மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பிரிட்டிஷ் ராப் இசை பாடகர் ஸ்லோத்தாயின் இரண்டாவது பாடல் தொகுப்பான தைரன் (2021) அவரது முதல் பாடல் தொகுப்பான Nothing Great about Britain (2019) க்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலம் ஸ்லோத்தாயின் பிரபலமான மற்றும் விமர்சன வெற்றியையும், அத்துடன் ராப்பரின் பொது நடத்தையால் தூண்டப்பட்ட பின்னடைவையும் கண்டது. இன்னும் குறிப்பிடத்தக்க வகையில், இந்த காலம் உலகளாவிய தொற்றுநோயின் வெடிப்பு மற்றும் தீவிரத்தையும், அது தொடர்ந்து உயிர்களை பலியெடுத்ததையும் கண்டது.
தைரனில் (இது ஸ்லோத்தாயின் உண்மையான முதல் பெயர்), ராப்பர் தனிப்பட்ட வளர்ச்சியை நோக்கிய ஒரு படியாக தனது சொந்த பலங்களையும் பலவீனங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வதற்காக சமூக நிகழ்வுகளுடன் சிறிதளவே ஈடுபாட்டை காட்டுகின்றார். இந்த பாடல் தொகுப்பு மூலம், ஸ்லோத்தாய் மற்ற விஷயங்களுக்குச் செல்வதற்கு முன்பு, அவர் கடந்து செல்ல வேண்டிய ஒரு பிரதிபலிப்பு கட்டத்தை எடுத்துக்காட்டலாம்.
ஸ்லோத்தாய் 1994 ஆம் ஆண்டில் லண்டனுக்கு வடமேற்கே 60 மைல் தொலைவில் உள்ள ஒரு பயணிகள் நகரமான நோர்தாம்ப்டனில் உள்ள பார்படோஸ் பாரம்பரியத்தை கொண்ட ஒரு பருவவயது தாய்க்கு பிறந்தார். அவரது தாயார் 2000 ஆம் ஆண்டில் மற்றொரு மகனான மைக்கேலை பெற்றெடுத்தார். அவர் 2001 இல் காலமானார். இந்த சோகம் ஸ்லோத்தாயை கடுமையாக பாதித்தது. கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர், இசையில் கவனம் செலுத்துவதற்கு முன்பு அவர் கட்டுமானத்திலும் பின்னர் சில்லறை வணிகத்திலும் பணியாற்றினார்.
இரண்டு இசைதட்டுக்களை வெளியிட்ட பின்னர், ராப்பர் உத்தியோகபூர்வமாக Nothing Great about Britain உடன் தன்னை வெளிப்படுத்தினார். இது நாடாளாவிய பாடல் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. தலைப்புப் பாடல் அரச குடும்பத்தின் உறுப்பினர்களின் வாழ்க்கையை தொழிலாள வர்க்க இளைஞர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிடுகிறது. சமத்துவமின்மை மற்றும் பாசாங்குத்தனமான தேசியவாதத்தை மறைமுகமாக விமர்சிக்கிறது. பாடல் தொகுப்பின் வரிகள் பெரும்பாலும் ஊடுருவக்கூடியதாக இருக்காவிட்டாலும் பெரிதும் உணர்மையுள்ளதாக இருக்கின்றது. ஸ்லோத்தாயின் குழந்தைப் பருவத்தின் நெருக்கடியான சூழ்நிலைகளை விவரிக்கும் “Northampton’s Child” என்ற பாடல் மிகவும் தாக்கமுள்ளதாக இருக்கின்றது.
