இணைய தணிக்கை நிறுத்து: சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் (அமெரிக்கா) டுவிட்டர் கணக்கை மீட்டெடு!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இடதுசாரி மற்றும் சோசலிசக் கருத்துக்களை மௌனமாவதை நோக்கமாகக் கொண்ட இணைய அரசியல் தணிக்கை செயலில், டுவிட்டர் அமெரிக்காவில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அமைப்பின் கணக்கை நிறுத்தி வைத்துள்ளது.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அமைப்பு சோசலிச சமத்துவக் கட்சியின் இளைஞர் மற்றும் மாணவர் இயக்கமாகும். இது நான்காவது அகிலத்தின் அனைத்துலக் குழுவுடனும் (ICFI) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்துடன் (WSWS) இணைந்த அமைப்பாகும்.

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அமைப்பு என்பது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட குழுவாகும். சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அமைப்பு பேர்லினின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில், மாணவர் பாராளுமன்றத்தில் பல அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது.

புதன்கிழமை காலை 6:00 மணியளவில், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தமது டுவிட்டர் கணக்கான @IYSSE_US அதன் சுயவிவரம் மற்றும் தலையங்க பகுதியிலிருந்து அகற்றப்பட்டதாகவும், ட்வீட்களின் கணக்கின் தொடர்காலவரிசை காணப்படும் இடத்தில் “கணக்கு இடைநிறுத்தப்பட்டது டுவிட்டர் விதிகளை மீறும் கணக்குகளை டுவிட்டர் இடைநிறுத்துகிறது. ஒரு செய்தியால் மாற்றப்பட்டுள்ளது.” இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக டுவிட்டர் விதிகள் பற்றிய இணைப்பு சேர்க்கப்பட்டிருந்தது.

கணக்கை மீண்டும் நிலைநிறுத்தக் கோரி சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அமைப்பு டுவிட்டரை தொடர்பு கொண்டபோது, நிறுவனம் "உங்கள் கணக்கு இடைநிறுத்தப்பட்டது, ஏனெனில் நீங்கள் பல டுவிட்டர் கணக்குகளை நிர்வகிப்பதாக தோன்றுகிறது." என பதிலளித்தது.

இதற்கு சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அமைப்பு பின்வருமாறு பதிலளித்தது:

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு என்பது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள டஜன் கணக்கான பல்கலைக்கழகங்களில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பு ஆகும். ஒவ்வொரு வெவ்வேறு பல்கலைக்கழக பிரிவும் அதன் சொந்த டுவிட்டர் கணக்கை நிர்வகிக்கிறது. இந்த பிரிவுகள் உலக சோசலிச வலைத் தளத்துடன் (WSWS) இணைக்கப்பட்டுள்ளதால், அப்பிரிவுகள் அவற்றின் உரிமையின்படி WSWS இலிருந்து அதே அல்லது ஒத்த கட்டுரைகளை இடுகையிடலாம்.

செப்டம்பர் 2020 இன் டுவிட்டர் வழிகாட்டுதல்களில் படி இந்த வகை செயல்பாடு வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வழிகாட்டல் "ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய ஆனால் தனித்தனி பிரிவுகள் அல்லது கிளைகளைக் கொண்ட நிறுவனங்கள், பல கிளைகளை கொண்ட வர்த்தக நிறுவனம் போன்றவை". எனவே "இது அக்கொள்கையை மீறவில்லை" என்று கூறுகிறது.

(1) கூறப்பட்ட எந்தவொரு மீறல்களையும் இன்னும் ஆழமாகவும், விரிவாகவும் காண்பிக்கவும்.

(2) இந்த குழுவின் இடைநீக்கம் (@IYSSE_US) உடனடியாக நீக்கப்பட வேண்டும். என நாங்கள் கோருகின்றோம்.

இந்த இடைநிறுத்தம் குறித்து டுவிட்டர் இதுவரை மேலதிக தகவல்களை வழங்காததுடன், மேலும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பின் கணக்கு இன்னமும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Loading