பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், பிரான்சின் பிராந்திய முதல்வர்கள் அனைவரும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிரெஞ்சு பிராந்திய தேர்தல்களின் இரண்டாவது சுற்றில் நேற்று 65 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்காத நிலையில், தற்போது பதிவியிலுள்ள 12 பிராந்திய தலைவர்களும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மரின் லு பென்னின் அதிவலது தேசிய பேரணியோ (RN) அல்லது ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் குடியரசை நோக்கிய அணிவகுப்பு கட்சியோ பிரான்சின் 12 பிராந்தியங்களில் ஒன்றைக் கூட கைப்பற்றவில்லை.

Far-right leader Marine le Pen attends a press conference in Toulon, southern France, June 17, 2021. (AP Photo/Daniel Cole)

பாரம்பரிய கோலிச மற்றும் சமூக-ஜனநாயகக் கட்சிகள் பதவியைத் தக்கவைத்துக் கொண்டதற்கு, முதல் சுற்றைப் போலவே (66.5 சதவீதம்) பாரியளவில் வாக்காளர்கள் மீண்டும் தேர்தலைப் புறக்கணித்ததற்குத் தான் நன்றி கூற வேண்டியிருக்கும். வலதுசாரி குடியரசுக் கட்சி (LR) ஆறு இடங்களை வென்றது, சோசலிஸ்ட் கட்சி (PS) மற்றும் பசுமைக் கட்சி ஐந்து பிராந்தியங்களையும்; தன்னாட்சி ஆதரவு கட்சியான Gilles Simeoni இன் Fà populu inseme கட்சி கோர்சிக்காவையும் வென்றன. ஸ்திரத்தன்மை இருப்பதாக தெரிந்தாலும், பாரியளவில் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்தமை கோவிட்-19 பெருந்தொற்றை அரசியல் ஸ்தாபகம் கையாண்ட விதம் மற்றும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மீது வன்முறையான பொலிஸ் ஒடுக்குமுறை ஆகியவை மீதான ஆழ்ந்த வெறுப்பைச் சுட்டிக் காட்டுகிறது.

நேற்று மாலை வரையில், கருத்துக்கணிப்புகளும் ஊடக உத்தேச கணிப்புகளும் பிராந்திய நிர்வாகத்தை ஜெயிக்க பெரும்பான்மை வாக்குகள் பெற்ற வேட்பாளர் குறித்தும் மற்றும் பிராந்திய கவுன்சில் இடங்களில் ஒரு கால்வாசி கூடுதலாக பெற்றதைக் குறித்தும் பின்வரும் முடிவுகளை வழங்கின:

Auvergne-Rhône-Alps (லியோனின் பிராந்திய தலைநகரம்): லோரன்ட் வோக்கியே (LR) 55.3 சதவீதம்; Fabienne Grébert (பசுமைக் கட்சி) 33.4 சதவீதம்; Andréa Kotarac (RN) 11.3 சதவீதம்.

• பிரிட்டானி (ரென்): Loïg Chesnais-Girard (PS) 30 சதவீதம்; Isabelle Le Callennec (LR) 20; Thierry Burlot (LRM) 17; Gilles Pennelle (RN) 12 சதவீதம்.

Burgundy-Franche-Comté (டிஜோன்): Marie-Guite Dufay (PS) 43 சதவீதம்; Julien Odoul (RN) 24.95; Gilles Platret (LR) 24.28; Denis Thuriot (LRM) 9.66 சதவீதம்.

Center-Loire Valley (ஓர்லியன்ஸ்): François Bonneau (PS) 38.6 சதவீதம்; Nicolas Forissier (LR) 22.9; Aleksandar Nikolic (RN) 22.4; Marc Fesneau (LRM) 16.1 சதவீதம்.

கோர்சிக்கா (அஜாக்கோ): Gilles Simeoni (Fà populu inseme) 40.6 சதவீதம்; Laurent Marcangeli (LR) 32; Jean-Christophe Angelini (Avanzemu Pè a Corsica) 15.07; Paul-Félix Benedetti (பிராந்தியவாதிகள் கட்சி) 12.26 சதவீதம்.

