பிரெஞ்சு பிராந்திய தேர்தல்களில் வாக்களிக்காதோர் எண்ணிக்கை அரசியல் ஸ்தாபனத்தை அம்பலப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பிராந்திய தேர்தல்களின் முதல் சுற்றின் முடிவுகளுக்குப் பின்னர், அடுத்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாவது சுற்றுக்கான கூட்டணிகளைச் செய்ய பட்டியல்கள் செவ்வாய்க்கிழமை வரை இருந்தன. முதல் சுற்றில் 66 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை. உழைக்கும் மக்களால் பரவலாக நிராகரிக்கப்படுகின்ற “சமுக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம்” என்ற குற்றவியல் கொள்கையினை தொற்றுநோய் காலம் முழுவதும் பின்பற்றப்பட்டதும், மற்றும் முழு அரசியல் ஸ்தாபகத்தின் சர்வாதிகார மற்றும் சிக்கனக் கொள்கைகள் தேர்தல்களில் வெளிப்பட்டுள்ளது.

ஜூன் 25, 2021, வெள்ளிக்கிழமை, வடக்கு பிரான்சின் ஹெனன்-போமொண்டில் நடந்த பிராந்திய தேர்தல்களுக்கான வாக்குச் சாவடி [நன்றி: AP புகைப்படம் / மைக்கேல் ஸ்பிங்லர்]

சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இடது மற்றும் ஐரோப்பாவின் சூழலியல்-பசுமைக் கட்சிகள்,Bourgogne-Franche-Comté, Centre Val de Loire, Pays de la Loire ஆகிய பகுதிகளில் ஒரு கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது. Pays de la Loire இல் இரண்டாவது சுற்றில் மீதமுள்ள நான்கு தனித்தனி பட்டியல்களை தடுக்கவில்லை: இமானுவல் மக்ரோனின் குடியரசை நோக்கி அணிவகுப்போம் (LREM) கட்சியின் François de Rugy, 11.97 சதவீத வாக்குகளுடன், வெகு தொலைவில் இருந்தார். வலது தேசிய பேரணி (RN) வேட்பாளர், ஹெர்வ் ஜுவின் (12.53 சதவீதம்). ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றில் 34.29 சதவீத வாக்குகளைப் பெற்று பெருமளவில் முன்னிலை பெற்ற LR இன் கிறிஸ்டெல்லே மோரன்காய்ஸ் (Christelle Morançais) க்கு எதிராக தங்கள் பட்டியலைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

பிரெஞ்சு வாக்களிப்பு விதிகளின் கீழ், குறைந்தது 10 சதவிகித வாக்குகளைப் பெற்ற கட்சிகள் இரண்டாவது சுற்றில் நிற்கலாம், மேலும் குறைந்தது 5 சதவீத வாக்குகளுடன் பட்டியல்களில் இணையலாம்.

Auvergne-Rhône-Alpes இல் முதல் சுற்றில், சூழலியல் கட்சியின் ஃபாபியான் க்ரூபர்ட் (Fabienne Grébert) (14.4 சதவீதம்), சோசலிஸ்ட் கட்சியின் (PS) நஜத் வல்லாட்-பெல்காசெம் (Najat Vallaud-Belkacem0 PS) (11.4 சதவீதம்) மற்றும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) செசில் குக்கியர்மன் (Cécile Cukierman) (5.5சதவீதம்) பெற்றனர். 48.8 சதவிகிதத்தைப் பெற்ற LR தலைவர் லோரன்ட் வாக்கீஸ் (Laurent Wauquiez) ஐ பதவி நீக்கம் செய்ய முயற்சிப்பதற்காக ஒரு கூட்டுப் பட்டியலை செசில் குக்கியர்மன் (PS) திங்களன்று அறிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை 41.39 சதவீத வாக்குகளுடன், Hauts de France பிராந்தியத்தின் வெளியேறும் தலைவர் சேவியர் பெர்ட்ராண்ட் (Xavier Bertrand - LR) தனது RN போட்டியாளரான Sébastien Chenu (24.37 சதவீதம்) வை கணிசமாக வென்றுள்ளார். 9.13 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறத் தவறிய மக்ரோனின் LREM உடனான எந்தவொரு கூட்டணியையும் Bertrand நிராகரித்தார். ஓய்வூதியங்களுக்கான மாநில செயலாளர், LREM பட்டியலுக்குத் தலைமை தாங்கிய Laurent Pietraszewski, இப்போது Xavier Bertrand ற்கு வாக்களிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

பாரிஸின் தலைநகரை உள்ளடக்கிய Île-de-France பகுதியில், பசுமைவாதிகள், சோசலிஸ்ட் மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சிகள் ஒன்றிணைகின்றன. முதல் சுற்றில் பசுமைக் கட்சியின் Julien Bayou 12.95 சதவிகித வாக்குகளைப் பெற்று, PS வேட்பாளர் Audrey Pulvar (11.07 சதவிகிதம்), LFI யின் Clémentine Autain (10.24 சதவிகிதம்) இருவருக்கும் எதிராக வென்றார். இரண்டாவது சுற்றில் அவர் வெளியேறும் LR தலைவர் Valérie Pécresse ஐ எதிர்கொள்வார்.