பாடல் தொகுப்பு வெளியான ஒன்பது மாதங்களுக்குப் பின்னர், ஸ்லோத்தாய் NME விருது வழங்கப்படுவதற்காக அழைக்கப்பட்டார் (இது 1950களில் New Musical Express பத்திரிகை நிறுவிய ஆண்டு நிகழ்வு). நகைச்சுவை நடிகர் காத்ரின் ரியான் அவருக்கு Hero of the Year விருதை வழங்கியபோது, அவர் அவரிடம் மோசமான கருத்துக்களை தெரிவித்து பார்வையாளர்களிடமிருந்து இகழ்ச்சிக்குரல்களை தூண்டினார். ஸ்லோத்தாய் மேடையில் இருந்து கூட்டத்திற்குள் குதித்து, வளாகத்திலிருந்து விரைவாக பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் டுவிட்டரில் ரியானிடம் மன்னிப்பு கோரியதோடு, தனது விருதை தனக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் ஸ்லோதாயின் முதல் வெளியீடான தைரன் இரண்டு தனித்துவமான பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பாதியில் ராப்பரின் பழக்கமான உயர் விசை, ஆக்கிரமிப்பு ஒலி இடம்பெறுகிறது. இரண்டாவது பாதி ஒப்பீட்டளவில் சாந்தமான மற்றும் உள்ளுணர்வுடன் உள்ளது. ஸ்லோத்தாயின் சுய-தொந்தரவு சில ஆத்மா தேடலைத் தூண்டியது என்று ஒருவர் கருதலாம். உண்மையில், NME விருதுகள் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் பல சிந்தனைமிக்க பாடல்களும், பல ஆக்கிரோஷமான பாடல்கள் அதற்கு பின்னரும் பதிவு செய்யப்பட்டன.
முதல் பாடலான “45 Smoke” ஒரு உராயும் ஒலி மாதிரியுடன் (abrasive sample) தொடங்குகிறது. பின்னர் அதிரும் High hat இசைக்கருவியின் சத்தங்கள் மற்றும் Trap இசையின் சிறப்பியல்பான அதி-குறைந்த சுருதியுடனான இசை தொடர்கின்றது. ஸ்லோத்தாயின் சற்றே உயர்ந்த குரல் மற்றும் தொழிலாள வர்க்க ஊடுருவல் இங்கிலாந்து ராப்பரான டிஸ்ஸி ராஸ்கலை (Dizzee Rascal) நினைவுபடுத்துகிறது (ஸ்லோத்தாய் இதனை ஒப்புக்கொண்டுள்ளார்). “நான் round shottaz ஆக [அதாவது, போதைப்பொருள் விற்பனையாளர்கள்]’ பொலிஸாருக்கு விரும்பாதவராக, மதுவிற்கு அடிமையானவராக வளர்ந்தேன்” என்று அவர் துப்புகிறார். ஆனால் அவரது முந்தைய பாடல் தொகுப்பின் அவதானிக்க்கூடிய அம்சங்களைத் தொடர்வதற்கு பதிலாக, ஸ்லோத்தாய் பெருமை பேசுவதுடன், அச்சுறுத்துகிறார். மற்றும் பணக்காரர் ஆவதற்கு அச்சுறுத்தும் கடுமையானவர் என்று காட்டிக்கொள்கிறார். இவை பழைய மற்றும் ஆரோக்கியமற்ற (மற்றும் குழப்பம்மிக்க) “கும்பல்களுக்குரிய” அடையாளங்களாகும்.
இரத்து செய்யப்பட்ட கலாச்சாரம் என்று அழைக்கப்படுவது "Cancelled" என்ற பாடலில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின்றது. ஸ்லோத்தாய் இப்பாடலின் பெரும்பகுதியை தனது பாட்டிற்கு நேரடியாக பொருந்தக்கூடிய சக பாடகரான MC Skepta இன் வரிகளில் இருந்து எடுத்துக்கொள்கின்றார். இருவரும் தங்கள் தற்பெருமை மற்றும் ஆணவ பிரதிபலிப்பினால் அதற்கான ஒரு கூர்மையான விமர்சனத்திற்கான ஒரு சாத்தியத்தை பறிக்கிறார்கள்.
ஸ்லோத்தாயின் ADHD (அதிதுடுக்குத்தன கோளாறு நோய்) இனால் தூண்டப்பட்ட தன்மை “Mazza” பாட்டில் நீண்ட வேகத்தில் வருகிறது. அதனுடன் கடுமையான, ஸ்திரமற்ற ஓர்கன் கருவி இசை உள்ளது. ஆனால் பாடல் வரிகள் அதிக கும்பல்களுக்குரிய தற்பெருமையிலிருந்து வெகு தொலைவில் இல்லை. அந்த இடத்தை ஒரு கொலைக் காட்சி போல மாற்றவும். / நான் நகர்வுகள் செய்யும்போது, நான் ஒரு பணக்காரன்.” இதில் ஸ்லோத்தாயின் வன்முறை மற்றும் பேராசை கொண்டாட்டங்கள் அதிகமானவை உள்ளன. இவை பின்தங்கிய தன்மையை மட்டுமே ஊக்குவிக்கின்றன. இந்த வன்முறையை ஊக்குவிக்கும் சமூக நிலைமைகளை ஆராய்வதற்கான முயற்சியில்லாமல், அத்தகைய வரிகளைக் கேட்பவருக்கு இது சாதகமான எதையும் வழங்காது.