East (ஸ்ராஸ்பேர்க்): Jean Röttner (LR) 39 சதவீதம்; Laurent Jacobelli (RN) 27.1; Eliane Romani (Verts) 21.1; Brigitte Klinkert (LRM) 12.8 சதவீதம்.

North (லீல்): சேவியர் பெர்த்ரோன் (LR) 53 சதவீதம்; செபஸ்டியான் சீனு (RN) 25.6; Karima Delli (பசுமைக் கட்சி) 21.4 சதவீதம்.

Île-de-France (பாரிஸ்): Valérie Pécresse (LR) 45.5 சதவீதம்; Julien Bayou (பசுமைக் கட்சி) 32.5; Jordan Bardella (RN) 11.5; Laurent Saint-Martin (LRM) 10.5 சதவீதம்.

நோர்மான்டி (ருவான்): Hervé Morin (LR) 44.2 சதவீதம்; Mélanie Boulanger (PS) 25.9; Nicolas Bay (RN) 20.1; Laurent Bonnaterre (LREM) 9.8 சதவீதம்.

New Aquitaine (போர்த்தோ): Alain Rousset (PS) 39.3 சதவீதம்; Edwige Diaz (RN) 18.9; Nicolas Thierry (பசுமைக் கட்சி) மற்றும் Nicolas Florian (LR) இருவருமே 14.3 சதவீதம்; Geneviève Darrieussecq (LRM) 13.2.

Occitania (துலூஸ்): Carole Delga (PS) 57.8; Jean-Paul Garraud (RN) 23.9; Aurélien Pradié (LR) 18.3.

Provence-Alps-Riviera (மார்சைய்): Renaud Muselier (LR) 57.3 சதவீதம்; Thierry Mariani (RN) 42.7 சதவீதம்.

Untitled (France_regions.png)

வெகுஜன அதிருப்திக்கு மத்தியில், 2022 ஏப்ரல்-மே ஜனாதிபதி தேர்தலில் யாரை ஜனாதிபதியாக போட்டியிட வைப்பது என்பதை முடிவு செய்ய, அதற்கு முந்தைய கடைசி தேர்தலான இந்த தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள ஆளும் வர்க்கம் தெளிவாக உத்தேசித்துள்ளது. 2017 தேர்தல்களின் இரண்டாவது சுற்றில் அவரை எதிர்த்து நின்ற நவ-பாசிச மரின் லு பென்னை போலவே மக்ரோனும் மக்களிடையே ஆழமாக செல்வாக்கிழந்துள்ளார். மரீன் லு பென்னுக்கு ஏப்ரல் கருத்துக்கணிப்பில் வெறும் 34 சதவீத ஒப்புதல் விகிதம் மட்டுமே கிடைத்தது. 2022 இல் பிரெஞ்சு மக்களில் 80 சதவீதத்தினர் மக்ரோன் மற்றும் லு பென்னுக்கு இடையிலான மறுபோட்டியை எதிர்க்கக்கூடும் என்று பெப்ரவரி கருத்துக்கணிப்பு ஒன்று கண்டறிந்தது, ஆனால் இன்று தேர்தல் நடத்தப்பட்டால் இது தான் ஏற்படும் என்பதையே கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

இதற்கும் கூடுதலாக, ஓர் அனுமானப் போட்டியில் மக்ரோன் லு பென்னை விட 52 க்கு 48 சதவிகிதம் என்ற விகிதத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளார் என்கின்ற நிலையில், அடுத்தாண்டு ஒரு நவ-பாசிசவாதி பிரான்சின் ஜனாதிபதி ஆகலாம் என்பதற்கும் அனுமானமான சாத்தியக்கூறு உள்ளது.

பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவுகள் மக்ரோனும் அதிவலதும் வாதிடும் பிற்போக்குக் கொள்கைகளுக்கு இன்னும் சுவையான முன்னணியை கண்டுபிடிப்பதில் தெளிவாக அக்கறை கொண்டுள்ளனர். எனவே, முதல் திட்டமிடப்பட்ட நேற்று இரவு வெளியிடப்பட்ட இரண்டு நிமிடங்களுக்குப் பின்னர், எல்ஆர் வேட்பாளர் சேவியர் பெர்த்ரோன் ஒரு ஜனாதிபதி ஏலத்தை தயார் செய்து ஒரு வெற்றி உரையை நிகழ்த்தினார்.