PACA பிராந்தியத்தில், சுற்றுச்சூழல் வேட்பாளர் Jean-Laurent Félizia, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விலக மறுத்ததைத் தொடர்ந்து, இரண்டாவது சுற்றுக்கான தனது பட்டியலைத் திரும்பப் பெற்றுள்ளதுடன் LR தலைவர் Renaud Muselier ஆதரிப்பதாக அவர் அறிவித்துள்ளார். தேசிய பேரணி (RN) வேட்பாளர் Thierry Mariani ஐ முசெலியர் எதிர்கொள்வார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Brittany, Normandy, New Aquitaine, Occitanie, Corsica மற்றும் Grand Est போன்ற இடங்களில் சோசலிஸ்ட் கட்சி, பசுமைவாதிகள் மற்றும் LFI போன்ற அவர்களின் போலி இடது சுற்றுவட்டத்தை தங்கள் பட்டியல்களில் ஒன்றிணைக்கத் தவறிவிட்டன.

இந்த தேர்தல் சூழ்ச்சிகள் மூலம், ஸ்தாபகக் கட்சிகள் FN க்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள முயற்சிக்கின்றன, அவை தொழிலாள வர்க்கத்திற்காக எதையும் வழங்கவில்லை. அவர்களுக்கு எந்தவிதமான சட்டபூர்வமான தன்மையும் இருக்காது, ஏனென்றால் மக்கள் எதிர்ப்பு இருந்தபோதிலும், இந்த கட்சிகள் சிக்கனக் கொள்கைகளை வழிநடத்துகின்றன, மேலும் மக்ரோன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைக்கு பின்னால் அணிவகுத்து நிற்கின்றன. இக்கொள்கை தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து பிரான்சில் 111,000 இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. இதற்கிடையில், சர்வதேச மற்றும் பிரெஞ்சு நிதி பிரபுத்துவம் டிரில்லியன் கணக்கான யூரோக்களை தன்வசம் குவித்துள்ளது.

முதல் சுற்று வாக்களிப்பானது ஆளும் உயரடுக்கின் பரவலான மதிப்பிழப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இது ஊடகங்களையும் அரசியல் கட்சிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எதிர்ப்பின் ஒரு சக்திவாய்ந்த பரந்துபட்ட இயக்கம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் எதிராக உருவாகிறது. புதன்கிழமை தனது அமைச்சரவைக் கூட்டத்தில் மக்ரோன் எச்சரித்தார், “வாக்களிக்காமல் புறக்கணிப்பது என்பது ஒரு ஜனநாயக எச்சரிக்கையாகும், அதற்கு நாம் பதிலளிக்க வேண்டும்.”

பிரான்ஸ் தொலைக்காட்சி Ipsos/Sopra Stéria நடத்திய ஒரு ஆய்வில், நடந்த முதற்சுற்றில்18–24 வயதுடையவர்களில் 87 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை, 25–34 வயதுடையவர்களில் 83 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. அடுத்த வயதினரில், 35-49 வயதுடையவர்களில், வாக்களிக்காதோர் 71 சதவீதமாக இருந்தது, இதேபோல் 50-59 வயதுடையவர்களில் 68 சதவிகிதத்தினர் வாக்களிக்கவில்லை.

BFM.டி.வி செய்தியானது “பிரான்ஸ் தொலைக்காட்சிக்கான இப்சோஸ் / சோப்ரா ஸ்டெரியா கணக்கெடுப்பின்படி, 75 சதவீத ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாக்களிக்கவில்லை, ஆனால் 69 சதவிகித உயர் பிரிவினர் (71 சதவிகித கைவினைஞர்கள் மற்றும் வர்த்தகர்கள், மற்றும் 69 சதவீதம் நிர்வாகிகள்) வாக்களித்தனர். TF1 மற்றும் LCI க்கான மற்றொரு Ifop-Fiducial கணக்கெடுப்பின்படி, இடைநிலை தொழில்களில்73 சதவீதம் வாக்களிக்கவில்லை.”