வேகம் குறைந்த மற்றும் தத்துவார்த்த பாடலான “Play with Fire” தொகுப்பின் இரண்டாம் பாதிக்கான ஒரு பாலத்தை உருவாக்குகிறது. "உங்கள் மெத்தை உங்களை விழுங்க விடாதீர்கள், அதில் ஆழ்ந்து படுத்துக்கொண்டு, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் அல்லது என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்" என்று ஸ்லோத்தாய் அறிவுறுத்துகிறார். அவர் தனது உள் நிலையைப் பற்றிய பின்வரும் பார்வையையும் அளிக்கிறார்: "என் இதயமும் மனமும் போரில் உள்ளன, என் ஆத்மா இங்கே நடுவில் பன்றிக்குட்டியுடன் விளையாடுகிறது."
பாடல் தொகுப்பின் இரண்டாம் பாதி குறிப்பிடத்தக்க வகையில் உற்சாகமானது. இது Trap மற்றும் Grime இசைக்கு பதிலாக Soul மற்றும் Rhythm Blues இசைக்கு முன்னுரிமை கொடுக்கின்றது. மின்னியல் கருவிகளுக்கு பதிலாக, இது கித்தார், பியானோ மற்றும் பாடலை உள்ளடக்கியுள்ளது. அவற்றின் வரம்புகள் இருந்தபோதிலும், ஸ்லோத்தாயின் கடும் பையன் தோரணையை விட அவரது சுய பகுப்பாய்வு மற்றும் உணர்ச்சிகளை நேர்மையாக வெளிப்படுத்தவது மிகவும் சுவாரஸ்யமான மற்றும் தொடர்புபடுத்த எளிதானவையாக இருக்கின்றது.
“I Tried” பாடலை ஒரு வேகமான குரலில் பாடும்போது திடுக்கிட செய்கிறது. “நான் இறக்க முயற்சித்தேன். / நான் என் உயிரை எடுக்க முயற்சித்தேன்." எனப் பாடுகின்றார். இவ்வாறு விபரிப்பது கலந்துரையாடலுக்கான விடயங்களை தருகின்றது. ஸ்லோத்தாய் அவரது பிழைகளையும் கஷ்டங்களையும் பார்க்கின்றார். எனக்கு தசைகள் வேண்டும். / பலம் இல்லாதது என்னைத் தலைவணங்கச் செய்தது” என்று அவர் ஒப்புக்கொள்கிறார். "எனக்கு ஒரு நோய் இருக்கின்றது, நான் அதைச் சமாளிக்கிறேன்" எனப் பாடுகின்றார்.
“Focus” பாடல் ஸ்லோத்தாய் "இடிபாடுகளிலிருந்து வெளியேற்றுவதற்கான" உறுதியை விவரிக்கிறது மற்றும் அதில் அவரது அண்டையவர்கள் பலர் அகப்பட்டுள்ள அவநம்பிக்கை, குற்றம் மற்றும் சிறைச்சாலையின் சுழற்சியைத் தவிர்ப்பது பற்றி பாடுகின்றார். "நான் சாய்ந்து கொள்ள யாரும் இல்லாததால், எனவே நான் ஒரு கைத்தடியுடன் நொண்டிக்கொண்டு இருக்கிறேன்" என்று அவர் கூறுகிறார். ஒரு சிறந்த பாதையைக் கண்டுபிடிப்பதற்கான இந்த உறுதியானது, அவரும் பல ராப் பாடகர்கள் அடிக்கடி மூழ்கும் குண்டர்பாணியாலான கொந்தளிப்பைக் காட்டிலும் மிகவும் சாதகமானது.