வலதுசாரி ஜனாதிபதிகளான ஜாக் சிராக் மற்றும் நிக்கோலா சார்க்கோசியின் கீழ் சுகாதார அமைச்சராகவும் பின்னர் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த பெர்த்ரோன், நிதிய பிரபுத்துவத்தின் ஒரு பிற்போக்குத்தனமான வேட்பாளர் ஆவார். இருப்பினும் தன்னை ஓர் உணர்ச்சிகரமான மக்கள் வேட்பாளராக காட்டிக் கொள்வதற்கான அவரது பகட்டாரவார பேச்சில், கோலிச இயக்கத்தின் வாய்சவடால், சமூக சமத்துவமின்மைக்கு எதிரான "மஞ்சள் சீருடை" எதிர்ப்புக்கள் மற்றும் மக்ரோனுக்குச் சட்டம்-ஒழுங்கு முறையீடுகள் ஆகியவை கலந்திருந்தன.

"பிரான்சின் ஏதோவொரு வித கருத்துக்கு விசுவாசமாக இருக்கும் வடக்கு பிரான்சின் மண்ணில், இங்கே தேசிய பேரணி கட்சி இரண்டு முறை தடுக்கப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்யும்," என்று கூறிய அவர், "அமைதியாக இருக்கும், நீங்கள், இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் நீங்கள், தொழிலாளர்கள்" "உழைப்பு மீண்டும் உயிர்வாழும், வேலை மூலமாக கண்ணியத்துடன் வாழ முடியும்" என்பதை உறுதிப்படுத்த சூளுரைக்கிறீர்கள். “நடுத்தர வர்க்கங்களும், தொழிலாள வர்க்கத்தின் கீழ்மட்ட சமூக அடுக்குகளும் தான் என் முன்னுரிமைகள்,” என்றார்.

அதே நேரத்தில் முஸ்லீம்களின் ஜனநாயக உரிமைகளை இலக்கில் வைத்த நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை வன்முறையாக ஒடுக்குவதை நியாய மக்ரோன் பயன்படுத்தி வாய்சவடால்களைப் பயன்படுத்தி, பெர்த்ரோன் "ஒழுங்கு மற்றும் அதிகார மதிப்பை மீண்டும் ஸ்தாபிக்கவும்" மற்றும் "பிரான்ஸ் மீதான வெறுப்புக்கு" எதிராக போராடவும் சூளுரைத்தார்.

இந்த தேர்தல், "உள்ளாட்சி ஜனநாயகத்தின் ஆழமான நெருக்கடியைப்" பிரதிபலிக்கிறது என்று கூறிய லு பென், "வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணிக்குமாறு அனைத்தும் அவர்களை அழுத்தமளித்த போதினும், வாக்களிக்க சென்ற வாக்காளர்களுக்கு" நன்றி தெரிவித்தார். "நமது சக குடிமக்களை அரசியலில் மீண்டும் ஆர்வத்திற்கு கொண்டு வருவதற்காக, ஒவ்வொன்றும் விவாதிக்கப்பட வேண்டும்" என்று கூறி, "மஞ்சள் சீருடையாளர்களால்" கொண்டு வரப்பட்ட மக்கள்-நடத்தும் வாக்கெடுப்பு (Citizen-Initiated Referendums – RIC) என்ற ஒரு சட்ட முன்முயற்சியை நிறைவேற்ற அப்பெண்மணி முன்மொழிந்தார். அவரது கட்சி "பிரான்சுக்கு தேவையான அரசு மாற்றமாக" இருக்கும் என்று அறிவித்து முடித்தார்.

முன்னாள் சோசலிஸ்ட் கட்சி அமைச்சரும் "இடது வெகுஜனவாத" அடிபணியா பிரான்ஸ் கட்சியின் (Unsubmissive France - LFI) தலைவருமான ஜோன்-லூக் மெலோன்சோனும் அந்த தேர்தல்களைக் குறித்து பேசினார், நவ-பாசிசவாத மரியானிக்கு எதிராக பிற்போக்குத்தனமான முஸெலியேக்கு வாக்களித்ததற்காக அவரது மார்சைய் வாக்காளர்களை அவர் பாராட்டினார்.