இந்த ஆய்வுகள், தொழிலாளர்களும் இளைஞர்களும் அரசியல் ஸ்தாபகத்தை நிராகரிப்பதை வெளிப்படுத்துகின்றது, மேலும் நடுத்தர வர்க்கத்தின் சமூக அந்தஸ்தானது நிதிய பிரபுத்துவத்தால் செயற்படுத்தப்பட்ட கொள்கைகளால் தாக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. பொலிஸ் அடக்குமுறையைப் பயன்படுத்தி, மக்ரோன் 'மஞ்சள் சீருடை' போராட்ட இயக்கத்தை அடக்க முடிந்தது, ஆனால் இந்த இயக்கத்தைத் தூண்டிய சமூக அதிருப்தி வேரூன்றி தீவிரமடைந்து வருகிறது.

தேர்தல்களில் RN வெற்றியாளராக இருப்பார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கையில், முதல் சுற்றில் தங்களை அரசியல் ஸ்தாபகத்திலிருந்து சுயாதீனமாக காட்டிக் கொள்ளும் தீவிர வலதுசாரிகளின் தோல்வியைக் காட்டியது. மரின் லு பென் இந்தத் தேர்தலை “ஒரு குடிமைப் பேரழிவு” என அழைத்தார், இது நாட்டின் தேர்தல் யதார்த்தத்தை பெருமளவில் சிதைத்துவிட்டது, மேலும் “தற்போதுள்ள அரசியல் சக்திகளின் தவறான கண்ணோட்டத்தை அளிக்கிறது.” வாக்களிக்க "ஐந்து நிமிடங்கள்" கூட தேவையில்லை என, தனது வாக்காளர்களை அணிதிரட்டுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

தீவிர வலதுசாரி அதிகாரிகளால், பிரான்சில் அண்மையில் இராணுவ சதித்திட்டத்தின் அச்சுறுத்தலுக்கு பரந்த மக்கள ஆதரவு இருப்பதாக ஊடகங்கள் சித்தரிக்க முயன்றன. மரின் லு பென் தன்னுடைய ஜனாதிபதி பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு அதிகாரிகளை அழைத்தார். ஆயினும் பத்து லு பென் வாக்காளர்களில் ஏழு பேர் (71 சதவீதம்) பின்னர் வாக்களிப்பிலிருந்து விலகினர்.

லு பென், மற்ற அரசியல் ஸ்தாபகங்களைப் போலவே, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஆளும் வர்க்கத்தால் பின்பற்றப்படும் கொடிய சுகாதாரக் கொள்கை மற்றும் சமூகத் தாக்குதல்களுக்கு உடந்தையாக உள்ளது. மக்ரோன், சோசலிஸ்ட் கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஆகியோரின் வலதுசாரிக் கொள்கைகளால் தூண்டப்பட்ட கோபத்தை RNசுறண்டிக்கொள்கிறது ஆனால் அதன் வளர்ச்சி முழு ஆளும் வர்க்கமானது வலதிற்கான பாரிய நகர்வின் ஒரு பகுதியாகும். இது, லு பென்னின் தேர்தல் முடிவுகளைப் பொருட்படுத்தாமல், பாசிச, பேரினவாத கொள்கைகளை அதன் அரசியல் வாழ்வின் மையத்தில் வைத்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வெறுக்கப்பட்ட, ஆளும் உயரடுக்கானது அதிகாரத்தில் நீடிக்கிறதென்றால் அதை அகற்ற தொழிலாள வர்க்கத்தில் ஒரு முன்னோக்கு மற்றும் தலைமை இல்லாததே காரணமாகும். பிராந்திய தேர்தல்கள், ஜோன்-லூக் மெலோன்சோன் (LFI), மற்றும் பிற போலி-இடதுகளின் திவால்நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அவை மக்ரோனுக்கு மாற்றீடு அல்ல. Ifop-Fiducial கணக்கெடுப்பின்படி, முக்கால்வாசி மெலோன்சோனின் வாக்காளர்கள் வாக்களிப்பதைத் தவிர்த்தனர். உண்மையில், மெலோன்சோனுடன் இணைக்கப்பட்ட தொழிற்சங்க அதிகாரத்துவம் மக்ரோனின் சுகாதாரக் கொள்கையை செயல்படுத்துவதில் முன்னணியில் உள்ளன.

ஐரோப்பாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களிடையே ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் அவசியத்தை இது நிரூபிக்கிறது, அரசியல் அதிகாரத்தை தனது கைகளில் எடுத்துக்கொள்வதற்கான ஒரு நனவான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒன்றிணைக்க வேண்டும்.

Loading