 8,000 ஆகவும் உள்ளன. அமெரிக்காவில் மட்டும், உத்தியோகபூர்வ அறிக்கைகளின் அடிப்படையில், 600,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இருப்பினும் உண்மையான இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு மில்லியனாக இருக்கலாம் என் மதிப்பிடப்படுகின்றது.

தொற்றுநோய் காலம் முழுவதும் இருந்ததைப் போலவே, இலாபம் ஈட்டுவதற்கான அனைத்து தடைகளையும் நீக்குவதற்கும் முதலாளித்துவ சுரண்டலுக்கு தடையின்றி உழைப்பு வழங்குவதற்கும் நிதி தன்னலக்குழுவின் கோரிக்கைகளால் இக்கொள்கை இயக்கப்படுகிறது. மனித வாழ்க்கையை தனியார் இலாபத்திற்கு அடிபணிய வைக்கும் கொள்கையின் விளைவாக, கடந்த ஆண்டில் அமெரிக்காவில் ஒரு மில்லியன் புதிய மில்லியனர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக Credit Suisse இன் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கைவிடுவதற்கான ஆளும் வர்க்க பிரச்சாரத்தை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். இதன் நோக்கம் நிதி தன்னலக்குழு செல்வந்தமயமாதலை இலகுவாக்குவதற்கு பாரிய மரணத்தை "இயல்பான" ஒன்றானதாக்குவது ஆகும். டெல்டா திரிபின் பரவலுடன், சமூக தூரவிலகல் மற்றும் முகக்கவசம் அணிவதை கைவிடுவதையும், கோவிட்-19 தொற்றுக்களை கண்காணிப்பதற்கும் தனிமைப்படுத்துவதற்கும் சுகாதார உள்கட்டமைப்பை தொடர்ந்து உருக்குலைப்பதை தொழிலாளர்கள் எதிர்ப்பது மிகவும் அவசரமானது.

தொற்றுநோய் ஒரு உலகளாவிய நெருக்கடி என்பதை டெல்டா திரிபின் பரவல் மீண்டும் நிரூபிக்கிறது. உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறார்கள். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே தடுப்பூசியின் முதல் கட்டத்தை பெற்றுள்ளனர். உலகளவில் வைரஸ் பரவுவது புதிய வகைகளின் மேலதிக வளர்ச்சியின் அபாயத்தை எழுப்புகிறது. அவை தவிர்க்க முடியாமல் மற்ற நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், மேலும் புதிய வெடிப்புகளுக்கு வழிவகுக்கும்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அரசாங்கங்களின் இயலாமை ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு கொள்கையை கீழ்ப்படுத்துதல் மற்றும் தேசிய மோதல் ஆகிய முதலாளித்துவத்தின் அடிப்படை சமூக இயங்கியலை பிரதிபலிக்கிறது. இந்த சமூக ஒழுங்கமைப்பு தான் தொற்றுநோயின் பெரும் எண்ணிக்கைக்கு பொறுப்பை ஏற்கிறது. இறுதி ஆய்வில் சமூகத்தின் தேவைகள் இலாப அமைப்புமுறையுடன் பொருந்தாது இருக்கும் தன்மையை இது வெளிப்படுத்துகிறது.

Loading