"NHS" பாடல் இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளைப் போலவே, தொற்றுநோய் தொடங்கியபோது தயாராக இருக்காததுடன் இதன் விளைவாக நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் தேவையற்ற மரணங்கள் மற்றும் உணர்ச்சிகரமான காயங்கள் ஏற்பட்டன. ஆனால், வித்தியாசமாக, அவர்கள் பெற்ற கைதட்டல்களைக் குறிப்பிடுவதைத் தவிர ஸ்லோத்தாய் இந்த தொழிலாளர்களையோ அல்லது அவர்களின் அனுபவங்களையோ குறிப்பிடவில்லை. மேலும், உலகில் ஒரு குறிப்பிட்ட அளவு பூரணமற்றநிலையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாடல் வரிகள் குறிக்கின்றன. "இந்த ஏழைகள் இல்லாமல் செல்வம் என்ன?" என ஸ்லோத்தாய் கேட்கிறார். "உங்களுக்கு வழங்கப்பட்டவை எல்லாம் உங்களுக்குத் தேவையானவை." தேசிய சுகாதார சேவை பற்றிய ஒரு தொற்றுநோய் காலத்தில் பாடப்பட்ட பாடலில், அத்தகைய வரிகளால் ஊக்குவிக்கப்பட்ட மனநிறைவு குறிப்பிடத்தக்க வகையில் தவறான வழியில் கொண்டு செல்வதும் மற்றும் எதிர்மாறான விளைவுகளை கொண்டுவருவதுமாகும்.
"ADHD" முடிவில் வரும் மிகவும் சிக்கலான ஒரு பாடலாகும். “Tryin’ to pro-tect, so I pro-ject,” என்று பாடுகையில் ஸ்லோதாய் அவரது துணிச்சலானது ஒரு தற்காப்பு பொறிமுறையாகும் என்பதைக் குறிக்கும் வகையிலானதாகும். அவர் தனது கெட்ட பழக்கங்களை “போதைப்பொருளை புகை, நான் தூங்குவதற்கான ஒரே வழி” போன்ற வரிகளில் ஒப்புக்கொள்கிறார். / எப்போதும்போல வழக்கமான முறையில், என்னால் பேச முடியாத வரை குடி. ”பாடலின் நடுப்பகுதியில், ஸ்லோத்தாய் ஒரு சகோதரனாக அவர் உரையாற்றும் ஒரு மனிதரை அழைப்பதை நாங்கள் கேட்கிறோம். உண்மையான அரவணைப்பின் இந்த தருணம் ஆல்பத்தின் முதல் பாதியை விட மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ஆயினும்கூட, ஸ்லோத்தாய் தனது மிகவும் ஆக்ரோஷமான தொனியைத் தாக்குகிறார். ஆனால் அவர் தனது மன அழுத்தம் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறார். “எனக்கு போக்குகள் இருக்கின்றன, மனநோய் போக்குகள் கிடைத்தன. / என்னை மென்மையாகத் தொடவும். சொர்க்கம், என்னை உள்ளே விடுங்கள்! ”என்கின்றார்.
சுய அறிவை நோக்கிய ஸ்லோத்தாயின் நிச்சயமற்ற போக்கினை தைரன் பாடல் தொகுப்பு ஆவணப்படுத்துகிறது. பாடல் தொகுப்பின் கருத்தாளத்திற்குள் சென்று அதன் சிந்தனையை வலியுறுத்துவதற்காக ராப்பர் கடினமாக முயன்றுள்ளார். ஆனால் இந்த எண்ணம் பெரும்பாலும் மேலோட்டமாகவே உள்ளது. ஸ்லோத்தாய் தனது வாழ்க்கையை உருவாக்க உதவிய, குடிகாரர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களின் துயரமான எண்ணிக்கையை உருவாக்கிய நிலைமைகளையும் பற்றி ஆராயவில்லை. மேலும், பாடல் தொகுப்பின் இரண்டாம் பாதியின் நேர்மறையான அம்சங்கள் அதன் முதல் பாதியின் சமூக விரோத அம்சங்களால் சமநிலை செய்யப்படுகின்றன. வன்முறை மற்றும் சிற்றின்பங்களை மகிமைப்படுத்தல்களில் தங்கியிருக்காது இருப்பதற்கு ஸ்லோத்தாய் போதிய படைப்புத்தன்மையை கொண்டிருக்கவில்லையா? இந்த அசிங்கமான மரபுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தனிப்பட்ட மற்றும் சமூக பிரச்சினைகளை இன்னும் ஆழமாக ஆராய்வது ஒரு உண்மையான முன்னோக்கிய படியை நோக்கி செல்வதைக் குறிக்கும்.