"பிரெஞ்சு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அமைப்புகளிலிருந்து பெரும்பாலான பிரெஞ்சு மக்களைப் பிரிக்கும் இந்த வாக்குப் புறக்கணிப்பு பெரும்பிளவு" குறித்து சுட்டிக் காட்டிய அவர், குறிப்பாக “மற்றவர்களை விட அதிகமாக, இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களே" வாக்களிக்காமல் புறக்கணித்ததைக் குறிப்பிட்டதுடன், “அவர்கள் எதை அரசியல் நாடகமாக கருதுகிறார்களோ அதற்கு எதிராக முதுகைத் திருப்பிக் கொண்டதாக" அவர் குறிப்பிடுகிறார். அரசு எந்திரத்திற்கான மக்கள் ஆதரவை மீட்டமைக்கும் சட்ட முன்முயற்சிகளாக "வெற்று வாக்குகளை அங்கீகரித்தல், குடிமக்கள் தொடங்கும் வாக்கெடுப்புகள் மற்றும் அதிகாரிகளை திரும்பப் பெறுதவற்கான வாக்கெடுப்புகளுக்கான உரிமை" ஆகியவற்றை அவர் முன்மொழிந்தார்.

2017 ஜனாதிபதித் தேர்தல்களில் இரண்டு பிற்போக்குத்தனமான வேட்பாளர்களுக்கு இடையே கேடு விளைவிக்கும் வகையில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்த அவரது மார்சைய் வாக்காளர்கள் "எவ்வாறிருப்பினும் தேசிய முன்னணியைத் தோற்கடிப்பதற்காக வாக்களித்த" "முற்றிலும் வலிநிறைந்த அரசியல் முயற்சியை" மெலோன்சோன் எரிச்சலூட்டும் விதத்தில் பாராட்டினார்.

முதலாளித்துவ அரசியல்வாதிகளும் ஒரு ஜனநாயக நெருக்கடியின் பண்டிதர்களும் துணைக்கிழுக்கும் சட்ட சீர்திருத்தங்களுக்கான அழைப்புகள் மற்றும் மக்ரோனை அதிகாரத்தில் நிறுத்தும் விதத்தில் தீமை குறைந்தவருக்கு வாக்கிடும் முறை ஆகியவற்றுக்கான அழைப்புகளை விட மிகவும் மேலோட்டமான மற்றும் பிற்போக்குத்தனமானவை வேறெதுவும் இல்லை. பெரும்பாலான மக்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்ததற்கான அரசியல் வேர்கள் மற்றும் உத்தியோகப்பூர்வ அரசியல் மீதான பிரமை உடைந்திருப்பதைக் குறித்த எந்த விபரமும் தேர்தல்கள் பற்றிய உத்தியோகபூர்வ பகுப்பாய்வுகளில் சுத்தமாக இல்லை.

60 சதவீத வாக்காளர்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்ததற்கு "அரசியல் கட்சிகளை" குற்றஞ்சாட்டியதுடன், “வேட்பாளர்களால் வாக்காளர்களுக்குத் தேர்தல்களில் ஆர்வத்தைக் கொண்டு வர முடியவில்லை,” என்று Le Figaro இன் ஒடோக்ஸ் கருத்துக்கணிப்பு கண்டறிந்தது குறிப்பிடத்தக்கதாகும். சுமார் 37 சதவிகிதத்தினர் மக்ரோனை குற்றஞ்சாட்டினர், 20 சதவீதத்தினர் "தேர்தல்கள் பற்றி பிரெஞ்சு மக்களுக்கு போதுமான தகவல்களை வழங்காத அரசாங்கத்தை" குற்றஞ்சாட்டினர்.

இறுதி ஆய்வில், பாரியளவில் வாக்கெடுப்பு புறக்கணிக்கப்பட்டிருப்பது பிரான்சுக்குள் ஏதோவொரு சட்ட சீர்திருத்தத்தைக் கொண்டு தீர்க்கப்படக்கூடிய தேசிய நிலைமைகளில் இருந்து அல்ல, மாறாக முதலாளித்துவ அமைப்புமுறையின் சர்வதேச நெருக்கடியிலிருந்து வருகிறது.

கோவிட்-19 வைரஸிற்கு எதிரான ஒரு விஞ்ஞானப்பூர்வ போராட்டத்திற்கான மருத்துவ நிபுணர்களின் அழைப்புகளை ஆளும் உயரடுக்குகள் நிராகரித்ததால், பிரான்சில் 110,000 இக்கும் அதிகமானமக்களும் ஐரோப்பாவில் 1.1 மில்லியனும் பேரும் இறந்துள்ளனர் என்ற உண்மை மீது அந்த குறுகிய கால பிராந்திய தேர்தல் பிரச்சாரத்தில் துளியும் பேசப்படவில்லை. அதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) 2 ட்ரில்லியன் யூரோக்களுக்கும் அதிகமான தொகையை வங்கி மற்றும் பெருநிறுவன பிணையெடுப்புகளுக்கு வழங்கியது, அது ஐரோப்பிய ஒன்றிய பில்லியனர்களின் நிகர மதிப்பை 1 ட்ரில்லியன் யூரோவுக்கும் அதிகமாக உயர்த்தியது. ஓய்வூதியங்களில் கூடுதல் வெட்டுக்கள் மற்றும் வேலைவாய்ப்பின்மை காப்பீடுகளில் வெட்டுக்கள் மூலமாக பணக்காரர்களுக்கு கையளிப்பதற்காக அவற்றை உடனடியாக மேற்கொள்ளலாமா வேண்டாமா என்பதை மக்ரோன் இப்போது விவாதித்து வருகிறார்.

புறநிலைரீதியாக இந்த முன்வரலாறு தொழிலாளர்களை நிதிய பிரபுத்துவத்திலிருந்தும் மற்றும் அதன் அரசு இயந்திரத்திலிருந்தும் பிரிக்கும் ஓர் இணைக்கவியலா வர்க்க பிளவை எடுத்துக்காட்டுகிறது. அனைத்திற்கும் மேலாக, பல தசாப்த கால ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளால் உந்தப்பட்டுள்ள தொழிலாள வர்க்க கோபத்திற்கு அஞ்சி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இரண்டிலும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மற்றும் பணியில் உள்ள இராணுவ அதிகாரிகள் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடங்க அச்சுறுத்தி உள்ளனர்.

பிரான்சின் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் ஒரு நவ-பாசிச வழித்தோன்றல் பிரான்சை ஆள அடுத்தாண்டு தேர்தெடுக்கப்படும் நம்பகமான வாய்ப்பிருக்கிறது என்ற உண்மை முதலாளித்துவ வர்க்கம் பின்பற்றும் சர்வாதிகார போக்கிற்கு ஓர் எச்சரிக்கையாகும். எவ்வாறெனினும் அதிவலதை தடுப்பதற்குத் தீமை குறைந்தவருக்கு வாக்களிப்பது பிரெஞ்சு ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் என்று கூறுபவர்களுக்கு மக்ரோனின் ஜனாதிபதி ஆட்சி ஒரு மறுக்க முடியாத மறுப்பாகும். சமூக போராட்டங்கள் மற்றும் பாரிய வேலைநிறுத்தங்கள் மீது அவரது பொலிஸைக் கட்டவிழ்த்து விட்ட போது, மக்ரோன், ஒரு போர் குற்றவாளியும் தண்டிக்கப்பட்ட தேசதுரோகியுமான விச்சி தலைவர் மார்ஷல் பிலிப் பெத்தனை ஒரு "மாவீரர்" என்று பாராட்டினார்.

அரசியல் ஸ்தாபகம் சீர்திருத்தத்திற்கும் மக்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவில்லை என்பதற்கு நேற்றைய தேர்தல் மற்றொரு எச்சரிக்கையாகும். இந்த தேர்தல்கள் தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் அதிமுக்கிய கேள்விகள் எதையும் தீர்க்கப் போவதில்லை. இந்த பெருந்தொற்று, போர் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான, மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம், சோசலிசத்திற்கான மற்றும் அரசு அதிகாரத்திற்கான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தைச் சுயாதீனமாக மற்றும் சர்வதேச அளவில் அணித்திரட்டும் வடிவில் மட்டுமே நடத்தப்பட முடியும்.

Loading